Monday, July 20, 2015

குரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான் இலக்கின வாரியாக தரும் பலன்கள் - துலாம்
பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும்  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

துலா லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு7ம் ராசியான துலாம் ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 11,3,5,7ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், சம வீடான லாப ஸ்தானத்தில், அமர்ந்த குரு பகவான் துலாம் இலக்கின அன்பர்களுக்கு அளவில்லா அதிர்ஷ்டங்களையும், லாபங்களையும் ஸ்திரமாக தொடர்ந்து தருவது வரவேற்க்கதக்க விஷயமாக கருதலாம், கல்வி கேள்விகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும், முற்போக்கு சிந்தனையும், சமயோசித புத்திசாலித்தனமும் தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்களை வாரி வழங்கும், இதுவரை நிறைவேறாத ஆசைகள் யாவும் பூர்த்தியாகும், லட்ச்சியங்கள் கைகூடி வரும், அனைத்திலும் நல்ல லாபம் கிட்டும், தனிப்பட்ட செயல்களிலும், தொழில் அமைப்புகளில் இருந்தும் அபரிவிதமான லாபங்கள் வந்து சேரும், தங்களின் பெயரும் புகழும் ஓங்கி நிற்கும், அனைத்து தரப்புகளில் இருந்தும் பாராட்டு கிடைக்கும், குல தேவதையின் கருணையினால் சகல விதமான அதிர்ஷ்டங்களையும் பெரும் யோக காலமாக இனிவரும் ஒருவருடம் தங்களுக்கு மிகவும் சிறப்பாக அமையும்.

11ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது துலாம் லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சிகளில் அனைத்திலும் வெற்றி உண்டாகும், விளையாட்டு துறையில் உள்ள அன்பர்களுக்கு மிக பெரிய வெற்றிகளை பெற்று தரும் யோககாலமாக கருதலாம், ஏஜென்சி,கமிஷன்,வியாபாரம் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு தொழில் விருத்தி மிக அபரிவிதமாக அமையும், புதிய தொழில் துவங்கும் அன்பர்களுக்கு வியாபாரம் செழிக்கும், தன வரவு மிகவும் அதிக அளவில் வந்து குவியும், பொதுமக்களிடம் நற்ப்பெயரும் ஆதரவும் பெருகும், பயணங்களில் அதிர்ஷ்டமும் செல்லும் இடங்களில் வரவேற்ப்பும் லாபமும் கிடைக்கும், சகோதர வழியில் ஆதரவு  என்பது வியக்கத்தக்க விதத்தில் வந்து சேரும், உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி  சார்ந்த  விஷயங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அபரிவிதமான வெற்றிகள் வந்து சேரும், உடல் மனம் எப்பொழுதும் புத்துணர்ச்சியாக காணப்படும், மிதமிஞ்சிய சக்திகளை பெரும் வாய்ப்புகளை வாரி வழங்கும், புனித திருத்தலங்களுக்கு தடையின்றி  சென்று வரும் யோகத்தை தரும், ஆன்மீகத்தில் வெற்றியும் ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பும் தங்களின் வாழ்க்கையில் நல்ல திருப்பு முனையை ஏற்ப்படுத்தும்.

11ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக பூர்வ புண்ணிய  ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது துலாம் லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, 5ம் பாவக வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களை தர கூடும், குழந்தைகள் வழியில் இருந்து இன்னல்களும் சிரமங்களும் ஏற்ப்பட வாய்ப்பு உண்டாகும், அவர்களின் நலன்களில் அதிக அக்கறை கொள்வது சால சிறந்தது, உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், சரியான திட்டமிடுதல்களும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது, எந்த ஒரு விஷயத்தையும் செய்யும் முன் பல முறை யோசனை செய்து இறங்குவது மிகுந்த நன்மைகளை தரும், கற்ற கல்வியினால் பயன் இல்லாத சூழ்நிலையை தரும், சிந்தனை திறனில் சிறு வறட்சி ஏற்ப்பட கூடும்,  சுய முன்னேற்றம் பற்றிய சிந்தனையும் அது சார்ந்த விஷயங்களில் சில நடவடிக்கைகளையும் இனிவரும் காலங்களில் தாங்கள் கட்டாயமாக எடுக்க வேண்டிய சூழ்நிலையை தரக்கூடும், இருப்பினும் இறுதியில் சகல விஷயங்களிலும் நன்மையையும் லாபமும் உண்டாகும் என்பதை நினைத்து பெருமை படலாம்.

11ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிப்பது துலாம் லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, 7ம் பாவக வழியில் இருந்து சில நன்மைகளை பெற்ற போதிலும், வாழ்க்கை துணையின் வழியில் இருந்து வரும் இன்னல்களுக்காக மண்டையை பிய்த்துக்கொள்ளும் சூழ்நிலையை தரும், வாழ்க்கை துணையின் தேவைகளை பூர்த்திசெய்ய தனிப்பட்ட வருமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளும் அவசியம் ஏற்ப்படும், தங்களின் வாழ்க்கை பாதையை திசை திருப்புவதில் தங்களின் வாழ்க்கை துணை மிக முக்கிய பங்கு வகிப்பார் என்பதை தங்களால் தவிர்க்க இயலாது, இருப்பினும் பொதுமக்கள் ஆதரவும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் உதவியும் தங்களின் வாழ்க்கையில் மிகுந்த  நன்மைகளை வாரி வழங்கும், தொழில் ரீதியான வெற்றிகள் தாங்கள் எதிர்பார்த்த அளவில் மிகவும் சிறப்பாக அமையும், அரசியல் ரீதியான நன்மைகளையும் பதவிகளையும்  திடீரென பெரும் யோகத்தை தரும், மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும், பொருளாதார தேடுதல்களுக்கு சிறந்த வாய்ப்புகள் உண்டாகும், செயற்கரிய செயல்களில் ஈடுபடும் வாய்ப்பையும் அதில் வெற்றிகளை குவிக்கும் யோகத்தை தரும்.

குறிப்பு : 

துலாம் லக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட11,3,5,7ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும்  திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 11,3,5,7ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
  

இந்த குரு மாற்றத்தின் மூலாம் 90% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது துலாம் லக்கினமே முதலாவது இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

No comments:

Post a Comment