வியாழன், 20 செப்டம்பர், 2012

ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் பாதிக்கபட காரணங்கள் !



1 ) ஜாதகரும் ஜாதகரின் முன்னோர்களும் தனது குல தேவதையை முறையாக வழிபடாமல் , இருந்ததால் இருப்பதாலும் , தனது குல தெய்வத்தை நிந்தனை செய்ததாலும் , குலதெய்வத்திற்கு அடிமை செய்யும் நபர்களை கை விட்டாலும் , அவர்களுக்கு ஜீவனம் செய்ய உதவி செய்யாததினாலும் , குல தேவதையின் கோவில் பரமாரிப்புக்கு உதவி செய்யாததினாலும் , தனது முன்னோர்கள் குல தேவதைக்கு செய்து வந்த வழிபாட்டு முறைகளை மாற்றி அமைப்பதாலும் , குல தேவதை கோவிலில் உள்ள பசுவிற்கு ஆகாரம் தர மறுத்தாலும் , தன்னிடம் யாசகம் செய்வோரை மதியாமல் நிந்தனை செய்வதினாலும் , ஒருவருடைய சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பலமாக பாதிக்க படும் , இதன் வழியில் இருந்து ஜாதகருக்கு அதிக துன்பங்களே ஏற்ப்படும் .


தனது வாரிசாக அமைந்த பெண்குழந்தையை மற்றவருக்கு தானம் செய்வதாலும் அல்லது சிசு கொலை செய்வதாலும் , தனது வாரிசாக அமைந்த பெண்குழந்தைக்கு தேவையானவற்றை நிறைவேற்றி தராமால் விட்டு விட்டாலும் , குடும்பத்தில் உள்ள பெண்களை மனம் நோக செய்தாலும் , துன்புறுத்தினாலும் , ஆகாரம் தராமல் பட்டினி போட்டாலும்சரியான வயதில் திருமணம் செய்து வைக்காமல் விட்டு விட்டாலும் , தனது குடும்ப பெண்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராமல் தவிக்க விட்டு விட்டாலும் , அபலை பெண்களின் வாழ்க்கையில் துன்பத்தை தந்தாலும் , மற்றவர் வாழ்க்கை துணையை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலும் , தவறான எண்ணத்துடன் அணுகினாலும் , தவறான செய்கைக்கு துண்டினாலும் ,  சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பலமாக பாதிக்க படும் , இதன் வழியில் இருந்து ஜாதகருக்கு அதிக துன்பங்களே ஏற்ப்படும் .


3 ) மற்றவர் குடும்ப விஷயங்களில் ஒருவர் எக்காரணத்தை கொண்டும் மூக்கை நுழைப்பது , தனது புண்ணிய பதிவுகளை இழக்கும் சூழ்நிலையை தந்து விடும் , குறிப்பாக சில இடங்களில் நாட்டாமை செய்யும் பல குடும்பங்கள் இருந்த இடம் தெரியாமல் போவதற்கு காரணம் குறிப்பிட்ட நபர்களுக்கு வரும் பிரச்சனைகளை அவர்களின் கர்ம வினை பதிவின் படி அனுபவிக்க விடாமல், தான் அந்த கர்ம வினை பதிவை தீர்வு சொல்வதின்  மூலம்  ஏற்றுக்கொள்ளும்  பொழுது தீர்ப்பு சொல்லும் நபரின் குடும்பம் கடுமையாக பாதிக்க படுகிறது என்பதே உண்மை , ஒரு காலத்தில் ஜமீன் பரம்பரையாக வாழ்ந்த நபர்கள் குடிசை  வாசியாக வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப்பட காரணம் மற்றவர்களின் வினை பதிவில் தலையீடு செய்வதே முக்கிய காரணம் , எனவே இதனால்   ஒருவருடைய சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பலமாக பாதிக்க படும் , இதன் வழியில் இருந்து ஜாதகருக்கு அதிக துன்பங்களே ஏற்ப்படும் .


4 ) தனது ரத்த சம்பந்த பட்ட உறவினர்கள் , உடன்பிறப்புகளின் சொத்து சுகங்களை அகபரித்தாலும் , அவர்களின் வாழ்க்கையை கெடுத்தாலும் , தனது பெற்றோரை சரியாக கவனிக்காமல் சிரமப்பட வைத்தாலும் , நிந்தனை செய்தாலும் , மனம் நோக செய்தாலும் , பூர்வ புண்ணியம் பாதிக்கும் வாய்ப்பை தந்துவிடும் , குறிப்பாக தனது தாய் வழி பெற்றோர் , தகப்பன் வழி பெற்றோர்களை சிரம பட வைத்தாலும் , சதுர்வேதிகளையும் , பிராமணர்களையும் , சிவனடியார்களையும் ஏளனம் செய்வதாலும், நிந்தனை செய்வதாலும் , சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பலமாக பாதிக்க படும் , இதன் வழியில் இருந்து ஜாதகருக்கு அதிக துன்பங்களே ஏற்ப்படும் .


5 ) விதவை மற்றும்  வாரிசு அற்றவர்களின்  சொத்துகளை ஜாதகர் ஏமாற்றி பெறுவதாலும், மாற்று திறனாளிகள் சொத்துகளை அகபரித்தலும் , மன நிலை பாதிக்க பட்ட நபர்களின் சொத்துகளை அகபரித்து கொண்டாலும் , வயதானவர்களின் உடைமைகளை வலுகட்டாயமாக அகபரித்து கொண்டாலும் , பூர்வ புண்ணியம் பதிக்க அதிக வாய்ப்பு உண்டாகும் , மேலும் கோவில் சொத்துகளை அகபரிப்பதால் 7 தலைமுறைக்கு பூர்வ புண்ணியம் பாதிப்படையும் , கோவில் பசுவினையும் , கற்றுகொடுத்த குருவின் குழந்தை , மற்றும் அவர் குடும்ப பெண்களை தவறன கண்ணோட்டத்துடன் பார்ப்பதும் , குருவிற்கு துரோகம்  செய்வதாலும் சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பலமாக பாதிக்க படும் , இதன் வழியில் இருந்து ஜாதகருக்கு அதிக துன்பங்களே ஏற்ப்படும் .


6 ) முக்கியமாக பஞ்சமாக பாதகங்களை செய்வதால் விரைவில் பூர்வ புண்ணியம் பாதிப்படையும் , எனவே மேற்கண்ட பாவ வினை பதிவுகளை செய்யாமல் , புண்ணிய பதிவுகளை செய்து நலம் பெற வேண்டும் , புண்ணியம் செய்யாவிட்டாலும் பாவங்களை செய்யாமல் தனது வாரிசுகளுக்கு நன்மையை  செய்துவிட்டு போவது நல்லது , என்ன காரணத்தால் நாம் பாதிக்க படுகிறோம் என்று கூட தெரியாமல் அவர்கள் சிரமப்பட வேண்டிவரும் , இதற்க்கு காரணம் நமது செய்கை என்பதை அனைவரும் கவனத்தில் கொள்வது அவசியம் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக