ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

தொழில் வெற்றிகளை வழங்கும் ஜீவன ஸ்தான வலிமையையும், அபரிவிதமான லாபங்களை வழங்கும் 11ம் பாவக வலிமையையும் !




தொழில் ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, சிறப்பான ஜீவனத்தை தருவது என்பது இயற்கையானதே, ஜாதகரின் உழைப்பும், ஆர்வமும் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றங்களை தரும் என்பதில் சந்தேகம் இல்லை, இருப்பினும் சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெரும் பொழுதே ஜாதகரின் உழைப்பிற்கு ஏற்ற பலன்களை ஜாதகரால் அனுபவிக்க இயலும், ஒருவேளை சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று, லாப ஸ்தானம் ஏதாவது ஒரு வகையில் வலிமை இழப்பின் ஜாதகரின் உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் எதுவும் கிடைக்காது, மற்றவர்களுக்காக உழைக்கும் சூழ்நிலையும், தமது உழைப்பிற்கு ஏற்ற பலாபலன்களை மற்றவர்கள் சுவிகரிக்கும் நிலையையும் தரும், ஜாதகருக்கு எவ்வித லாபமும், உழைப்பிற்கு ஏற்ற பலனும் கிடைக்காது, எனவே சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு தொழில் ரீத்யான திறமைகளையும், செய்யும் தொழில் வழியில் வல்லமையை தந்த போதிலும், லாப ஸ்தானம் வலிமை பெற்றால் மட்டுமே ஜாதகர் உழைப்பிற்கு உண்டான பலன்களை தான் பரிபூரணமாக அனுபவிக்க இயலும்.

ஜீவன ஸ்தான வலிமையையும், லாப ஸ்தான வலிமையையும், ஜாதகருக்கு வழங்கும் பலன்களை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே!


லக்கினம் : தனுசு 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : சதயம் 4ம் பாதம்

ஜாதகருக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகரின் ஜீவன மேன்மையை உறுதி செய்கிறது, மேலும் ஜாதகர் தான் செய்யும் தொழிலில் சிறப்பான திறமைகளையும், சிறந்த அனுபவங்களையும் பெற்றவராக திகழ்வது ஜீவன ஸ்தான வலிமையே காரணம், ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு உபய ராசியில் ஆரம்பிப்பது, ஜாதகர் தான் செய்யும் தொழிலில் செய்யும் முதலீட்டின் தன்மையை தெளிவு படுத்துகிறது, ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கன்னி ராசியில், உபய மண் தத்துவத்தில் இயக்கம் பெறுவதும் ஜீவன ஸ்தான அதிபதியாக சனி பகவான் அமர்வதும், மண் தத்துவம் சார்ந்த மண்ணில் விளையும் பொருட்கள் மற்றும் மண்ணில் இருந்து கிடைக்கும் உலோகம்  போன்ற பொருட்கள் வழியில் இருந்து ஜீவனத்தை நடத்தும் யோகத்தை தந்தது, ஜீவன ஸ்தானம் உபய கன்னி ராசியாக அமைவதால் ஜாதகரின் முதலீடு என்பது வெறும் 30% விகிதத்தில்  அமைந்தது.

ஜாதகருக்கு 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் பெறும் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தின் தன்மையை தெளிவு படுத்துகிறது, லாப ஸ்தானம் ஜாதகருக்கு சர காற்று தத்துவ  ராசியான துலாம் ராசியில் அமைவது, தனது உழைப்பின் பலனை தனது அறிவு திறனின் மூலம் பன்மடங்காக அபிவிருத்தி செய்யும் யோகத்தை பெறுகிறார், ஜீவன ஸ்தானம் உபய ராசியிலும், லாப ஸ்தானம் சர ராசியிலும் அமைந்து வலிமை பெறுவது, ஜாதகர் குறைவான முதலீட்டில் பலமடங்கு லாபத்தை தன்னிறைவாக பெறுவதை காட்டுகிறது, மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது ஜாதகர் தாம் பெரும் லாபத்தின் பலனை அனுபவிக்கும் தன்மையையும், 2ம் பாவகம் வலிமை பெறுவது  நிறைவான நிலையான வருமானத்தை பெரும் யோகத்தையும், 3ம் பாவகம் வலிமை பெறுவது வியாபரம் மற்றும் கமிஷன் மூலம் அபரிவிதமான  வெற்றிகளையும், 5ம் பாவகம் வலிமை பெறுவது நுணுக்கமான அறிவு மற்றும் புத்திசாலிதனத்தையும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளும் தன்மையையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது தொடர்ந்து மக்கள் ஆதரவையும், வியாபர வெற்றிகளையும், ஏற்றுமதி இறக்குமதி  தொழில் வெற்றிகளையும், வாழ்க்கை துணை மற்றும் கூட்டாளிகள், நண்பர்கள் வழியில் இருந்து அதிர்ஷ்டத்தையும்,  நன்மைகளையும் ஜாதகர் பரிபூரணமாக அனுபவிக்கும் தன்மையை தருவது  ஜாதகர் மற்றும் ஜாதகரின் முன்னோர்கள் செய்த பாக்கியமே.

மேலும் ( 30/10/1996 முதல் 31/10/2013 வரை நடைபெற்ற ) புதன் திசை 17 வருடம் ஜாதகருக்கு லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தியது செய்யும் தொழில் 100% விகித லாபத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கியது, மேற்கண்ட புதன் திசை காலத்தில் ஜாதகரின் வளர்ச்சி என்பது சமூகத்திலும்  சரி உலகளவிலும் சரி மிகப்பெரிய அந்தஸ்தையும், கௌரவ  பதவிகளையும் வாரி வழங்கியது, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெற்றதும் அல்லாமல், சரியான வயதில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தியது மிகப்பெரிய யோக வாழ்க்கை வாரி வழங்கியது.

தற்பொழுது நடைபெறும் கேது திசை ( 31/10/2013 முதல் 30/10/2020 வரை ) ஜாதகருக்கு 3ம் பாவக பலனை ஏற்று நடத்துவது வீரியமிக்க வெற்றிகளையும், வியாபர லாபங்களையும், நிறைவான சொத்து சுக சேர்க்கைகளையும் தங்கு தடையின்றி வாரி வழங்குகிறது. எனவே ஜாதகருக்கு கேது திசையும் மிகுந்த யோகத்தையே தருகிறது.

அடுத்து வரும் சுக்கிரன் திசையும் ஜாதகருக்கு பாக்கிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தனது வாழ்க்கையின் பரிபூர்ணத்துவத்தை அடைய செய்யும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை, மேலும் சுய ஜாதகத்தில் அனைத்து பாவகங்களும் வலிமை பெறுவதும், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்துவதும், ஜாதகரின் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பது  கண்கூடான உண்மை, ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது தொழில் வெற்றியையும், லாப ஸ்தானம் வலிமை பெறுவது பெற்ற வெற்றியை ஜாதகர் அனுபவிக்கும் யோகத்தையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக