லக்கினத்தில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :
வளர்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் வாழ்க்கையில் மிகசிறந்த அதிர்ஷ்ட யோகங்களை பெரும் வாய்ப்பினை பெறுவார் , நல்ல இடத்தில் வளரும் சூழ்நிலை இளவயது முதற்கொண்டே ஜாதகருக்கு அமையும் , நல்ல கல்வி அறிவு பெரும் யோகம் கொண்டவர்கள் மனோ திடமும் , தன்னம்பிக்கையும் அதிகம் காணப்படும் , வாழ்க்கையில் முன்னேற்றம் படிப்படியாக மிக விரைவாக ஏற்றப்படும் , நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராகவும் , தீய பழக்க வழக்கங்கள் அற்றவராகவும் ஜாதகர் காணப்படுவார் .
தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகருக்கு எதிரி ஜாதகரே , மனம் போன போக்கில் ஜாதகரின் செயல் பாடுகள் அமையும் , அடிப்படையில் எந்தவித நன்மையையும் பெற முடியாத தன்மை ஏற்ப்படும் , மற்றவரிடம் நல்ல பெயர் வாங்க ஜாதகர் படாத பாடு பட வேண்டி வரும் , வாழ்க்கையில் நலம் பெற அதிகம் சிரமங்களை ஜாதகர் எதிர்கொள்ள வேண்டி வரும் , முன்னேற்ற தடை , மற்றவர் உதவி இல்லாத நிலை , மற்றவரை சார்ந்து வாழும் சூழ்நிலை என ஜாதகர் பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான் , இவர்கள் எவ்வித தீய பழக்கங்களையும் தொடாமல் இருப்பது அவசியம் இல்லை எனில் அதற்க்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்ப்படும் , இது உயிர் இழப்பு வரை செல்ல கூடும் .
2 ம் வீடு சிம்ம ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :
வளர்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் பேசும் வார்த்தைகளில் அதிக கவனம் தேவை இல்லை எனில் அதிக துன்பம் பெற வேண்டி வரும் , வருமானத்தை முறையாக பயன்படுத்த இயலாது, பூர்வீகத்தில் வசிக்க இயலாது மீறி இருப்பின் ஜாதகருக்கு எவ்வித முன்னேற்றமும் கிடைக்காது , குடும்ப வாழ்க்கை மிகவும் சிரமம் தரும் , பலதார யோகம் கொண்டார்கள் , கண்பார்வை பாதிக்க வாய்ப்பு அதிகம் உண்டு , சேமிக்கும் பழக்கத்தை ஜாதகர் சிறு வயது முதலே பின்பற்ற வேண்டும் , இல்லை எனில் அதிக சிரமப்பட வேண்டி வரும் .
தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் நல்ல முறையில் குடும்பம் நடத்தி செல்வார் , நல்ல மனைவி அமையும் யோகம் பெற்றவர் , நல்ல வருமானம் ஜாதகரை தேடி வரும் . சொத்து சுக சேர்க்கை ஜாதகருக்கு இயற்க்கையாக அமையும் , ஜாதகரின் பேச்சுக்கு நல்ல மதிப்பு உண்டு . கலைகளில் சிறந்து விளங்கும் தன்மை ஏற்ப்படும் , கலைத்துறையில் அதிகம் சாதிப்பவர்கள் இவர்களே , நிறைய இசை ஞானம் கொண்டவர்கள் . இவர்கள் அனைத்து திறமைகளும் தன்னுள் கொண்டவர்கள் இதை முறையாக பயன்படுத்தினால் உலக புகழ் பெரும் யோகம் பெற்றவர்கள் .
3 ம் வீடு கன்னி ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :
வளர் பிறை சந்திரன் / தேய்பிறை சந்திரன் எதுவாக இருந்தாலும் ஜாதகர் மிகவும் நல்ல பலன்களையே அனுபவிக்கும் யோகம் பெற்றவர்கள் , ஜாதகர் எடுக்கும் அனைத்து முயற்ச்சிகளும் நல்ல வெற்றி வாய்ப்பினை தரும் , எழுத்தின் மூலம் புகழ் பெரும் யோகம் பெற்றவர்கள் , கலைத்துறையில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள் , எப்பொழுதும் இளமை மாறாத தோற்றம் கொண்டவர்கள் , மக்கள் செல்வாக்கும் ஆதரவும் கொண்டவர்கள் தான் நினைத்ததை முடிக்கும் திறன் பெற்றவர்கள் , மற்றவர்களை அனுசரித்து சென்றால் வாழ்க்கை மிகவும் இனிமையான வாழ்க்கையாக அமையும் .
4 ம் வீடு துலாம் ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :
வளர் பிறை சந்திரன் என்றால் ஜாதகர் குடியிருக்க நல்ல வீடு கிடைக்காது , தாய் வழியில் அதிக துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும் , நல்ல வேண்டி வாகனம் அமையாது , ஜாதாகர் சிந்தித்து செயல் படுவது மிக அவசியம் இல்லை எனில் அதிக துன்பம் ஏற்ப்படும் , மன ஆற்றலை நன்றாக வளர்த்து கொள்வது மிக அவசியம் , பொது மக்களை நம்பி எந்த காரியங்களில் இறங்கினாலும் ஜாதகர் அதிக துன்ப பட வேண்டி வரும் .
தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் நல்ல யோகங்களை மனைவி வழியிலும் , நண்பர்கள் வழியிலும் , தனது தாய்வழியிலும் அனுபவிக்கும் யோகம் கொண்டவர்கள் , நல்ல சிறந்த கல்வி அறிவு ஜாதகருக்கு எங்கு சென்றாலும் கைகொடுக்கும், மக்களால் அதிக நன்மை பெரும் யோகம் பெற்றவர்கள் , பொதுமக்கள் ஆதரவு எப்பொழுதும் ஜாதகருக்கு உண்டு , நல்ல வசதியான வீடு , வண்டி வாகனம் போன்ற அமைப்பை பெரும் யோகம் பெற்றவர்கள் .
5 ம் வீடு விருச்சக ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :
வளர் பிறை சந்திரன் என்றால் ஜாதகர் இறை அருள் இயற்கையாக அமைய பெற்றவர்கள் , நல்ல முன்னேற்றம் , ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்கள் , பூர்வீகத்தில் குடி இருப்பதால் திடீர் என நல்ல முன்னேற்றமும் யோகமும் ஏற்ப்பாடு ஜாதகருக்கு நல்ல ஆண் வாரிசு கிடைக்கும் , குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டவர்கள் , எதற்க்காகவும் பயம் கொள்ளாதவர்கள் , கவலை அற்றவர்கள் , தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவார்கள் .
தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகரின் மன நிலையை யாரும் புரிந்து கொள்ள முடியாது , எந்த நேரத்தில் என்ன செய்வார் என்றே ஜாதகருக்கே தெரியாது , மனைவி வழியில் அதிக துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்ப்படும் , மற்றவரால் இழப்புகளை அதிகம் சந்திக்க வேண்டிவரும் , மனநிலை பாதிக்கும் சூழ்நிலை , போதைக்கு அடிமை ஆகும் நிலை மனதில் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் .
6 ம் வீடு தனுசு ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :
வளர் பிறை சந்திரன் / தேய்பிறை சந்திரன் எதுவாக இருந்தாலும் ஜாதகருக்கு மன நிலை பாதிப்பால் உடல் நிலை கெடும் , கடன் பெறுவது கொடுப்பது ஆகவே ஆகாது , சரியான நேரத்தில் உணவு அருந்துவது அவசியம் இல்லை எனில் மருத்துவ மனைக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைக்க வேண்டி வரும் , இந்த அமைப்பை பெற்றவர்கள் யாரையும் பகைத்து கொள்வது அவ்வளவு நன்மையை தருவது இல்லை , எதிரிகளிடம் கொஞ்சம் கவனமாக இருப்பது அவசியம் .
7 ம் வீடு மகர ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :
வளர் பிறை சந்திரன் என்றால் ஜாதகர் வாழ்க்கையில் அதிக துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் , மக்களிடம் நன்மதிப்பை பெறுவது மிகவும் கடினம் , பொது வாழ்க்கையில் ஜாதகர் அதிகம் தீமையான பலனை அனுபவிக்க வேண்டி வரும் , போதை வஸ்துக்களை கண்ணால் பார்ப்பது கூட தீமையை தரும் , மன நிலை ஒருமுக படுத்த இயலாது மற்றவர்களை சார்ந்து ஜீவிக்க வேண்டி வரும் , பரதேஷ ஜீவனம் அமைந்து விடும் தீய நண்பர்கள் சேர்க்கையும் , மனைவியாலும் அதிக தின்பத்திர்க்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்ப்படும் , நல்ல ஆன்மீக வாதிகளிடம் தீட்சை பெறுவது அவசியமாகிறது .
தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் நல்ல யோக பலன்களை நிச்சயம் பெறுவார் , மக்களிடம் செல்வாக்கு அதிகம் உள்ளவர்கள் , நேர்மை மாறாத குணம் கொண்டவர்கள் , மற்றவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தருபவர்கள், நீதிக்காகவும் நியத்திர்க்காகவும் பாடுபடும் குணம் கொண்டவர்கள் , மக்களால் முன்னேற்றம் பெறுவார்கள் , மக்களுக்கு பிரதி பலன் பாராமல் நன்மை செய்வார்கள் , மனைவி வழியில் நல்ல முன்னேறமும் ஆதரவும் கொண்டவர்கள் .
8 ம் வீடு கும்ப ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :
வளர் பிறை சந்திரன் / தேய்பிறை சந்திரன் எதுவாக இருந்தாலும் ஜாதகருக்கு திடீர் இழப்புகளை சந்திக்க வேண்டி வரும் , உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் , நிறை முதலீடு செய்யும் பொழுது அதிக கவனம் தேவை , விபத்துகள் நடக்க வாய்ப்பு அதிகம் என்பதால் வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனமும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது அவசியம் , மனநிலை அதிகம் பாதிக்க பாடுவது இந்த ஜாதக அமைப்பை பெற்றவர்களுக்கு தான் , எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது அவசியம் .
9 ம் வீடு மீன ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :
வளர் பிறை சந்திரன் என்றால் ஜாதகர் நன்மையான பலன்களை அதிகம் அனுபவிப்பார் , மக்களிடம் நல்ல செல்வாக்கு, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் , பரந்த மனப்பான்மை , பொது வாழ்வில் தூய்மை என ஜாதகரின் சிறப்பான குணங்கள் எதிர்பாராத முன்னேற்றத்தை அள்ளித்தரும் , ஆன்மீக வாழ்க்கையில் மிகசிறந்த முன்னேற்றம் பெரும் யோகம் கொண்டவர்கள் , இறை அருள் எப்பொழுதும் ஜாதகருக்கு நன்மையான பலன்களையே தந்து கொண்டு இருக்கும் .
தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் ஜாதகர் தேவையில்லாத விஷயங்களை செய்வதால் சமுதாயத்தில் அவ பெயர் உண்டாகும் , இதனால் மன நிலை பாதிக்கும் தன்மை ஏற்ப்படும் போதை பொருட்களுக்கு அடிமை ஆகும் சூழ்நிலை ஏற்ப்படும் ஜாதகர் மன நிலை ஒருமுக படுத்துவது அவசியம் .
10 ம் வீடு மேஷ ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :
வளர் பிறை சந்திரன் என்றால் ஜாதகர் செய்யும் தொழில்களில் நல்ல முன்னேற்றம் பெறுவது மிக கடினம் , தகப்பனார் வழியில் இருந்து எவ்வித உதவிகளும் கிடைக்காது , சுய தொழில்கள் செய்யும் பொழுது ஜாதகர் அதிக கவனமுடன் இருப்பது அவசியம் , இல்லை எனில் அதிக பாதிப்புகளை அனுபவிக்க வேண்டி வரும் , பொதுவாக இவர்கள் அவசர பட்டு செய்யும் அனைத்து காரியங்களும் தோல்வியை தரும் .
தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் பல தொழில் புரியும் பன்முக திறமையாளராக காணப்படுவார் , செய்யும் தொழில்களில் எல்லாம் சிறப்பான வெற்றிகளை காண்பார் , நினைக்கும் காரியங்களை சாதிக்கும் திறமை கொண்டவர்கள் , நல்ல உடல் அமைப்பை பெற்றவர்கள் , கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு கொண்ட பண்பாளர்கள் , நிறைந்த நிர்வாக திறன் கொண்டவர்கள் , மக்களிடம் நன்மதிப்பை பெரும் யோகம் கொண்டவர்கள் , மக்களுக்கு சேவை செய்யும் பணிகளில் சிறப்பாக செயல் படும் தன்மை கொண்டவர்கள் , நன்மைகள் அதிகம் பெரும் யோக அமைப்பை கொண்டவர்கள் .
11 ம் வீடு ரிஷப ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :
வளர் பிறை சந்திரன் / தேய்பிறை சந்திரன் எதுவாக இருந்தாலும் நீடித்த அதிர்ஷ்டத்தை பெரும் தன்மை கொண்டவர்கள் , நல்ல உடல் அமைப்பு , கலைத்துறையில் வெற்றி , நல்ல சொத்து சுகம் , நல்ல மனோ திடம் , மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம் கொண்டவர்கள் , உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் நல்ல நிலையை இருக்கும் ஜாதக அமைப்பை கொண்டவர்கள் , நினைக்கும் காரியங்களை முடிக்கும் திறைமை கொண்டவர்கள் , நிதி நிறுவனம் , சுய தொழில்களில் மிகசிறந்த முன்னேற்றம் பெரும் அமைப்பை பெற்றவர்கள் , நல்ல வசதியான வீடு , வண்டி , வாகன யோகம் பெற்றவர்கள் .
12 ம் வீடு மிதுன ராசியில் லக்கினாதிபதி சந்திரன் அமர்ந்தால் :
வளர் பிறை சந்திரன் / தேய்பிறை சந்திரன் எதுவாக இருந்தாலும் ஜாதகருக்கு அதிக துன்பமே ஏற்ப்படும் , ஜாதகரின் பிடிவாத குணத்தால் அதிக இழப்புகளையும் மன போராடத்தையும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்ப்படும் , இந்த அமைப்பை பெற்றவர்கள் நன்றாக சிந்தித்து செயல்படுவது அவசியம் அல்லது பெரியவர்களின் சொல்படி நடப்பது நன்மை தரும் , இல்லை எனில் அதிக துன்பமே ஏற்ப்படும் , திருமண வாழ்க்கையை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும் இல்லை எனில் பிரிவு நிச்சயம் உண்டு , செய்யும் அனைத்து காரியங்களையும் பெரியவர்களின் ஆலோசனை படி செய்வது அவசியம் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
thanks for the post..nan kadaka lakinam..en jathakathil santhiran meenathil irukirar..nan pirantha thithi theipirai thirithiyai.
பதிலளிநீக்குதேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் ஜாதகர் தேவையில்லாத விஷயங்களை செய்வதால் சமுதாயத்தில் அவ பெயர் உண்டாகும் , இதனால் மன நிலை பாதிக்கும் தன்மை ஏற்ப்படும் போதை பொருட்களுக்கு அடிமை ஆகும் சூழ்நிலை ஏற்ப்படும் ஜாதகர் மன நிலை ஒருமுக படுத்துவது அவசியம்.//
kandipaga ini manathai oru nilai padutha muyarchikuren...melum thagavalkal irundhalum valangavum..nandri