இதற்கு கண்ணதாசனின் வரிகள் பொருத்தமானதாக இருக்கும்,
"இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே" என்ற வார்த்தைக்கு இணங்க சுய ஜாதக அமைப்பின் படி லக்கினத்தை அடிப்படையாக கொண்டு வீடு நிலம், சொத்து சுகம், வண்டி வாகனம் அமைப்பை குறிக்கும் நான்காம் பாவக வலிமை உணர்ந்தும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் பாவகமான கடக ராசியின் நிலை உணர்ந்தும் ஜாதக ரீதியாக நன்மை தரும் திசை அமைப்பை தெரிந்துகொண்டு வீட்டிற்கு வாயிற்படி அமைப்பது சால சிறந்தது, ஜோதிடதீபம் இதை முந்தைய பதிவிலேயே தெளிவாக அறிவுறித்தி இருக்கிறது, இருப்பினும் இந்த பதிவில் விரிவாக காண்போம் அன்பர்களே!
" வீடு " இது ஒருவருக்கு சரியாக அமைந்துவிட்டால் இதற்க்கு பிறகு வரும் நிலம்,சொத்து,சுகம்,வண்டி,வாகனம் மற்றும் தொழில் ஆகியவை ஜாதகருக்கு சரியாக அமைந்துவிடும், புதிதாக வீடு கட்டுவதற்கு முன் அல்லது வாங்குவதற்கு முன் ஒருவரின் ஜாதகத்தில் நாம் கவனத்தில் எடுத்துகொள்ளவேண்டிய பாவகம் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம், ஏனெனில் ஒரு ஜாதகர் சிறப்பாக ஜீவித்து இருக்க உகந்த இடத்தை தெள்ள தெளிவாக உணர்த்துவது, இந்த பூர்வ புண்ணியம் என்றால் அது மிகையில்லை, உதாரணமாக ஒருவரின் சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பின், ஜாதகர் தனது பூர்வீகம் சார்ந்த பகுதிகளில் ( அதாவது 100 கிலோமீட்டர் சுற்றளவில் ) வீடு கட்டவோ அல்லது வாங்கவோ முயற்ச்சிக்கலாம், அப்படி கட்டும் அல்லது வாங்கும் வீட்டில் ஜாதகர் ஜீவிக்கும் பொழுது சகல செல்வங்களும் நிறைந்து நிற்கும்.
ஒரு வேலை சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் பாதிக்கபட்டு இருப்பின் ஜாதகர், தனது பூர்வீகத்தின் அப்பால் ( அதாவது 100 கிலோமீட்டருக்கு அப்பால் ) சென்று ஜீவித்து இருப்பதே சகல நலன்களையும் வாரி வழங்கும், இந்த விஷயம் குடும்ப தலைவன் ஒருவரின் ஜாதகத்தையே கட்டுபடுத்தும் என்பதால், அந்த குடும்ப தலைவனின் ஜாதகத்தை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, எனவே முதலில் ஒரு ஜாதகர் எங்கு வசிப்பது என்ற விஷயத்தை முடிவு செய்துகொள்வது சிறந்தது.
இதற்க்கு பிறகு குடும்ப தலைவன் என்ற பொறுப்பில் இருக்கும் ஜாதகரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, அவரின் நான்காம் பாவக வலிமையை அறிந்துகொள்வதும், அவரின் ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் பாவகமான கடகம் எப்படி பட்ட நிலையில் இருக்கின்றது என்பதை கருத்தில் கொள்வதும், ஜாதகர் குறிப்பிட்ட ஊரில் எந்த திக்கில் குடியிருக்கலாம் என்பதை நிர்ணயம் செய்துவிடலாம், இதற்க்கு அடுத்து குறிப்பிட்ட ஜாதகருக்கு நான்காம் வீடு தொடர்பு பெரும் பாவக அமைப்பை கருத்தில் கொண்டு, ஜாதகருக்கு அமையும் வீட்டின் தலைவாயிற்படியின் திசையை மிக துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
இதன் அடிப்படையில் ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் வீடு லக்கினம் எனும் முதல் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது, ஜாதகர் தனது வீட்டின் வாயிப்படியை கிழக்கு முகமாக அமைத்து கொள்வது சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை வரி வழங்கும், இதை போன்றே ஜாதகர் செய்யும் தொழில் அமைப்புகளையும் நிறுவனங்களையும் கிழக்கு திசையில் வாயிர்ப்படி அமைந்து கொள்வது அபரிவிதமான வளர்ச்சியை வாரி வழங்கிவிடும், அடிப்படையில் ஒருவர் குடியிருக்கும் வீட்டின் அமைப்பில் இருந்தே முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும், உடல் நலனும், உறவுகள் ஆதரவும் கிடைக்க பெறுவதால், வீடு என்ற ஒரு விஷயத்தில் ஜாதகர் சரியான முடிவு எடுத்து அமைத்துகொண்டால், ஜாதகரின் முன்னேற்றமும் அபரிவிதமான வளர்ச்சியையும் எவராலும் தடுத்து நிறுத்த இயலாது அன்பர்களே !
சுய ஜாதகத்தில் ஒருவருக்கு நான்காம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுகிறது என்று வைத்து கொண்டால், ஜாதகருக்கு ஏற்ற வாயிற்படி வடக்கு திசை என்பதை உறுதி செய்துவிடலாம், எனவே இந்த அமைப்பை பெற்ற ஜாதகரின் வீட்டின் வாயிபடியும் சரி, தொழில் நிறுவனத்தின் வாயிற்படியும் சரி வடக்கு திசையில் அமைவது சால சிறந்தது, ஜாதகரின் அதிரடியான முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது, மேலும் பொருளாதார வளர்ச்சியும், சொத்து சுக சேர்க்கையும் மிகவும் அபரிவிதமாக அமைந்துவிடும் என்பது உறுதி, ஆக நான்காம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் வடக்கு திசை வாயிற்படியை தனது வீட்டிற்கு அமைத்து கொள்வது சால சிறந்தது ஜாதகரின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இது அமையும்.
சுய ஜாதகத்தில் ஒருவருக்கு நான்காம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுகிறது என்று வைத்துகொண்டால், ஜாதகருக்கு ஏற்ற வாயிற்படி மேற்கு திசை என்பதை உறுதி செய்துவிடலாம், மேலும் ஜாதகரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பது தனது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், பொதுமக்களின் ஆதரவில் இருந்து கிடைக்கும் கூடுதல் யோகம் என்பதை மறுப்பதற்கில்லை, இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் அனைவரும் தனது திருமணதிற்கு பிறகு சில காலங்களிலேயே வீடு கட்டும் யோகத்தையோ, வீடு வாங்கும் யோகத்தையோ, பெறுகிறார்கள் என்பது கவனிக்க தக்கது, இவர்களுக்கு மேற்கு திசையில் வாயிற்படி கொண்ட தொழில் நிறுவனங்கள் இருந்து அபரிவிதமான வெற்றிகள் குவிகிறது என்பதை கவனிக்க வேண்டிய விஷயமாக ஜோதிடதீபம் கருதுகிறது.
சுய ஜாதகத்தில் ஒருவருக்கு நான்காம் வீடு ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுகிறது என்று வைத்துகொண்டால், ஜாதகருக்கு ஏற்ற வாயிற்படி தெற்கு திசை என்பதை உறுதி செய்துவிடலாம், மேலும் ஜாதகரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பது தான் செய்யும் தொழில் அமைப்புகளில் இருந்து அபரிவிதமாக பெறுவார், மேலும் ஜாதகரின் வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் தெற்கு திசை வாயிற்படி கொண்டதாக அமைத்து கொள்வது சால சிறந்தது, மேற்கண்ட அமைப்பை பெரும் ஜாதகர்கள் தனது குழந்தை பருவத்திலேயே சரியான திசையில் வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜீவனம் செய்யும் யோகத்தை தந்துவிடுகிறது, அதாவது தனது முன்னோர்களின் வீடு மற்றும் சொத்து ஜாதகருக்கு, இயற்கையாக அமைந்துவிடுகிறது, எனவே ஜாதகருக்கு ஜீவனம் செய்ய வீடு இல்லை என்ற நிலை ஏற்படுவதில்லை, மேலும் ஜாதகரின் முன்னேற்றமும் வளர்ச்சியும் எவ்விதமும் பாதிக்க படுவதில்லை.
எனவே சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தனது வீட்டின் வாயிற்படியை நிர்ணயம் செய்வதே சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் தரும் , தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி, சுய முன்னேற்றம் மற்றும் சுக வாழ்க்கைக்கு உறுதியளிக்கும், தனது லக்கினத்தின் அடிப்படையில் நான்காம் பாவக தொடர்பு அறிந்து, தனது வீட்டிற்கு வாயிற்படி அமைக்கும் பொழுது ஜாதகர் 16 வகை செல்வங்களையும் பரிபூரணமாக சம்பந்தபட்ட ஜாதகர் அல்லது குடும்ப தலைவர் பெறுவார் என்பது உறுதி.
ஆக சுய ஜாதகத்தில் நான்காம் வீடு லக்கினத்துடன் தொடர்பு பெற்றால் ஜாதகர் கிழக்கு திசை வாயிற்படியும், நான்காம் வீடு சுக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றால் வடக்கு திசை வாயிற்படியும், நான்காம் வீடு களத்திர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் மேற்கு திசை வாயிற்படியும், நான்காம் வீடு ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் தெற்கு திசை வாயிற்படியும் கொண்ட வீடுகளில் குடியிருப்பதும், வீடு கட்டி குடியிருப்பதும் சம்பந்தபட்ட ஜாதகருக்கு சகல விதங்களில் இருந்தும் நன்மை தரும், ஒருவரின் ராசியை வைத்து வீட்டின் வாயிற்படியை நிர்ணயம் செய்வது சரியான யோக பலன்களை தராது என்பதே ஜோதிடதீபத்தின் அறிவுரை.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக