புதன், 8 அக்டோபர், 2014

தனக்கு அமையும் வாழ்க்கை துணை பற்றி ( கணவன், மனைவி ) சுய ஜாதகப்படி அறிந்துகொள்வது எப்படி ?



ஒருவரின் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகமும், கலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசியும் சுய ஜாதக ரீதியாக எவ்வித வலிமை பெற்று இருக்கின்றது என்பதை பொறுத்தே ஒவ்வொருவரின் வாழ்க்கை துணை அமைப்பும் நிர்ணயம் செய்யபடுகிறது, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று அமைவது ஜாதகருக்கு சிறந்த வாழ்க்கை துணையை நிச்சயம் அமைத்து தரும், மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசி சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமைவது சிறந்த அந்தஸ்து, மற்றும் அழகு அறிவு நிறைந்த வாழ்க்கை துணையை நிச்சயம் அமைத்து தரும், இத்துடன் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை பெற்று அமைவதும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபம் வலிமை பெற்று இருப்பது, சம்பந்தபட்ட ஜாதகருக்கு சரியான வயதில்
( அதாவது இளமையில் திருமணம் ) திருமண வாழ்க்கையை அமைத்து தந்துவிடும்.

ஒருவருக்கு வரும் வாழ்க்கை துணையை பற்றி நாம் தெளிவாக தெரிந்துகொள்ள சம்பந்தபட்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில், லக்கினத்தின் அடிப்படையில் 2,7ம் பாவகங்களின் வலிமை மற்றும் அவரது ஜாதகத்தில் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் தன்மையை வைத்து தெளிவாக அறிந்துகொள்ள முடியும், சுய ஜாதகத்தில் 2 மற்றும் 7ம் பாவகங்களுக்கு அதிபதி, மற்றும் 2 மற்றும் 7ம் பாவகங்கள் தொடர்பு பெரும் பாவகங்கள் எது என்பதை துல்லியமாக ஜாதக கணிதம் செய்யும் பொழுது, ஜாதகருக்கு வரும் வாழ்க்கை துணையின் அமைப்பை பற்றியும், ஜாதகர் வசிக்கு இடத்தில் இருந்து எவ்வளவு ? தொலைவில் இருந்து வருவார் என்பது பற்றியும், வாழ்க்கை துணை குடியிருக்கும் வீட்டின் வாயிற்படி அமைப்பை பற்றியும், ஜாதகர் அவரை காணும் பொழுது அவர் உடுத்தி இருக்கும் துணியின் வண்ணம் பற்றியும் தெளிவாக கூற இயலும், இதை உதாரண ஜாதகம் கொண்டு காண்பது மிக எளிதாக புரியும்.



மேற்கண்ட சிம்ம இலக்கின ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் வலிமை பெற்றே அமைந்திருக்கிறது, மேலும் ரிஷபம் ஜாதகருக்கு ஜீவன பாவகமாகவும், துலாம் ஜாதகருக்கு வீரிய ஸ்தானமாகவும் அமைந்து மிகவும் நல்ல நிலையிலேயே  இருப்பதால், ஜாதகருக்கு சரியாக 24 வது வயதில் திருமணம் நடைபெற்றது, 7ம் பாவகதிர்க்கு அதிபதியாக சனி பகவான் வருவதாலும், 7ம் பாவகம் ஸ்திர கும்ப ராசியாக வருவதாலும் இவருக்கு அமைந்த வாழ்க்கை துணை மேற்கு திசையிலும், 70 கிலோமீட்டர் தொலைவிற்குள் வாழ்க்கை துணையின் வீடு அமைந்து இருந்தது, ஜாதகிகை ஜாதகர் காணும் பொழுது சாம்பல் நிறம் கொண்ட ஆடையை அணிந்து இருந்தார்.

இவரது ஜாதகத்தில் ரிஷபமும்,துலாமும் நல்ல நிலையில் இருப்பது நல்ல அந்தஸ்தும் அழகும் நிறைந்த வாழ்க்கை துணையை பெற்று தந்தது, 7ம் பாவக அதிபதியாக சனிபகவான் வருவது, ஜாதகரை விட வசதி குறைந்த வீட்டில் திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிலையை தந்தது, இருப்பினும் 7ம் பாவகம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடாக வருவதால், ஜாதகியை திருமணம் செய்த நாள் முதல் ஸ்திரமான அதிர்ஷ்ட வாய்ப்புகளை  ஜாதகர் தொடர்ந்து பெற்ற வண்ணமே இருப்பது குறிப்பிட தக்கது, ஜாதகரின் 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது கணவன் மனைவி நல்லுறவுக்கு வழிவகுத்தது, மேலும் 7ம் பாவக அதிபதியாக சனிபகவான் வருவதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுக்கும்  மனப்பனமையையும், பொறுமையையும் அனுசரித்து செல்லும் தன்மையையும் தந்தது.

இரண்டாம் பாவக அதிபதியாக ராகு பகவான் வருவாதல் ஜாதகருக்கு அபரிவிதமான வருமானத்தை தந்த போதிலும், வாழ்க்கை துணையும் வழியில் இருந்து வரும் வாக்கின் அமைப்பில் சில நேரங்களில் மனம் நோகும்  தன்மையை தந்துகொண்டு இருக்கிறது, ஜாதகியின் பேச்சு மட்டும் ஜாதகரின் வாழ்க்கையில் சில எதிர்பாராத திருப்பங்களை தந்துவிடுகிறது, இருப்பினும் இவை அனைத்தும் முடி, ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு குடும்பம் அமைந்த பிறகே நிலையான தொழிலும், தொழில் வழியில் இருந்து மிகப்பெரிய முன்னேற்றமும்வில் மிகுந்த நன்மையையே ஜாதகருக்கு வழங்குவது சிறப்பான விஷயமாக கருதலாம்.

ஜாதகரின் இரண்டாம் வீடு உண்டானது எனலாம், மேலும் ஜாதகரின் இரண்டாம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம் பாவகமான ரிஷப ராசியுடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கை அமைந்த பிறகே தன்னிச்சையாக வருமானம் பெரும் யோகத்தை தந்தது, பொருளாதார ரீதியான மிகப்பெரிய வெற்றியை ஜாதகருக்கு வாரி வழங்கியது, ஜாதகரின் 2ம் பாவகம் தொடர்பு பெறுவது ஜீவன ஸ்தானம் என்பதாலும், இந்த ஜீவன ஸ்தானம் ஸ்திர மண் தத்துவ அமைப்பாக வருவாதாலும், ஜாதகருக்கு குடும்பம் அமைந்த பிறகே நல்ல தொழில் முன்னேற்றமும் சுய சம்பாத்தியம் மூலம் வீடு வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை ஏற்ப்பட்டது எனாலாம்.

மேற்கண்ட ஜாதக அமைப்பின் படி ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் வலிமை பெற்றதால் ஜாதகர் வாழ்க்கை துணை அமைப்பில் இருந்து மக்கள் செல்வாக்கும், பெரிய மனிதர்கள் ஆதரவும் கிடைக்க பெற்றார், ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடாக வருவதும் ஸ்திர  காற்று தத்துவ ராசியாக அமைவது ஜாதகருக்கு திருமணதிற்கு பிறகு பிறகு சிறந்த  சிந்தனை திறனையும், அறிவாற்றலையும் ஸ்திரமானதாக வழங்கியது,  மேலும் முற்போக்கு சிந்தனையும் அதிர்ஷ்ட  வாய்ப்புகளையும் ஜாதகருக்கு தொடர்ந்து வழங்கிய வண்ணம் இருப்பது கவனிக்க தக்கது.

ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் வலிமை பெற்றதால் ஜாதகருக்கு சிறப்பான குடும்ப வாழ்க்கை அமைந்தது, ஜாதகரின் வருமான வாய்ப்புகள் அதிகரித்தது, தனது சுய முயற்ச்சியாலும், தனிப்பட்ட முறையிலும் ஜாதகர் வருமானம் பெரும் யோகத்தை தந்தது, ஜாதகரின் 2ம் பாவகமும் அது தொடர்பு பெரும் ஜீவன ஸ்தானமும் உபய மண் தத்துவமாகவும், ஸ்திர மண் தத்துவமாகவும்  அமைவதால் ஜாதகர் பொருளாதார ரீதியான வெற்றிகளை பெற மிகவும் உதவிகரமாக அமைந்தது, இரண்டும் மண் தத்துவம் என்பதால் ஜாதகரின்  உடல் நிலையும் மிகவும் சிறப்பாக ஒத்துழைப்பை நல்கியது.

ஜாதகரின் சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம் வீடான ரிஷபமும், 7ம் வீடான துலாமும் சிறப்பான நிலையில் இருப்பதால் சரியான வயதில் திருமணமும், தனது எண்ணத்திற்கு ஏற்ப பொருத்தமான  மனைவியையும் பெற்று தந்தது, இதில் துலாம் ராசி வலிமை பெறுவதால் ஜாதகரின் வெளி வட்டார பழக்க வழக்கங்கள் மிகவும் சிறப்பாக அமைந்தது, பொதுமக்களின் ஆதரவு தன்னிகரற்று அமைந்தது, சர காற்று தத்துவ ராசியான துலாம் ஜாதகருக்கு விரைவான வெற்றிகளை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது, ஜாதகரின் திருமணதிற்கு பிறகே இந்த நிகழ்வுகள் நடைபெறுகிறது, குறிப்பிட்ட பாவகத்தின் பலன்களை நடைமுறைக்கு வரும் பொழுது அதன் வழியில் இருந்து வரும் யோக பலன்கள், தங்கு தடையின்றி 100 சதவிகிதம் ஜாதகர் பெறுவார் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

மேற்கண்ட முறையில் ஒவ்வொரு ஜாதகரின் வாழ்க்கை துணையை பற்றியும், சுய ஜாதகத்தின் அடிப்படையில் நாம் தெள்ள தெளிவாக அறிந்துகொள்ள இயலும் என்பது எவராலும் மறுக்க இயலாத உண்மை, எனவே சுய ஜாதகம் இருப்பின், ஜாதகருக்கு வரும் வாழ்க்கை துணையை பற்றி  மிக சரியாக ஜோதிட கணிதம் கொண்டு நிர்ணயம் செய்துவிட நிச்சயம் முடியும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக