சனி, 31 டிசம்பர், 2022
வெள்ளி, 30 டிசம்பர், 2022
சனி, 24 டிசம்பர், 2022
வெள்ளி, 23 டிசம்பர், 2022
செவ்வாய், 20 டிசம்பர், 2022
சனி, 17 டிசம்பர், 2022
வெள்ளி, 16 டிசம்பர், 2022
ஞாயிறு, 11 டிசம்பர், 2022
சனி, 10 டிசம்பர், 2022
வெள்ளி, 18 நவம்பர், 2022
வெள்ளி, 21 அக்டோபர், 2022
சனிபெயர்ச்சி பலன்கள் - கடகம் ( 2023 - 2025 ) அஷ்டமசனி தரும் அபரிவிதமான வளர்ச்சி !
சனிபெயர்ச்சி பலன்கள் - கடகம் ( 2023 - 2025 )
களத்திர ஸ்தான அதிபதி மற்றும் அஷ்டமாதிபதி சனிபகவான் கடக ராசி மற்றும் லக்கினத்திற்க்கு ஆயுள் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான அஷ்டமத்தில் அஷ்டமசனியாக சஞ்சரிக்கும் இனிவரும் இரண்டரை வருடம் மிகுந்த இன்னல்களை தருவார் என்று பயம்கொண்டீர்கள் என்றால்? அது தவறான முரண்பட்ட கருத்தாகும், ஏனெனில் அஷ்டம ஸ்தானத்திற்கு புதையலுக்கு நிகரான சொத்துசுக சேர்க்கையை வழங்கும் வல்லமையும் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து அபரிவிதமான சுபயோகங்களை தன்னிறைவாக சுவீகரிக்கும் யோகமும், நண்பர்கள் கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து மிகப்பெரிய சுபயோகங்களை பெற்று வாழ்வில் மிகப்பெரிய பிரபல்ய யோகத்தை பெரும் அமைப்பும் உண்டு என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் கடக ராசி மற்றும் லக்கின அன்பர்களே.
மாங்கல்ய ஸ்தானமான 8ம் பாவகத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் கடக ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம், தனது எதிர் வர்க்க கிரகம் என்றவகையில் சிறு சிறு இன்னல்களை தந்த போதிலும், வாழ்க்கை துணை நண்பர்கள் கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டங்களை தன்னிறைவாக வாரி வழங்குவர் என்பது கவனிக்கத்தக்கது, தங்களின் சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் மற்றும் கும்பம் வலிமை பெற்று இருந்தால் நிச்சயம் அஷ்டம சனியின் பாதிப்பு சிறிதும் இல்லாமல் திடீர் அதிர்ஷ்டம் மட்டுமே தங்களின் வாழ்க்கையில் சிறப்பான சுபயோகங்களை தொடர்ந்து நிலைத்தன்மையுடன் வாரிவழங்கும், இருப்பினும் தாங்கள் ஒரு விஷயத்தில் மட்டும் அதீத கவனம் கொள்வது நல்லது அது தங்களின் பாதுகாப்பான பயணங்கள் என்றால் மிகையாது, இரண்டு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பொழுது தலைக்கவசம் அவசியம், நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பொழுது பாதுக்காப்பு கச்சை அவசியம் அணிவது நன்மையை தரும், ஆயுள் காப்பீடு அவசியம் செய்து வையுங்கள், மருத்துவ காப்பீடும் மிக மிக அவசியம் என்பதை உணருங்கள், இவையனைத்தும் தங்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யும், மேலும் தங்களின் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியம், குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த விஷயங்களுக்கு அதீத முக்கியத்துவம் தருவது நல்லது தங்களின் குடும்பம் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்வதும், குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களை ஏற்பதும் தங்களின் மனவலிமையை அதிகரிக்கும், தேவையற்ற மனக்குழப்பம் போன்ற விஷயங்களில் இருந்து தங்களை மீட்டு எடுக்கும், மிகப்பெரிய முதலீடுகளை செய்வதற்க்கு முன்பு தங்களின் சுய ஜாதகத்தில் திசா புத்திகளின் வலிமையை உறுதி செய்த பிறகு மேற்கொள்வதே சரியானதாக அமையும், மருத்துவ துறையில் உள்ள நபர்களுக்கு மிகுந்த சுபயோகம் உண்டு, அரசு துறையில் பதவி உயர்வு ஊதிய உயர்வு உண்டாகும், தொழில் வளர்ச்சியை வெகு அற்புதமாக முன்னெடுக்கும் யோகம் உண்டு, பொது வாழ்க்கையில் உள்ள நபர்களுக்கு அதிகார பதவியை சுவீகரிக்கும் வாய்ப்பு உண்டாகும், தெளிவான சிந்தனை தங்களின் முன்னேற்றத்தை வெகு அற்புதமாக நிர்ணயம் செய்ய உதவி புரியும், முன் பின் அறிமுகம் இல்லாதா நபர்கள் வழியில் இருந்து சுபயோகங்கள் வந்து சேர்வதற்கும் வாய்ப்பு உண்டாகும், திடீர் முடிவுகளை தவிர்ப்பதும், அவசர கதியில் செய்யும் காரியங்களும் தங்களுக்கு அதீத இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரக்கூடும், பிரிந்த கணவன் மனைவி உறவு மேம்படும், திருமண தடை நீங்கி நல்லதொரு இல்லற வாழ்க்கை அமைய வாய்ப்பு உள்ளது கடக ராசியினர் இந்த சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி நலம் பெறுங்கள்.
சனி பகவான் தனது 6ம் பார்வையால் ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்தை வசீகரிப்பது, எதிர்வர்க்க கிரகம் என்ற போதிலும் கடகராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு, உடல் ஆரோக்கியத்தை வெகு சிறப்பாக கட்டமைப்பு செய்வார், உடல் ரீதியாக இருந்த இன்னல்கள் நீங்கும், மனதில் தெளிவு பிறக்கும், மனக்குழப்பம் மனஅழுத்தம் மனபயம் நீங்கி, தன்னம்பிக்கை அதிகரிக்கும், உழைக்கும் திறன் அதிகரிக்கும், தங்களின் நேர்மையான குணம் எதிர்பாராத முன்னேற்றத்தை தரும், கடின உழைப்பு கைகொடுக்கும், வாழ்க்கையில் இதுவரை இருந்துவந்த கடன் சுமை நீங்கி பொருளாதார தன்னிறைவை பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும், புதிய வீடு வண்டி வாகனம் இடம் பொருள் சொத்து சுக சேர்க்கை உண்டாகும், தங்களின் குணநலனும் பராமரிக்கும் தன்மையும் மேலோங்கி நிற்கும், எதிர்ப்புகள் அகன்று திறமைக்கான முழு மதிப்பு மரியாதை அங்கீகாரம் கிடைக்கும், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் யோகம் உண்டாகும், தங்களின் தாய் வழி சொத்துக்கள் ஏதாவது ஒரு வகையில் தங்களின் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வை தரும், எதிர்ப்புகள் அகன்று நிம்மதியான வாழ்க்கையை சுவீகரிப்பதற்கான சந்தர்ப்பம் உண்டு, நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், வழக்குகளில் வெற்றி, கல்வியில் வெற்றி தேர்வுகளில் சிறப்பான முன்னேற்றம், உயர்கல்வி பட்டய படிப்பு ஆராய்ச்சி கல்வியில் தேர்ச்சி என்ற வகையில் சிறப்பான நற்பலன்கள் உண்டாகும், வெளிநாடு யோகம், வெளியூர் ஜீவனம் தங்களின் வாழ்க்கையில் பல்வகை மாற்றங்களை வாரி வழங்கும், சீரிய முயற்சிகள் யாவும் தங்களுக்கு செழிப்பான வாழ்க்கையை நல்கும், ஆரோக்கியமான உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வது தங்களின் உடல்நலத்தை சிறப்பாக அமைத்து தரும், குறிப்பாக பல், எலும்பு, கேசம் போன்ற அமைப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு குணம் பெறுவீர்கள், நேர்மையான செயல்களால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள், எதிர்பாலின சேர்க்கை சார்ந்த இன்னல்கள் விலகும், முரண்பட்ட உறவுகளில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பை தரும், சிறந்த தொழில் அல்லது வேலைவாய்ப்பு அமைவதற்கான சந்தர்ப்பம் உண்டு மிக சிறப்பாக வாய்ப்புகளை கையாண்டு வெற்றிகொள்ளுங்கள்.
சனிபகவான் தனது சமசப்த 7ம் பார்வையின் மூலம் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது கடக ராசியை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம் வருமான வாய்ப்புகளை தன்னிறைவாக வழங்கிய போதிலும், குடும்பத்தில் சில சிக்கல்களும் வரவுக்கு மீறிய செலவினங்களும் அதிகரிக்கும், பொருளாதார திட்டமிடுதல்கள் அதிக அளவில் தேவைப்படும், தங்களின் நிதி சார்ந்த நடவடிக்கைகள் சிறப்பாக அமைவது அவசியமானது, தங்களது பேச்சில் வார்த்தைகளில் அதீத கவனம் தேவை, பலரது கருத்துக்கள் தங்களுக்கு வீண் மனபயத்தையும் சஞ்சலத்தையும் தரும், செய்யும் காரியங்களில் அதீத தடுமாற்றத்தை தாங்கள் எதிர்கொள்ளவேண்டி வரும், எனவே வீண் பேச்சை தவிர்ப்பது நல்லது, கல்வியிலும் கலைகளிலும் மிகப்பெரிய தேர்ச்சியை பெறுவீர்கள், முன்பின் யோசிக்காமல் செய்யும் செயல்களால் தாங்கள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரக்கூடும், அறிய கலைகளில் தேர்ச்சியையும் இயல் இசை நாடக துறையில் உள்ள நபர்களுக்கு அபரிவிதமான வெற்றி வாய்ப்பும் உண்டாகும், தங்களின் வாழ்க்கை துணையுடன் சிறு சிறு கருத்துவேறுபாடு வர வாய்ப்பு அதிகம் உள்ளது, எனவே அவர்களை அனுசரித்து செல்வது தங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது நல்லது தேவையற்ற அவப்பெயரை சந்திக்காமல் மீண்டு வருவதற்கு துணைபுரியும், தனது கருத்துக்களை பதிவு செய்யும் பொழுது மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது, ஆன்மீகத்தில் வெற்றி உண்டு, இறையருளின் கருணை பரிபூரணமாக அமையும், தெய்வீக காரியங்களில் அதீத ஈடுபாடும் அதனால் பெரும் சுபயோகங்களும் அதிகரிக்கும், நன்மை தரும் காரியங்கள் மூலம் தங்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெரும், தங்களின் குழந்தைகள் வழியில் இருந்து சிறப்பான சுபயோகங்கள் உண்டு, இருப்பினும் அவர்களது வளர்ச்சியில் அக்கறையும் முக்கியத்துவம் தருவது நல்லது, சனியின் சமசப்த பார்வை தங்களுக்கான விழிப்புணர்வை அதிகரிக்க செய்யும், கடின உழைப்பையும் சமயோசித புத்திசாலித்தனத்தையும் சிறப்பாக முன்னெடுக்க அருமையான வாய்ப்பையும் வழங்கும்.
சனிபகவான் தனது 10ம் பார்வை மூலம் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது கடக ராசியை சார்ந்த அன்பர்களுக்கு பூர்வீக வழியில் இருந்து தன்னிறைவான சுபயோகங்களை வாரி வழங்கும், சனி தனது வர்க்க ராசியான துலாம் ராசியை வசீகரிக்கும் அமைப்பு ஏற்றுமதி இறக்குமதி தொழில் சார்ந்த அமைப்புகளில் கொடிகட்டி பறக்கும் யோகத்தை நல்கும், சிறு குறு தொழில் விருத்தி அடையும், செய்யும் தொழில்வழியில் தங்களின் தனித்திறமை அபரிவிதமாக வெளிப்படும், கூட்டு தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிகுந்த முன்னேற்றமும் வருமான வாய்ப்பும் கைகூடி வரும், தடைபட்ட திருமண வாழ்க்கை கைகூடி வரும், தங்களின் குடும்பத்தில் நல்லதொரு ஆண் வாரிசு பிறப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது, புத்திர பாக்கியம் தங்களின் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் யாவற்றையும் போக்கி மனமகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் முழு அளவில் வாரி வழங்கும், தங்களின் துறை சார்ந்த ஞானம் தொழில் ரீதியான அபிவிருத்தியை தன்னிறைவாக வாரி வழங்கும், கேட்ட இடத்தில் இருந்து தங்களுக்கான பொருளாதார உதவிகள் வந்து சேரும், குல தெய்வத்தின் ஆசிர்வாதம் தங்களுக்கு மிகுந்த சுபயோகங்களை வாரி வழங்க காத்திற்குக்கிறது என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், புதிய சிந்தனை, புதிய வாய்ப்புகள், புதிய முயற்சிகள் யாவும் தங்களுக்கு வெற்றிமேல் வெற்றியை பெற்றுத்தரும், ஆயகலைகளில் தேர்ச்சியையும், பொதுமக்கள் மூலம் அபரிவிதமான முன்னேற்றங்களை பெறுவதற்கான வாய்ப்பும் தங்களுக்கு வந்து சேரும், பொதுமக்கள் தொடர்பு உள்ள தொழில்களில் நீங்கள் எதிர்பாராத முன்னேற்றங்களை தன்னிறைவாக பெறுவது கவனிக்கத்தக்கது, தகவல் தொழில் நுட்பம் எழுத்து பத்திரிகை மற்றும் ஊடக துறையில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான முன்னேற்றம் மற்றும் பிரபல்ய யோகமும் உண்டாகும், தங்களின் தனைத்திறனை முழுமையாக பிரயோகித்து வாழ்க்கையில் வெற்றிகொள்ளும் பொன்னனான நேரமிது.
குறிப்பு :
மேற்சொன்ன சனிப்பெயர்ச்சி பலன்கள் யாவும் கடக ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற 8,1,2,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள், சுய ஜாதக பலாபலன்களே முக்கியத்துவம் வாய்ந்தது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
09443355696
வெள்ளி, 7 அக்டோபர், 2022
சனிபெயர்ச்சி பலன்கள் - மிதுனம் ( 2023 - 2025 ) விடாமுயற்சி வீரியமிக்க செயல்பாடுகள்!
சனிபெயர்ச்சி பலன்கள் - மிதுனம் ( 2023 - 2025 )
அஷ்டமாதிபதி மற்றும் பாக்கியாதிபதி சனிபகவான் மிதுன ராசி மற்றும் லக்கினத்திற்கு அஷ்டம சனியில் இருந்து பாக்கிய ஸ்தானத்தில் 9ம் பாவகத்தில் சஞ்சரிப்பது வரவேற்கத்தக்க விஷயம், அஷ்டமசனியின் பாதிப்பின் தன்மை வெகுவாக குறைந்து தங்களுக்கான முன்னேற்றம் பாக்கிய ஸ்தான அமைப்பில் இருந்து வெகு அற்புதமாக வெளிப்படும், தங்களின் முன்னேற்றம் என்பது தொழில்நுட்ப அறிவு சார்ந்ததாக அமையும் என்பதில் சந்தேகமில்லை, ஞானம் சார்ந்த முன்னேற்றம் மற்றும் ஆன்மீக வெற்றி என்பது அபரிவிதமானதாக அமையும்.
பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் மிதுன ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம் வெகு அற்புதமான சுபயோகங்களை தனது வர்க்க கிரகம் என்றவகையில் மிகுந்த நன்மைகளை மட்டுமே தன்னிறைவாக வாரி வழங்குவர் என்பது கவனிக்கத்தக்கது, தங்களின் அறிவுபூர்வமான செயல்பாடுகள் தங்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆதாரமாக அமையும், ஆன்மீகத்தில் வெற்றி உண்டாகும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதமும், காணக்கிடைக்காத பல அற்புதமான புண்ணிய திருக்கோவில்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும், இவையாவும் தங்களுக்கு முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனாக நடைமுறைக்கு வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, தெய்வீக அனுகூலம் இனிவரும் காலங்களில் தங்களுக்கு வெகு அற்புதமாக வெளிப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, இதுவரை தங்களின் வாழ்க்கையில் நினைத்தும் பார்த்திராத அற்புதமான விஷயங்கள் அதிர்ஷ்டகரமாக நடைமுறைக்கு வந்து சேரும் என்பது கவனிக்கத்தக்கது, தெளிவான சிந்தனை, அறிபூர்வமான நடவடிக்கை, அறிவார்ந்த ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பு, மிகசிறந்த குருமார்களின் வழிகாட்டுதல்கள், ஆயகலைகள் அறுபத்திநான்கில் தேர்ச்சி, தெய்வீக தரிசனம், ஆன்மீக வழியில் தங்களுக்கு இருந்த அஷ்டம சனியின் பாதிப்பில் இருந்து விரைவாக மீண்டுவரும் யோகம், அதிர்ஷ்டத்தின் தன்மையை முழுமையாக சுவீகரிக்கும் யோகம், எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, தனது தொழில் குடும்பம் மற்றும் முயற்சிக்கான வெற்றி போன்றவற்றால் தன்னிறைவான சுகபோகங்களை சுவீகரிக்கும் வாய்ப்பை தங்களுக்கு இனிவரும் காலம் வெகு அற்புதமாக வாரி வழங்கும், சுப விசேஷங்கள் மூலம் தங்களின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், நல்லதொரு ஆரம்பம் உங்களில் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றத்தை தன்னிறைவாக வாரி வழங்கும்.
சனி பகவான் தனது 6ம் பார்வையால் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது, எதிர்வர்க்க கிரகம் என்ற போதிலும் மிதுனராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு திடீரென திருமண வாழ்க்கையை வாரி வழங்குவார், இதுவரை இருந்த திருமண தடைகள் யாவும் நீங்கி மிதுன ராசி மற்றும் லக்கின அன்பர்களுக்கு மனதிற்கு இசைந்த நல்லதொரு இல்லற வாழ்க்கையை நல்குவார், அதே சமயம் பொருளாதார ரீதியான சிக்கல்கள் அதிகரிக்கும், வீண் ஆடம்பரம் தங்களுக்கு மிகுந்த இன்னல்களை தரக்கூடும் என்பதால் சேமிப்பில் கவனம் செலுத்துவது அவசியமானது, குடும்ப வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு பொருளாதார நெருக்கடி உண்டாகும், வார்த்தைகளில் கவனம் தேவை, வீண் விவாதங்கள் தங்களின் மனநிம்மதியை கேள்விக்குறியாக்கும், வாழ்க்கை துணையுடன் ஓர் இணக்கமான சூழ்நிலையை கடைபிடிப்பது நல்லது, இல்லையெனில் தங்களின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்கப்படும், எக்காரணத்தை கொண்டும் வாக்கு கொடுப்பது தங்களின் செயல்திறனை குறைக்கும், நிம்மதி சார்ந்த விஷயங்களை கேள்விக்குறியாக்கும், பொதுவாழ்க்கையில் உள்ள அன்பர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இயங்குவது நல்லது, வருமானம் வெகுசிறப்பாக வந்த போதிலும் அதற்க்கு மீறிய செலவினங்கள் அதிகரிக்கும், போதும் என்ற மனம் ஒன்றே பெண்ணான மருந்து என்பதை கவனத்தில் கொள்வது நல்லது, வார்த்தை பிரயோகம் என்பது மற்றவர்களை பாதிக்காவண்ணம் இருப்பது நல்லது, புதிய வீடு வண்டி வாகன யோகம் அமைந்த போதிலும் எவ்வித சிக்கல்கள் வில்லங்கங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது தங்களுக்கான நன்மைகளை அதிகரிக்கும், வெளிநாடு யோகம் வெளியூர் தொழில் அமைப்பு தங்களுக்கு மிகப்பெரிய மாற்றங்களை வாரி வழங்கும், குடும்பத்தில் பிரிவு நிலையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதை அனைவரிடமும் அன்பு பாராட்டுவது நல்லது, சில வீண் விரயங்களை தவிர்க்க இயலாது, தங்களால் தங்களின் வாழ்க்கை துணை வெகுவான இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கான கருத்து சுதந்திரம் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை பெரியமானதுடன் வழங்குவது நல்லது, கணவன் மனைவி உறவுக்கு அதீத முக்கியத்துவம் தருவது தங்களின் வாழ்க்கையில் இனிவரும் காலங்களில் சனிபகவான் தரும் சுபயோகங்களை முழுமையாக சுவீகரிக்க உதவி புரியும்.
சனிபகவான் தனது சமசப்த 7ம் பார்வையின் மூலம் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது ரிஷப ராசியை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம் எடுக்கும் முயற்சிகள் யாவிலும் தன்னிறைவான முன்னேற்றங்களை மட்டுமே வெகு அற்புதமாக வாரி வழங்குவர், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ள நபர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம் வெளிநாடு யோகம் உண்டாகும், பத்திரிகை மற்றும் ஊடக துறையில் உள்ள நபர்களுக்கும் தன்னிறைவான வசதி வாய்ப்புகள் வந்துசேரும், இளைய சகோதர வழியில் மிகப்பெரிய நன்மைகளும் சுபயோகங்களும் வந்து சேரும், காதலில் வெற்றி, எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து கிடைக்கும் சுபயோகம், தெய்வீக அனுகூலம், குறுகிய காலத்தில் லட்சியங்களை வெற்றிகொள்ளும் ஆற்றல், திட்டமிட்ட காரியங்களில் அற்புதமான வெற்றிகளை சுவீகரிக்கும் யோகம், வீரியமிக்க செயல்பாடுகள் வழியில் இருந்து வரும் சுபயோகங்கள், எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் அம்சம், விளையாட்டு துறையில் முழு அங்கீகாரம் மற்றும் உலக புகழ் பெரும் யோகம், தெளிவான சிந்தனை என்ற வகையில் சுபயோகங்களை தன்னிறைவாக வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் உள்ளோருக்கு வெற்றி மேல் வெற்றி உண்டாகும், புதிய முயற்சி புதிய சிந்தனை புதிய வாய்ப்புகள் தங்களின் வாழக்கையில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகளை தன்னிறைவாக வாரி வழங்கும்.
பொதுவாக வீரிய ஸ்தானமான 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் அல்லது வசீகரிக்கும் சுப அசுப கிரகங்கள் முழு அளவில் நன்மைகளை மட்டுமே தரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இந்த அற்புதமான வாய்ப்பை பெரும் மிதுன ராசியை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம் பல அற்புதமான சுபயோகங்களை வீரிய ஸ்தான வழியில் இருந்து தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, தங்களின் விடாமுயற்சிக்கு நல்லதொரு வெற்றிகளை சனிபகவான் ஸ்திரத்தன்மையுடன் வழங்குகிறார் என்பது கவனிக்க தக்கது, எழுதுபொருள் பத்திரப்பதிவு எழுத்தாளர்கள் கவிஞனார்கள் பொருளாதர வல்லுனர்களின் வாழ்க்கையில் இனிவரும் காலம் அற்புதமான பொற்காலமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, தெய்வீக அனுக்கிரகம் மூலம் தங்களின் வாழ்க்கை வெகு சிறப்படையும், அரசுத்துறையில் உள்ளோர் அரசியல்வாதிகள் ஆசிரிய பணி தெய்வீக பணி செய்வோருக்கு சனிபகவான் தரும் யோகம் என்பது வியக்கத்தக்க வகையில் அமையும் என்பதை கருத்தில் கொண்டு சிறப்படையுங்கள்.
சனிபகவான் தனது 10ம் பார்வை மூலம் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது மிதுன ராசியை சார்ந்த அன்பர்களுக்கு கடினமான உழைப்பை வெளிப்படுத்துவார், உழைப்பின் மூலம் குறுகிய காலத்தில் தங்களின் வெற்றி நிலைநிறுத்தப்படும், செய்யும் தொழில் வழியில் திடீர் முன்னேற்றம் மற்றும் உயர்பதவி போன்ற அற்புதமான விஷயங்கள் தங்களை தேடிவரும், சுய ஆளுமை திறன் அதிகரிக்கும், போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும், சுய முயற்சி சார்ந்த விஷயங்களில் வெற்றிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டு, உடல் நலம் கெடும் , உணவு பழக்க வழக்கம் தங்களுக்கு அதீத நெருக்கடிகளை தரும் மருத்துவ செலவினங்களை தவிர்க்க இயலாது, பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் நல்லதொரு முன்னேற்றங்களை பெறுவார்கள், உயரிய அந்தஸ்துகளை இறைஅருள் தங்களுக்கு பெற்றுத்தருவார், புண்ணிய காரியங்களில் ஈடுபாட்டை அதிகரிக்கும், இதுவரை இருந்து வந்த தொழில் முடக்கம் நீங்கும், கடன்பிரச்சனை நீங்கும், பொருளாதர தன்னிறைவை பெறுவீர்கள், கேட்ட இடத்தில் இருந்து பொருளாதார தன்னிறைவு உண்டாகும், சுய முயற்சி சார்ந்த காரியங்கள் யாவும் 100% விகித வெற்றியை தரும், புதிய வேலைவாய்ப்பு, புதிய தொழில் வாய்ப்பு, கூட்டு தொழில் வழியில் இருந்து வரும் முன்னேற்றம் என்ற வகையில் இனிவரும் காலம் தங்களின் வாழ்க்கையில் பல அற்புதமான மாற்றங்களை நிகழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை, தெளிவான முடிவுகளை மேற்கொள்ளும் சிறந்த நிர்வாக திறனை தங்களுக்கு சனிபகவான் வாரி வழங்குவார், பயணங்களில் அதீத கவனம் தேவை, மற்றவர் பணம் தன் கையிருப்பை உறுதி செய்யும் என்பதால் நிதி மேலாண்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களை இனி நடைமுறைப்படுத்தலாம், எதிரிகளை வெற்றிகொள்ளும் யோகம் உண்டு, வெளிநாடுகளில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான வளர்ச்சி உண்டு, வாழ்க்கை துணை வழியில் இருந்துவரும் பொருளாதார உதவி தங்களுக்கு வெகு அற்புதமான யோக வாழ்க்கையை உறுதி செய்யும், முற்போக்கு சிந்தனையுடன் தங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நேரம் இது என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள் வாழ்த்துக்கள்.
குறிப்பு :
மேற்சொன்ன சனிப்பெயர்ச்சி பலன்கள் யாவும் மிதுன ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற 9,2,3,6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள், சுய ஜாதக பலாபலன்களே முக்கியத்துவம் வாய்ந்தது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
09443355696
சனி, 1 அக்டோபர், 2022
சனிபெயர்ச்சி பலன்கள் - ரிஷபம் ( 2023 - 2025 ) தொழில்யோகம் பொருளாதார முன்னேற்றம் !
சனிபெயர்ச்சி பலன்கள் - ரிஷபம் ( 2023 - 2025 )
கர்மாதிபதி சனி பகவான் ரிஷப ராசி மற்றும் லக்கினத்திற்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் நேரமானது தொழில் ரீதியான தன்னிறைவான யோகங்களை நல்குவதுடன் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை வெகு அற்புதமாக வாரி வழங்கும் அருமையான நேரமாக அமைகிறது, இதுவரை இருந்து வந்த தொழில் ரீதியான பிரச்சனைகள் நீங்கி புதிய தொழில் வாய்ப்புகள் கைகூடி வரும்.
ஜீவன ஸ்தானமான 10ம் இட சஞ்சாரம் ரிஷப ராசியினருக்கு தனது வர்க்க கிரக வீட்டில் இருந்து மிகுந்த சுபயோகங்களை மட்டுமே நல்குவது கவனிக்கத்தக்கது, வேலைவாய்ப்பு இன்றி தடுமாறி வந்த அன்பர்களுக்கு தகுதிக்கு தகுந்த நல்லதொரு வேலைவாய்ப்பு தேடி வரும், கவுரவ பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், அரசு வேலைவாய்ப்பு சார்ந்த நிலைகள் நல்லதொரு முன்னேற்றமும், புதிய வாய்ப்புகளும் வந்து சேரும், உயர்பதவிகளை வெகு விரைவாக சனி பகவான் தங்களுக்கு பெற்று தருவதுடன், பொருளாதார ரீதியான முன்னேற்றங்களையும் நல்குவார் என்பது கவனிக்க்கத்தக்கது, சுய தொழில் யோகம் கூட்டு தொழில் வழியில் இருந்துவரும் மிகப்பெரிய வளர்ச்சி, புதிய தொழில் முயற்சிகளில் எதிர்பாராத வெற்றிகள், சிறந்த நிர்வாக திறனை வெளிப்படுத்துவது வழியில் இருந்து வரும் நன்மைகள், புது முயற்சிகளுக்கான அங்கீகாரம், அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை செய்தொழில் வழியில் இருந்து சுவீகரிக்கும் யோகம், எதிர்ப்புகளை மிக எளிதாக கடந்து செல்லும் வாய்ப்பு, பொதுமக்கள் ஆதரவு என்ற வகையில் தன்னிறைவான ஜீவன மேன்மையை முழு அளவில் சுவீகரிக்கும் யோகம் உண்டு, இதுவரை இருந்து வந்த மனபயம் நீங்கி தைரியத்துடன் அனைத்து விஷயங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், தொழில் ரீதியான முயற்சிகளுக்கான வெற்றிகளை தாங்கள் தன்னிறைவாக சுவீகரிக்கும் நல்ல நேரமிது, மதிப்பு மிக்க செயல்பாடுகள் வழியில் இருந்து தங்களுக்கான அங்கீகாரம் முழுமையாக கிடைக்க பெறுவீர்கள்.தங்களின் தகப்பனார் வழியில் இருந்து அபரிவிதமான தொழில் வளர்ச்சி ஏற்படும், அவரது தொழிலை தாங்கள் ஏற்றுநடத்தும் சுபயோகமும் உண்டாகும், குடும்பத்தில் உள்ளோரது அரவணைப்பும் ஆதரவும் தங்களுக்கு முழுமையாக வந்து சேர்வதுடன் சுய கவுரவம் மேம்படும், நிர்வாக திறன் வெகு அற்புதமாக வெளிப்படும், தைரியம் தன்னம்பிக்கை, நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் போன்றவை தங்களை மற்றவர்கள் மெச்சும் தன்மையிலான சுபயோகங்களை பெற்று தரும், பணியாளர்கள் ஆதரவு தங்களுக்கு புதிய உத்வேகத்தை தரும் தொழில் ரீதியான நுட்பங்களை வெகு அற்புதமாக கற்று தேர்ச்சி பெரும் யோகம் உண்டாகும், தொழில் வழியில் முதலீடுகள் புதிய சொத்து வண்டி வாகன யோகம் என்ற வகையில் மிகுந்த சுபயோகங்களை தன்னிறைவாக சனிபகவான் நிறைவாக வாரி வழங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, இனிவரும் இரண்டரை வருடமும் ரிஷப ராசியினருக்கு தொழில் ரீதியாக வெற்றி மேல் வெற்றியே உண்டாகும்.
சனி பகவான் தனது 6ம் பார்வையால் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது, எதிர்வர்க்க கிரகம் என்ற போதிலும் ரிஷபராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சகல நிலைகளில் இருந்தும் சௌபாக்கியங்களை தன்னிறைவாக வாரி வழங்கும், பொதுவாக 3,11ம் வீடுகளை வசீகரிக்கு சுபகிரகமானாலும் சரி, அசுப கிரகமானாலும் சரி சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தன்னிறைவான சுபயோகங்களையே 3,11ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், அந்த அற்புதமான வாய்ப்பை ரிஷப ராசியை சார்ந்த அன்பர்கள் இனிவரும் இரண்டரை வருடம் தன்னிறைவாக சுவீகரித்து முயற்சிக்கான வெற்றிகளையும், திட்டமிட்ட காரியங்களில் 100% விகித நன்மைகளையும், இளையசகோதர வழியில் இருந்து வெற்றி வாய்ப்புகளையும், சிறு பயணங்கள் மூலம் மிகப்பெரிய லாபம் மற்றும் அதிர்ஷ்டங்களை அனுபவிக்க இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறையில் உள்ள ரிஷப ராசியினர் மிகப்பெரிய அளவிலான முன்னேற்றங்களை பெறுவார்கள், சரியான விஷயங்களை கிரகிக்கும் ஆற்றல் உண்டாகும், பொதுமக்கள் தொடர்புகள் வழியில் ஏராளாமான நன்மைகளை பெறுவீர்கள், பொதுமக்கள் தொடர்புள்ள துறையில் பணியாற்றிக்கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் வெகு அற்புதமான யோக வாழ்க்கையை வழங்க தயார் நிலையில் உள்ளது கவனிக்கத்தக்கது, தோல்விகள் இல்லாத ஒரு அற்புதமான எதிர்காலத்தை ரிஷப ராசியினர் தன்னிறைவாக பெருகிண்றீர்கள் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஊடகம் பத்திரிகை மற்றும் தொலைத்தொடர்பு சார்ந்த துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் எதிர்பாராத முன்னேற்றங்களையும், அபரிவிதமான அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெற்று தரும், குறிப்பாக விரைவில் ஜனரஞ்சகமாக பிரபல்யம் அடையும் யோகம் உண்டாகும், முயற்சிக்கும் காரியங்களில் யாவிலும் வெற்றிமேல் வெற்றி உண்டாகும், சரியான தகவல்களை உணர்ந்து அதை பொதுமக்கள் விழிப்புணர்வு பெரும் வகையிலான தகவல் பரிமாற்றத்தை தங்களின் கலைத்திறனுடன் வெளிப்படுத்துவீர்கள், எதிர்காலம் சார்ந்த திட்டமிடுதல்கள் தங்களுக்கு பல அற்புதமான முன்னேற்றங்களை நல்கும் என்பது கவனிக்கத்தக்கது, சுய முயற்சிக்கான வெற்றி 100% சதவிகிதம் தங்களுக்குஉண்டாகும், முற்போக்கு சிந்தனையுடன் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் இனிவரும் இரண்டரை வருடம் தாங்கள் முழுமையாக சுவீகரிக்கும் யோகம் உண்டு, வாய்ப்புகளை சரியாக முன்னெடுத்து நலம் பெறுங்கள்.
சனிபகவான் தனது சமசப்த 7ம் பார்வையின் மூலம் சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது ரிஷப ராசியை சார்ந்த அன்பர்களுக்கு புதிய வீடு வண்டி வாகன யோகம், சொத்து சுக சேர்க்கை என்ற வகையில் வெகு அற்ப்புதமான யோக வாழ்க்கையை வழங்கிய போதிலும், ஆண்களென்றால் தனது தாயார் வழியில் இருந்து வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குறிப்பாக அவரது உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்க வாய்ப்பு உள்ளது, அதனால் ஏற்படும் மருத்துவ செலவினங்களை தாங்கள் எதிர்கொள்ளும் தன்மையை தரும் எனவே இன்சூரன்ஸ் திட்டங்களை முன்னெடுப்பது தங்களுக்கான பொருளாதார சிக்கல்களை தீர்க்கும், பெண்கள் தங்களது தந்தையின் வழியில் இருந்து வரும் பொருளாதார செலவினங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், இருப்பினும் புதிய வீடு வாங்கும் யோகமும், புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும், இடமாற்றம் தங்களின் வாழ்க்கையில் தன்னிறைவான சுபயோகங்களை வெகு அற்புதமாக வாரி வழங்கும் என்பதால் தாங்கள் இந்த அற்புதமான மாற்றங்களை சுவீகரிக்கும் தன்மையை விழிப்புணர்வுடன் இருந்து பெற்று மகிழுங்கள்.
தங்களின் குணம் நலன் சார்ந்த சுயமதீப்பீடு செய்யவேண்டிய கட்டாயத்தில் தங்கள் இருப்பது கவனிக்கத்தக்கது, சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு போன்ற விஷயங்களில் தாங்கள் கவனம் செலுத்தவில்லை எனில் தங்களுக்கு வரும் இழப்புகள் என்பதை தவிர்க்க இயலாது, எனேவ அனைவரிடமும் அன்புபாராட்டுங்கள், அவசர கதியில் செய்யும் காரியங்கள் யாவும் தங்களுக்கு அதீத இடர்பாடுகளையும் இன்னல்களையும் வழங்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள், பேச்சிலும் நடத்தையிலும் கண்ணியத்தை கையாள்வது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான சுபயோகங்களை வாரி வழங்கும், கல்வி காலங்களில் உள்ள மாணவர்களுக்கு வெற்றி உண்டாகும், உயர்கல்வி பட்டய படிப்பு போன்ற விஷயங்களில் அதீத தேர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும், கணவன் மனைவி உறவு பலப்படும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேரும் யோகம் உண்டு, திருமண தடை நீங்கி நல்லதொரு இல்லற வாழ்க்கை சுவீகரிக்கும் யோகம் உண்டு, எதிர்பார்ப்புகள் நிறைவேறும் லட்சியங்களை வென்று எடுக்கும் யோகம் உண்டு, சொத்து சுக சேர்க்கையை விழிப்புணர்வுடன் பெற்று நலம் பெறுங்கள்.
சனிபகவான் தனது 10ம் பார்வை மூலம் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிப்பது திடீரென ரிஷப ராசியை சார்ந்த அன்பர்களுக்கு காதல் திருமண வாழ்க்கை கைகூடி வரும், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து சில நன்மைகள் நடைபெற்ற போதிலும், அவர்கள் வழியில் இருந்து பொருளாதார சிக்கல்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், இல்லற வாழ்க்கை கைகூடி வந்த போதிலும் வாழ்க்கை துணை தங்களுக்கு நேரெதிரான குணநலன்களை பெற்று இருப்பது கவனிக்கத்தக்கது, இதனால் தங்களின் தனித்திறன் யாவும் வீண் விரையம் ஆகும், அதே சமயம் மனநிம்மதி சார்ந்த விஷ்யங்களையும் கேள்விக்குறியாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள், இறைவழிபாடும் முற்போக்கு சிந்தனை மட்டுமே தங்களை மேற்கண்ட இன்னல்களில் இருந்து மீட்டு எடுக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் அன்பர்களே, குறிப்பாக பொது வாழ்வில் பொதுமக்கள் தொடர்பில் உள்ள அன்பர்கள் தங்களது பேச்சில் மிகுந்த கவனம் கொள்வது நன்மைகளை தரும், தெளிவில்லாத செயல்பாடுகள் மூலம் அதீத மனஉளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
வெளியூர் மற்றும் வெளிநாடு சார்ந்த சுபயோகங்கள் தங்களுக்கான பொருளாதார முன்னேற்றங்களை வெகு அற்புதமாக வாரி வழங்கும், வெளிநாடுகளில் ஜீவனம் செய்யும் அன்பர்களின் வாழ்க்கையில் சனி பகவான் திடீரென பல அற்புதமான நன்மைகளை வாரி வழங்குவார், பொருளாதார முன்னேற்றம், திருமண யோகம், குழந்தை பாக்கியம், தெய்வீக அனுக்கிரகம், புதிய சொத்துக்களை சுவீகரிக்கும் யோகம், அரசு சார்ந்த உதவிகள் பெண்கள் வழியிலான தொழில் முன்னேற்றங்கள், வண்டி வாகன துறையில் எதிர்பாராத வருமான வாய்ப்புகள், குடும்பத்துடன் சுபயோகங்களை முழுமையாக சுவீகரிக்கும் தன்மை, மூதாதையர் சொத்துக்கள் கைவர பெரும் யோகம் என்ற வகையில் நன்மைகளை சனிபகவான் வழங்குவார் தங்களின் தனித்திறன் கொண்டு வாழ்க்கையில் சகல நலன்களையும் பெறுங்கள்.
குறிப்பு :
மேற்சொன்ன சனிப்பெயர்ச்சி பலன்கள் யாவும் ரிஷப ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற 10,3,4,7ம் வீடுகளின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள், சுய ஜாதக பலாபலன்களே முக்கியத்துவம் வாய்ந்தது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
09443355696
திங்கள், 26 செப்டம்பர், 2022
மேஷத்திற்க்கு பேரதிர்ஷ்டம் மற்றும் உலகப்புகழ் - ( சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 முதல் 2025 வரை )
மேஷம் - சனிப்பெயர்ச்சி 2023 முதல் 2025 வரை
நீதிமான் சனி பகவான் மேஷத்திற்க்கு லாப ஸ்தானமான 11ம் இடத்தில் (தனது வர்க்க ) கும்ப ராசியில் சஞ்சரிக்கும் இந்த அற்புதமான நேரம் என்பது தன்னிறைவான யோகவாழ்க்கையையும், பேரதிஷ்டத்துடன் கூடிய உலகப்புகழ் பெரும் தன்மையையும் 100% விகிதம் வாரி வழங்குகிறார், எனவே மேஷ ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் தங்களது வாழ்க்கையை மிகுந்த விழிப்புணர்வுடன் திட்டமிட்டு, மிகச்சிறப்பாக தங்களது யோக வாழ்க்கையை நிர்ணயம் செய்துகொள்வது என்பது அவசியமானது என்பதை இந்த அற்புதமான நேரத்தில் அறிவுறுத்த "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.
லாப ஸ்தானமான 11ல் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் மேஷ ராசி மற்றும் லக்கினத்தை பெற்ற அன்பர்கள் அனைவருக்கும் இனிவரும் இரண்டரை வருடம் நீடித்த அதிர்ஷ்டத்தை மட்டும் தன்னிறைவாக வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது, குறிப்பாக முற்போக்கு சிந்தனை தங்களது வாழ்க்கையில் வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், மனதில் அதீத தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும், புதிய திட்டமிடுதல்கள், புதிய யுக்திகள், புதிய சிந்தனைகள் தங்களின் வாழ்க்கையில் அளவில்லா சுபயோகங்களை வாரி வழங்கும், தங்களின் மூத்த சகோதரன் சகோதரி வழியில் இருந்து வரும் உதவிகள் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தன்னிறைவாக வாரி வழங்கும், பொருளாதார முன்னேற்றத்தை யூகிக்க இயலாத வண்ணம் மேம்படுத்தும், தெளிவான திட்டமிடுதல்கள் தங்களின் தொழில் மேன்மையை உறுதிப்படுத்தும், செயல்திறனில் அதீத உத்வேகம் உண்டாகும், புகழ் பெற்ற பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தங்களை தேடி வரும், செயற்கரிய காரியங்களை செய்து உலகப்புகழ் பெறுவதற்கான சந்தர்ப்பமும் வாய்ப்புகளும் உங்களது காலடியில் வந்து நிற்கும், இயற்கையாவே அதீத ஆளுமை திறன் கொண்டுள்ள மேஷ ராசியை சார்ந்த அன்பர்களுக்கு அதிர்ஷ்டம் அறிவு சார்ந்த நிலையில் இருந்து நற்பலன்களை நீடித்து வாரி வழங்கும், புதிய வேலைவாய்ப்பு, புதிய தொழில் வாய்ப்பு, கூட்டு தொழில் வழியில் இருந்து பெரும் ராஜயோக வாழ்க்கை, தொழில் ரீதியான உழைப்பிற்க்கான அங்கீகாரம் மற்றும் பொதுமக்கள் ஆதரவு, அரசாங்க உதவி, பொருள் சேர்க்கை, முதல் தரமான பொருளாதார முன்னேற்றம், தமக்கு கீழ் பணியாற்றும் வேலையாட்கள் ஒத்துழைப்பு, தெளிவான சிந்தனை, சிறந்த திட்டமிடுதல்கள் போன்ற விஷயங்களால் தங்களின் முன்னேற்றம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட தன்மையில் பிரகாசிக்கும் தன்மையை தாங்களே உளமார உணருவீர்கள் என்பது கவனிக்கத்தக்கது, தாம் எடுத்துக்கொண்ட லட்சியங்கள் காரியங்களில் வெற்றி மேல் வெற்றியை சுவீகரிக்கும் வல்லமை பெற்ற மேஷ ராசியை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் இரண்டரை வருடம் தன்னிறைவான அதிர்ஷ்டங்களை மட்டுமே வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு விஷயம் எனவே மேஷ ராசி அன்பர்களே சற்று விழிப்புணர்வுடன் இருந்து தங்களது வாழ்க்கையை வெற்றி பெறுங்கள்.
சனி பகவான் தனது 6ம் பார்வையால் சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது, எதிர்வர்க்க கிரகம் என்ற போதிலும் மேஷ ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு புதிய இடம் வீடு வண்டி வாகன யோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும், ஆண்களுக்கு தனது தாயார் வழியில் இருந்து வரும் மாத்ரு மூலஸ்தான யோகம் என்பது வியக்கத்தக்க சுபயோகங்களை தன்னிறைவாக வாரி வழங்கும், இதுவரை குடியிருக்க சொந்த வீடு இல்லாமல் போராடிய மேஷத்தை சார்ந்த அன்பர்களுக்கு எதிர்ப்பாராத விதமாக சகல வசதிகளும் வாய்ந்த சொந்த வீடு அமையும், தங்களது தாய் வழி சொத்துக்களை முழுமையாக சுவீகரிப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும், எதிரிகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழும் யோகம் உண்டாகும், போட்டி பந்தயங்களில் வெற்றி, தேர்வுகளில் மிகப்பெரிய தேர்ச்சி, வழக்குகளில் வெற்றி, சுய முயற்சி கொண்டு வாழ்க்கையில் சகலவிதமான சொத்துக்களையும் குறுகிய காலத்தில் பெரும் யோகம், எதிர்பாராத அந்நிய தேச நபர்கள் வழியில் இருந்து வரும் சுபயோகம், தெளிவான முடிவுகள் வழியில் இருந்து தாங்கள் பெரும் அதீத நன்மைகள் என்ற வகையில் சிறப்புகளை இனிவரும் இரண்டரை வருடம் தங்களுக்கு முழுமையாக வாரி வழங்கும், பெண்களுக்கு தனது தகப்பனார் வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை, பொருளாதார உதவிகள், புதிய வீடு வண்டி வாகன சேர்க்கை, சுய கவுரவம் மதிப்பு மரியாதை தேடிவரும், கல்வி காலங்களில் உள்ள பெண்களுக்கு அபரிவிதமான தேர்ச்சி உண்டாகும், வெளிநாடு வெளியூர் சென்று வருவதற்கான நல்லதொரு வாய்ப்பு வந்து சேரும், எதிர்ப்புகள் வழியில் தங்களுக்கான எதிர்காலம் உருவாகும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள், முயற்சிக்கான வெற்றியும் தங்களுக்கு வந்து சேரும் என்பது அற்புதமான விஷயமாகும், தங்களின் குணநலன்கள் செயல்பாடுகளில் சுய மதிப்பீடு செய்துகொள்வது தங்களுக்கான முன்னேற்றத்தின் தன்மையை வெகுவாக சிறப்பிக்கும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள், விடாமுயற்ச்சி விஸ்பரூப வெற்றி என்ற வகையில் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், பொருளாதார வகையில் கேட்ட இடத்தில் இருந்து பணம் வந்து சேரும், தங்களுக்கு கடன் சார்ந்த உதவிகள் கேட்ட இடத்தில் இருந்து கிடைக்கும், வங்கி கடன் உதவி தேடி வரும், தொழில் சார்ந்த வகையில் எதிர்பார்த்த கூட்டாளிகள் தங்களுக்கு சிறப்பான உதவிகளை வழங்குவார்கள், செய்யும் தொழில் வழியில் கடின உழைப்பை வெளிப்படுத்தி வெற்றி காணும் சுபயோகமான நேரமிது, சனிபகவானின் சத்ரு ஸ்தான பார்வை வழியில் 100% விகித சுபயோகங்களையே மேஷ ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் சுவீகரிக்க இருக்கின்றனர் வாழ்த்துக்கள்.
சனி பகவான் தனது சமசப்த பார்வை வழியில் மேஷ ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை சிம்ம ராசியை வசீகரிப்பது கலைத்துறையில் இயல் இசை நாடக துறையில் உள்ள நபர்களுக்கு அபரிவிதமான அதிர்ஷ்ட வாய்ப்புகளை நல்குவதுடன் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தையும் தன்னிறைவாக வாரி வழங்குகிறார் என்பது கவனிக்கத்தக்கது, கலைகளில் தேர்ச்சியையும் காதலில் வெற்றியையும் பெரும் யோகமும் உண்டாகும், குலதெய்வ நல்லாசி, குழந்தைகள் வழியிலான சுபயோகங்கள், சந்ததி தழைக்க நல்லதொரு ஆண் வாரிசு, ஆராய்ச்சி மற்றும் பட்டய படிப்பில் மிகப்பெரிய வெற்றி என்றவகையில் சுபயோகங்களை முழுமையாக வழங்குகிறார், தனது துறை சார்ந்த ஞானம் என்பது இந்த நேரத்தில் மேஷ ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு வெகுவாக கைகொடுக்கும், சமயோசித புத்திசாலித்தனம் தங்களது வாழ்க்கையில் மிகுந்த சுபயோகங்களை வழங்குவதுடன் கவுரவ பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், எழுத்து பத்திரிகை துறையில் உள்ள நபர்களுக்கு இனிவரும் காலம் அபரிவிதமான வெற்றிவாய்ப்புகளையும், மக்களின் அங்கீகாரத்தையும் தன்னிறைவாக வாரி வழங்குகிறார், எதிர்ப்புகள் யாவும் வெற்றிகொள்ளும் தன்மையில் தங்களின் செயல்திறன் இருக்கும், தொழில் நுட்பம் மருத்துவ துறை சார்ந்த அன்பர்களுக்கு எதிர்பாராத வளர்ச்சியும், புதிய கண்டுபிடிப்புகள் வழியில் இருந்து ராஜயோக பலன்களையும் சுவீகரிக்க இருக்கின்றனர், பொது காரியங்களில் ஈடுபடும் சமூக நலன் செயல்பாட்டாளர்கள் இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு என்ற விஷயத்தில் பிரகாசிப்பார்கள், மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும், கற்ற கல்வியில் தங்களுக்கு இருக்கும் ஞானமும், முயற்சி வழியில் தங்கள் பெரும் வெற்றியும் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்புமுனையாக அமைந்து, ராஜயோக வாழ்க்கையை நல்கும், வெளியூர் வெளிநாடு பயணங்கள் மிக எளிதாக அமையும், வெளிநாடு வேலைவாய்ப்பு தங்களுக்கு தேடிவந்து அமையும், பயணங்கள் மூலம் எதிர்பார்த்த நன்மைகளும், பொருளாதார வளர்ச்சியும் உண்டாகும், தனது சிறப்பு தகுதிகளை வெகு அற்புதமாக வெளிப்படுத்தும் யோகம் உண்டாகும், அரசு துறை வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் தேடிவந்து சுபயோகங்களை நல்கும், கண்ணியமான செயல்பாடுகள் மூலம் மக்கள் ஆதரவை வெகு விரைவில் பெற்று முன்னேற்றம் பெறுவீர்கள், பூர்வீக சொத்துக்கள் தங்களுக்கு விரைவாக எவ்வித பிரச்னையும் இன்றி வந்து சேரும், முறையான கவுரவ பதவிகளும், தொழில் வழியிலான முன்னேற்றங்களும் எவ்வித தடையும் இன்றி தங்களை வந்து சேரும் என்பது சிறப்பான விஷயம், திருமண தடைகள் நீங்கி நல்லதொரு இல்லற வாழ்க்கை அமையும்.
சனி பகவானின் பத்தாம் பார்வை மேஷ ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு ஆயுள் ஸ்தானமான விருச்சிக ராசியை வசீகரிப்பது புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை நல்கும், குறிப்பாக ஆயுள் காப்பீட்டு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீட்டு போன்ற துறைகளில் உள்ள அன்பர்களுக்கு வியக்கத்தக்க சுகபோகங்களை தன்னிறைவாக வாரி வழங்குவது கவனிக்கத்தக்கது, வெளிநாடுகளில் இருந்து வரும் வருமான வாய்ப்பு அதிகரிக்கும், பொருளாதார ரீதியாக திடீர் அதிர்ஷ்ட்ம் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அந்தஸ்த்தை வாரி வழங்கும், தங்களின் வாழ்க்கை துணை, எதிர்பாலின சேர்க்கை, நண்பர்கள், கூட்டாளிகள் மூலம் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய நன்மைகளை சுவீகரிக்கும் யோகம் உண்டாகும், புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அன்பர்களுக்கு நல்லதொரு வாய்ப்புகளை சனிபகவான் திடீரென வழங்குகிறார் என்பதை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள், இதுவரை வேலைவாய்ப்பற்ற அன்பர்களுக்கு தகுதி திறமைக்கான சரியான வேலைவாய்ப்பை பெருகிண்றீர்கள் என்பது கவனிக்கத்தக்கது, வெளிநாடு சார்ந்து ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்கள் இனிவரும் காலம் அற்புதமான முன்னேற்றங்களை வாரி வழங்கும், உடல் நலம் சார்ந்த இன்னல்களை வெகுவாக அனுபவித்துக்கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு சரியான மருத்துவர் வழியில் சரியான மருத்துவம் கிடைக்கப்பெற்று குணம் பெறுவீர்கள் விரைவில், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு பதவியும் பொறுப்பும் தேடிவரும், மிகப்பெரிய ஆளுமை கொண்டுள்ள பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், எதிராளி மூலம் சிறப்பான நன்மைகளே வந்து சேரும், எதிரிகள் செயல்பாடுகள் தங்களுக்கு நன்மையை வாரி வழங்கும், நீண்ட ஆயுள் உண்டாகும், பயணங்களில் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்ட பிறகே பயணங்களை மேற்கொள்ளுங்கள், இடம் பொருள் சொத்து வண்டி வாகனம், ஆடை ஆபரண சேர்க்கை போன்றவை இனிவரும் காலங்களில் வெகு அபரிவிதமாக வந்து சேரும், உறவுகளின் ஆதரவும், சொந்தபந்தங்கள் ஆதரவும் தங்களுக்கு முழுமையாக வந்து சேரும் என்பதுடன், பல சுபகாரியங்களை முன்னின்று ஏற்று நடத்தும் யோகம் உண்டாகும், சனிபகவானின் திடீர் அதிர்ஷ்டம் தரும் யோக வாழ்க்கை இனி தங்களுக்கே என்றால் அது மிகையாகாது.
குறிப்பு :
மேற்சொன்ன சனிப்பெயர்ச்சி பலன்கள் யாவும் மேஷ ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற 11,4,5,8ம் வீடுகளின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள், சுய ஜாதக பலாபலன்களே முக்கியத்துவம் வாய்ந்தது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
09443355696
வெள்ளி, 23 செப்டம்பர், 2022
படையப்பா நீலாம்பரியும் பாதக ஸ்தானமும் !
ஏழரைசனி பாதகஸ்தானம் எது ஜாதகருக்கு தாங்க இயலாத துன்பத்தை தரும்?
கேள்வி :
ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், ஏழரைசனி, கண்டகச்சனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டமசனி, களத்திரதோஷம் போன்றவற்றை விட சுய ஜாதகத்தில் அதீத கஷ்டங்களை தரும் அமைப்பு உண்டா ?
பதில் :
ஒரு ஜாதகர் வாழ்க்கையில் தாங்க இயலாத துன்பங்களை அனுபவிக்கிறார் என்றால் அதற்க்கு அடிப்படை காரணம் ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், ஏழரைசனி, கண்டகச்சனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டமசனி, களத்திரதோஷம் போன்றவை அல்ல அன்பர்களே மேற்சொன்ன தோஷங்கள் யாவும் சுய ஜாதக வலிமை சார்ந்த எந்த ஒரு புரிதலும் இல்லாமல் சொல்லப்படும் தவறான கருத்துக்கள், ஒருவரின் வாழ்க்கையினை 200% விகித பாதிப்பை தந்து எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கும் வல்லமை என்பது பாதக ஸ்தானத்திற்க்கு மட்டுமே உண்டு என்பதை "ஜோதிடதீபம்" அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறது, அடிப்படையில் பொதுமக்களுக்கு பாதக ஸ்தானம் பற்றிய தெளிவான புரிதலும் விழிப்புணர்வும் இல்லை என்பதால் மேற்சொன்ன தோஷங்கள் காரணம் என முன்னிறுத்தப்பட்டு தவறான புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது, சுய ஜாதக வலிமை சார்ந்த விஷயங்கள் மூடி மறைக்கப்படுகிறது, சரி பாதக ஸ்தானம் என்றால் என்ன ? இதனால் வரும் பாதிப்பு எத்தகையது என்பதை இந்த கட்டுரையின் மூலம் நாம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !
ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகமும் உயிர்ப்புடன் இருப்பது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், இதில் ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகம் ஏதாவது ஒன்றோ, சில பாவங்களோ பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது சம்பந்தப்பட்ட பாவகம் செயல் இழப்பத்துடன், ஜாதகர் பாதக ஸ்தான சம்பந்தம் பெற்ற வீடுகள் வழியில் இருந்து அதீத 200% விகித இன்னல்களை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது, உதாரணமாக படையப்பா நீலாம்பரியின் கதாபாத்திரம் சரியான எடுத்துக்காட்டு, வாழவேண்டிய வயதிலும் இவர்கள் வாழ்வதில்லை, வாழ வேண்டிய வழிமுறையையும் இவர்கள் அறிவதில்லை இதன் பாதிப்பை இவர்களை சார்ந்தவர்களும் எதிர்கொள்ளும் சூழ்நிலை தருவது கவனிக்கத்தக்கது.
ஜென்ம லக்கினம் பாதக ஸ்தான சம்பந்தம் பெறுவது
ஜாதகர் உடல் நலம் மன நலம் பாதிப்பு வளரும் சூழ்நிலை சிறப்பில்லை, பெற்றோருடன் வாழ இயலாத சூழ்நிலை, அறிவு பூர்வ செயல்திறன் குறைவு, ஆன்ம பலம் குறைந்து முரண்பட்ட வாழ்க்கையை ஜாதகர் சுவீகரிக்கும் தன்மை, தனது வாழ்க்கையினை தானே கெடுத்துக்கொள்ளுதல் என்ற வகையில் கடினமான இன்னல்களை வாரி வழங்கும்.
