சுய ஜாதக அமைப்பின்படி ஒருவருக்கு திருமணம் நடைபெறும் கால நேரத்தை துல்லியமாக அறிவது எப்படி என்பதை இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! பொதுவாக திருமணம் வாழ்க்கை ஒருவருக்கு அமைவதை பற்றி சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை வைத்து மிக எளிதாக உணர்ந்துகொள்ள முடியும், சுய ஜாதகங்களில் குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்களும் வலிமையாக இருப்பின், சம்பந்தபட்ட ஜாதகருக்கு இளம் வயதில் சரியான நேரத்தில் திருமண வாழ்க்கை அமைந்துவிடும், குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்களில் ஏதாவது ஒன்று பாதிக்க படும் பொழுது , ஜாதகருக்கு திருமண வாழ்க்கை என்பது சற்று கால தாமதமாக தேடுதல்களுக்கு பிறகு அமையும், குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாதிக்க படும் பொழுது ஜாதகரின் திருமணம் தடை பெற்ற திருமணமாக அமையும் அல்லது வெகுகால தாமதத்திற்கு பிறகு அமையும்.
திருமண வாழ்க்கை அமைவதை நிர்ணயம் செய்வது சம்பந்த பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்களின் வலிமையே, பொதுவாக திருமண வாழ்க்கை அமைவது ( குரு பலம் ) எனப்படும் சந்திர ராசிக்கு கோட்சார ரீதியாக குரு சிறப்பன இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் என்பதில் "ஜோதிடதீபம்" மாற்று கருத்தை முன்வைக்கிறது, அதாவது குரு பலம் அற்ற நேரங்களிலும், சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்கள் வலிமை பெற்று, வலிமை பெற்ற குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான பலனை நடைபெறும் பெரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தினால், அந்த திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஜாதகருக்கு திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும் என்பதை உறுதியாக பதிவு செய்கிறது.
உதரணமாக :
ஜாதகருக்கு லக்கினம் : மகரம்
ராசி : தனுசு
நட்சத்திரம் : மூலம் 2ம் பாதம்
சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்க பட்டு இருக்கிறது, ஆனால் 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையாக இருக்கிறது, எனவே ஜாதகருக்கு 2ம் பாவக வலிமை அற்ற தன்மையினால் திருமணம் தாமதமாகும் ( ஜாதகருக்கு வயது 32 ) 7ம் பாவக வலிமை ஜாதகருக்கு திருமணம் தாமதமாக நடைபெற்றாலும் யோகம் மிகுந்த வாழ்க்கை துணையை பெற்று தரும்.
இனி ஜாதகருக்கு திருமணம் நடைபெறும் கால நேரம் எப்பொழுது என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே, ஜாதகருக்கு திருமணம் நடை பெரும் கால நேரத்தை துல்லியமாக உணர, சுய ஜாதகத்தில் எந்த திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 7ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ஆய்வு செய்வது அவசியமாகிறது, ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறுவது சந்திரன் திசை எனவே சந்திரன் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் என்பதை காண்போம், ஜாதகருக்கு சந்திரன் தனது திசையில் 8ம் வீடு ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்துவது உகந்ததல்ல, சந்திரன் திசையில் தற்பொழுது நடைபெறும் ராகு புத்தி 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலனை தருவது வரவேற்க தக்கது, சந்திரன் திசை, ராகு புத்தியில் எதிர் வரும் கேது அந்தரமே ( 21/10/2016 முதல் 26/11/2016 வரை ) ஜாதகருக்கு களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதால், சந்திரன் திசை, எதிர்வரும் ராகு புத்தியில், கேது அந்தரத்தில் ஜாதகருக்கு திருமணம் நிச்சயம் அமையும், அந்த காலத்தில் அமையும் வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகர் சகல யோகங்களையும் அனுபவிக்கும் நல்ல வாய்ப்பு உண்டாகும் என்பதை கவனத்தில் வைத்து ஜாதகர் சரியான முடிவுகளை எடுப்பது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.
எனவே திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தருவது சுய ஜாதகத்தில் உள்ள 2,7ம் பாவக வலிமையும் சரியான வயதில் வலிமை பெற்ற 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் அன்றி வேறு எதுவும் இல்லை அன்பர்களே! அதே போன்று திருமணம் தாமதம் அல்லது தடை ஏற்ப்படுவதர்க்கும் சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை அற்ற நிலையே காரணமாக அமையும், உதாரணமாக திருமணமே நடைபெறாமல் இருக்கும் அன்பர்களின் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெற்றோ அல்லது பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றோ இருக்கும் என்பதை அவர்களது சுய ஜாதக ஆய்வில் அறியலாம்,
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக