அநாதகம் :
நமது உடல் அமைப்பில் முக்கிய பங்காற்றும் பகுதி , எண்ண அலைகளை நிர்வாகிக்கும் தன்மை பெற்ற இடம் , அறிவு மனம் என்ற அமைப்பில் வேறுபடுத்தி உணரும் தன்மை பெற்ற இடம் , நினைவுகளை ஜென்ம ஜென்மமாக நிர்வாகிக்கும் பகுதி , இதன் அமைப்பிலிருந்தே ஒருவரின் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் , மற்றும் நண்பர்கள் சேர்க்கை பொது மக்கள் தொடர்பு ஆகிய விஷயங்கள் நடை பெறுகிறது . உடல் அமைப்பில் நான்காவது மையம் , மார்பு குழிக்கு மேல் 4 விரல் கடையில் உள்ள இடமாகும் , பஞ்சபூத தத்துவத்தில் காற்று தத்துவத்தை ஆளுமை செய்கிற இடமாகும் ,
இந்த மையம் சிறப்பாக
ஜாதகருக்கு அமைந்தால் நல்ல மனம் கொண்ட நல்லவர்கள் , இவர்கள் நல்லவர்கள்
வழியே சேர்க்கை பெற்று நன்மை பெரும் அமைப்பை பெறுவார்கள் , மனஉறுதி ,
செய்யும் அனைத்து விஷயங்களிலும் அதிக ஆர்வம் மற்றும் புதுமை செய்யும் திறன்
, தைரியம் , தன்னம்பிக்கை , கூடுதல் திறமைகள் என அனைத்து விஷயங்களிலும்
படி படியான முன்னேற்றம் பெரும் அமைப்பு , அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை
ஆராயும் திறமை , மற்றவர் எண்ணத்தை தான் அறிந்து கொள்ளுதல் , புதிய
கண்டுபிடிப்புகளை மக்களுக்கு வழங்கும் தன்மை , அதிக ஆர்வம் மற்றும் ஊக்கம்
ஆகிய அமைப்புகள் இந்த மையத்தை அடிப்படையாக கொண்டே செயல் படும் .
மேலும் எண்ணங்களை
ஆராயும் தன்மையும் , தீர்கமான முடிவு எடுக்கும் தன்மையும் ஏற்ப்படும் ,
பயம் , கோழைத்தனம் , தாழ்வு மனப்பான்மை நீங்கும் , தனது எண்ணங்களை செயல்
வடிவம் பெறவைக்கும் ஆற்றல் ஏற்ப்படும் , வாழ்க்கையில் அனைத்து
விஷயங்களையும் அறிந்து கொள்ளும் ஞானம் ஏற்ப்படும் , வீரம் பயமின்மை ஆகிய
தன்மைகள் மிக விரைவாக ஏற்படும் , உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தரும்
அமைப்பு , நீடித்த ஆயுளை தரும் . ஜாதக அமைப்பில் 6ம் வீடு மற்றும் 8 ம்
வீடு அமைப்பில் இருந்து இதன் நிலையை நாம் உணர்ந்து கொள்ள இயலும் .
விசுக்தி :
நமது உடல் அமைப்பில்
தொண்டை பகுதியில் அமைந்திருக்கும் மையம் , பஞ்ச பூத தத்துவத்தில் ஆகாய
தத்துவத்தை ஆளுமை கொண்ட மையம் , மனித உடல் அமைப்பில் எலும்பு மற்றும் பல்
தசை ஆகியவை கட்டுபடுத்தும் தன்மை பெற்றது , இந்த மையம் நன்றாக இயங்க வில்லை
எனில் உடல் பருமன் , மற்றும் சதை பிடிப்பு ஆகியவற்றால் பதிக்க பட நேரும் ,
உடல் செல்லின் வளர்ச்சியை நிரணயிக்கும் தன்மை பெற்ற மையம் , மக்களை கவரும்
விதத்தில் பேச்சாற்றலை தரும் , இலக்கியம் , கவிதை மற்றும் கலை துறை
ஆகியவற்றில் சிறந்து விளங்க இந்த மையம் நன்றாக அமைவது முக்கியம் .
மேலும்
மற்றவர்களின் மன இறுக்கத்தை போக்கும் தன்மை கொண்ட அமைப்பை தரும் , உணவு
குறைவாக எடுத்து கொண்டாலும் , உடல் சக்தி குறையாது , கிரக ஜீவ சக்தியை
உடலில் ஏற்றுகொள்ள இந்த அமைப்பு நன்றாக இயங்க வேண்டும் , விண் பிரபஞ்ச
சக்தியை உடலில் ஏற்று உயிர் ஆற்றலாக மாறுதல் அடைந்து உடல் நிலை விரைவாக
சீரடைய இந்த அமைப்பு உதவுகிறது , மன ஆற்றல் உற்ச்சாகமாகவும் ,
மகிழ்ச்சியாகவும் தெளிவாகவும் வைத்திருக்கும் தன்மை பெற்றது , பிரபஞ்ச
ராகசியங்கள் அனைத்தும் மனதிற்கு எட்டும் , எளிதாக புலப்படும் , மிகசிறந்த
பிரபஞ்ச அறிவாற்றல் மற்று ஞானம் அமையும் .
மனித அறிவுக்கு நுண்
இயக்கம் புலப்படுவதால் அணைத்து விஷயங்கள் பற்றிய அறிவாற்றல் கிடைக்க பெரும்
, மற்றவருக்கு உதவும் தன்மை , பெருந்தன்மை , தாராள மனப்பான்மை , விட்டு
கொடுக்கும் மன நிலை மற்றவரையும் உயிரினங்களையும் தம்மை போல் கருதும் மனோ
நிலை , சகிப்பு தன்மை , எந்த நிலையிலும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகிய
குணங்களை கடை பிடிக்கும் தன்மை , மற்றவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம்
பெற செய்யும் தன்மை , தனது அறிவாற்றலை மக்களுக்காக பயன்படுத்தும் யோக
அமைப்பு என இந்த மையம் சிறப்பாக இருக்கும் பொழுது ஏற்ப்படும் .
ஆக்கினை :
புருவ மத்தியில்
உள்ள சிறப்பான இயக்கத்தை தன்னுள் கொண்டுள்ள அமைப்பு , ஆன்மிக வாழ்க்கையில்
முதற் படி என்று சொல்ல இயலும் , அனைத்து மையங்களையும் கட்டுப்படுத்தும்
தன்மை பெற்றது , சிறு நீரகத்தை இயக்கும் தன்மை பெற்றது மற்ற மையங்கள்
செயல்பாடுகளில் பிழை ஏற்படின் அவற்றை சரி செய்யும் அமைப்பை பெற்ற தலைமை
மையம் இதுவாகும். மனிதனின் மூளைக்கு அடுத்ததாக பல வேலைகளை சரியாக செய்ய
வைக்கும் தன்மை பெற்ற ஒரு சிறப்பான மையம் , உடல் அமைப்பில் நல்ல வளர்ச்சியை
தரும் அமைப்பை கொண்டது , மனிதனின் சிந்தனை சரியான வழியில் எடுத்து
செல்லும் தன்மை கொண்டது , உடல் நலத்தை பேணி காக்கும் தன்மை கொண்டது
எலும்புகளின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் அமைப்பை பெற்ற மையம் ,.
ஆன்மீக வாழ்க்கையில்
மிகசிறந்த முன்னேற்றத்தை வழங்கும் தன்மை பெற்றது , மனித உயிருக்கு
மேல்நோக்கு வேகத்தை தரும் அமைப்பை பெற்றது , மனித அறிவு புலன்களுக்கு
அடிமையாகத தன்மையை தருவது , பொருள் நாட்டம் குறைந்து இறை அருள் நிலை
மேம்படுகிறது , தான் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் மையம் , மனம்
நல்வழியில் பயணம் செய்ய வைக்கும் தன்மை பெற்றது , ஆசை கட்டு படுகிறது ,
பேராசை அற்ற மனநிலை தருகிறது , தான் செய்யும் காரியங்கள் என்ன விளைவை
தரும் என்பதை முன்னமே தெரிவிக்கும் ஆற்றல் நமக்கு கிடைக்கிறது , அறிவில்
விழிப்பு நிலை வருகிறது உள் மனம் மற்றும் ஆற்றல் மிகுந்து நன்மையான பலன்களை
அனுபவிக்கு தன்மை ஏற்படுகிறது .
வினை பதிவை மாற்றும் தன்மை ஏற்படும் , முரட்டு தனம் மாறி கருணை உள்ளம் ஏற்படும் , கோபம் , குரோதம் , காமம் ஆகிய குணங்கள் மறைந்து அன்பு , பரிவு , இறைநிலை உணர்வு என மனிதன் ஆறறிவின் செயல்கள் மேலோங்குகிறது , நமது ஆணைக்கு புலன்கள் கட்டுபடுகிறது , சிந்தனை ஒருமுக படுகிறது , அறிவில் தெளிவு , கருணை , உயிர் உணர்வு ஆகியவை நிலைத்து நிற்கிறது , புலனடக்கம் ஏற்ப்பட்டு , ஒரே அமைப்பாக நிலை பெறுகிறது , கர்ம வினை பதிவில் இருந்து மனிதனை மீட்டு எடுக்கிறது , மனித மனம் ஒரு நிலை அடைகிறது , அறிவு விருத்தி அடைந்து , சூழ்நிலைக்கு மனிதன் அடிமை ஆவதை தடுக்கும் , பழக்க வழக்கங்களை கட்டுபடுத்தி நேர்மையான தன்மையை தருகிறது . எந்த பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் மன ஆற்றல் இயற்கையாக அமைந்து விடும் . இந்த நிலையை ஜாதக அமைப்பில் 10 பாவகம் மற்றும் 11 பாவக அமைப்பில் இருந்து தெரிந்து கொள்ள இயலும் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு