Wednesday, June 13, 2012

ஏழு ஆதாரங்கள் ஒன்பது மையங்கள் பகுதி 1 !

குருவே துணை

 மூலாதாரம் ( கருமையம் ) :

  பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் தனது வினைபதிவின் நிலையை உணர்த்தும் இடமாகும் , ஒருவருக்கு ஏற்ப்படும்  இன்ப துன்பம் நிகழ்ச்சிகள் அனைத்தும் , இதன் வழியே நடை பெறுகிறது , மனிதன் பூ உலகில் நல்ல நிலையில் வாழ்வதற்கு இந்த கருமையம் பரிசுத்தமாக அமைந்து இருப்பது அவசியம் , இதை ஜோதிடத்தில் லக்கினம் , நான்காம் பாவகம் , பத்தாம் பாவகம் வழியில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , இதை பஞ்சபூத தத்துவத்தில் மண்ணுக்குரிய இடமாகும் . சிலர் நிறை ஆசைகள் , திட்டங்கள் அனைத்தையும் மனதில் வைத்து இருப்பார்கள் ஆனால் நடை முறையில் செயல்படுத்த முடியாது காரணம் இந்த மூலாதாரம் பரிசுத்தமாக இருக்காது,  எனவே ஜாதகரின் எண்ணங்கள் அனைத்தும் வெறும் கற்பனையாகவே சென்றுவிடும் .

இவர்கள் இந்த கருமையத்தை பரிசுத்த நிலைக்கு எடுத்து செல்வார்களே ஆயின் நிச்சயம் நினைக்கும் அனைத்தும் வெற்றி பெரும், மேலும் பாவ புண்ணிய பதிவுகளை சேமித்து வைக்கும் இடம் இதுவே , மனிதனின் ஒவ்வொரு செயல்களையும் நிர்ணயிக்கும் இடம் இந்த கருமையம், இதன் அனுமதி இன்றி யாரும் எந்த செயலையும் செய்து விட முடியாது மனிதன் பூலோகத்தில் அடைய விரும்பும் அனைத்தையும் வாரி வழங்கும் தன்மை கொண்டது இந்த கருமையம் எனும் மூலாதாரம் , இறப்பிற்கு முன்னும் , பின்னும் நமது வினை  பதிவுகளை மாறாமல் தரும் அமைப்பை பெற்றது .

இந்த கருமையம் நன்றாக அமைந்தவர்களுக்கு உடல் அமைப்பு மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது , மண் சம்பந்த பட்ட ஆராய்ச்சி , புதை பொருட்கள் பற்றிய ஆய்வு ஆகியவற்றில் ஆர்வம் அதிகம் ஏற்ப்படுகிறது , சிறந்த மனோசக்தி கொண்டவராகவும் உடல் திறன் கொண்டவராகவும் காணப்படுவார் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அமைப்பை கொண்டவர்கள் இவர்களிடம் உடல் நோய்கள் அவ்வளவு  எளிதில் அணுகாது , மன சக்தியை உடல் சக்தியாகவும் , உடல் சக்தியை மன சக்தியாகவும் மாற்றி அமைக்கும் தன்மையை தரும்

இதனால் எவ்வித பிரச்சனைகளையும் சர்வ சாதரணமாக தீர்க்கும் திறன் இயற்கையாக அமைந்து விடும் , இது சாந்தி தவத்திற்க்குரிய இடமாகும் சாந்தி தவம் செய்யும் பொழுது சம்பந்தபட்டவரின்  கருமையம் பரிசுத்தம் பெரும் நல்ல குருவின் மூலம் இதை பயின்று நலம் பெறுங்கள் . 

 சுவாதிஷ்டானம் :

  இது நமது உடம்பில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த மையம் ஆகும் , இந்த அமைப்பு ஒவ்வொருவருக்கும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜிவித்திருக்க முடியும் , பஞ்ச பூத தத்துவத்தில் நீருக்குரிய இடமாகும் மன ஆற்றலை செழுமை படுத்தும் அமைப்பை பெற்றது , உடலில் ரத்த அமைப்பை சுத்தமாக வைத்திருக்க உதவும் தன்மை பெற்றது , எண்ணங்களின் வழியே நன்மையை தரும் அமைப்பை கொண்டது , மனம் என்ன சொல்கிறதோ அதன் படி நடக்கும் , குரு முகமாக கற்று இந்த இடத்தில் தவம்   மேற்கொண்டால்  மற்றவர்களின் மனதில் உள்ள விஷயங்களை எளிதாக தெரிந்து கொள்ளும் அமைப்பை தரும் , இறந்தவர்களின் ஆவிகள் உடன் தொடர்புகொள்ளும் ஆற்றல் ஏற்ப்படும் .

சற்றே கவனம் இல்லை என்றால் சம்பந்தபட்டவர் ஆவிகளுக்கு அடிமை ஆகும் நிலை ஏற்ப்படும்,  இதனால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்க பட வாய்ப்பு அதிகம் . தெய்வீக சக்தியை மேம்படுத்தும் தன்மை பெற்ற இடம் இதுவாகும் , இந்த அமைப்பு பரிசுத்த நிலையில் உள்ளவர்களுக்கு புலன்களுக்கு எட்டாத அறிவு நிலை ஏற்ப்படும் , வருமுன் அறியும் ஆற்றல் மிகுந்து செயல் படும் . மேலும் உடல் நிலையை எப்பொழுதும் சம நிலையில் வைத்து இருப்பது இதுவே ஆகும் .

ஒரு குழந்தை சிறப்பான குணா நலன்களுடன் இருப்பதற்கு உதவும் தன்மை பெற்றது , மேலும் இந்த அமைப்பை நன்றாக பாதுகாப்பாக வைத்து இருந்தால் சுறு சுறுப்பு , தைரியம், ஆற்றல் , கூர்மையான அறிவு திறன் போன்ற நன்மைகள் நிச்சயம் கிடைக்க பெறலாம் , இதை பற்றி அறிந்து கொள்ள ஜாதகத்தில் மூன்றாம் இடம் ஆறாம் இடம் , பதினொன்றாம் இடம் ஆகியன சரியான பதிலை தரும் என்பதில் சந்தேகம் இல்லை . மேலும் சிறு சிறு சித்து வேலைகள் செய்ய உகந்த இடம், இதில் அதிக கவனம் செலுத்தினால் சம்பந்தபட்டவர் விரைவில் உடல் நிலை பாதிக்க பட கூடும் .

 மணிப்பூரகம் : 
 உடல் அமைப்பில் மனிதனுக்கு சக்தியை உணவு வழியில் கிடைக்க செய்யும் தன்மை கொண்டது , நாம் அருந்தும் உணவு உடலுக்கு சக்தியாக மாற்றம் செய்து உடல்நிலையை எப்பொழுதும் சரி சமமாக பராமரிக்கும் தன்மை பெற்ற இடமாகும் , உடலின் வெப்ப நிலையை நிர்வாகிக்கும் தன்மை பெற்ற இடம் இதுவாகும் , இரத்தத்தில் அழுத்தத்தை சரியாக நிர்வாகிக்கும் இடமாகும் , புண்ணிய ஆத்மாக்களுடன் தொடர்பு ஏற்ப்படும் ( சித்தர்கள் , முனிவர்கள் , ஆன்றோர் , சான்றோரின் ஆத்மாக்களுடன் சம்பந்தம் ஏற்ப்படும் தரிஷனம் கிட்டும் )

இந்த அமைப்பு உடலில் நன்றாக இயங்க ஆரம்பித்தால் , சம்பந்தபட்டவர் பிறர் எண்ணும் எண்ணங்களை அப்படியே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்ப்படும் , தனது எண்ணத்தை மற்றவர்களின் மனதில் உதிக்க செய்து அவர்களை தனது சுய லாபத்திற்காக பயன்படுத்தி கொள்ள இயலும் ( ஹிட்லர் மாதிரி ) சம்பந்த பட்டவர் நல்லவராக இருப்பின் , இவரின் ஆலோசனைப்படி நடப்பவர்கள் அனைவரும் வாழ்க்கையின் வெற்றி பாதையில் நடக்க துவங்கி விடுவார்கள் . உடல் ஓரிடத்தில் இருக்க ஜீவனை வேறு இடத்திற்கு பயணிக்க வைக்கும் ஆற்றல் இவர்களுக்கு கிடைக்கும் .

மற்றவர்களின் ஆதரவும் ஒத்தாசையும் இவருக்கு தானாக வந்து சேரும் , வெகு தொலைவில் நடப்பவைகளை கூட சரியாக சொல்லிவிடும் தன்மை இயற்கையாக அமைந்து விடும் , பின்னால் நடப்பவைகளை முன்னால் சொல்லும் அறிவாற்றல் இயற்க்கை இவர்களுக்கு கொடுத்த நன்கொடையாகும் , பஞ்ச பூத தத்துவத்தில் நெருப்புக்குரிய இடமாகும் , பரிசுத்தமான நல்ல எண்ணங்களை கொண்டவர்கள் இந்த அமைப்பை மிகவும் சிற்பிக்க செய்வார்கள் .

தற்பொழுது மனிதர்களை மிரட்டி கொண்டு இருக்கும் சக்கரை நோய் இந்த அமைப்பு பாதிக்க படுமாயின் நிச்சயம் ஏற்ப்படும் , இதற்காக ஆங்கில மருந்து எடுத்து கொள்ளும் பொழுது மிகவும் விரைவாக பாதிக்க பட வாய்ப்பு அதிகம் , இதற்க்கு இயற்க்கை வழி உணவு முறையும் , நல்ல நீண்ட தொடர் உடற் பயிற்சி இந்த அமைப்பை நிச்சயம் நல்ல நிலைக்கு மீட்டு எடுக்கும் சக்கரை வியாதி என்ற ஒரு விஷயத்தை நாம் மறக்கும் அளவிற்கு மணிபூரகம் நன்றாக செயல் படுவது அவசியம் , இதற்க்கு சரியான குருவின் வழிகாட்டுதல் அவசியம் தேவை என்பதை கவனத்தில் கொள்க .


வாழ்க வளமுடன்

ஜோதிடன் வர்ஷன்
9443355696No comments:

Post a Comment