Wednesday, June 27, 2012

ராகு கேது பாதிப்பிற்கு எளிய நிவர்த்தி வழி முறைகள் !ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் ராகு கேது பிறப்பிலோ அல்லது கோட்சார ரீதியாக பாதிக்கப்பாடுமாயின் அதன் கெடு பலன்களில் இருந்து ஜாதகர் விடுபட சில எளிய வழி
முறைகள் , நவகிரகங்களில் விரைவில் எளிதாக  நமது உடலுடன் உயிர்கலப்பு பெரும் கிரகங்கள் இந்த ராகு கேது என்பதனை மனதில் கொள்க மற்ற கிரகங்களுக்கு இல்லாத தனி தன்மை இந்த சாயா கிரகங்களுக்கு மட்டுமே உண்டு  :

1 ) தனது தாய் வழி அல்லது தகப்பன் வழி தாய் தந்தையருக்கு ( தாத்தா பாட்டி , அம்மாயி ,அப்பிச்சி ) ஒரு பொர்ணமி நாளில் அவர்களுக்கு புத்தாடை கொடுத்து , அவர்கள் கையால் ( அட்சதை தூவி ) ஆசிர்வாதம்பெறுவது ஜாதார் இந்த ராகு கேது கிரகங்களின் பாதிப்பிலிருந்து விடு பட வழி வகுக்கும் , மேலும் திருமண தாமதம் , குழந்தை பாக்கியம் , ஆயுள் விருத்தி , தொழில் முன்னேற்றம் , என ஜாதகருக்கு படிப்படியான முன்னேற்றத்தை நிச்சயம் தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை இந்த கிரகங்களின் பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளவர்கள் கூட தொடர்ந்து மூன்று பொர்ணமிக்கு ஆசிர்வாதம் பெறுவார்களே ஆயின் இதன் வழி நிவர்த்தி பெற்று சகல நலன்களும் பெறுவார்கள் , மேலும் விரைவில் ஜாதகருக்கு ராகு கேது கிரகங்கள்  நன்மையான பலனை விருத்தி செய்து கொடுக்க ஆரம்பிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை .

2 ) அல்லது அருகில் உள்ள  அறுபது வயதை கடந்த பெரியவர்கள் , சதாபிஷேகம் கண்ட தம்பதியரிடம் இது போன்று ஆசிர்வாதம் பெறுவதும், ராகு கேது கிரகங்கள் நன்மையான பலனை தருவதற்கு வழி வகுக்கும் , குறிப்பாக அறுபது வயதை கடந்த பெரியோர்கள் அனைவரிடமும் , ராகு கேதுவால் பாதிக்க பட்டவர்கள் ஆசி பெரும் பொழுது சகல நன்மைகளையும் ராகு கேது கிரகம் தர தவறுவதில்லை.திருமண வாழ்க்கை சரியாக அமையாதவர்கள் , திருமண தடையுள்ளவர்கள் ,குழந்தை பாக்கியம் அற்றவர்கள் , ஜாதக ரீதியாக ராகு கேது கிரகங்களால் அதிகம் பாதிக்க படும் நிலையில் உள்ளவர்களுக்கு , இந்த வழிமுறை விரைவில் பலன் தருகிறது என்பது கண்ணெதிரே  கண்ட உண்மை .

3 ) ஜாதகர் ஆக்னை தீட்சை  , சரியான குருவின் வழிகாட்டுதலில் பெற்று கொள்வது ராகு கேது கிரகங்களின் கெடுதலான பலன்களில் இருந்து விரைவில் மீட்டு எடுக்கும் இதற்க்கு ஜாதகருக்கு நல்ல தேடுதல் இருப்பது அவசியமாகிறது , சிறந்த ஆன்மீக வாதிகள் , மத குருமார்கள் , ஆன்மீக போதனையாளர்கள் , யோக ஆசிரியர்கள் இவர்களிடம் தீட்சை பெறுவதும், ஜாதகருக்கு ராகு கேது கிரக பாதிப்பிலிருந்து விரைவில் மீட்டெடுக்கும் .

4 ) அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி விட்டு , சூரியன் வருவதற்கு முன் சூர்ய நமஸ்காரம் செய்வது , ஜாதகரே சுயமாக ராகு கேது கிரகங்களின் பாதிப்பிலிருந்து சில நாட்களில் விடுபட வழி வகுக்கும் , இந்த முறை மிகவும் எளிதானது ஆனால் தொடர்ந்து செய்யும் பொழுது மட்டுமே ஜாதகர் ராகு கேது கிரகங்களுடன் உயிர்கலப்பு பெறுவது பற்றி உணர முடியும் , இடைவெளி விட்டு விட்டு செய்வது நிச்சயம் பலன் தர வாய்ப்பு இல்லை .

5 ) கலை துறையில் சிறந்து விளங்கும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது இதற்க்கு நிகரான பலனை அள்ளி தரும் ஏனெனில் இவர்கள் அனைவரிடமும் ராகு கேது கிரகத்தின் ஜீவ சக்தி மிகுதியாக காணப்படும் , சித்தர்கள் ஜீவ சமாதி பெற்ற இடங்கள் அனைத்திலும் இந்த கிரகசக்திகள் மிகுந்து காணப்படும் அந்த இடங்களில் ஜாதகர் சென்று உயிர்கலப்பு பெறுவது விரைவான நன்மைகளை தரும் . சித்தர்கள் ஜீவ சமாதி பெற்ற இடங்களுக்கு சென்று முடிந்தது 30 நிமிடங்களாவது தியானத்தில் அமர்வது ஜாதகருக்கு நிச்சயம் நன்மையான பலன்களை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

6 ) புகழ் பெற்ற சிவா ஸ்தலங்களில் எல்லாம் ராகு கேது கிரகங்களின் ஜீவ சக்தி மிகுதியாக காணப்படும் , அந்த தளங்களுக்கு வருடம் ஒரு முறை அல்லது வாழ்வில் ஒருமுறை சென்றுவருவது ராகு கேது கிரக பாதிப்பிலிருந்து ஜாதகரை நிச்சயம் மீட்டு எடுக்கும் குறிப்பாக , திரு காளகஸ்தி , தங்க மேடு தம்பிக்களை அய்யன் கோவில் , மருத மலை , பழனி , திருப்பதி , திருவெண்காடு , திருவக்கரை, சபரி மலை , கொடுமுடி , திரு நணா எனும் கூடுதுறை , நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் , திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் திரு கோவில் , பாண்டமங்கலம் விஸ்வநாதர் கோவில் , கொல்லி மலை அரப்பளிஸ்வரர் கோவில் , அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் , பாண்டவர்கள் ஐவரும் பூசித்த சிவஸ்தலங்கள் கொங்கு மண்டலத்தில் ஐந்து இடங்கள்  ஆகியன ராகு கேது பாதிப்பிற்கு விரைவான நன்மைகளை தரும் கோவில்கள் .

7 ) ராகு கேது கிரகங்கள் சுய ஜாதக ரீதியாக பாதிக்க பட்டு இருப்பின் மட்டுமே ஜாதகர் இந்த வழி முறைகளை பின்பற்றி நன்மை பெறலாம் , இயற்கையில் ஜாதகருக்கு ராகு கேது கிரகங்கள் நன்றாக அமைந்து இருப்பின் , ஜாதகர் இவ்வித நிவர்த்திகள் எதுவும் தேவையில்லை , மேலும் நல்ல நிலையில் அமர பெற்ற ராகு கேது கிரகங்கள் ஜாதகருக்கு நிச்சயம் எவ்வித தீமையான பலனையும் தருவதில்லை வாழ்க்கையில் மிகசிறந்த முன்னேற்றம் மட்டுமே வாரி வழங்குகிறது . மேலும் தனது ஜாதகத்தில் இந்த சாயா கிரகங்கள் நன்மையை செய்கிறதா தீமையை செய்கிறதா என்று தெரிந்து கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுங்கள் . பொதுவாக ராகு கேது தீமையை மட்டுமே தரும் என்பதில் சிறிதும் உண்மையில்லை இந்த சாய கிரகங்களுக்கு மட்டும் எந்த இடத்தில் அமருகிறதோ அந்த பாவக பலனை தான் மட்டுமே முழுவதும் ஏற்று கொண்டு செய்யும் , மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை எதுவும் அந்த பாவகத்திர்க்கு சம்பந்தம் பெற முடியாது என்பது ஜாதக ரீதியான உண்மை .

வாழ்க வளமுடன்

ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment