Sunday, July 19, 2015

குரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான் இலக்கின வாரியாக தரும் பலன்கள் - கன்னி


 பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும்  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

கன்னி லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியான கன்னியை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 12,4,6,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், 12ம் பாவகத்தில் அமர்ந்துள்ள குரு பகவான் தங்களுக்கு அதிக அளவில் மன உளைச்சலை தருவதற்கு வாய்ப்பு உள்ளது, இல்லற வாழக்கையில் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழ்நிலையை தர கூடும், மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்கள் யாவும் மிகப்பெரிய பின்னடைவதரும், தேவையில்லாத விரையங்கள் ஏற்ப்பட வாய்ப்புண்டு, மன நிம்மதியை குறைக்கும் வண்ணம் சில எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற கூடும், அனைவராலும் தொல்லை சிரமங்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தவிர்க்க இயலாது, மன நிம்மதியை பாதிக்கும் விதமான எவ்வித செய்கைகளிலும் தாங்கள் இனிவரும் ஒருவருட காலம் ஈடுபடாமல் இருப்பது சகல விதங்களிலும் நன்மை தரும்.

12ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது கன்னி லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, 4ம் பாவக வழியில் இருந்து தான பெயரில் உள்ள சொத்து வண்டி வாகனங்களில் வில்லங்கங்களை தரக்கூடும், தனது பெயருக்கு அவப்பெயர் உருவாகும் சூழ்நிலையை தரக்கூடும், எதிர்பால் அமைப்பினரிடம் அதிக அளவில் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது, தன்னை விட வயதில் மூத்தோர்களிடம் மிகவும் மரியாதையுடன் நடந்துகொள்வது சால சிறந்தது, குடும்பத்தில் உள்ள பெரிய மனிதர்களின் ஆலோசனை படி நடந்துகொள்வது மிகுந்த நன்மைகளை தரும், தனது பெயரில் உள்ள உடைமைகள் மீது அதிக கவனமாக இருப்பது நலம், விலை உயர்ந்த பொருட்கள் சொத்துக்களை மிக கவனமாக கையாள்வதும் பாதுகாப்பாக வைத்துகொள்வதும் நல்லது, குண நலன்களில் மாறுபாடு ஏற்ப்படும் என்பதால் பொறுமையை கடைபிடிப்பது மிகுந்த நன்மையை தரும், புதிய சொத்துகள் வண்டி வாகனங்களை வாங்கும் பொழுது மிகுந்த கவனாமா இருப்பது தேவையிலாத அலைச்சலை குறைக்கும், தாய் வழியில் இருந்து சில இன்னல்களை தாங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

12ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது கன்னி லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, எதிரிகள் தொல்லையை அதிகரிக்க செய்த போதிலும், அவர்கள் வழியில் இருந்து லாபங்களை வாரி வழங்கும், தாங்கள் எதிர்பார்த்த விஷயங்களில் தடை தாமதத்தை தந்த போதிலும், இறுதியில் நிறைவேறும், வயிறு சார்ந்த பிரச்சனைகள் தங்களுக்கு அதிக அளவில் தொல்லைகளை தரும், மருத்துவ செலவினங்களை தவிர்க்க இயலாது, யாரிடமும் பகைமை பாராட்டாமல் நடந்துகொள்வது நல்லது, சிறு சிறு விபத்துகள் மூலம் உடல் நல குறைவு உருவாக கூடும், மூடநம்பிக்கையின் அடிப்படையில் செயல்படும் காரியங்கள் யாவும் தங்களுக்கு தோல்வியை  தரும், தனம்பிக்கை வெகுவாக பாதிக்கும், வாகனங்களில் நீண்ட நெடுதூர பயணங்களில் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பது நலம் தரும், கடன் பெறுவது கடன் கொடுப்பது என்ற இரண்டு விஷயங்களும் தங்களுக்கு அதிக அளவில் முன்னேற்ற பாதிப்பை தரும் தேவையில்லாத பகைமையை உருவாக்கும், தங்களின் எண்ணங்களும் செயல்களும் சில நேரங்களில் திடீர் பின்னடைவை தரக்கூடும், திட்டமிடுதல் இல்லாத வாழ்க்கை முறை தங்களுக்கு பெரிய அளவில் இன்னல்களை தர கூடும்.

12ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தை வசீகரிப்பது கன்னி லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, நெருப்பு அல்லது விபத்தின் மூலம் உடல் நல குறைவை தர கூடும், வீண் பிடிவாதங்களும் முரட்டு தனமும் தங்களது வாழ்க்கை முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும், விபத்துகளை தவிர்க்க வேகம் மற்றும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது, அதிக அளவில் கோப உணர்வை தூண்டு நிகழ்வுகள் நடைபெறுவதால் தங்களின் உடல் நிலையும் மன நிலையும் வெகுவாக பாதிக்கும், எனவே சுய கட்டுபாடும், பொறுப்புணர்வும் தங்களுக்கு இனிவரும் காலங்களில் அதிக அளவில் தேவை படும், பெரிய அளவில் முதலீடுகளை செய்யும் பொழுது மிகுந்த கவனமுடன் இருப்பது மிகுந்த நன்மை பயக்கும், எந்த அளவிற்கு பொறுமையையும், அமைதியையும் கடை பிடிக்கின்றீர்களோ அந்த அளவிற்கு தங்களுக்கு நன்மைகளும், லாபமும் கிடைக்கும்.

குறிப்பு : 

கன்னி லக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட12,4,6,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும்  திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 12,4,6,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
  

இந்த குரு மாற்றத்தின் மூலாம் 30% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது கன்னி லக்கினமே முதலாவது இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

No comments:

Post a Comment