அதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்கும் யோக ஜாதகம் என்ற அமைப்பிற்கும் உதாரணமாக விளங்கும் ஜாதகத்தை பற்றி நாம் இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! கிழ்கண்ட ஜாதகியை அதிர்ஷ்ட தேவதையின் மறு உருவமாகவே நாம் கருதலாம், ஏனெனில் அவரது சுய ஜாதகத்தில், பாவகங்களின் வலிமை அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கிறது, மேலும் வலிமை பெற்ற பாவகங்களின் பலன்களையே, ஜாதகிக்கு நடைபெறும் பெரும்பாலான திசை, புத்தி, அந்தரம், சூட்சமங்கள் நடைமுறைக்கு கொண்டுவருகிறது, அதன் அபரிவிதமான ராஜயோக பலன்களையே ஜாதகி பரிபூரணமாக் இனிவரும் காலங்களில் அனுபவிக்கிறார் என்பது கவனிக்கத்தக்க
ஒரு சிறப்பு யோக பலன்களாக ஜோதிடதீபம் கருதுகிறது.
மேலும் ஜாதகி செய்த புண்ணியத்தின் பலனையும், பெற்றோர் செய்த பாக்கியத்தின் பலனையும் ஒன்று சேர்ந்து தரும் யோக ஜாதக பலனாகவே கருதலாம், ஜாதகியின் சிறு வயதுமுதல் மிகுந்த யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும் குறிப்பாக ஜாதகியின் பெற்றோர், ஜாதகியின் உடன் பிறப்பு, ஜாதகியின் நண்பர்கள், ஜாதகியின் வாழ்க்கை துணை, ஜாதகியின் உறவினர்கள் என்ற அமைப்பில் சகல நபர்களுக்கும் தனது வழியில் இருந்து யோகத்தை தருபவராக காணப்படுகிறார், ஜாதகி அடிப்படையில் இருந்தே நல்லகுணம், சிறந்த உடல் ஆரோக்கியம், பொருளாதார தன்னிறைவு மற்றும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழும் யோகத்தை தரும்.
ஜாதகியின் ஜெனன லக்கினம் : கன்னி
ஜாதகியின் ஜெனன ராசி : மகரம்
ஜாதகியின் ஜெனன நட்சத்திரம் : திருவோணம்
இந்த ஜாதகத்தில் யோக பலன்களை வாரி வழங்கும் பாவகங்களை மட்டும் நாம் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே ! இதை அடிப்படையாக கொண்டு காணும் பொழுது 1,3,5,9,11ம் வீடுகள் அதிர்ஷ்டம் மட்டும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதே ஜாதக அமைப்பில் சிறந்த யோக பலன்களை வாரி வழங்கும் வலிமையை பெறுகிறது இதன் வழியில் ஜாதகி பெரும் யோக பலன்களை பற்றி இனி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம், ஜாதகியின் 1,3,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், லாப ஸ்தானம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் பாவகமாக வருவதும், லாப ஸ்தானம் சர நீர் தத்துவ ராசியான கடகமாக அமைவதும் ஜாதகிக்கு தர வேண்டிய யோக பலன்களை 100% தங்கு தடையின்றி பூரணமாக வாரி வழங்கும். மேலும் லாப ஸ்தானம் சர ராசியாக இருப்பதால் தான் தரும் பலன்களை விரைந்து தரும், யோக பலன்களின் அளவு என்பது 100% என்ற விகிதத்தில் இருக்கும் என்பது கவனிகதக்கது.
1ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :
ஜாதகிக்கு பரந்த மனப்பான்மையையும், சிறந்த நற்குண நலன்களையும் வாரி வழங்கும், ஜாதகியின் எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும், முற்போக்கு சிந்தனையும் பகுத்தறியும் சிறந்த அறிவாற்றலும் இயற்கையாக அமைந்திருக்கும், சிறப்பாக வளரும் சூழ்நிலையை தரும், அதிக லாபத்தையும், நீடித்த அதிர்ஷ்டத்தையும் இலக்கின வழியில் இருந்து ஜாதகி பரிபூரணமாக பெறுவார், செல்வசெழிப்பு, பரஸ்பர உதவிகளை பெரும் யோகம், நீடித்த உடல் ஆரோக்கியம், வருமுன் உணரும் மனோசக்தி, வருமுன் காக்கும் சமயோசித அறிவாற்றல், மனதிற்கு உகந்த மணவாழ்க்கை பெரும் யோகம், சிறந்த புத்திர சந்தான பாக்கியம், தனது குழந்தைகள் வழியில் இருந்து யோக வாழ்க்கை என ஜாதகி இலக்கின அமைப்பில் இருந்து சகலயோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.
3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :
தனது பெயரில் செய்யும் வியாபாரம் அல்லது தொழில் விரைவான முன்னேற்றத்தை வாரி வழங்கும், நிறைய வண்டி வாகனங்களுக்கு உரிமியாளர் ஆகும் யோகம் உண்டாகும், விவசாய பண்ணை விவிவசாய தொழில்களில் அபரிவிதமான வளர்ச்சியை பெரும் யோகம் உண்டாகும், நிறைய சொத்து சுக சேர்க்கை ஜாதகி வளரும் காலத்தில் அதிர்ஷ்ட வசமாக கிடைக்கும், புதையல் அல்லது அதற்க்கு இணையான பொருள் வரவை தரும், தர்ம சிந்தனையையும் நேர்மையான குணத்தையும், அதி தைரியமான மனவலிமையையும் வாரி வழங்கும், நிர்வாகம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் யோகத்தை தரும், திருமண வாழ்க்கைக்கு பிறகு அளவில்லா சொத்து சேர்க்கையை வாரி வழங்கும், விளையாட்டு வீரராக உலக புகழ் பெரும் யோகம் உண்டாகும்.
5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :
லாட்டரியில் யோகம் , குதிரை பந்தயம் மற்றும் அனைத்து போட்டி பந்தையங்களில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி குவிக்கும், தனது புத்திசாலிதனத்தல் எப்பொழுதும் ஆதாயம் கிடைக்கும், எப்பொழுதும் மகிழ்ச்சியான வாழ்க்கையே தரும், குடும்பத்தில் நீடித்த மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் தொடர்ந்து வந்தவண்ணமே இருக்கும், இறை அருளின் பரிபூரண நல்லாசிகள் ஜாதகிக்கு வாழ்நாள் முழுவதும் நிறைந்து அருள் புரியும், தொழில் ரீதியான வெற்றிகள் ஜாதகிக்கு வெகு எளிதாக் கிடைக்கும், மக்கள் ஆதரவும், சமுக அந்தஸ்தும் நீடித்து நிலைத்து நிற்கும், கல்வி கேள்விகளிலும், கலைத்துறையிலும் பிரகாசிக்கும் யோகத்தை சிறு வயது முதற்கொண்டே ஜாதகி இயற்கையாக பெற்று இருப்பார்.
9ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :
ஆன்மீக வெற்றி, ஆன்மீக பெரியவர்களின் அருளாசி சிறு வயதிலேயே கிடைக்கும் பாக்கியம் உண்டாகும், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டாகும், ஜாதகி சொல்லும் வார்த்தைகள் யாவும் பலிதம் பெரும், பல நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றுவரும் யோகம் உண்டாகும், இதனால் மிகுந்த லாபம் கிடைக்கும், வெளிநாட்டில் படிக்கும் யோகம் உண்டாகும், ஆராய்ச்சி கல்வியில் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, ஜாதகி நினைக்கும் விஷயங்கள் மற்றும் பொருட்கள் யாவும், எளிதில் கிடைக்கும்.
11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :
ஜாதக அமைப்பிலேயே சிறந்த விஷயமாகவும், அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் அமைப்பாகவும் இதை கருதலாம், ஜாதகியின் சிந்தனையும் செயல்பாடுகளும் அனைவரும் பாராட்டும் வண்ணம் அமையும், படிப்படியான அதிரடி வளர்ச்சியை வாரி வழங்கும், அனைத்திலும் லாபம் கிடைக்கும், ஜாதகிக்கு சிறந்த நல்ல குணங்களை வழங்குவதில், இந்த 11ம் பாவகத்திர்க்கு அதிக பங்கு உண்டு, வியாபர விருத்தி, நீடித்த அதிர்ஷ்டம், சுப விரைய செலவுகளை தரும், ஒருவரின் ஜாதகத்தில் 11ம் வீடு ஜாதகர் எதற்காக பிறந்தார் என்பதை உணர்த்தும் பாவகமாக இருப்பதால், இங்கே ஜாதகி அதிர்ஷ்டமும் சகல யோகத்தையும் அனுபவிக்க பிறந்தவர் என்பது தெளிவாகிறது, மேலும் இந்த லாப ஸ்தானம் ஜாதகிக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடக ராசியாக அமைவது 100% யோக பலன்களை வாரி வழங்குகிறது.
குறிப்பு :
ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் திசையும், எதிர்வரும் திசைகளும் மேற்கண்ட லாப ஸ்தான பலன்களையே நடைமுறைக்கு கொண்டுவருவது ராஜயோக பலன்களை பரிபூரணமாக அனுபவிக்கும் தன்மையை தரும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக