Thursday, October 16, 2014

எனது ஜாதகம் சனியின் ஆதிக்கம் நிரம்பிய ஜாதகமா ?கேள்வி பதில் :

ஐய்யா தங்களின் பதிலுக்கு நன்றி.
 என்னுடைய ஜாதகத்தை பார்த்த எல்லாரும் சனியின் ஆதிக்கம் நிரம்பிய ஜாதகம் ஒண்ணும் வேலையில்லை தூக்கிட்டு போங்க என்று சொல்லி என் தாய் தந்தையின் மனதை நோகடித்து விட்டனர் அதன் பிறகு தான் நான் தேடுதல் வேட்டையில் இரங்கி ஓரளவு ஜோதிடம் பற்றி தெரிந்து கொண்டேன் நான் பயன்படுத்தும் மென்பொருள் ஜாதக ஹோரா. ஐய்யா எனக்கு சனி திசை நடக்கிறது வெளிநாடு சென்று பெரும் பணத்தை இழந்து வந்துள்ளேன். நான் மறுபடி செல்ல முடியுமா என்பது தான் என் கேள்வி உபய லக்கினம் என்பதால் 7 பாதகமாக மாறி அதில் சனிபகவான் திசை நடப்பது நன்மையா ஐய்யா?  தற்போது மிகவும் மனவேதனை பட்டு இருக்கிறேன் இதுவரை நான் பட்ட வேதனைகளுக்கு அளவே இல்லை என் தந்தையிடம் உங்களின் பிளாக்கை படித்து காண்பித்தேன் அவர் யாரிடம் சென்றாலும் உன் நிலையை மாற்ற முடியாது என்று சொல்கிறார்.என்னுடைய ஜாதகத்தை தாங்கள் தெளிவாக பார்த்து எப்போது நான் வெளிநாடு செல்ல முடியும் என்று மட்டும் சொல்ல முடியுமா ஐய்யா.


என்னுடைய பிறந்த சுய ஜாதக விவரம்
பிறந்த தேதி : 07/03/1989
பிறந்த நேரம் : 1.40 pm
பிறந்த இடம் : புதுக்கோட்டை 
அன்பரே வணக்கம் !

தங்களின் ஜாதக விபரங்கள் மற்றும் பலன் :

லக்கினம் : மிதுனம் 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : சதயம் 4ம் பாதம் 

அன்பு தம்பி உனது ஜாதக அமைப்பை பார்க்கும் பொழுது எனக்கு கு.ஞாசம்பந்தம் சொன்ன ஒரு கதைதான் நினைவிற்கு வருகிறது, ஊரில் உள்ள ஒரு கோவிலுக்கு யானை குட்டி ஒன்றை தெய்வீக பணிக்காக வாங்கி வந்தனர், வாங்கி வந்த யானை குட்டியை ஒரு சிறு இரும்பு சங்கிலியில், பாதுகாப்பாக இருக்கட்டும் என்று கட்டி போட்டு வைத்து இருந்தனர், காலம் ஓடியது யானையும் பெரியதாக வளர்ந்து வந்தது, ஒருநாள் கோவிலுக்கு வந்த ஒரு பெரிய மனிதர் யானை கட்டி போட்டு இருக்கும் இடத்திற்கு வந்தார், யானையை பார்த்தார், யானை சிறியதாக இருந்த பொழுது கட்டி போட்டு இருந்த அதே சிறிய சங்கிலியில் இப்பொழுதும் கட்டிபோட்டு இருந்தனர், இது அவருக்கு வியப்பை தந்தது.

 யானை மிக பெரியதாக இருக்கிறது யானையை கட்டிய சங்கிலி யானை வாங்கி வந்த பொழுது கட்டிய அதே சிறிய சங்கிலியாக இருக்கிறதே என்று யானை பாகனை விசாரித்தபொழுது, யானை பாகன் சொன்னது அவருக்கு  உண்மையை விளங்க வைத்தது, அதாவது யானை சிறிதாக இருந்த பொழுது சிறிய சங்கிலியால் கட்டிபோட்டு இருந்தனர் ஆரம்பத்தில், சில நாட்கள் அந்த சங்கலியை இழுத்து பார்த்த யானையின் முயற்ச்சி தோல்வியில் முடிந்ததால் அதன்பிறகு அந்த சங்கிலியை அறுக்கும் முயற்சியையே கைவிட்டது, தன்னால் அந்த சிறிய சங்கிலியை அறுக்க இயலாது என்ற எண்ணம் அந்த குட்டி யானையின் மனதில் ஆழமாக் பதிந்துவிட்டதால், அதற்க்கு பிறகு சங்கிலியை அறுக்கும் முயற்சியை கைவிடும் நிலைக்கு வந்துவிட்டது, எங்களுக்கும் பெரிய சங்கிலி வாங்கும் அவசியம் இல்லாமல் ஆகிவிட்டது, என்று சொன்போது பெரியவருக்கு அதில் இருக்கும் உளவியல் ரகசியம் புரிந்தது, தம்பி உனது நிலையும் கிட்டதட்ட இதே நிலைதான் .

 உனது சுய ஜாதகத்தில் முதலில் வலிமை பெற்ற பாவகங்களின் நிலையை தெளிவாக தெரிந்துகொள், உனது ஜாதகத்தில் 1,4,5,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும், 2,11ம் வீடுகள் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதக அமைப்பிலேயே 100% யோகத்தை வாரி வழங்கும் அமைப்பாக கருதலாம்.

உனது ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்கள் என்று பார்க்கும் பொழுது எதிரி ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 6ம்  வீடு 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, கடன் பெறுவது கொடுப்பது, சிறிய முதலீடுகள செய்வது என்ற வகையில் 100% இன்னல்களை தரும், 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் இந்த 7ம் வீடு தங்களுக்கு பாதக ஸ்தானமாக அமைவதும் 200% இன்னல்களை வெளிநாடு,நண்பர்கள்,
வியாபாரம்,கூட்டாளி, கூட்டு தொழில் முயற்ச்சி என்ற வகையில் வாரி வழங்கும். 3,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சியில் வரும் தோல்வி, தேவையில்லாமல் மற்றவரிடம் எடுக்கும் அவப்பெயர், அதிக முதலீடு செய்வதால் வரும் திடீர் பேரிழப்பு, மனநிம்மதி இல்லாத வாழ்க்கை, அனைவராலும், தொல்லை வீண் விரையம் என்ற வகையில் அதிக இன்னல்களுக்கு ஆளாக்கும்.

மேலும் தற்பொழுது நடைபெறும் சனி திசை ( 27/02/2009 முதல் 28/02/2028 வரை) உனக்கு 4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 2,11ம் வீடுகள் அதிர்ஷ்ட ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று அதியோக பலன்களையுமே வாரி வழங்குகிறது, ஆனால் தற்பொழுது நடைமுறையில் உள்ள புதன் புத்தி மட்டும் ( 02/03/2012 முதல் 10/11/2014 வரை ) 6ம் வீடு எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று உனக்கு 80% சதவிகித இன்னல்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது வருத்தத்திற்கு உரிய விஷயமே, மேலும் உனது 6ம் வீடு கால புருஷ  தத்துவ அமைப்பிற்கு திடீர் இழப்பை தரும் 8ம் பாவகமாக வருவது மேலும் துன்பத்தை அதிகரிக்க செய்கிறது, அதுவும் அன்றி இந்த 6ம் வீடு ஸ்திர நீர் ராசியாக இருப்பதால் திடீர் இழப்புகளையும், மனோ ரீதியான துன்பங்களையும் ஸ்திரமாக புதன் புத்தி காலங்களில் தருவது சற்றே கொடுமையானதே.

ஆக உனக்கு தற்பொழுது நடைபெறும் சனி திசை எந்த விதத்திலும் துன்பத்தை தரவில்லை, சனி திசையில் நடைபெறும் புதன் புத்தி மட்டுமே, 6ம் பாவக பலனை கடுமையாக தருகிறது, இது மேற் சொன்ன கதையில் வரும் குட்டி யானையின் நிலைக்கு உன்னை இட்டு செல்கிறது, இது குறுகிய காலமட்டுமே ஆக எவ்வித கவலையும் நீ கொள்ள தேவையில்லை உனது எதிர்காலம் மிகவும் பிரகாசமாகவே இருக்கிறது, ஜீவன ஸ்தான பலனையும், லாப ஸ்தான பலனையும் உனது ஜாதகத்தில் நடைபெறும் திசை புத்திகள் நடைமுறைக்கு கொண்டு வரும் பொழுது, உனது வளர்ச்சியும் ஜீவன மேன்மையும் அபரிவிதமாக இருக்கும், ஆனால் வெளிநாடு செல்லும் எண்ணத்தையும் வெளியூர் செல்லும் எண்ணத்தையும் உடனடியாக கைவிட்டு விடு, ஏனெனில் உனது 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருப்பது, வெளியூர் வெளிநாடுகளில் இருந்து 200% இன்னல்களையே வாரி வழங்கும்.

மேற்கண்ட ஜாதகத்திற்கு உண்டான பலாபலன்களை முழுமையாக தெரிந்துகொள்ள , முறைப்படி நேரில் வந்து ஆலோசனை பெற்றுகொள் அல்லது மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்.

குறிப்பு :

உடனடியாக நீ செய்யவேண்டிய பரிகாரங்கள் :

1) திருவெண்காடு சென்று முக்குண நீராடி கருட தரிசனம் கண்டு நிவர்த்தி பெறுவது அவசியம்.
2) வளர்பிறையில் வரும் திங்கள் அன்று திருப்பதி சென்று, ஸ்ரீவாரி தீர்த்தத்தில் நீரடி பெருமாளை தரிசனம் செய்து நலம் பெறவும்.
3) உனது குல தெய்வத்திற்கு முறையான வழிபாட்டினை எதிர்வரும் அமாவசை தினத்தில், அன்னதானம் செய்து வழிபடவும்.
4) மேலும் பரிகார விபரங்களை மின் அஞ்சல் மூலம் தெரிந்து கொள்ளவும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
94433556963 comments:

 1. லக்கினம் கன்னி அல்ல மிதுனம். கஜ கேசரி யோகம் உள்ளது.9ம் இடம் மிக வலுவாக லக்கினாதிபதியுடன் இரண்டுக்குரியவன்.12ல் பத்துக்குடையவன்...

  நிச்சயமாக வெளிநாட்டில் சென்று செட்டிலாகும் யோகம் உள்ளது.வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. இவரது ஜாதகத்தில் லக்கினாதிபதி புதன் 8ம் பாவகத்தில் மறைவு பெற்று இருக்கிறார், கட்டத்தை வைத்து சொன்னால் மட்டுமே அவர் 9ல் இருப்பதை போல் தெரியும், மேலும் ஜாதகருக்கு 7ம் பாவகம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் ஜாதகரால் நிச்சயம் வெளிநாட்டில் செட்டில் ஆவது முடியாத காரியம்

   Delete
  2. மேலும் கஜகேசரி யோகம் 12ல், கஜகேசரி யோகத்திற்கும் வெளிநாடு அமைப்பிற்கு என்ன சம்பந்தம்,?

   Delete