திங்கள், 27 அக்டோபர், 2014

வெளிநாடு செல்லும் யோகம் எனக்கு உண்டா ? வெளிநாட்டில் நல்ல வேலைவாய்ப்பும், பொருளாதார முனேற்றமும் பெற இயலுமா?



கேள்வி :

 ஐயா நான் பிறந்தது 20.04.1989, நேரம்:1.57 PM, இடம்: Attur......நான் 1.4 வருடமாக வெளிநாடு செல்ல காத்திருக்கிறேன். இதுவரை 20 க்கும் மேற்பட்ட ஜோதிடரை பார்த்து இருக்கிறேன்.அனைவரும் வெளிநாடு போவாய் என தெதியும் குறித்து கொடுத்துள்ளார்கள்.இதுவரை அப்படி எதுமே நடக்கவில்லை..அவர்கள் எதை வைத்து சொல்கிறார்கள் என ஜோதிடம் படிக்க ஆரம்பித்தேன்..இப்போது 4 மாதம் ஆகிவிட்டது..தயவுகூர்ந்து என்னுடைய ஜாதகத்தை உதாரணமாக எடுத்து எப்போது போவேன் என கூறும்படி கேட்டுக்கொள்கிறேன் ஐயா...நீங்கள் கூறியது போல நடக்கும் தசா புத்தியும் கோசார கிரகத்துடன் சாதகமாக தான் உள்ளது..குரு திசை சனி புத்தி,,சிம்ம லக்னம்,கன்னி ராசி,,கோசார குரு 11ல், பெயர்ச்சிக்கு பின் சனி 3ல்....






பதில் :


அன்பு தம்பி சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7ம் பாவகமும், காலபுருஷ  தத்துவத்திற்கு 7ம் ராசியான துலாம் ராசியும் வலிமை பெற்று இருந்தால் ஜாதகருக்கு வெளிநாடு அல்லது வெளியூர் சென்று புகழ் பெரும் யோகத்தை தரும், மேலும் 7ம் வீடு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாட்டில் சிறந்த தொழில் அல்லது வேலை வாய்ப்பு அமையும், ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் என்பது அபரிவிதமான வளர்ச்சியை பெரும், ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்டமும், நண்பர்களின் ஆதரவும் பரிபூரணமாக அமையும், எனவே சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் ஜாதகருக்கு வெளிநாடு யோகத்தை தருகிறது, வெளிநாடுகளில் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை பற்றிய ஒரு தெளிவான முடிவை  மேற்கண்ட 7ம் பாவக வலிமையை வைத்தே நிர்ணயம் செய்து விடலாம் அன்பரே !


உனது சுய ஜாதக அமைப்பின் படி 3,7ம் விடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகத்தில் சிறந்த அமைப்பாகவே கருதலாம், குறிப்பாக 7ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியாக வருவது தங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வேலைவாய்ப்பினையும், சிறந்த எதிர்காலத்தையும் அமைத்து தரும் என்பது உறுதியாக தெரிகிறது, மேலும் தற்பொழுது நடைபெறும் குரு திசை ( 14/11/2011 முதல் 14/11/2027 வரை ) தங்களுக்கு  3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், பலனை தருவது மிகுந்த யோகமே, மேலும் சுய ஜாதகத்தில் துலாம் ராசியும் 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையையே செய்கிறது என்பதால் தாங்களுக்கு நிச்சயம் வெளிநாடுகளில் நல்ல வேலை வாய்ப்பும், சிறப்பான அதிர்ஷ்டம் மிகுந்த யோக வாழ்க்கையும் நிச்சயம் உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.

  நடைபெறும் குரு திசையில் சனி புத்தியும் ( 01/01/2014 முதல் 15/07/2016வரை ) தனது புத்தியை 3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று நடத்துவது சிறப்பான விஷயமே, இதில் சனி புத்தி வேறு பாவக தொடர்புகளையும் நடத்துகிறது அதாவது திடீர் இழப்பை தரும் 8ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 100% இன்னல்களை தருகிறது, 5,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 30% யோகத்தை தருகிறது, இதில் நடைபெறும் சனி புத்தி 12ம் பாவக வழியில் இருந்து அதிக தீமையை செய்வதால், தங்களின் முயற்ச்சிகள் நல்ல வாய்ப்புகள் அனைத்தும் விரையம் ஆகிறது, மேலும் 12ம் வீடு சர நீர் ராசியாக இருப்பதால் மன ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தன்மையை தருகிறது, தங்களின் வெளிநாடு பயணத்தின் முக்கிய முட்டுகட்டையாக இந்த 12ம் பாவகம் அமைகிறது.

எதிர் வரும் சுக்கிரன் அந்தரத்தில் தங்களுக்கு வெளிநாடு செல்ல 50% வாய்ப்பு இருக்கிறது, இதை தவிர்த்தல் தங்களுக்கு சனி புத்தி முடியும் வரை வெளிநாடு செல்லும் வாய்ப்பு இல்லை, சனி புத்திக்கு பிறகு வரும் புதன் புத்தியிலும் வாய்ப்பு இல்லை என்பதை மிக தெளிவாக சொல்ல முடியும்.

தங்களது சுய ஜாதகத்தில் 12ம் பாவக வழியில் இருந்து வரும் தீய பலன்களுக்கு முறையான நிவர்த்தி செய்வதும், ஜாதகத்தில் கடுமையாக பாதிக்க பட்ட 2,4,6,8,12ம் பாவகங்களுக்கு முறையான ஜோதிட ஆலோசனை பெற்று பரிகாரம் தேடிகொள்வதும் தங்களின் வெளிநாடு யோக வாழ்க்கையை தங்கு தடையின்றி வாரி வழங்கும், பொருளாதார ரீதியான வெற்றிகளை குவிக்கும், தம்பி உனது ஜாதகத்தில் 2ம் பாவகம் பாதிக்க பட்டுள்ளது, வரும் வருமானம் அனைத்தையும் வீண் செலவு செய்யும் சூழ்நிலையை தருகிறதே, இதற்க்கு சரியான தீர்வை நாடு, இல்லை எனில் உனது உழைப்பு யாவும் வீணாக போகும் வாய்ப்பு உண்டு.

மேலும் உனது சுய ஜாதக ரீதியான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும், உனது சுய ஜாதக ரீதியாக முறையான தீர்வுகளை பெறவும், நேரில் வந்து முறைப்படி ஆலோசனை பெற்றுகொள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696                                                                                                           


7 கருத்துகள்:

  1. ஐயா,,,,

    எனது வேண்டுகோளுக்கு இனங்க எனது ஜாதகத்தை எடுத்து பதில் தந்தமைக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்....தங்களை இன்னும் சில நாட்களில் நேரில் வந்து சந்திக்கிறேன் ஐயா........தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஐயா எனது ஐாதகம் பார்க்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் நான் உதயகுமார் மேஷ ராசி தனுசு லக்னம் பிறந்த நாள் 10/6/1991 நேரம் 8.49 இரவு ராகு திசை சனி புத்தி நடைபெறுகிறது வெளிநாடு செல்லும் யோகம் இருக்கிறத

    பதிலளிநீக்கு
  4. எனது பிறந்த திகதி 17.10.1978 காலை 8.30 மணிக்கு பிறந்தேன். எனக்கு வெளிநாடு சென்று உழைக்கும் யோகம் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முறையாக ஜாதக ஆலோசனை பெற்று நலம் பெறவும்....

      நீக்கு