செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

பாதக ஸ்தானம் என்ன செய்யும்? பாதக ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் பெரும் அவயோக பலன்கள் என்ன?


சுய ஜாதகத்தில் தீமையான பலன்களை ஏற்று நடத்துவதில் துர் ஸ்தானம் மற்றும் மறைவு ஸ்தானம் என்று அழைக்கப்படும் 6,8,12ம் வீடுகளே அதிக பங்கு வகிப்பதாக பொதுவான கருத்து உண்டு, 6,8,12ம் வீடுகள் என்றாலே ஜாதகருக்கு இன்னல்களைதான் தரும் என்பதும், மேற்கண்ட பாவகங்களில் அமரும் கிரகங்களும் ஜாதகருக்கு மிகுந்த துன்பத்தையே தரும் என்ற உண்மைக்கு மாறான கருத்தும் பொதுவில் உள்ளது, சுய ஜாதகத்தில் அவயோக பலன்களை வாரி வழங்குவதில் முதன்மை வகிப்பது சம்பந்த பட்ட ஜாதகரின், பாதக ஸ்தான தொடர்புகளே, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 வீடுகளும் தொடர்பு பெற கூடாத பாவகம் ஒன்று உண்டு எனில் அது "பாதக " ஸ்தானமே என்றால் அது மிகையில்லை, ஒரு ஜாதகர் மறைவு ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 6,8,12ம் வீடுகளின் தொடர்பை பெரும் பாவகங்கள் வழியில் இருந்து பரிகாரங்கள் தேடுவதற்கு வாய்ப்புகள் உண்டு, ஆனால் பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க சிறுதும் வாய்ப்பில்லை என்ற உண்மையை உணர்வது அவசியமாகிறது, அதாவது ஜாதகர் கர்ம வினை பதிவை பாதக ஸ்தான வழியில் இருந்து அனுபவித்தே ஆகவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபடுவார் என்பது உறுதி, மேலும் பாதக ஸ்தான வழியில் இருந்து சிலர் அனுபவிக்கும் இன்னல்களுக்கு பல ஜோதிடர்கள் சனிபகவானை 
காரணகர்த்தாவாக கைகாட்டி விடுவது " ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் பூசாரி" என்ற பழமொழிக்கு ஒப்பானதாக அமைந்து விடுகிறது, ஒரு ஜாதகர் அதிக அளவில் இன்னல்களை சந்திப்பதற்கு காரணமாக சனிபகவான் இருக்கின்றார் என்ற கருத்தே அபத்தமான கருத்தாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

ஒரு ஜாதகர் எந்த பாவக வழியில் இருந்து இன்னல்களை தருகிறார் என்று அறியாமல், ஜாதகரின் துன்பத்திற்கும், இன்னல்களுக்கும், அவயோக பலன்களுக்கும், சனிபகவானே காரணம் என்று குற்றம் சாட்டுவது எவ்விதத்தில் தர்மம் என்று தெரியவில்லை, இதற்க்கு உச்சகட்ட வர்ணனையாக, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தஷ்டாம சனி, களத்திர சனி, குடும்ப சனி, புத்திர சனி என்று, வகைக்கு ஒரு நாமம் இட்டு சனிபகவானை வசைபாடுவது பொழுது போக்காகவே வைத்துள்ளனர் அன்பர்களே!

கிழ்கண்ட ஜாதகர் அனுபவித்த இன்னல்கள் அனைத்திற்கும் காரணம் சனிபகவானே என்ற கூற்றை சம்பந்தபட்ட ஜாதகருக்கு, அனைத்து ஜோதிடர்களும் தெரிவித்துள்ளனர், இந்த பதிவில் ஜாதகர் அனுபவித்த, அனுபவித்து கொண்டு இருக்கின்ற, அனுபவிக்க போகின்ற இன்னல்கள் அனைத்திற்கும் காரணம் என்ன என்பதை சற்று விரிவாகவே சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!


ஜாதகருக்கு லக்கினம் : மிதுனம் 
ஜாதகருக்கு ராசி : ரிஷபம் 
ஜாதகருக்கு நட்சத்திரம் : மிருகஷீரிடம் 1ம் பாதம் 

சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு பாவக தொடர்புகள் விபரம் :

ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள்:

1,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும் ஜீவன ஸ்தான வழியில் இருந்து நன்மையையும் யோகத்தையும் தரும்.

3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பாக்கிய ஸ்தான வழியில் இருந்து நன்மையையும் யோகத்தையும் வழங்கும்.

5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து மிகுந்த யோகத்தை 100% விகிதம் வாரி வழங்கும்.

ஜாதகத்தில் வலிமை அற்று இருக்கும் பாவக தொடர்புகள்:

2,4,7,8ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை ஜாதகருக்கு வாரி வழங்கும், ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து தப்புவது மிக கடினமே.

6,12ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் தொர்பு பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

11ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 70% விகித இன்னல்களை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு அடிப்படையில் கல்வி காலம் முதல் பருவ வயது வரை நடைபெற்ற திசை ராகு திசையாகும், இந்த ராகு திசை ( 30/03/1996 முதல் 30/03/2014 வரை ) ஜாதகருக்கு 8ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று தனது திசை முழுவதும் 200% விகித இன்னல்களையே வாரி வழங்கி உள்ளது , சுய ஜாதகத்தில் லக்கினம் நல்ல நிலையில் இருப்பதால், ஜாதகர் நல்லவராக இருந்த போதிலும், ஜாதகருடன் சேர்ந்த நண்பர்கள் அனைவரும் ஜாதகரை மிக  மோசமான பழக்க வழக்கங்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அதற்க்கு அடிமை ஆகும் தன்மைக்கு ஆளாக்கி விட்டனர், ஜாதகர் வளரும் இளம்பருவத்திலேயே உலகத்தில் உள்ள அனைத்து தீய விஷயங்களுக்கும் பரிச்சயம் ஆனவராக மாறினார், கல்வியில் தடை, உடல் நல பாதிப்பு, எதிர்பாலின சேர்க்கை மூலம் மிகுந்த பொருள் இழப்பு, தீய நண்பர்கள் சகவாசம் மூலம் பெற்றோருக்கு எதிராக செயல்படும் தன்மை, என ஜாதகரின் வாழ்க்கையின் போக்கே ஆதால பாதாளத்துக்கு சென்றது.

 இடைப்பட்ட காலத்தில் ஜாதகரின் தாயாரின் திடீர் இழப்பிற்கு ஜாதகரே காரணமாக அமைந்தார் ( 4ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு ) 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் செல்வத்தின் அருமை தெரியாமலும், உழைப்பின் உண்மை புரியாமலும் வீண் விரையம் செய்தார், தனது பெற்றோரை மிரட்டி தனது பண தேவைகளை பூர்த்தி செய்துகொண்டார், 4ம் பாவக வழியில் இருந்து சுக போக வாழ்க்கைக்கு அடிமையாகி அனைத்தையும் இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார், 7ம் பாவக வழியில் கூட சேரும் அனைத்து நண்பர்களும் ஜாதகரின் செல்வத்தை குறிவைத்தே செயல்பட்டது ஜாதகருக்கு சிறிதும் புரியவில்லை ( 7ம்வீடு  பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு ) முரண்பட்ட தன்மையில் தானாக சேர்த்துகொண்ட வாழ்க்கை துணை வழியில் இருந்தும் ஜாதகர் பல இழப்புகளை சந்திக்க வேண்டி வந்தது, வெளிவட்டார பழக்க வழக்கங்களில் ஜாதகர் எதற்கும் உபயோகமற்றவர் என்பதை அடிக்கடி உறுதி படுத்திகொண்டு  இருந்தார், ஜாதகர் செய்யும் செலவுகளும், வீண் விரையங்களும் தனது தகுதிக்கு மிகுந்ததாக இருந்தது, ஜாதகரால் வரும் பொருள் இழப்புகள் என்பது பெரிய அளவில், அவரது பெற்றோர்களால் ஏற்றுகொள்ள இயலாத வகையில் அமைந்தது ( 8ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு ) மேலும் ஜாதகர் தனது உடல் ஆரோக்கியத்தை தாமே கெடுத்துகொள்ளும் தன்மையை தந்தது.

தற்பொழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு ( 30/03/2014 முதல் 30/03/2030 வரை ) பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று பலனை தருவது, ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்களை தந்த போதிலும், ஜாதகரின் கடந்த கால வாழ்க்கை முறை ஜாதகரை முழுமையாக இன்னும் மீட்டு எடுக்க இயலவில்லை என்பதே உண்மையாக உள்ளது, ஜாதகரின் அறிவும், சிந்தனையும் தற்பொழுது சற்று தெளிவு நிலையை பெற்று இருப்பது வரவேற்க தக்க அம்சமாக கருதலாம், தான் செய்த தவறுகளை ஜாதகர் தற்பொழுது உணர ஆரம்பித்து இருப்பது, ஜாதகரின் வாழ்க்கை சரியான பாதையில் போவதை உறுதி செய்துள்ளது, தீய நண்பர்களின் சேர்க்கை ஜாதகரின் செல்வ நிலை பாதிப்பிற்கு பிறகு சற்று விலகி நிற்பது ஜாதகருக்கு நன்மையை தரும் அமைப்பாக கருதாலாம்.

ராகு திசையில் ஜாதகருக்கு நடைபெற்ற அனைத்து அவயோக பலன்களுக்கு ஏக மனதாக சனி பகவான் மீது குற்றம் சாற்றிய ஜோதிடர்களுக்கு சிறு விளக்கம், ஜாதகர் ராகு திசையில் அனுபவித்த இன்னல்களுக்கு காரணம், ராகு திசை ஜாதகருக்கு திடீர் இழப்புகளை தரும் 8ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தந்தததே காரணமாக அமைந்தது, மேலும் 2,4,7,8ம் பாவகங்களுக்கு அதிபதியாக ராகு பகவானே அமைந்து 200% பாதிப்பான பலனை வழங்கியது ஜாதகரை மேற்கண்ட பாவக வழியில் இருந்து அதிக துன்பத்திற்கு ஆளாக்கியது, எனவே ஜாதகரின் அவயோக பலன்கள் அனைத்திற்கும் ராகு பகவானே பொறுப்பேற்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

மேலும் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவக வழியில், நடைபெறும் திசா புத்திகள் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால், ஏற்று நடத்தும் பாதக ஸ்தான வழியில் இருந்து  ஜாதகர் நிச்சயம் 200% விகித அவயோக பலன்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், இதில் சந்தேகமே இல்லை, பாதக ஸ்தான வழியில் இருந்து ஒருவர் அனுபவிக்கும் இன்னல்களுக்கு சனிபகவான் காரணம் என்று நிர்ணயம் செய்வது சுய ஜாதக கணித முறைக்கு புறம்பான கருத்தாகவே அமையும் அன்பர்களே, மிக பெரிய வெற்றிகளை வாரி வழங்கும் வல்லமை சனிபகவானுக்கும் உண்டு என்பதை வேறு ஒரு பதிவில் விபரமாக காண்போம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக