வெள்ளி, 8 ஜூன், 2012

கால புருஷ தத்துவம் என்பது என்ன?

மதிப்புக்குரிய ஜோதிடர் வர்ஷன் ஐயா அவர்களே!  
நான்  பொறியியல் மாணவன். 
நான் தங்கள் வலைப்பதிவுகளை மிகவும் ஆர்வத்துடன் படித்து வருகிறேன். தங்கள் எழுத்து திறமையும் ஜோதிட புலமையும் என்னை பிரமிக்க வைத்துள்ளது. 
நான் தற்பொழுது ஜோதிடத்தில் மிக மிக ஆரம்ப நிலை விளக்கங்களை ஓரளவுக்கு பெற்றுள்ளேன். சில சந்தேகங்களை உங்களிடம் கேட்டு புரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். தாங்கள் எனக்கு வழிகாட்டுவீர்கள் என்று நம்பிக்கையுடன் எனது சந்தேகங்களை தங்களுக்கு பணிவுடன் எழுதுகிறேன்.

ஜாதகத்தில் ஒரு வீடு இன்னொரு வீட்டுடன் தொடர்பு படுகிறது என்பதை எவ்வாறு கண்டு பிடிப்பது?
கால புருஷ தத்துவம் என்பது என்ன?
கும்ப இலக்கின ஜாதகருக்கு குருவும்(ஆட்சி) ராகுவும் 2 இல் இருந்தால் என்ன பலன்? இதனால் வரும் குறு சண்டாள யோகத்திற்கு என்ன பலன்?
இந்த அமைப்பு உடன் 8 இல் சந்திரன் கேதுவுடன் இருந்தால் அது கஜகேசரி யோகத்தை தருமா? இவருக்கு ராகு கேது நன்மை செய்யுமா?

நன்றியுடன் 
(தங்கள் தார்மீக சீடன்)
 கேள்வி :
ஜாதகத்தில் ஒரு வீடு இன்னொரு வீட்டுடன் தொடர்பு படுகிறது என்பதை எவ்வாறு கண்டு பிடிப்பது?


பதில் :
இதற்க்கு தாங்கள் தொடர்ந்து 8 வருடங்கள் ஜோதிடகலையை குரு முகமாக நின்று கற்றுக்கொள்ள வேண்டும் , 8 வருடங்கள் ஜோதிடத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டு நான் கற்றுக்கொண்டது இதை ஒரே பதிலில் சொல்ல இயலாது தங்களுக்கு ஜோதிட கலையின் மீது ஆர்வம் அதிகம் இருப்பின் , இறை அருள் நிச்சயம் வழிகாட்டும் .

கேள்வி :
கால புருஷ தத்துவம் என்பது என்ன?

பதில் :
கால புருஷ தத்துவம் என்பது ஜோதிட கலையில் பொதுவான ராசி அமைப்பை பற்றி சொல்வது , இதன்படி மேஷம் முதல் வீடாகவும் , மீனம் 12 ம் வீடாகவும் அமையும் , சுய ஜாதக அமைப்பிற்கு பலன் காணும்பொழுது , இந்த காலபுருஷ தத்துவ ராசிகளுடன் தொடர்பு படுத்தி பலன் காண வேண்டும் அப்பொழுதுதான் பலன் 100 சதவிகிதம் சரியாக இருக்கும் , ஜோதிட கலையை பற்றி அடிப்படையில் இருந்து கற்றுக்கொள்ளும் பொழுது இதன் அருமை தங்களுக்கு தெரிய வரும் .

கேள்வி :
கும்ப இலக்கின ஜாதகருக்கு குருவும்(ஆட்சி) ராகுவும் 2 இல் இருந்தால் என்ன பலன்? இதனால் வரும் குறு சண்டாள யோகத்திற்கு என்ன பலன்?

பதில் :
கும்ப லக்கினத்திற்கு 2 ல் ராகு அமர்வது 100 சதவிகித தீமையான பலனை தரும், 2 ல் அமரும் ராகு 2 ம் வீட்டு  பலனை முழுவதும்  தானே செய்ய ஆரம்பித்து விடுவார் , 2 ல் ஆட்சி பெரும் குரு எவ்வித பலனையும் தர இயலாது ( அதாவது டம்மி பீசு ) இதுதான் ராகு கேதுவுக்கு உள்ள சிறப்பு தன்மை.

கேள்வி :
இந்த அமைப்பு உடன் 8 இல் சந்திரன் கேதுவுடன் இருந்தால் அது கஜகேசரி யோகத்தை தருமா? இவருக்கு ராகு கேது நன்மை செய்யுமா?

பதில் :
8 ல் அமர்ந்த கேது அந்த வீட்டுக்கு உண்டான முழு பலனையும் தானே செய்ய ஆரம்பித்துவிடுவார் இந்த இடத்தில் அமர்ந்த சந்திரனுக்கும் எவ்வித பலமும் இல்லை ( கைப்புள்ள மாதிரி ) இருப்பினும் சுய ஜாதக அமைப்பை வைத்தே கஜகேசரி யோகத்தை தருகிறதா அல்லது கஜ ஜாங்கிரி , ஜிலேபி யோகத்தை தருகிறதா என்பதை நிர்ணயம் செய்ய முடியும் , 8 ம் வீட்டு அதிபதி ஆனா புதன் சூரியனுடன் சேர்ந்த புதன் ( 14 பாகைக்குள் சூரியனுடன் சேர்ந்த புதன் ) என்றால் கேது 100 சதவிகித நன்மையை தருவார் , இதுவே மாறி சூரியனுடன் சேராத  புதன் ( 14 பாகைக்கு மேல்  சூரியனுடன் சேராத  புதன் ) என்றால் கேது 100 சதவிகித தீமையான பலனை தருவார் என்பதில் சந்தேகமே இல்லை .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக