பொதுவாக சுய ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12 பாவகங்களில் செவ்வாய் இருப்பின், அது செவ்வாய் தோஷம் என்று நிர்ணயம் செய்து , குறிப்பிட்ட ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் இதே போன்றே செவ்வாய் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12 பாவகங்களில் இருக்கும் ஜாதகத்தை சார்ந்தவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றும் பல ஜோதிடர்கள் தீர்மானம் செய்கின்றனர் , இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் . மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் தரும் நன்மை தீமையை பற்றி விரிவாக 12 லக்கினத்தை அடிப்படையாக வைத்து பார்ப்போம் .
மேஷ லக்கினம் :
2 ம் பாவகம் ரிஷபத்தில் செவ்வாய் அமர்வது ஜாதகருக்கு இலக்கின அதிபதி என்ற முறையில் லக்கினத்திற்கும் இரண்டாம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித தீமையான பலனை தருவார் என்பதில் சந்தேகமே இல்லை , மேலும் இரண்டாம் வீட்டில் அமரும் செவ்வாய் ஜாதகருக்கு வாக்கின் வழியில் தீமையான பலனையும் , வருமான இழப்பையும் தவறாமல் செய்வார் , மேலும் ஜாதகரின் உடல் நிலை , மன நிலை இரண்டும் வெகுவாக பாதிக்க படும் என்பதில் சந்தேகமே இல்லை ஆக மேஷ இலக்கணத்திற்கு 2 ல் செவ்வாய் அமர்வது லக்கினத்திற்கும் இரண்டாம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித தீமையான பலனையே நிச்சயம் தரும் என்பது உறுதி .
4 ம் பாவகம் கடகத்தில் செவ்வாய் அமர்வது ஜாதகருக்கு இலக்கின அதிபதி என்ற முறையில் லக்கினத்திற்கும் நான்காம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித நன்மையான பலனை செவ்வாய் பரிபூரணமாக செய்வார் குறிப்பாக மிகசிறந்த வசதிமிக்க வீடு, சொகுசான வண்டி வாகனம் , நிலையான சொத்து சுகம் , மன நிறைவான மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை செவ்வாய் பகவான் நிச்சயம் தருவர், மேலும் ஜாதகரின் கல்வி நிலையில் மிகப்பெரிய முன்னேற்றமும் , தொழில் முறையில் எதிர்பாராத முன்னேற்றங்களை இந்த இடத்தில் செவ்வாய் 100 சதவிகிதம் நன்மையை மட்டுமே செய்கிறார் , ஆக மேஷ இலக்கணத்திற்கு 4 ம் பாவகம் கடகத்தில் செவ்வாய் அமர்வது லக்கினத்திற்கும் நான்காம் பாவகத்திர்க்கும் 100 சதவிகித நன்மையான பலனை நிச்சயம் தருவார் என்பது உறுதி .
7 ம் பாவகம் துலாம் ராசியில் செவ்வாய் அமர்வது ஜாதகருக்கு இலக்கின அதிபதி என்ற முறையில் லக்கினத்திற்கும் களத்திர பாவகத்திர்க்கும் 100 சதவிகித நன்மையான பலனை செவ்வாய் பரிபூரணமாக செய்வார் குறிப்பாக நல்ல நண்பர்கள் , நல்ல ஆரோக்கியமான உடல் நிலை , சிறப்பான மன நிலை , கூட்டு தொழில் மூலம் அபரிவிதமான செல்வ வளம் மக்கள் செல்வாக்கு , மக்கள் ஆதரவின் மூலம் ஜாதகருக்கு மிகப்பெரிய வெற்றியை தருவார் , மேலும் தனது சுயபுத்தி கொண்டு அனைத்து விஷயங்கள் வெற்றிகொள்ளும் தனி திறன் ஜாதகருக்கு இயற்கையாக அமைய பெறுவார் ஆக மேஷ இலக்கணத்திற்கு 7 ம் பாவகம் துலாம் ராசியில் செவ்வாய் அமர்வது லக்கினத்திற்கும் களத்திர பாவகத்திர்க்கும் 100 சதவிகித நன்மையான பலனை நிச்சயம் தருவார் என்பது உறுதி .
8 ம் பாவகம் விருச்சக ராசியில் செவ்வாய் அமர்வது ஜாதகருக்கு இலக்கின அதிபதி என்ற முறையில் லக்கினத்திற்கும் ஆயுள் பாவகத்திர்க்கும் 100 சதவிகித தீமையான பலனை மட்டுமே தருகிறார் , திடீர் பொருளாதார இழப்பு , அதிக மன உளைச்சல் , தனது உடல் நிலையை ஜாதகரே கெடுத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ள படுத்தல் , தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி , மனதையும் , உடலையும் ஜாதகர் கெடுத்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும் , மேலும் ஜாதகர் மன நோய்க்கு ஆளாகும் நிலைக்கு மற்றவர்களால் தள்ள படுவார் , இவர்களுக்கு மன நிம்மதி என்பது சற்று குறைவே ஆக மேஷ இலக்கணத்திற்கு 8 ம் பாவகம் விருச்சக ராசியில் செவ்வாய் அமர்வது லக்கினத்திற்கும் ஆயுள் பாவகத்திர்க்கும் 100 சதவிகித தீமையான பலனையே நிச்சயம் தருவார் என்பது உறுதி .
12 ம் பாவகம் மீன ராசியில் செவ்வாய் அமர்வது ஜாதகருக்கு இலக்கின அதிபதி என்ற முறையில் லக்கினத்திற்கும் விரைய பாவகத்திர்க்கும் 100 சதவிகித தீமையான பலனை மட்டுமே தருகிறார் குறிப்பாக ஜாதகரின் மன நிம்மதியை சீர்குலைப்பதில் செவ்வாய்க்கு இந்த இடத்தில் அதிக பங்கு உண்டு , மேலும் குடும்ப வாழ்க்கையிலும் , அதிக முதலீடு செய்வதாலும் ஜாதகருக்கு தோல்வியே ஏற்ப்படுகிறது , மேலும் ஜாதகர் உடல் நிலை பாதிப்புடன் ஜீவிக்க வேண்டி வருகிறது, ஆக மேஷ இலக்கணத்திற்கு 12 ம் பாவகம் மீன ராசியில் செவ்வாய் அமர்வது லக்கினத்திற்கும் விரைய பாவகத்திர்க்கும் 100 சதவிகித தீமையான பலனை மட்டுமே தருகிறார்.
ரிஷப லக்கினம் :
2 ம் பாவகம் மிதுன ராசியில் செவ்வாய் அமர்வது ஜாதகருக்கு 12 ம் அதிபதி என்ற முறையில் இரண்டாம் பாவகத்திர்க்கும் , லக்கினத்திற்கும் 100 சதவிகித நன்மையான பலனை செவ்வாய் பகவான் தருகிறார் , மேலும் நல்ல வருமானம் சிறப்பான பேச்சாற்றல் , நிம்மதியான வாழ்க்கை முறை , பேச்சின் மூலமும் , எழுத்தின் மூலமும் நிலையான வருமானத்தை தருகிறார் , நல்ல குடும்ப வாழ்க்கை அமைய ஜாதகருக்கு நல்ல வாய்ப்பினை தருகிறார் , இனிமையான இல்லற வாழ்க்கை அமைவதற்கு காரணமாக செவ்வாய் பகவானே அமைவது ஆச்சரியாமான விஷயம் .
4 ம் பாவகம் சிம்ம ராசியில் செவ்வாய் அமர்வது ஜாதகருக்கு 12 ம் அதிபதி என்ற முறையில் நான்காம் பாவகத்திர்க்கும் , லக்கினத்திற்கும் 100 சதவிகித நன்மையான பலனை செவ்வாய் பகவான் தருகிறார் , மேலும் ஆன்மீக வாழ்க்கையில் அபரிவிதமான முன்னேறத்தை தருகிறார் , பூர்வீகத்தில் ஜீவன மேன்மையும் , குல விருத்தியும் , சொகுசான வாழ்க்கை முறையையும் ஜாதகருக்கு அமைத்து தருவதில் அதிக பங்கு சிம்ம செவ்வாய் பகவானாலேயே நடைபெறுகிறது , ரிஷப லக்கினத்திற்கு செவ்வாய் சிம்மத்தில் அமருவது 100 சதவிகித நன்மையே தருகிறது .
7 ம் பாவகம் விருச்சக ராசியில் செவ்வாய் அமர்வது ஜாதகருக்கு 12 ம் அதிபதி என்ற முறையிலும் , களத்திர பாவக அமைப்பிலும் லக்கினத்திற்கும் 100 சதவிகித தீமையான பலனையே செவ்வாய் பகவானால் ஏற்ப்படுகிறது , குறிப்பாக தீய நண்பர்கள் சேர்க்கை , தீய பெண்கள் சகவாசத்தால் உடல் மனம் பாதிக்கும் சூழ்நிலை , கூட்டு தொழில் முன்னேற்றம் அற்ற நிலை , திடீர் இழப்பு , அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலையை ஜாதகரே ஏற்ப்படுத்திகொல்லுதல் , மக்கள் ஆதரவு அற்ற நிலை , மனநிம்மதி இல்லாமல் போராட்ட வாழ்க்கையை வாழும் தன்மை , அதிக இழப்புகள் என்று ஜாதகரை இங்கு அமரும் செவ்வாய் படுத்தி எடுத்து விடுகிறார் .
8 ம் பாவகம் தனுசு ராசியில் அமரும் செவ்வாய் ரிஷப லக்கினத்திர்க்கு , 12 ம் பாவகத்திர்க்கு மட்டும் கெடுதல் பலனையும் , லக்கினத்திற்கும் , களத்திர பாவக அமைப்பிற்கும் 100 சதவிகித நன்மையை வாரி வழங்குகிறார் , 12 ம் பாவக வழியில் மன நிம்மதி இழப்பு ஏற்ப்பட்டாலும் , லக்கினத்திற்கு உடல் மற்றும் மன அமைப்பிற்கு நன்மையையும் , இல்லற வாழ்க்கையில் இன்பத்தையும் , கூட்டு தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் , மக்கள் செல்வாக்கினையும் வாரி வழங்கி விடுகிறார் , மேலும் மக்கள் தொடர்புள்ள தொழில்களில் ஜாதகர் மிக சிறப்பான முன்னேற்றத்தையும் வாரி வழங்கிவிடுகிறார் .
12 ம் பாவகம் மேஷ ராசியில் அமரும் செவ்வாய் ரிஷப லக்கினத்திற்கு லக்கினம் , களத்திரம் , விரைய பாவக அமைப்பு அனைத்திற்கும் தீமையான பலனையே வழங்குகிறார் , மேலும் இந்த பாவக வழியில் இருந்து உடல் நிலை மன நிலை பாதிப்பையும் , கூட்டு தொழில் மற்றும் களத்திர வழியில் அதிக கெடுதலான பலனையும் , அதிக முதலீடு , அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளால் அதிக பாதிப்புகளையும் ஜாதகருக்கு தவறாமல் தந்து சிரம பட வைத்து விடுகிறார் , பொதுமக்களை நம்பி செய்யும் காரியங்களில் எல்லாம் ஜாதகர் அதிக பாதிப்புகளை சந்திக்க வேண்டி வருகிறது .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
செவ்வாயால் பாதிப்பு என்று இருக்கும் பொது பவளம் வாய்த்த மோதிரம் அணியலாமா? தங்கள் கருத்து என்ன ஐயா?
பதிலளிநீக்கு