வியாழன், 6 செப்டம்பர், 2012

ஜாதகத்தில் செவ்வாய் தோஷ நிர்ணயம்,செவ்வாய் பகவான் வழங்கும் நன்மை ! தீமை ? பகுதி 4


பொதுவாக சுய ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12  பாவகங்களில் செவ்வாய் இருப்பின், அது செவ்வாய் தோஷம் என்று நிர்ணயம் செய்து , குறிப்பிட்ட ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் இதே போன்றே செவ்வாய் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12  பாவகங்களில் இருக்கும் ஜாதகத்தை சார்ந்தவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றும் பல ஜோதிடர்கள் தீர்மானம் செய்கின்றனர் , இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் . மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் தரும் நன்மை தீமையை பற்றி விரிவாக 12 லக்கினத்தை அடிப்படையாக வைத்து  பார்ப்போம் .

துலாம் லக்கினம் :

2 ம் பாவகம் விருச்சகத்தில் ஆட்சி பெற்று அமரும் செவ்வாயால் குடும்ப ஸ்தானம் 100 சதவிகிதம் பாதிக்க படும் , எனவே ஜாதகருக்கு தாமதமாக  திருமணம் வாழ்க்கை அமையும் , மேலும் வருமானம் பாத்திக்கும் , வாக்கு தவறும் தன்மையும் , பேச்சு திறமை அற்றவராகவும் , வாக்கின் வழியில் அதிக துன்பத்தை அனுபவிக்கும் நிலையும் ஏற்ப்படும் , இங்கு அமரும் செவ்வாய் களத்திர பாவகத்திர்க்கும் கெடுதல் செய்வதால் ஜாதகரின் இல்லற வாழ்க்கை கேள்வி குறியாக மாற அதிக வாய்ப்புகளை ஜாதகரே ஏற்ப்படுத்தி கொள்வார் .எனவே செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் , குடும்பம் , களத்திரம், ஆகிய மூன்று பாவக அமைப்பிற்கும் கெடுதலே செய்யும் .

4 ம் பாவகம் மகரத்தில் அமரும் செவ்வாய் ஜாதகருக்கு தொழில் வழியில் அதிக நன்மையையும் , களத்திர வழியில் அதிக நன்மைகளும் , லக்கினத்திற்கு மிகப்பெரிய யோகத்தையும் தரும் , நிலையான சொத்து சுகம் , வண்டி வாகன யோகம் , நிலபுலன்கள் , சகல வசதிகளும் கொண்ட வீடு , நல்ல சுகபோக வாழ்க்கை , அருமையான வாழ்க்கை துணை , வாழ்க்கை துணையின் வழியில் இருந்து அதிக நன்மைகள் , முன்னேற்றங்கள் , கூட்டு தொழில் செய்வதால் வரும் அபரிவிதமான யோக வாழ்க்கை , நல்ல நண்பர்கள் சேர்க்கை , பூரண ஆயுள் , தொழில் துறையில் விரைவான முன்னேற்றம் , குறிப்பாக சரக்கு வாகனம் சார்ந்த தொழில்களில் அபரிவிதமான யோகம் என,  செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் , குடும்பம் , களத்திரம், ஆகிய மூன்று பாவக அமைப்பிற்கும் 100 சதவிகித நன்மையே தரும் .

7 ம் பாவகம் மேஷத்தில் ஆட்சி பெற்று அமரும் செவ்வாய் ஜாதகருக்கு அதிக தீமையான பலன்களையே தரும், குறிப்பாக லக்கினம் , குடும்பம் , களத்திரம் , மூன்று பாவகங்களுக்கும் அதிக நன்மையே தரும் , திருமண வாழ்க்கையில் அதிக இன்னல்களையும் , திருமண தாமதத்தையும் , வருவாய் இழப்பையும் , கல்வியில் தடையையும் , குடும்ப வாழ்க்கையில் அதிக சிக்கல்களையும் , நிம்மதி இன்மையையும் , உடல் நலத்தில் அதிக தொந்தரவுகளையும் , முன்னேற்றம் இல்லாத சூழ்நிலையையும் , ரத்த சம்பந்த பட்ட வியாதிகளையும் , அதிக கோப உணர்வினையும் , அவசரபட்டு செய்யும் காரியங்களால் அதிக இன்னல்களையும் தரும். எனவே செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் , குடும்பம் , களத்திரம், ஆகிய மூன்று பாவக அமைப்பிற்கும் கெடுதலே செய்யும் .

8 ம் பாவகம் ரிஷபத்தில் அமரும் செவ்வாய் குடுப்ப ஸ்தானத்திற்கு மற்றும் அதிக நன்மைகளை தரும் , களத்திர பாவகத்திர்க்கும் , லக்கினத்திற்கும் அதிக தீமையான பலனையே தரும் , ஜாதகருக்கு இளைமையில் திருமணம் நடந்தாலும் மனதிற்கு இசைந்த மனைவி அமையாது , நல்ல நண்பர்கள் இருக்க மாட்டார்கள் , மனைவி வழியிலும், நண்பர்கள் வழியிலும் அதிக இழப்புகளையும் , முன்னேற்ற தடைகளையும் தரும் , மேலும் அதிக மன உளைச்சலையும், பொது காரியங்களில் தோல்விகளையும் தரும் என்பதே உண்மை இங்கு அமரும் செவ்வாய் குடும்ப ஸ்தானத்திற்கு நன்மையையும் , களத்திரம் மற்றும் லக்கினத்திற்கு அதிக கெடுதலையும் தரும் .

12 ம் பாவகம் கன்னியில் அமரும் செவ்வாய், ஜாதகருக்கு குடுப்ப ஸ்தானத்திற்கு மற்றும் அதிக நன்மைகளை தரும் , களத்திர பாவகத்திர்க்கும் , லக்கினத்திற்கும் அதிக தீமையான பலனையே தரும் , குறிப்பாக ஜாதகரின் வருமானம் அனைத்தும் வீண் விரையம் ஆகும் , மனைவி வழியில் இருந்து எந்த சுக வாழ்வையும் ஜாதகர் அனுபவிக்க இயலாது , வாழ்க்கை துணையே ஜாதகருக்கு ஜென்ம எதிரியாக மாறிவிடும் வாய்ப்பை தரும், நண்பர்களும் சிலகாலமே ஜாதகர் நட்பு பாராட்ட முடியும் பிரிவை தவிர்க்க இயலாது , வெளிநாடு , வெளியூர் சென்றால் ஜாதகர் அதிக கவனத்துடன் செல்வது அவசியம் , இல்லை எனில் ஜாதகரின் பாடு படு திண்டாட்டமாகிவிடும் .எனவே இங்கு அமரும் செவ்வாய் குடும்ப ஸ்தானத்திற்கு நன்மையையும் , களத்திரம் மற்றும் லக்கினத்திற்கு அதிக கெடுதலையும் தரும் .

விருச்சக லக்கினம்

2 ம் பாவகம் தனுசு ராசியில் அமரும் செவ்வாய் லக்கினம் , குடும்பம் , களத்திரம் என்ற மூன்று அமைப்பிற்கும் 100 சதவிகித தீமையான பலனையே தரும் , ஜாதகர் 35 வயதிற்கு மேல் திருமணம் செய்துகொள்வது சிறந்தது , இல்லை எனில் கடுமையான பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும் , மேலும் பல தார யோகம் ஏற்ப்படும் , பெண்கள் வழியில் இருந்து அதிக துன்பத்திற்கு ஆளாக வேண்டும் , இந்த அமைப்பு அதிகம் ஜாதகரை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி விடும் , எனவே எச்சரிக்கையுடன் வாழ்க்கையை நடத்துவது அவசியம் , மேலும் கல்வியில் அதிக தடைகளையும், தொழில் துறையில் அதிக இன்னல்களையும் ஜாதகர் சந்திக்க வேண்டி வரும் , எனவே இங்கு அமரும் செவ்வாய் குடும்ப , களத்திரம் மற்றும் லக்கினத்திற்கு அதிக தீமையான பலனையே தரும் .

4 ம் பாவகம் கும்பத்தில் அமரும் செவ்வாய் ஜாதகரின் வாழ்க்கையில் அளப்பரிய முன்னேற்றத்தை நிச்சயம் தரும் , குறிப்பாக வாழ்க்கை துணையின் அமைப்பில் இருந்தும் , லக்கினம் வழியில்  இருந்தும், குடும்ப அமைப்பிலிருந்து 100 சதவிகித நன்மையே செய்யும் , யோகமான மனைவி ஜாதகருக்கு நிச்சயம் கிடைப்பார் , குடும்ப வாழ்க்கையில் அபரிவிதமான நன்மைகளும் , அதிக வருமானத்தையும் , வாழ்க்கையில் அடிக்கடி அதிர்ஷ்ட அமைப்புகள் மூலம் அனைத்து யோகமும் ஜாதகருக்கு கிடைக்கும் , செவ்வாய் பகவானால் அதிக யோக பலன்களை அனுபவிக்கும் அமைப்பு இது எனவே இங்கு அமரும் செவ்வாய் இங்கு அமரும் செவ்வாய் குடும்ப ஸ்தானத்திற்கு களத்திரம் மற்றும் இலக்கின அமைப்பிற்கு மிக பெரிய  நன்மையையும் , அதிர்ஷ்டத்தையும்  தரும் என்பதில் சந்தேகமே இல்லை .

7 ம் பாவகம் ரிஷபத்தில் அமரும் செவ்வாய் இலக்கின அமைப்பிற்கு மட்டும் நன்மையை செய்யும் , களத்திரம் குடும்பம் என்ற இராண்டு பாவக அமைப்பிற்கும் அதிக தீமையான பலனையே செய்யும் , இலக்கின அமைப்பில் இருந்து ஜாதகர் பூரண ஆயுளையும் , வெற்றி , புகழ் , கல்வி போன்ற அமைப்புகளை மிக பெரிய நன்மைகளை வழங்கும் , ஆனால் குடும்ப வாழ்க்கையில் அதிக இன்னல்களையும் , துன்பத்தையும் தரும் , நல்ல நண்பர்கள் அமைவது அரிது , வருமானத்தை ஜாதகர் கவனமாக கையாள வேண்டும் இல்லை எனில் உதவி செய்ய யாரும் வர மாட்டார்கள் , முன்னேற்றம் தடை ஏற்ப்பட அதிக வாய்ப்பு இருப்பதால் அனைவரிடமும் அதிக கவனத்துடன் பழகுவது அவசியம் , ஜாதகர் யாரிடமும் பகைத்து கொள்வது அவ்வளவு நன்மையை தருவதில்லை , எனவே இங்கு அமரும் செவ்வாய் லக்கினத்திற்கு மட்டும் நன்மையை செய்யும் , களத்திரம் , குடும்ப ஸ்தானத்திற்கு அதிக கெடுதலையே தரும் .

8 ம் பாவகம் மிதுனத்தில் அமரும் செவ்வாய் களத்திர பாவக அமைப்பிற்கும் , குடும்ப ஸ்தான அமைப்பிற்கும் , 100 சதவிகித நன்மையை செய்யும் , ஜாதகருக்கு நல்ல இல்லற வாழ்க்கை துணை அமையும் , குடும்ப வாழ்க்கை மிகவும்  மகிழ்ச்சியானதாக  அமைந்துவிடும் , வருமானத்திற்கு எந்த காலத்திலும் பஞ்சம் வராது , வாக்கு பலிதம் உண்டாகும் , வாழ்க்கை துணையின் சகோதர அமைப்பில் இருந்து ஜாதகருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் , நல்ல நண்பர்கள் , நல்ல குடும்பம் , நிறைவான வருமானம் , கூட்டு தொழில் செய்வதால் அதிக லாபம் என களத்திரம் , குடும்பத்திற்கு அதிக நன்மையையும் , லக்கினத்திற்கு எதிர்பாராத இழப்புகளையும் தரும் லக்கினத்திற்கு மட்டும் அதிக கெடுதலை செய்யும் , உடல் ரீதியான தொந்தரவுகள் தர கூடும் .

12 ம் பாவகம் துலாம் ராசியில் செவ்வாய் அமர்வது லக்கினத்திற்கு அதிக கெடுதலையும் , குடும்பம் மற்றும் களத்திர பாவகத்திர்க்கு அதிக நன்மைகளை வழங்கும் , திருமண வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டத்தை தரும் அமைப்பாக இதை கருதலாம் , மேலும் தன்னம்பிக்கை ஜாதகருக்கு அதிகமாகும் , எதிரிகாளால் நன்மையே ஏற்ப்படும் , வருமானத்தில் குறைவில்லா வாழ்க்கையை தரும் , குறிப்பாக நண்பர்களின் உதவியால் வாழ்க்கையில் வெற்றி பெரும் அமைப்பை செவ்வாய் பாகவான் நிச்சயம் தருகிறார் , கட்டிட கட்டுமான  துறை சிறப்பான முன்னேற்றத்தை வாரி வழங்கிவிடுகிறார் இங்கு அமரும் செவ்வாய் பகவான் , எனவே செவ்வாய் இங்கு அமருவது களத்திரம் , குடும்பத்திற்கு அதிக நன்மையையும் , லக்கினத்திற்கு தீமையான பலனையே தருகிறார் .


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக