திங்கள், 29 பிப்ரவரி, 2016

சுப கிரகமான குருபகவான் தனது திசாபுத்தி காலங்களில் அவயோகத்தை தருவது ஏன் ?


இயற்க்கை சுபகிரகங்கள் தனது திசா புத்தி காலங்களில் யோக பலன்களை தரும் என்று கணிப்பது முற்றிலும், சுய ஜாதக கணிதத்திற்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, சுப கிரகமோ, பாவ கிரகமே தனிப்பட்ட பலாபலன்களை ஜாதகருக்கு தருவதில்லை, சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமைக்கு ஏற்ப, தனது திசையில் குறிப்பிட்ட ஒரு பாவகத்தின் பலனையோ அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட பாவகங்களின் பலனையோ ஏற்று நடத்துகிறது என்பதே உண்மை, சுப கிரகங்களின் திசா புத்திகள் ஜாதகருக்கு நன்மையை தரும், பாவக கிரகங்களின் திசா புத்திகள் ஜாதகருக்கு தீமையை தரும் என்று கணிப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான கற்பனையே அன்றி வேறு எதுவும் இல்லை, சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் பலாபலன்களையே நவகிரகங்கள் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் ஏற்று நடத்துகிறது என்பதே 100% விகித உண்மையாகும், எனவே சுய ஜாதகங்களில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமையாக இருப்பின், நடைபெறும் பாவக கிரகத்தின் திசா புத்திகளும், தாம் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நன்மையையும் யோகத்தையும் வாரி வழங்கும், மாறாக லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை அற்று இருப்பின், சுப கிரகங்களின் திசாபுத்திகள் நடைபெற்றாலும், தாம் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு அவயோக பலன்களே நடைமுறைக்கு வரும்.

இதற்க்கு சரியான உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் பெறுவோம் அன்பர்களே !

ஜாதகருக்கு லக்கினம் : துலாம் 
ஜாதகருக்கு ராசி : மகரம் 
ஜாதகருக்கு நட்சத்திரம் : உத்திராடம் 4ம் பாதம் 


சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு  தற்பொழுது குரு திசை நடைமுறையில் உள்ளது, இதற்க்கு முன் நடந்த ராகு திசையில் செவ்வாய் புத்தி காலத்தில் இருந்து ஜாதகரின் வாழ்க்கையில் அதிக அளவு இன்னல்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆளானார், குறிப்பாக ஜாதகரின் வேலை பறிபோனது, வருமான வாய்ப்புகளை இழந்தார், கடன் சார்ந்த தொந்தரவுகள், திடீர் இழப்புகளை ஜாதகர் தவிர்க்க இயலாத சூழ்நிலைகளை சந்திக்கும் தன்மையை தந்தது, ராகு திசை முடிந்து, குரு திசை ( 11ல் குரு ) ஜாதகருக்கு யோகத்தை தரும் என்ற எண்ணத்தில் மிகப்பெரிய இடியே விழுந்தது, குரு திசை குரு புத்தியும் ஜாதகருக்கு மிகுந்த துன்பங்களையே வழங்கி கொண்டு இருப்பது, ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது, ஜாதகர் மேற்கண்ட இன்னல்களை சந்திக்க காரணம் என்ன ? சுப கிரகமான குரு தனது திசையில் ஏன் நன்மையை செய்யவில்லை என்பதை இனி "ஜாதக ரீதியாக" ஆய்வு செய்வோம் அன்பர்களே!

சம்பந்த பட்ட ஜாதகருக்கு கடந்த ராகு திசை 1ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தந்த போதிலும், ராகு திசை செவ்வாய் புத்தி நடைமுறைக்கு வந்த உடன் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு 4ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெற்று, ஜாதகரின் வருமானத்திற்கும் சுக போக வாழ்க்கைக்கும்  தடைகளை வழங்கியது ( 8ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்பம் மற்றும் தன ஸ்தானமாக  அமைகின்றது ) மேலும் ஜாதகருக்கு தற்பொழுது  (12/07/2015 முதல் 29/08/2017 வரை) நடைபெறும் குரு திசை குரு புத்தியும் 12ம் வீடு  விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை தருவது ஜாதகரின் மன நிம்மதி இழப்பு, வீண் விரையங்கள், மன அழுத்தம் மற்றும் மன போராட்டம் என்ற வகையில் அதிக இன்னல்களையே வாரி வழங்குவது ஜாதகருக்கு சாதகமற்ற சூழ்நிலையே நீடிப்பது உறுதியாக தெரிகிறது, சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் குரு பகவான் ஜாதகருக்கு வலிமை அற்ற 12ம் பாவக பலனை தனது திசை மற்றும் புத்தியில் ஏற்று நடத்துவது ஜாதகருக்கு விரைய ஸ்தான வழியில் இருந்து அதிக  அளவு இன்னல்களையே தரும் என்பது கவனிக்க தக்க விஷயமாகும்.

ஜாதகரின் கேள்வி :

திருமணம் தாமதம் ஆக காரணம் என்ன?

சுய ஜாதகத்தில் 2ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று வலிமை இழப்பதும், 8ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  குடும்ப ஸ்தானமாக அமைந்து பாதிக்க படுவதும் ஜாதகரின் திருமண வாழ்க்கையில் தாமதத்தையும் தடைகளையும் தருகிறது.

வேலை தொழில் எப்பொழுது அமையும் ?

நிச்சயம் சுய தொழில் அமைய வாய்ப்பில்லை சுய ஜாதகத்தில் 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது சுய தொழில்  வாய்ப்பை கனவாக்கும், 7ம் பாவகம் வலிமை பெறுவதால் கூட்டு தொழில் அல்லது திருமணதிற்கு பிறகு கூட்டு தொழில் துவங்குவதால் நல்ல  வெற்றிகளை பெற இயலும், மேலும் வெளிநாடுகளில் நல்ல ஜீவன முன்னேற்றத்தை தரும், லக்கினம் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகர் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவது அல்லது  அடிமை தொழில் மேற்கொள்வதே ஜாதகரின் வாழ்க்கையில் சகல  நலன்களையும் தரும்.

தற்பொழுது நடைபெறும் குரு திசையில், குரு புத்தி, சனி புத்தி மற்றும் புதன் புத்திகள் சிறப்பான ஜீவன முன்னேற்றத்தை வழங்க வாய்ப்பில்லை என்பதால், ஜாதகர் ஏதாவது வேலையை தேடிக்கொள்வது சால சிறந்தது, மேலும் வெளியூரில் சென்று வலை பார்ப்பது சகல நன்மைகளையும், திருமண யோகத்தையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக