மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் எவ்வித கல்வி அறிவு இல்லாத போதிலும் தொழில் ரீதியாக சகல வெற்றிகளையும் பெறுவது எதார்த்தமான உண்மை நிலையாகும், எனவே சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தபட்ட ஜாதகருக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், தன்னிறைவான ஜீவன மேன்மையை தரும், பல்வேறு தொழில்களில் பொருளாதார மேன்மை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும், ஜீவன ஸ்தான வலிமையை பற்றி உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே!
ஜாதகருக்கு கும்ப லக்கினம், தனுசு ராசி, மூல நட்சத்திரம், ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் 200% விகிதம் பாதிப்படைவதால், சிறு வயதிலேயே தனது பூர்வீகத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் ஜீவிக்கும் சூழ்நிலையை தந்தது, 5ம் பாவகம் பாதிப்பது ஜாதகருக்கு அடிப்படை கல்வியிலேயே பாதிப்பை தந்து தொடர்ந்து கல்வி பெற இயலாத சூழ்நிலையை தந்தது, ஜாதகர் தனது இளம் வயதிலேயே வேலைக்கு செல்லும் சூழ்நிலை உருவானது, ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் திறமையை அதிகரித்தது, குறுகிய காலத்தில் தொழில் அனுபவங்களை பெற்ற ஜாதகர் சுயமாக தனது 21வது வயதிலேயே சூரியன் திசையில் புதிய தொழில் துவங்கி தனித்து செயல்பட ஆரம்பித்தார், சூரியன் ஜாதகருக்கு 1,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெற்று தொழில் வெற்றிகளை ஸ்திரமாக வாரி வழங்கியது, மேலும் 11ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் லாபங்களை அபரிவிதமாக அதிர்ஷ்டத்துடன் வழங்கியது.
சூரியனுக்கு அடுத்ததாக தற்பொழுது நடைமுறையில் உள்ள சந்திரன் திசையும் ஜாதகருக்கு 11ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் லாபங்களை அபரிவிதமாக அதிர்ஷ்டத்துடன் வாரி வழங்கி கொண்டு இருப்பது, ஜாதகரின் தொழில் விருத்தியை எவ்விதத்திலும் பாதிப்பில்லாமல் இயங்க செய்து கொண்டு இருப்பதுடன், திடீர் அதிர்ஷ்டத்துடன் புதிய தொழில்களையும் அறிமுகம் செய்து கொண்டு இருக்கிறது, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமை பெறுவது, அவருக்கு உண்டான தொழில் வாய்ப்புகளை சரியான வயதில், சரியான நேரத்தில் தகுந்த நபர்கள் வழியில் இருந்து அறிமுகம் செய்து ஜாதகரை தொழில் ரீதியான வெற்றிகளை எவ்வித சிரமும் இல்லாமல் பெற செய்கிறது, ஜாதகருக்கு 5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது செய்தொழிலில் நுண்ணறிவும், புத்திசாலித்தனமும் இல்லாவிட்டலும், 11ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது குருட்டு அதிர்ஷ்டத்தை தங்கு தடையின்றி, சூரியன் திசையிலும், சந்திரன் திசையிலும் வாரி வழங்கி கொண்டு இருக்கின்றது என்பது ஜாதகருக்கு, சாதகமான விஷயமாக அமைகிறது.
சந்திரன் திசைக்கு அடுத்து வரும் செவ்வாய் திசையும் ஜாதகருக்கு 3,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவது, வரவேற்க தக்க அம்சமாகும், ஆக ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று, நடைபெறும் திசை வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் தொழில் அல்லது வேலை வாய்ப்பில் தன்னிறைவு பெறுவார் என்பது உறுதியாகிறது.
ஜாதகிக்கு விருச்சிக லக்கினம், ரிஷப ராசி, ரோஹிணி நட்சத்திரம்1ம் பாதம், சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெறுவது, நல்ல கல்வியையும், சிறந்த மதிநுட்பத்தையும், வாரி வழங்கியது, அளவுக்கு மிஞ்சிய கல்வி அறிவையும் சுய புத்திசாலிதனத்தையும் ஜாதகிக்கு வாரி வழங்கியது, இருப்பினும் சுய ஜாதகத்தில் 10ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் கல்வி அறிவும் மதி நுட்பமும் சிறிதும் பயன்படவில்லை, பயன்படுத்த இயலவில்லை, எந்த ஒரு வேலை வாய்ப்பும் ஜாதகிக்கு அமைய வில்லை, இதற்க்கு தகுந்தாற்போல், தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசையும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தி "எரியும் நெருப்பிற்கு எண்ணையை வார்க்கிறது" மேலும் நடைபெறும் ராகு திசை, புதன் புத்தியாவது ஜாதகிக்கு நன்மையை செய்கிறதா என்றால் ? அதுவும் (புதன் புத்தியும்) 10,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது ஜாதகியின் வேதனையை அதிகமாக்கி இன்னலுற செய்கிறது.
எனவே சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது எவ்வளவு முக்கியம் என்பது இந்த பதிவில் உணரமுடியும் அன்பர்களே! ஒருவர் தொழில் ரீதியான வெற்றிகளை பெறுவதற்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது அவசியம், அந்த தொழிலில் ஜாதகர் அபரிவிதமான தொடர் வெற்றிகளை பெற மதி நுட்பத்தை வழங்கும் பூர்வபுண்ணியம் வலிமை பெறுவது அவசியம், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமும், பூர்வ புண்ணியமும் வலிமை பெற்று, நடைமுறையில் உள்ள திசாபுத்திகள் ஜாதகருக்கு மேற்கண்ட 10,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் குறுகிய காலத்தில், தொழில் ரீதியான விருத்திகளை பெறுவார், ஒரு வேலை ஜீவன ஸ்தானம் மட்டும் வலிமை பெறுவது ஜாதகரை "செக்கு மாட்டுக்கு " ஒப்பான பலனை வழங்கி விடும், கடமைக்கு தொழில் செய்து வெற்றிகளை பெறுவார், தனது தொழிலில் புதிய யுக்திகளையும், புதுமைகளையும் பயன்படுத்தி ஜீவன விருத்தியை பெறுவதற்கு உண்டான அறிவு திறனையும், மதி நுட்பத்தையும் வழங்காது என்பது கவனிக்க தக்க விஷயமாகும்.
முதல் ஜாதகத்தில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தான அதிபதியாக சுக்கிரன் வருவதால், ஆடை ஆபரண தொழிலில் மிகப்பெரிய வெற்றிகளை வழங்கியது, வழங்கிக்கொண்டு இருக்கிறது, இரண்டாவது ஜாதகத்தில் ஜாதகிக்கு ஜீவன ஸ்தான அதிபதியாக சுக்கிரன் வருவது, ஆடை ஆபரண தொழில்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது, மேலும் சுக்கிரன் அம்சம் பெற்ற தொழிலில் ஈடுபடாமல், வலிமை பெற்ற ராகு அம்சம் பெற்ற கூட்டு தொழில்களில் ஜாதகி ஈடுபடுவது அபரிவிதமான தொழில் வெற்றிகளை வாரி வழங்கும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
நன்றி அய்யா.தாங்கள் எந்த அயனம்சத்தை மற்றும் எபிமெரிஸ் உபயோகிறீர்?
பதிலளிநீக்கு