சனி, 29 செப்டம்பர், 2012

ஜோதிட ஆலோசனை : திருமண தடை ஏன் ? ஐந்தில்ராகு புத்திரபாக்கியம் உண்டா ?




கேள்வி :

ஜோதிடர் அவர்களுக்கு வணக்கம் எனது ஜாதகத்தில் ஐந்தில் ராகு இருப்பதால் குழந்தை பாக்கியம் இல்லை என்றும் ,  இந்த ராகு ஐந்தில் அமருவதால் பூர்வ புண்ணியம் கெட்டு விட்டதாகவும்,  வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது இல்லை எனவும் திருமண வாழ்க்கை பாதிக்க படும் என்றும் , பல ஜோதிடர்கள் கூறுகிறார்கள் , மேலும் ஐந்தில் ராகு இருப்பதால் குழந்தை பாக்கியம் இல்லை என்று பல ஜோதிடர்கள் முடிவு செய்து,  பொருத்தம் நன்றாக இருக்கும் வரனின்  ஜாதகங்களை எல்லா வற்றையும்  தட்டி கழித்து விடுகின்றனர் , உண்மையில் எனக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ? திருமண தாமதத்திற்கு காரணம் என்ன ? சரியான ஜோதிட ஆலோசனை தேவை .



பதில் :

அன்பு  சகோதரிக்கு தங்களது ஜாதக அமைப்பை வைத்து பார்க்கும் பொழுது உண்மையில் ஐந்தாம் பாவகம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நல்ல நிலையிலேயே இருக்கிறது , மேலும் ஜோதிட பலன்கள் கணிதம் செய்யும் பொழுது பொது பலனை அடிப்படையாக கொண்டு பலனை சொன்னால் இதுமாதரியான தவறுகளே நடக்கும் , பொதுவாக ஐந்தில் ராகு இருந்தால் புத்திர பாக்கியம் இல்லை என்பது பொதுவான கருத்து , ஆனால் ஐந்தில் அமரும் ராகு எந்த இடத்தில் எந்த ராசியில் அமருகிறார் என்று தெளிவாக தெரிந்து கொண்டு ஜாதக பலனை கணிதம் செய்து சொல்வது சிறப்பு , குறிப்பாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் , ரிஷபம்,துலாம் , கடகம் ( வளர்பிறை சந்திரன் ) மிதுனம் , கன்னி ( சூரியனுடன் 14 பாகைக்கு மேல் இருக்கும் புதன் ) தனுசு , மீனம் ஆகிய ஐந்தாம் பாவகமாக வருமாயின் , இங்கு அமரும்  ராகு அல்லது கேது  பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் பாவகத்தை 100 சதவிகிதம் வலிமை பெற செய்து விடுகிறார், மேலும் ராகு கேது முறையே ஐந்தாம் பாவகம் & பதினொன்றாம் பாவகம் என்ற முறையில் அமரும் பொழுது இரண்டு பாவகத்திர்க்கும் 100 சதவிகித நன்மையை வாரி வழங்குவார்கள் என்பது சிறப்பான விஷயம் .

பொதுவாக ஐந்தில் ராகு அமர்ந்தால் பூர்வ புண்ணியம் கெட்டு விட்டது என்றும் , புத்திர சந்தானம் இல்லை என்றும் முடிவு செய்வது ஜோதிடத்தை பற்றி தெரியாதவர்கள் ஜோதிட அறிவு அற்றவர்கள்  சொல்லும் பொது பலன் . உண்மையில் மேற்கண்ட அமைப்பில் ராகு அல்லது கேது அமரும் ஜாதக அமைப்பை சார்ந்த ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நிச்சயம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு , அதுவும் முதலிலேயே தனது குலம் செழிக்க  ஆண் வாரிசு கிடைக்கும் என்பது 100 சதவிகிதம் உறுதி, மேலும் தங்களது ஜாதக அமைப்பில் மீனத்தில் அமரும் ராகு ஐந்தாம் பாவகத்தை 100 சதவிகித வலிமை செய்கிறார் , கன்னியில் அமரும் கேது 11 ம் பாவகத்தை 100 சதவிகித வலிமை செய்கிறார் , எனவே தங்களது ஜாதக அமைப்பில் ராகு கேது கிரகங்களால் பாதிப்பு என்பது நிச்சயம் இல்லை என்பது உறுதி .

தங்களின் திருமண தாமதத்திற்கு முக்கிய காரணம் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் 8  ம் வீட்டுடன் தொடர்பு பெற்று கடுமையாக பாதிப்படைந்து இருக்கிறது  , இந்த அமைப்பே  தங்களது திருமண தாமதத்திற்கு அதிமுக்கிய காரணம் , குடும்ப ஸ்தானம் பாதிக்கும் பொழுது திருமண வாழ்க்கை 27 வயதிற்கு மேலேயே அமையும், தங்களது ஜாதக அமைப்பில் களத்திர பாவகம் நல்ல நிலையில் இருப்பதால் பயம் தேவையில்லை , நிச்சயம் இனி தங்களுக்கு திருமணம் நடக்கும் , இருப்பினும் தங்களது ஜாதக அமைப்பில் குடும்ப ஸ்தானம் கடுமையாக பாதிக்க படுவதால் திருமணதிற்கு பிறகு தங்களது கணவருடன் அதிகமாக அனுசரித்து செல்வது அவசியம் , காரணம் தங்களது களத்திர பாவகம் நல்ல நிலையில் இருக்கிறது தங்களுக்கு அமையும் கணவர் மிகவும் நல்லவராக இருப்பார் , தங்களது ஜாதக அமைப்பிலேயே குடும்ப ஸ்தானம் பாதிக்க படுகிறது எனவே நல்ல முறையில் குடும்பம் நடத்த வேண்டும் எனில் தங்களது கணவருடன் அதிகமாக அனுசரித்தும் , விட்டு கொடுத்தும் வாழ்க்கையை செம்மையாக நடத்துவது உங்களின் கடமை .

சிறப்பான திருமண வாழ்க்கை தங்களுக்கு இனி வரும் சில மாதங்களில் அமையும் வாழ்த்துகள் !


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக