Friday, February 5, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷ லக்கினம்
சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 1ம் ராசியான மேஷ ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 5ல் ராகு பகவானும், 11ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

மேஷ இலக்கின சிறப்பு இயல்புகள் :

மேஷ ராசியை  ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் செயல்பாடுகளில் வேகமும் சுய கட்டுபாடும் அதிகரிக்கும், எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாக கையாளும் திறமை பிறவியிலேயே அமைந்திருக்கும், சிறந்த நிர்வாக திறமையின் மூலம் வாழ்க்கையில் தனது லட்சியங்களில் வெற்றி பெரும் யோகத்தை தரும், அரசு சார்ந்த நிர்வாக துறையில் பணியாற்றும் யோகமும், பொதுமக்களின் பாதுகாப்பில் ஈடுபடும் காவல்துறை, ராணுவம், தீயணைப்பு துறை போன்ற பாதுகாப்பு  துறைகளில் சிறந்து விளங்கும் வல்லமையை தரும், மேஷ இலக்கின அன்பர்களின் இலக்கு என்பது எப்பொழுதும் வெற்றியை தவறாமல் தரும், குறுகிய காலங்களில் தான் செய்யும் தொழில் எதுவாயினும் அதில் சிறப்பான வெற்றிகளை பெரும் யோகம் உண்டாகும், சக தொழில் செய்பவர்களுக்கு இவர்களின் முன்னேற்றமும் வெற்றியும் மிகப்பெரிய ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்ப்படுத்தும், தனது வாழ்க்கையின் வெற்றி தோல்விகளை தானே நிர்ணயம் செய்யும் வல்லமை மேஷ இலக்கின அன்பர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும், மேஷ இலக்கின அன்பர்களின் எதிரிகளே அவர்களது முன்னேற்றத்திற்கு காரணமாக அமைத்துவிடுவார்கள் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், எப்பொழுதும் தர்மத்தின் வழியில் நடக்கும் பேராண்மை கொண்டவர்கள், சில நேரங்களில் இவர்களது வேகமான செயல்பாடுகள் பலரது விமர்சனங்களுக்கு ஆளாகும் தன்மையை தரும், சுதந்திர பிரியர்கள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் எப்பொழுதும் ஆர்வம் கொண்டு இருப்பார்கள், வியக்கத்தகு அறிய சாதனைகளை படைக்கும் வல்லமை பெற்றவர்கள், விளையாட்டு மற்றும் சாகச நிகழ்வுகளில் வெற்றியை மிக எளிதாக பெரும் யோகம் பெற்றவர்கள், தான் மேற்கொண்டுள்ள லட்சியங்களில் பின்வாங்காமல் முழு முயற்சியுடன் வெற்றியை ஈட்டும் யோகம் பெற்றவர்கள்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி மேஷ இலக்கின அன்பர்களுக்கு 12ல் கேதுவின் சஞ்சாரமும், 6ல் ராகுவின் சஞ்சாரமும், 12ம் பாவக வழியில் இருந்து மன நிம்மதி இழப்பையும், வீண் விறையங்களையும், எதிர்பாராத திடீர் இழப்பையும் மிகவும் பலமாகவே தந்தது, 6ம் பாவக வழியில் இருந்து கடன் தொந்தரவுகள், உடல் நல பாதிப்பு, சூழ்நிலைக்கு கட்டுபட்டு செய்லபடவேண்டிய சந்தர்ப்பங்களையும், எதிரிகளின் சதிக்கு ஆளாகும் சந்தர்ப்பங்களையும் தந்தது,  தற்பொழுது 5ல் சஞ்சாரம் செய்யும் ராகுவினால் பெரிய யோக பலன்கள் இல்லை என்றே கூற வேண்டும், குறிப்பாக ஜாதகரின் வாரிசுகள் வழியில் இருந்து சிறு சிறு இன்னல்கள், மற்றவர்களின் உதவி இல்லாமல் தாமாகவே தனித்து போராடும் சூழ்நிலை, குல தெய்வ வழிபாட்டில் குறைகள், மிதமாக போராடி வெற்றி பெரும் யோகம், அந்நிய நபர்களால் தொல்லைகள், பித்தம் சார்ந்த உடல் தொந்தரவுகள், நம்பிக்கை குறையும் விதமாக நடைபெறும் நிகழ்வுகள், எதிர்பாராத சிக்கல்கள், எடுக்கும் முயற்ச்சிகளில் வரும் தொய்வு, கவன சிதறல்கள், நோக்கம் நிறைவேற அதிகமாக உழைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள், பூர்வீக சிக்கல்கள் அதிகரிக்கும் தன்மை, பூர்வீக ஜீவனத்தால் அதிக இன்னல்கள் மற்றும் நஷ்டம், வெளியில் சென்று ஜீவனம் தேடும் நிலை அதிக  மன உளைச்சல்கள் என மேஷ இலக்கின அன்பர்களுக்கு தற்பொழுது 5ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் கடுமையான சோதனைகளை தருவார், எனவே குல தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாட்டை காட்டுவது தங்களின் இன்னல்களை வெகுவாக குறைக்கும்.

11ல் கேதுவின் சஞ்சாரம் மேஷ இலக்கின அன்பர்களுக்கு அளவில்லா அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் வாரி வழங்கும், செய்யும் தொழிலில் எதிர்பாராத லாபங்களை பெரும் யோகம் உண்டாகும், பயணங்களினால் அதிர்ஷ்டமும் லாபமும் கிட்டும், லாட்டரி, பங்கு வர்த்தகம், யுக வணிகம் மூலம் அளவில்லா அதிர்ஷ்டங்களை பெரும் தன்மையை தரும், தன்னை விட வயதில்  அதிகமுள்ள பெரியவர்கள் வழியில் இருந்து  மிகுந்த அதிர்ஷ்டத்தையும் லாபத்தையும் பெற இயலும், புதிய சொத்துகள் வாங்கும் யோகமும், சூழ்நிலை மாற்றத்தில் விருப்பமும் உண்டாகும், பல சுற்றுல ஸ்தலங்களுக்கு சென்றுவரும் சந்தர்பங்கள் தேடிவரும், திருமண வயதில் உள்ள அன்பர்களுக்கு சிறப்பான இல்லற வாழ்க்கை அமையும், பல காலமாக திட்டமிட்டு கிடப்பில் போடபட்ட விஷயங்களில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும், செய்யும் தொழில் மற்றும் வியாபரத்தில் அளவில்லா லாபமும், புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகும், அறிமுகம் இல்ல புதிய நபர்கள் தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்களை நிகழ்த்துவார்கள், ஆன்மீக தேடுதல்களுக்கு வெற்றி கிட்டும், வெளிநாட்டினர் அந்நிய மதத்தினர் மூலம் லாபம் மற்றும் ஜீவன முன்னேற்றம் உண்டாகும்,  வெளிநாடு வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ள அன்பர்களுக்கு, எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் வந்து சேரும், மேஷ இலக்கின அன்பர்களின் அறிவு திறனும் தன்னம்பிக்கையும் ஒன்று சேர்ந்து வெற்றி வாய்ப்புகளை வாரி குவிக்கும் யோக காலமாக, கேதுவின் 11ம் பாவக சஞ்சாரம் அமையும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி மேஷ இலக்கின அன்பர்களுக்கு 5ம் பாவக வழியில் அதிக அளவில் இன்னல்களும், 11ம் பாவக வழியில் அளவில்லா அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், மேஷ இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் 5ம் பாவக வழியில் இருந்து தடைகளையும், 11ம் பாவக வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை பெறுகின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் மேஷ இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 05 மற்றும் 11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே 100% சதவிகிதம் நடைபெறும், எனவே மேஷ  இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 05,11ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment