சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் தொடர்பு பெற கூடாத ஸ்தானம் பாதக ஸ்தானமே, ஏனெனில் மறைவு ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் பாவகங்கள் தனது பாவக வழியில் இருந்து சில நன்மைகளை செய்யக்கூடும், ஆனால் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் எந்த ஒரு வீடு ஜாதகருக்கு எவ்வித சிறு நன்மையையும் செய்ய வாய்ப்பில்லை, அதன் பாதிப்பில் இருந்து தப்புவதற்கும் சந்தர்ப்பங்களை தாரது என்பது கவனிக்க தக்கதுஇந்த , மேலும் ஒருவரது சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசை அல்லது எதிர்வரும் திசை, பாதக ஸ்தான பலனை நடத்தும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 200% சதவிகித இன்னல்களை எவ்வித பாகுபாடும் அனுபவிக்கும் தன்மையை தரும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !
லக்கினம் : சிம்மம்
ராசி : மகரம்
நட்சத்திரம் : அவிட்டம் 1ம் பாதம்
இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு, பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகமே பாதக ஸ்தானமாக அமைகிறது, மேலும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது சகோதர பாவகமான 3ம் வீடு, பூர்வபுண்ணியத்தை குறிக்கும் 5ம் வீடு, பாக்கியத்தை குறிக்கும் 9ம் வீடு, எனவே ஜாதகர் ஜாதகர் 3,5,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை அனுபவிக்க வேண்டும் என்பது விதி அமைப்பு, ஆக ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து பெரும் இன்னல்கள் எவ்விதம் அமையும் என்பதை சற்றே சிந்திப்போம் அன்பர்களே !
3ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் முயற்ச்சிகள் யாவும் பெரிய பின்னடைவை தரும், சகோதர வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுபாடு வெகுவாக குறையும், கமிஷன் தரகு தொழில்கள் ஜாதகரின் பொருளாதார வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும், திட்டமிடுதல்களும் செயல்திறனும் வெகுவாக குறையும், மிக முக்கியமாக தனது அறிவு திறனும் புத்திசாலித்தனமும் ஜாதகரின் வாழ்க்கைக்கு பலன் தாராது, பொதுமக்கள் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது, பொது காரியங்களில் இறங்கினால் தோல்வியே மிஞ்சும், நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும், எதையும் திட்டமிட்டு செயல் வடிவம் பெற இயலாது, திறமை இருப்பினும் ஜாதகருக்கு பலன் தாராது.
5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு உதவி செய்யும் ஆட்கள் மிக குறைவே எனலாம், அனைத்தையும் தானே எதிர்கொண்டு சமாளிக்க வேண்டி வரும், குல தெய்வத்தின் ஆசியை பெற ஜாதகர் மிகுந்த பிரயத்தனம் செய்யவேண்டி வரும், தனது பூர்வீகத்தில் உள்ள வரை ஜாதகரின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கும், தன்னை சார்ந்தவர்கள் மூலம் மிக பெரிய இன்னல்களுக்கு ஆளாக்கும், சுய அறிவும் சமயோசித புத்திசாலித்தனமும் சரியான நேரத்தில் கைகொடுக்காது, வீண் விவகாரங்களில் ஈடுபடும் சூழ்நிலையை தரும், பொது வாழ்க்கையில் அளவில்லா இன்னல்களை வாரி வழங்கும், முரண்பட்ட சிந்தனையும் செயல்பாடுகளும் ஜாதகரின் வாழ்க்கையில் மிக பெரிய ஏமாற்றங்களையும், தொல்லைகளையும் வாரி வழங்கும், கற்ற கல்வி ஜாதகருக்கு எவ்வித நன்மையையும் தாரது, சுய அறிவு திறனும் வெகுவாக பாதிக்க படும், சூழ்நிலை கைதியாக தனிமையில் போராடும் சந்தர்ப்பங்களை ஜாதகரே ஏற்ப்படுத்தி கொண்டு தனது வாழ்க்கை முன்னேற்றத்தை தானே பாதிப்பிற்கு உள்ளாக்குவார் என்பது கவனிக்கத்தக்கது.
9ம் பாவக வழியில் இருந்து சமுதாயத்தில் அவப்பெயர், பொதுமக்கள் வழியில் இருந்து வரும் எதிர்ப்புகள், நம்பிக்கைகள் வீணாகும் சூழ்நிலை, சரியான சந்தர்பங்களை தவறவிடும் தன்மை, அவசர கதியில் செய்யும் செயல்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்ற தடையாக அமையும் தன்மை, எதிர்பாராத இழப்புகள் நஷ்டங்கள், மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் செய்யும் செயல்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையை பாதிக்கும் தன்மை, பொருளாதார முன்னேற்றத்தில் ஏற்ப்படும் இடையூறுகள், மற்றவர்களின் தவறான வழிகாட்டுதல்கள் மூலம் தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்ளும் அமைப்பு, அனைத்து விஷயங்களை உணர்ந்த போதிலும் சூழ்நிலைக்கு அடிமை ஆகும் தன்மை, ஆன்மீக வாழ்க்கையில் ஏற்ப்படும் இடைஞ்சல்கள், சரியான குரு அமையாத தன்மை, முன்னோர்களின் ஆசிர்வாதமும் வழிகாட்டுதல்களும் இல்லாமல் சுயமாக வாழ்க்கையில் போராடும் சூழ்நிலை, பக்குவம் இல்லாத நடைமுறைகள், சுய கட்டுபாடு இன்றி வீண் பிடிவாதம் என ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும் .
மேற்கண்ட பாதிப்புகளை ஜாதகர் தவிர்க்க இயலாது என்றாலும் கூட, நடைபெறும் எதிர்வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் மேற்கண்ட 3,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகரின் வாழ்க்கையல் நன்மை உண்டாகும், நடைபெறும் திசை எதிர்வரும் திசை தரும் பலன்களை பற்றி இனி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !
தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை சனி ( 27/10/2013 முதல் 27/10/2032 வரை )
ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சனி தசை 3,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 1,7,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் பலன்களை தருவது லாப ஸ்தான வழியில் இருந்து நல்ல அதிர்ஷ்டமும் லாபமும் கிடைத்த போதிலும், பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, மேலும் ஜாதகர் 3,5,9ம் பாவகங்களுக்கு உண்டான பிரீதி பரிகாரங்களை தேடிகொள்வது பாதக ஸ்தான கர்மவினை பதிவுகளை கழித்து கொள்வதற்கு உண்டான வாய்ப்பை வழங்கலாம்.
குறிப்பு :
ஒருவரது சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவகங்களின் பலனை நடைமுறையில் அல்லது எதிர் வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகருக்கு பாதக ஸ்தானத்தல் எவ்வித இன்னல்களும் நடைமுறைக்கு வாராது, ஆனால் நடைமுறையில் அல்லது எதிர் வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தினால் ஜாதகர் பாதக ஸ்தான அமைப்பில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது அனுபவித்து கழித்து கொள்வதே சால சிறந்தது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
நன்றி அன்பரே.தங்களின் ஜோதிட சேவை சிறக்க வாழ்த்துக்கள்.இறுதியில், நல்ல ஜோதிடரை வழங்கிய இறைவனுக்கு நன்றிகள்...
பதிலளிநீக்குகுருவின் ஆசியும், இறை அருளின் கருணைக்கும் நன்றி !
நீக்கு