வியாழன், 13 செப்டம்பர், 2012

ஜோதிட ஆலோசனை : குடும்பம் மற்றும் களத்திர பாவகம் பாதிக்கபட்டால் ஜாதகரின் நிலை என்ன ?


கேள்வி :

எனது குடும்ப வாழ்க்கையில் நிம்மதி உண்டா ? பிரிந்தவர்கள் ஒன்று சேர வாய்ப்பு உண்டா ? எதிர்காலம் எப்படி இருக்கும் ?

பதில் :

தங்களது சுய ஜாதக அமைப்பில் களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது , களத்திர வழியில் இருந்து 200 சதவிகித இன்னல்களை தரும் , குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் தீடீர் இழப்பை தரும் எட்டாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது குடும்ப வாழ்க்கையில் அதிக தீமையை தரும் அமைப்பாக இருப்பது தங்களின் துரதிர்ஷ்டமே , மேலும் தங்களின் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் குடும்ப ஸ்தானம் பாதிக்க படுவது , குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி இன்னல்களை அனுபவிக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது , மேலும் தங்களுடைய ஜாதக அமைப்பில் பல தார யோகம் வேறு , இதனால் அதிகம் பாதிக்க படுவது தாங்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள் .

எனவே தங்களது வாழ்க்கை துணையின் வழியில் வரும் இன்னல்களை ஏற்றுக்கொண்டு சந்தோசமாக வாழ கற்றுக்கொள்வதே சிறப்பு , இல்லை எனில் அவருக்கு விவாகரத்து கொடுத்து விட்டு தாங்கள் மறுமணம் செய்துகொள்வதும் ஒரு சிறந்த வழியே , காரணம் தங்களது ஜாதகத்தில் இரண்டாவது திருமணத்தை குறிக்கும் பாவகங்கள் நல்ல நிலையில் இருக்கிறது , இது தங்களுக்கும் நன்மை செய்யும் , தங்களது முதல் மனைவிக்கும் நன்மை செய்யும் , இருவரின் வாழ்க்கையும் நலமாக அமையும் . மேலும் சில அறிவுரைகளை தங்களது தனிப்பட்ட கவனத்திற்கு மின் அஞ்சலில் அனுப்பி வைத்திருக்கிறோம் .

பொதுவாக குடும்பம் மற்றும் களத்திரம் இரண்டும் பாதிக்க பட்ட நபர்களுக்கு , திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைவதில்லை ,சம்பந்த பட்டவர்  ஜாதக அமைப்பில் இரண்டு பாவகங்களும் கடுமையாக பாதிக்க படுவதால் , ஜாதகர் அதிக பொறுமையாகவும் , கோபத்திற்கு ஆட்ப்படாமலும் குடும்பம் நடத்துவது அவசியம், காரணம் சம்பந்தபட்டவரின்  ஜாதக அமைப்பில் குடும்பம் மற்றும் களத்திரம் பாதிக்க படுவதே ,ஆக ஜாதகரின் வினை பதிவே இதற்கெல்லாம் காரணம் , மேலும் இந்த காலகட்டங்களில் ஜாதகர் தன்  மனைவிக்கு துரோகம் இளைப்பது மேலும் மேலும் சிக்கல்களையே தரும் குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்ல நிலையையே உருவாக்கும் , எனவே மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்தாமல் , அறிவின் வழியில் வாழ்க்கை நடத்துவது ஜாதகரின்  குடும்ப வாழ்க்கையை  சிறப்பாக அமைத்து தரும் .

ஒருவர் தனது வாழ்க்கை துணைக்கு துரோகம் இழைத்தால், ஜாதகருக்கு நடக்கும் தீமையான பலன்களை பற்றி முதலில் தெரிவிப்பது இந்த இடத்தில் அவசியமாகிறது , தனது சுய ஜாதகத்தில் களத்திரம் , மற்றும் குடும்ப ஸ்தானங்கள் பாதிக்க படும் பொழுதே ஜாதகருக்கு தனது வாழ்க்கை துணைக்கு துரோகம் செய்யும் சூழ்நிலை உருவாகிறது , அப்படிபட்ட ஜாதகருக்கு முதலில் நல்ல நண்பர்கள் சகவாசம் இல்லாமல் போய்விடும் , துர் போதனை செய்யும் நண்பர்களால் சூழப்படும் நிலைக்கு தள்ளப்படுவார் , அறிவு சரியான சிந்தனை செய்யாது  முற்றிலும் எதிர் மறை எண்ணங்களால் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆட்ப்படும் நிலை வரும்.

 தொழில் முறையில் நல்ல கூட்டாளிகள் அமைய மாட்டார்கள் , கூட்டு தொழில் முற்றிலும் முடங்கும் சூழ்நிலையை தரும் , வரும்  வருமானம் அனைத்தும் தேவையில்ல செலவுகளால் வீண் விரையம் ஆகும் ,மேலும் சொந்த பந்தங்கள் , உறவுகள் ஜாதகரை வெறுத்து ஒதுக்கும் தன்மை ஏற்ப்படும் , மேலும் பொதுமக்களிடம் நீங்காத அவ பெயர் உண்டாகும் , சமுதாயத்தில் மதிப்பற்ற தன்மை உண்டாகும் , தேவையில்ல தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையில் துன்பம் அடையும் நிலைக்கு தள்ளப்பட கூடும் , இவையெல்லாம் தனது வாழ்க்கை துணைக்கு துரோகம் செய்வதால் ஜாதகர் பெறும் பலன்கள் , இது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் கூட பொருந்தும் .


பொதுவாக குடும்பம் எனும் இரண்டாம் வீடும் , களத்திரம் எனும் ஏழாம் பாவகமும் ஒரு ஜாதகருக்கு இரண்டு விதமான பலனை தரும் .

இதில் குடும்ப ஸ்தானம் ஜாதகருக்கு கை நிறைய வருமானத்தையும் ஜாதகரின் வார்த்தைக்கு மதிப்பு மரியாதையையும்  , அமைதியான மகிழ்ச்சியான குடும்ப வாழ்வினையும், வாக்கு வன்மையும் , பொருளாதாரத்தில் அபரிவிதமான முன்னேற்றத்தையும் , சகல வசதிமிக்க வாழ்க்கையும் பெற்றுத்தரும் 

களத்திரம் ஸ்தானம் வாழ்க்கை துணை வழியில் முன்னேற்றத்தையும் , கூட்டு தொழில் வகையில் அபரிவிதமான செல்வாக்கினையும் வெற்றியையும் , நல்ல நண்பர்கள் சேர்க்கையும் , பொதுமக்களிடம் நல்ல பெயரையும் , சமுதாயத்தில் மதிப்பு மரியாதையும் பெற்று தரும் .

மேற்கண்ட அமைப்பின் படி ஒரு ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திரம் பாதிக்க பட்டு இருப்பின்,  ஜாதகர்  பகவான் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியை  போல் இருக்க வேண்டும் , தனது மனைவி வழியில் இருந்து வரும் இன்னல்களை மனமுவந்து ஏற்றுக்கொண்டு வாழ்க்கை துணை கடுமையாக பேசினாலும் பொறுமையை கடைப்பிடித்து, பரிசுத்தாமான அன்பை மட்டுமே தனது வாழ்க்கை துணைக்கு கொடுப்பது ஜாதகரின் குடும்பம் மேன்மை பெறவும் ,மகிழ்ச்சிகரமானதாக அமையவும் உறுதுணை புரியும்.

 மேலும் ஜாதகர் வாழ்வில் ஒழுக்கம் தவறமால்  இருந்தால் , ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் செய்ததிற்கு ஒப்பான வாழ்க்கையை நிச்சயம் பெறுவார் , ஏனெனில் சம்பந்த பட்ட பாவக  வழியில் இருந்து வரும் வினை பதிவை,  ஜாதகர் தனது வாழ்க்கை துணை தரும் இன்னல்கள்  மூலம் கழித்து கொள்வதால் , ஜாதகரின் குடும்ப ஸ்தானமும் , களத்திர ஸ்தானமும் 100 சதவிகிதம் வலிமை பெற்று சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து நன்மை தரும்  என்பதே உண்மை, மேலும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவசர பட்டு எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையை திசை திருப்பி விடும் .

இந்த உண்மையை நமது மக்களுக்கு தெளிவாக உணர்த்தும் இதிகாசமே ராமாயணம் , ஆனால் நாம்  விடியும் வரை ராமாயணம் கேட்டுக்கொண்டு இருந்து விட்டு , விடிந்தவுடன் சீதைக்கு ராமன் சித்தப்பனா ? என்றல்லவோ கேள்வி கேட்கிறோம் , ஒருவரின் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க சில பெரியவர்கள் ராமாயணத்தில் சுந்தரகண்டத்தை படி என்பார்கள் , அதை படிப்பதால் மட்டுமே குடும்பத்தில் நிம்மதி கிடைத்து விடாது , ராமாயணம் சொல்லும் கருத்து மற்றும்  மறைமுக பொருளை உணர்ந்து வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே நமது முன்னோர்களின் ஆவல் , நாமும் வாழ்க்கையின் உண்மையை  உணர்வோம் , நமது குடும்பத்தை மகிழ்வாக வைத்திருப்போம் . 

 வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து:

  1. i am S.HARIHARASUTHAN B.TECH -IT
    AYYA ENNAKU VELAI KEDIAKKVELLAI EN JATHAGATHIL PROBELM UNDA ENNAKKU KURUNKAL AYYA

    EN VAALKAI ? ERUKKENDRANA

    DOB :8-12-1987



    LAK 1 : SIMMAM LAK
    KANNI 2 : KETU
    THULAM 3 : SEVAI
    VERCHAGAM 4 : SANI,SURIYAN,PUTHAN
    THANNUR 5 : SUKKIRAN
    MAGARAM 6 :......
    KUMBAM 7 :....
    MEENAM 8 : GURU ,RAGU
    MASAM 9 : ...
    RESABAM 10 :....
    METHUNAM 11: MAANTHI
    KADAKAM 12: CHANTHIRAN

    பதிலளிநீக்கு