வெள்ளி, 21 செப்டம்பர், 2012

மங்கலம் தரும் மகாலய அமாவாசை !



சுய ஜாதக ரீதியாக பூர்வ புண்ணியம் , மற்றும் பாக்கிய ஸ்தானங்கள் பாதிக்க படும் பொழுது , சம்பந்த பட்ட ஜாதகர் அனுபவிக்கு இன்னல்களுக்கு ஒரு அளவு இருக்காது , குறிப்பாக காரிய தடை , திருமண தடை , தொழில் முடக்கம் , குழந்தை பேரு இன்மை , மற்றவர்களால் ஏமாற்ற படும் சூழ்நிலை , வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது ஏற்ப்படும்  விபத்துகள் , எதிரிகள் தொல்லை , குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இன்மை , தெரிந்தே அறிவு மற்றும் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துகொள்ளும் சூழ்நிலை , பெற்றோருடன் சேர்ந்து வாழ முடியாத நிலை .

மேலும்  குடும்பத்துடன் சேர்ந்து இருக்க முடியாத சூழ்நிலை , பரதேச ஜீவனம் , எதிர்பாராத திடீர் இழப்புகள் , திடீர் ஆரோக்கிய சீர்கேடு , மன நிலை பாதிப்பு , முன்னேற்றம் இன்மை , தனது வாரிசுகள் தவறான வாழ்க்கை பாதையில் செல்லும் சூழ்நிலை , கல்வியில் தடை , பணியாற்றும் இடத்தில் தொந்தரவுகள் , உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமை , சமுதாயத்தில் அவப்பெயர் உண்டாகும் சூழ்நிலை , தன்னம்பிக்கை அற்ற நிலை , சுய கட்டுப்பாடு இல்லாமல் தான் தோன்றி தனமாக பரதேசம் போகும் சூழ்நிலை , குரு நிந்தனை , சதி பதி நிந்தனை , பிராமண நிந்தனை .

தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி ஜாதகர் தனது உடலை தானே கெடுத்து கொள்ளுதல் , பெண்களால் வரும் அவ பெயர்கள் , அவதூறுகள் , குடியிருக்க சரியான வீடு கிடைக்காத சூழ்நிலை , அருகில் உள்ளவர்களுடன் சுமூக நிலையை கடை பிடிக்காமல் பகையை வளர்த்துகொண்டு தானும் கேட்டு , மற்றவரையும் கெடுக்கும் சூழ்நிலை , பாவ செயல்களை எவ்வித குற்ற உணர்வும் இன்றி செய்யும் தன்மை , மற்றவரின் மனதை நோக செய்யும் தன்மை , ஜீவ காருண்யம் அற்ற நிலை , சுய வாழ்க்கையில் எவ்வித முன்னேறமும் இன்றி எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் தோல்வியை தழுவும் தன்மை , சோம்பேறி தனம் , உடல் பிணிகளால் துன்புறும் நிலை , என மனிதனாக பிறந்த அனைவரும் அனுபவிக்கும் தீமையான பலன்களில் இருந்து விடுபடவும் , சுய ஜாதக ரீதியாக இருக்கும் அவ யோகங்களை களைந்து , யோக பலன்களை அனுபவிக்கவும் எதிர் வரும் மகாலய அமாவாசை ஒவ்வொருவருக்கும்  சரியான சந்தர்ப்பத்தை தருகிறது எனவே பிராப்தம் உள்ளவர்கள் முறையாக , குல தெய்வ வழிபாட்டினையும் , பித்ரு கடன்களையும் சரியாக செய்து எதிர் வரும் காலங்களில் யோக வாழ்க்கையினை பெற உங்கள் அனைவருக்கும் இறைஅருள் கருணை புரியட்டும் .

குல தெய்வ வழிபாடு :

தனது குல தேவதை எதுவோ அந்த குல தேவதைக்கு எதிர்வரும் மகாலய அமாவாசை அன்று அதிகாலையிலேயே சென்று முன் பின் தெரியாத  20 நபர்களுக்கவது அண்ணதானம் செய்து குல தேவதையை சேவிப்பது அவசியம் குறிப்பாக உச்சிகால பூசையில் குல தேவதைக்கு பட்டு வஸ்தரம் சாற்றி வழிபடுவது சகல யோகங்களையும் தரும் , தன்னால் இயன்ற அளவிற்கு அண்ணதானம் செய்வது , ஜாதகருக்கும் ஜாதகரின் வாரிசுகளுக்கும் உடல் ஆரோக்கியம் , கல்வி , தொழில் , குடும்பம் , வாரிசு , செல்வவளம் ஆகியவற்றை தவறாமல் ஜாதகரின் குல தேவதை நிச்சயம் தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

பித்ரு கடன் :

தனது ரத்த உறவு சம்பந்தபட்ட முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையவும் ,முக்தி பெறவும் அவர்கள் வழியில் வந்த சந்ததியினர் கண்டிப்பாக செய்ய வேண்டிய கடைமைகளில் ஒன்று இந்த பித்ரு தர்ப்பணம் , இதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் , எதிர்பாராத விபத்துகள் நடை பெறாமல் தடுக்கவும் , பேரிழப்புகளை தவிர்க்கவும் , தொழில் முடக்கத்தை நீக்கவும் , வாழ்க்கையில் சகல யோகங்களையும் அனுபவிக்கும் படி சம்பந்த பட்ட முன்னோர்களின் ஆன்மா பரிபூரண நல்லாசிகளை வழங்க வேண்டும் எனில் தவறாமல் இந்த பித்ரு தர்ப்பணத்தை வருடம் தோறும் கடைபிடிப்பது அவசியம் , மேலும் பித்ரு தர்பணத்தை கடற்கரையில் தருவது ஜாதகருக்கும் அவரது  குடும்பத்திற்கும் விரைந்து பலன் தரும் என்பதில் சந்தேகம் இல்லை .

மேலும் இந்துவாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஐந்து கடமைகள் , உண்டு அவையாவன 1 ) குலதேவதை வழிபாடு 2 ) பித்ரு வழிபாடு 3 ) பெற்றோரிடம் பெரும் நல்லாசி 4 ) பிராமண தர்மம் 5 ) குரு மரியாதை  இவைகளை தவறாமல் கடை பிடித்து நபர்களுக்கு எம்பெருமானின் இதய கமலத்தில் குடிகொண்டுள்ள தாய் ஸ்ரீ சகல வளங்களையும் வாழ்நாள் முழுவதும் நிறைவாக  கொடுத்து , அவர்களது குலம் வாழையடி வாழையாக தளைத்து ஓங்க செய்வாள் என்பது ஆன்றோர் வாக்கு .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக