சனி, 9 ஜூன், 2012

குரு , சனி , ராகு கேது பெயர்ச்சியும் , சுய ஜாதக அமைப்பும் !


 
குரு , சனி , ராகு கேது பெயர்ச்சியும் , சுய ஜாதக அமைப்பும் !

பார்க்கும் இடமெல்லாம், காணும் நாளேடுகளில் எல்லாம்  குரு பெயர்ச்சி பலன்கள் , சனி பெயர்ச்சி பலன்கள் , ராகு கேது பெயர்ச்சி பலன்கள் என்று 12 ராசிகளை அடிப்படையாக கொண்டு பலன்களை கணிப்பு செய்து நிறைய ஜோதிடர்கள் பக்கம் பக்கமாக எழுதி தள்ளி உள்ளனர். ( இதில் தம்மிடம் வந்து பரிகாரம் செய்து கொள்ளுங்கள் என்று அழைப்பு வேறு ! என்னவோ இவர்கள் தாம் நவக்கிரக பிரதிநிதிகள் போல் காட்டி கொள்கின்றனர் ) 

இவைகள் ஒருவரது சுய ஜாதக அமைப்பிற்கு பொருந்துமா என்று அவர்களிடமே கேட்டோம் ஆனால் இல்லை என்பதே பதிலாக வரும் அல்லது 10 சதவிகிதம் பொருந்தும் 20 சதவிகிதம் பொருந்தும் 50 சதவிகிதம் பொருந்தும் என்று அவர்களுக்குள்ளே பல குழப்பம் வரும் அளவிற்கு பதில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .

இதனை பற்றி இந்த பதிவில் நாம் காண்போம் , இரட்டையராக பிறந்த குழந்தைகளுக்கு கூட ஒரே  குண அமைப்பை நாம் காண முடியாது ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை பார்க்க இயலாது, ஒரே மாதிரியான ஜாதக பலன் நடக்க வாய்ப்பு இல்லை , அப்படி இருக்க தமிழகத்தில் உள்ள
1,220,200,000 (1.22 billion) மக்களுக்கு 12 ராசியை அடிப்படையாக வைத்து எழுதும் ராசி பலன் எப்படி 10 சதவிகிதம், 20 சதவிகிதம், 50 சதவிகிதம், பொருந்தும் என்று எங்களுக்கு விளங்க வில்லை.

  மேலும் ஒரே மாதிரியான ஜாதக அமைப்பை உலகம் முழுவதிலும் தேடினாலும் கிடைக்காது , இனிமேல் கிடைக்க போவதும் இல்லை . ஒவ்வொரு ஜாதகமும் நிச்சயம் சிறு வித்தயாசம் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை மேலும் தனி தன்மையுடன் விளங்கும் என்பதையும் மறுக்க இயலாது, அப்படி எனில் பலன் மட்டும் எப்படி ராசி அமைப்பை வைத்து கணிதம் செய்வது நிச்சயம் முடியவே முடியாது , ஜோதிடர்கள் வேண்டுமானால் தனது சுய விளம்பரம் செய்துகொள்ள இது உதவும் .

கிரகங்களின்  கோட்சார ரீதியான பலனை சரியாக கணிதம் செய்ய வேண்டுமானால், சுய ஜாதக அமைப்பில் லக்கினத்தை வைத்தே கணிதம் செய்ய முடியும். மற்றவை எல்லாம் கணிப்புகள்  மட்டுமே , கணிதம் என்பது துல்லியமாக பலனை சொல்லும் அமைப்பு , கணிப்பு என்பது எவர் வேண்டுமானாலும் சொல்ல முடியும் இதற்க்கு அடிப்படையான ஜோதிட விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை .

நமது ஜோதிட முறையில் கோட்சார ரீதியான பலனை சரியாக கணிதம் செய்ய சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடைப்படையாக கொண்டே கணிதம் செய்கிறோம் , இந்த முறையை பின்பற்றும் பொழுது சரியான பலனை மிக தெளிவாக நம்மை நாடி வருபவர்களுக்கு சொல்ல நிச்சயம் முடியும் , உதாரணமாக ஒரு சிம்ம இலக்கின துலா ராசி  ஜாதகருக்கு குரு திசை நடப்பதாக வைத்து கொண்டால், நடக்கும் குரு திசை சுய ஜாதகத்தில் எந்த வீடுகளின் பலனை நடத்துகிறது என்பதை நிச்சயம் தெரிந்து கொள்ள இயலும்.


ஒருவேளை ஜாதகருக்கு 4 , 10 வீடுகள் முறையே 10 ம வீட்டுடன்  தொடர்பு பெற்று பலன் நடத்துகிறது என்றால்,  கோட்சாரத்தில் தற்பொழுது துலாம் ராசியில் இருக்கும் ( ஏழரை சனி என்று மற்ற ஜோதிடர்கள் சொல்ல கூடும் ) சனிபகவானால் ஜாதகருக்கு எவ்வித இடையூறும் இருக்க வாய்ப்பே இல்லை, காரணம் ஜாதகருக்கு 10 வீட்டு பலன் மட்டுமே தற்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது இந்த பத்தாம் வீட்டுடன் தொடர்பு பெரும் கோட்சார கிரகங்கள் மட்டுமே 10 ம வீட்டுக்கு நன்மை தீமை என்ற அமைப்பில் பலன் தர முடியும் . அப்படி கணிதம் செய்வோமானால் தற்பொழுது பத்தாம் வீடு ரிஷபத்தில்  குரு பகவான் கோட்சார ரீதியாக சஞ்சாரம் செய்கிறார் இவர் ரிஷப பத்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்வது கெடுதலான பலனையே தரும் .

ஜாதகர் ஜீவன வழியிலும் , தந்தை வழியிலும் சிரமம் அனுபவிக்க வேண்டி வரும் என்பதே சரியான கோட்சார பலன் ஆகும் . ஆக லக்கினத்தை அடிப்படையாக வைத்து கணிதம் செய்வதே  சரியான ஜாதக பலனை சொல்ல இயலும் என்பது உறுதியாகிறது , இதை காண்பவர்களும் இனி சரியான ஜாதக பலனை தெரிந்து இறையருளின் கருணையினால் நலம் பெறுவார்களாக !


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக