ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் வாரி வழங்கும் வல்லமை லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்திர்க்கு உண்டு, சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெறுவது ( சர இலக்கின அன்பர்களை தவிர ) சம்பந்த பட்ட ஜாதகருக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தையும், நிறைவான லாபத்தையும் நிச்சயம் தரும், மேலும் ஜாதகர் தனது பிறவி பலனை முழுவதும் பெரும் யோகமும் உண்டாகும், ஜாதகரின் எண்ணங்கள் யாவும் பலிதம், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும், காலபுருஷ தத்துவத்திற்கு 10,11க்கு அதிபதியான சனி பகவான், சுய ஜாதகத்தில் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக அமர்ந்தால், ஜாதகரின் யோக வாழ்க்கைக்கும், அதிர்ஷ்டங்களுக்கும் குறைவேதும் இருக்காது, தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம், எண்ணிய காரியங்கள் வெற்றி, செய்யும் தொழிலில் எதிர்பாராத லாபங்கள் ஜாதகரை வந்து சேரும், சனி பகவான் இன்னல்களையே தருவார் என்ற கூற்றை இங்கே உடைத்தெறிந்து ஜாதகரின் யோக வாழ்க்கைக்கு தாமே காரணம் என்று நிருபித்து " சனி கொடுப்பின் எவர் தடுப்பார்" என்ற வாக்கினை 100% விகிதம் உறுதி செய்வார்.
சனிபகவான் தரும் யோகம் பற்றி இந்த பதிவில் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே!
ஜாதகருக்கு லக்கினம் : சிம்மம்
ஜாதகருக்கு ராசி : துலாம்
ஜாதகருக்கு நட்சத்திரம் : சித்திரை 4ம் பாதம்
ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை :
1,3,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோகத்தை தரும்.
4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 10ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோகத்தை தரும்.
5,9ம் வீடுகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பாதக ஸ்தான வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும்.
2,6ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை தரும்.
8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெறுவது, 12ம் பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை தரும்.
மேற்க்கண்டவையே ஜாதகரின் பாவக வலிமைக்கு உண்டான பொது பலன்கள், இதில் 1,3,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாக கருதலாம், கால புருஷ தத்துவத்திற்கு 10,11க்கு உடைய சனிபகவான் ஜாதகருக்கு எந்த எந்த பாவகத்திர்க்கு அதிபதியாக வருகிறார், என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே, இந்த ஜாதகருக்கு 1,3,7 மற்றும் 11ம் பாவகங்களுக்கு அதிபதியாக சனிபகவானே வருவது கவனிக்க தக்க அம்சமாகும், மேலும் 1,3,7,11ம் பாவகங்கள் தொடர்பு பெறுவது லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே என்பதும், 11ம் பாவகத்திர்க்கு அதிபதியாக சனி பகவானே வருவதும், ஜாதகரின் வாழ்க்கையில் சனிபகவான் லாப ஸ்தான வழியில் இருந்து யோகங்களை வாரி கொடுக்கும் நிலையில் இருப்பது தெளிவாகிறது.
எனவே ஜாதகர் இலக்கின வழியில் இருந்து சிறப்பாக வளரும் சூழ்நிலையையும், நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், சிறந்த கல்வி யோகத்தையும், தன்னம்பிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட மனதினையும், எந்த சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொள்ளும் வல்லமையும் பெற்று இருப்பதும் , 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சியில் வெற்றியையும், சிறந்த அறிவு திறனையும், வீரியமிக்க செயல்களால் வெற்றிகளையும், சாஸ்திர ஞானத்தையும், மிதமிஞ்சிய மனோ தைரியத்தையும், எதிலும் துணிவுடன் செயல்படும் வல்லமை கொண்டவராகவும், 7ம் பாவக வழியில் பொது வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும், வாழ்க்கை துணை வழியில் இருந்து ஒத்துழைப்பையும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து முன்னேற்றத்தையும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்து வரும் யோகத்தை பெறுபவராகவும், 11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டத்தையும், நிலையான யோக வாழ்க்கையையும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் யோகம் பெற்றவராகவும் , தன்னம்பிக்கையும் மனோ தைரியத்தையும் நிறைவாக பெற்றவராகவும் காணப்படுகிறார், மேற்கண்ட 1,3,7,11ம் பாவகங்களுக்கு அதிபதியாக சனி பகவான் அமர்வது ஜாதகரின் அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கையை தங்கு தடையின்றி தாம் அதிபதியாக உள்ள பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகருக்கு யோகங்களை வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்.
ஜாதகருக்கு 1,3,7,11ம் பாவகங்களுக்கு அதிபதியாக சனிபகவான் அமர்ந்தது மட்டுமே ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்கவில்லை, இதற்க்கு முன் ( 14/12/1998 முதல் 14/12/2014 வரை) நடைபெற்ற குரு திசையும், தற்பொழுது ( 14/12/2014 முதல் 14/12/2033 வரை ) நடைபெறும் சனி திசையும் ஜாதகருக்கு 1,3,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தியதே ஜாதகரின் யோக வாழ்க்கைக்கு காரணமாக அமைந்தது, எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது மட்டும் யோகத்தை தாராது, நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு யோக பலன்கள் நடைமுறைக்கு வரும், மேலும் ஜாதகருக்கு லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான் தனது காரக துவத்தில் இருந்து யோகங்களை வாரி வழங்குவது கண்கூடான உண்மை.
ஜாதகரின் அதிர்ஷ்ட நிறம் சாம்பல்,
ஜாதகரின் அதிர்ஷ்ட எண் எட்டு.
ஜாதகரின் அதிர்ஷ்ட நாள் சனி,
என தனது காரக துவத்தில் இருந்து சனி பகவான் ஜாதகருக்கு தொடர்ந்து யோகங்களை வழங்கி கொண்டு இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே சனி பகவான் ஒரு ஜாதகருக்கு யோகங்களை வாரி வழங்க ஆரம்பித்துவிட்டால் அதை தடுக்க எவராலும் இயலாது என்ற கூற்று முற்றிலும் உண்மையே.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
Ayya vanakkam.
பதிலளிநீக்குSara lagna jadagarkaluku laba sthanam keduthalai tharum endral piragu avargaluku labam kidaikka vazhi enna? Enda sthanam laba sthanamaga irukkum?