Wednesday, July 29, 2015

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலன்களை ( யோக பலன்களை ) ஏற்று நடத்தும் திசை புத்தியை எப்படி தெரிந்து கொள்வது ?


தங்களின் ஜாதக  நிலையை பார்க்கும் பொழுது, ஒரு திரைப்படத்தில் வந்த வசனம் நினைவிற்கு வருகிறது அன்பரே ! " இருக்குது ஆனால் இல்லை " "இல்லை ஆனால் இருக்குது " வேற மாதிரி இருக்குது " தங்களின் சுய ஜாதக வலிமையை காணும் பொழுது மிக பெரிய அளவில் வியப்பே உண்டாகியது, தங்களது சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் மிகவும் வலிமையாக உள்ளது வரவேற்க்கதக்க விஷயம் எனவே "இருக்குது".

தங்களது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை ஏற்று நடத்தவில்லை என்பதால் " இல்லை " .

ஆனால் எதிர்வரும் திசை மிகவும் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்துவதால் "வேற மாதிரி இருக்குது ".

சரி இனி தங்களது சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலையையும், நடைபெறும் மற்றும் எதிர்வரும் திசை வழங்கும் பலாபலன்களையும் சிந்தனைக்கும் ஆய்வுக்கும் எடுத்துகொள்வோம் அன்பரே!


லக்கினம் : கன்னி 
ராசி : தனுசு 
நட்சத்திரம் : பூராடம் 1ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக நிலைகள் : 

1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதக அமைப்பிலே மிகுந்த வலிமை பெற்ற பாவகங்களாக கருதலாம்,

2,4,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான நன்மையை செய்யும் பாவகங்களாக கருதலாம்,

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களது ஜாதகத்தில் பாதிக்கபட்டுள்ள பவகங்களாக கருதலாம்,

 எனவே ஜாதகர் 11ம் பாவக வழியில் இருந்து, தான் தொடர்பு பெற்ற வீடுகள் அமைப்பில் இருந்து  நன்மையான பலன்களை 100% விகிதம் அனுபவிக்கும் யோகத்தை தரும், நல்ல உடல் நிலை மற்றும் மன நிலை, தெளிவான சிந்தனை, அறிவுபூர்வமான செயல்கள் மூலம் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் யோகம், எடுக்கும் முயற்ச்சிகளில் வெற்றி விரீயமிக்க செயல்பாடுகள், தன்னம்பிக்கை மற்றும் தைரியம், சிறந்த சமயோசித புத்திசாலித்தனம், பூர்விகத்திலும் குழந்தைகளாலும் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து யோக வாழ்க்கை, ஏற்றுமதி இறக்குமதி வியாபார வாய்ப்புகள், சமூகத்தில் மதிப்பு மரியாதை மற்றும் அந்தஸ்து, பெரிய மனிதர்களின் ஆதரவு, எங்கு சென்றாலும் நற்ப்பெயர் மற்றும் வரவேற்ப்பு, நல்ல குணம் நீடித்த அதிர்ஷ்டம் என ஜாதகரின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட தேவதையின் கருணை பரிபூரணமாக கிடைக்க பெறுவார்.

மேலும் 10ம் பாவக வழியில்  தான் தொடர்பு பெற்ற வீடுகள் அமைப்பில் இருந்து  நன்மையான பலன்களை 40% விகிதம் அனுபவிக்கும் யோகத்தை தரும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, கை நிறைவான வருமானம், இனிமையான பேச்சு திறமை, தீர்க்கமான வாதம், சுய முன்னேற்றத்திலும், சுய வருமானத்திலும் அதிக ஆர்வம், வண்டி வாகனம் மூலம் யோகம், சுகபோக வாழ்க்கை, தேவைக்கேற்ற சொத்து சுக சேர்க்கை, நல்ல குணநலன்கள், முற்ப்போக்கு சிந்தனை, எதிரிகள் மூலம் நன்மை, வட்டி வரவுகள்,  வங்கி உதவி மூலம் தொழில் விருத்தி, உடல் நலனில் அதிக கவனம், அபரிவிதமான தொழில் வாய்ப்புகள், வியாபாரம் மூலம் அதிக லாபம், குறைவான முதலீட்டில் அதிக லாபம், சமூகத்தில் கௌரவம், அந்தஸ்த்து தேடி வரும் யோகம், புகழ் மிக்க பொறுப்புகளை சிறப்பாக கையாளும் யோகம், சுய தொழில் மூலம் அபரிவிதமான வளர்ச்சியை பெரும் தன்மை என ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை ஜீவன வழியில் இருந்து வாரி வழங்கும்.

சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட 12ம் பாவக வழியில் தான் தொடர்பு பெற்ற விடுகள் அமைப்பில் இருந்து, வாழ்க்கை துணையின் மூலம் விரைய செலவுகள், திடீர் இழப்புகள், விபத்து, மருத்துவ செலவினங்கள், மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்களில் இருந்து வரும் திடீர் இழப்புகள், மன வாழ்க்கையில் வரும் சிறு சிறு பிரச்சனைகள், தன்னம்பிக்கை குறையும் விதமாக நடைபெறும் நிகழ்வுகள் ஜாதகருக்கு கடும் நெருக்கடிகளை தரும், மேலும் அனைவராலும் தொல்லை அதிக அளவில் மன போராட்டம், வீண் விரையம் செலவுகளை கட்டுபடுத்த இயலாத சூழ்நிலை, அதிக முதலீடுகள் செய்வதால் வரும் திடீர் இழப்புகள், அதிக அளவில் மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகும் சூழ்நிலை, வீண் அவபெயர்கள் என விரைய ஸ்தான அமைப்பில் இருந்து கடும் நெருக்கடிகளை ஸ்திரமாக தரும்.

ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள சந்திரன் திசை ( 15/05/2008 முதல் 15/05/2018 வரை )  8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, தனது திசையில் 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்த போதிலும் எவ்வித நன்மையையும் பெற இயலாத தன்மையை தருகிறது, சுய ஜாதகத்தில் எவ்வித யோகங்கள் இருந்த போதிலும் நடைமுறையில் உள்ள திசை அல்லது எதிர்வரும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்கள் நடைமுறைக்கு வரும் என்பதால், ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள சந்திரன் திசை ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை நடைமுறைபடுத்த வாய்ப்பில்லை, ஆனால் அடுத்து வரும் செவ்வாய் திசை ஜாதகருக்கு 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை ஏற்று  நடத்தும் 7 வருட காலங்களில் ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோக பலன்களை தங்கு தடையின்றி நடத்துவார் என்பது, வரவேற்க்கதக்க அம்சமாக கருதலாம், சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை அனுபவிக்கும் காலமாக செவ்வாய் திசை அமைவதும், யோகங்களை சரியான வயதில் அனுபவிக்கும் தன்மையையும் ஏக காலத்தில் ஜாதகர் பெறுவார் என்பதும் சிறப்பான விஷயமாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

No comments:

Post a Comment