உதாரணமாக :
லக்கினம் : மேஷம்
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : உத்திரம் 4ம் பாதம்
ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினம் எனும் முதல் பாவகமே பாதக பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் ( சரலக்கினம் 11, ஸ்திரலக்கினம் 9, உபயலக்கினம் 7 ) அடிப்படையில் பெற்றோருடன் வளரும் சூழ்நிலை அமையவில்லை, போதை வஸ்துக்களால் உடல் நலம் கடுமையாக பாதிப்பு, கல்வியில் தடை, தொழில் தடை, முரண்பட்ட இல்லற வாழ்க்கை அதனால் பிரிவு, கவுரவம் அந்தஸ்த்து வெகுவாக பாதிக்கப்பட்டு, ஜாதகர் மனநல ஆலோசணை பெற்று ஜீவிக்கும் தன்மையிலும் போதை பழக்கத்தில் இருந்து வெளிவர இயலாத சூழ்நிலை என ஜாதகரே தனது வாழ்க்கைக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டார் என்பது கவனிக்க தக்கது.
ஜாதகருக்கு நடைபெறும் ராகு திசை ( 08/12/2006 முதல் 08/12/2024 வரை ) நல்ல வேலை இந்த வலிமை அற்ற பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை என்பது ஆறுதலான விஷயம் நடைபெறும் ராகுதிசையும், மேற்கண்ட ஜென்ம லக்கினம் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தி இருந்தால் இவரது வாழ்க்கை அதோகதிதான் என்பதை எவராலும் தடுக்க இயலாது என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறோம்.
ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளில் எந்த ஒரு வீடும் ( சரலக்கினம் 11, ஸ்திரலக்கினம் 9, உபயலக்கினம் 7 ) பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற கூடாது, அப்படி சம்பந்தம் பெற்றாலும் நடைமுறையில் உள்ள திசா புத்திகள் எதிர்வரும் திசா புத்திகள் கடுமையாக பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தக்கூடாது என்பது மட்டுமே ஜாதகர் வாழ்வதற்கான வழி, இல்லையெனில் ஜாதகரின் வாழ்வு முன்னேற்றம் தொழில் பொருளாதாரம், இல்லற வாழ்க்கை, மனநிம்மதி, மனஉறுதி, செயல்பாடு, முயற்சி, கவுரவம், அந்தஸ்து, மதிப்பு மரியாதை யாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்திவிடும் என்பது கவனிக்க தக்கது, இதில் இருந்து ஜாதகர் மீண்டு வருவது என்பது இயலாத காரியம் என்பதை அன்பு நேயரின் கேள்விக்கு பதிலாக வழங்குகிறோம்.
எனவே ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், ஏழரைசனி, கண்டகச்சனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டமசனி, களத்திரதோஷம் போன்றவற்றை விட சுய ஜாதகத்தில் அதீத கஷ்டங்களை தரும் அமைப்பு என்பது பாதக ஸ்தான தொடர்பு என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறோம் அன்பரே!
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
புதன், 21 செப்டம்பர், 2022
தாலி கட்டிய கணவனுக்கு பேரிழப்பை தரும் - மாங்கல்ய தோஷம் !
திருமண பொருத்தம் காண்பதில் நட்ச்சத்திர பொருத்தம் 10 என்பது 5% இனக்கவர்ச்சி மற்றும் மனம் சார்ந்த பொருத்தத்தை மட்டுமே நிர்ணயம் செய்யும் , ஜாதக பொருத்தம் என்பதே 100% விகிதம் இல்லற வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்யும் என்பதை கருத்தில் கொண்டு திருமண வாழ்க்கையில் இணைவது நலம் தரும் அன்பர்களே!
ஜாதக பொருத்தம் என்றால் என்ன ?
சுய ஜாதகத்தில் வரன் ( ஆண் ), வது ( பெண் ) இருவரது இல்லற வாழ்க்கையை வெகு சிறப்பாக நிர்ணயம் செய்யும் வல்லமை 5வீடுகளுக்கு உண்டு ( 2,5,7,8,12ம் பாவகங்கள் ) மேற்சொன்ன 2ம் பாவகம் வலிமை பெரும்பொழுது குடும்பம் தழைத்தோங்கும், வருமானம் மிகும், குடும்பத்தில் மகிழ்ச்சி, பொருளாதார தன்னிறைவு, இனிமையான வாக்கு வன்மை, இனிமையான பேச்சு, ஆறுதல் தரும் வார்த்தை, அன்பான சொற்கள், எதையும் எதிர்கொள்ளும் வல்லமை என்ற வகையிலும், 5ம் பாவகம் வலிமை பெரும் பொழுது சிறந்த நுண்ணறிவு திறன், அற்புதமான ஆண் வாரிசு, சுப நிகழ்வுகளை நிகழ்த்தும் தன்மை, கல்வியில் வெற்றி, கலையில் தேர்ச்சி, அறிவு திறன் கொண்டு வாழ்க்கையை நடத்தி செல்லும் தன்மை, மற்றவர் உதவி, உறவுகள் ஆதரவு, பூர்வீக சொத்தை சுவீகரிக்கும் தன்மை, சிறந்த நற்ப்பெயர், குடும்பத்தில் அங்கீகாரம், நினைத்ததை சாதிக்கும் வல்லமை என்ற வகையிலும்.
7ம் பாவகம் வலிமை பெரும் பொழுது தனித்திறன் கொண்டு யாரையும் சார்ந்து வாழாமல் சுய வாழ்க்கையிலும் இல்லற வாழ்க்கையிலும் வெற்றி பெரும் யோகம், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மை, தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்பு, ஒற்றுமை குறையாத இல்லற வாழ்க்கை, தனி திறன் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் சுவீகரிக்கும் தன்மை, எதிர்ப்புகளை வெற்றி கொள்ளும் யோகம், சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் பெரும் தன்மை என மிகுந்த சிறப்பை தரும், 8ம் பாவகம் வலிமை பெரும் பொழுது பெண்ணிற்கு மாங்கல்யம் பலப்படும், கணவனுக்கு நீண்ட ஆயுளை தரும், மனைவி வழியில் இருந்து கணவனும், கணவன் வழியில் இருந்து மனைவியும் பொருளாதார தன்னிறைவை வாரி வழங்கும், இணைபிரியா இல்லற வாழ்க்கையை நல்கும் பொருளாதார தன்னிறைவையும், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் வாரி வழங்கும், 12ம் பாவகம் வலிமை பெரும்பொழுது இல்லற இன்பம் பெருகும், தெய்வீக சக்தி மேலோங்கும், மனநிறைவான இல்லற வாழ்க்கை, திருப்தியான தாம்பத்தியம், போதும் என்ற மனம், விசாலமான மனம், திருப்திகரமான செயல்பாடுகள், இருப்பதை கொண்டு மன நிறைவு பெரும் யோகம், நினைத்ததை அடையும் பேராற்றல் என இல்லற வாழ்ககையில் சகல சௌபாக்கியத்தையும் வாரி வழங்கும் மேற்சொன்ன 5பாவகங்களும் சிறப்பாக அமையும் பொழுது.
எனவே திருமண பொருத்தம் காண்பதில் நட்ச்சத்திர பொருத்தம் இல்லாவிட்டாலும் ஜாதக பொருத்தம் இல்லையெனில் திருமணம் செய்வது என்பது இல்லற வாழ்க்கையில் மிகுந்த பேராபத்தை வாரி வழங்கும் என்பதை கருத்தில் கொள்க.
உதாரணமாக :
லக்கினம் : கும்பம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம் 4ம் பாதம்
ஜாதகிக்கு சந்திரன் திசையில் திருமணம் தாமதமாக வலுக்கட்டாயமாக நடைபேற்றது ( இரண்டாம் தாரமாக ) திருமணம் நடந்த நாள் முதல் இல்லற வாழ்க்கையில் "நித்தியா கண்டம் பூர்ண ஆயுசு" என்ற நிலையில் இன்னல்களும் துன்பங்களும் அதிக அளவில் சந்திக்கும் சூழ்நிலையை தந்தது மனோகாரகன் சந்திரன் திசை, காரணம் சந்திரன் தனது திசையில் 1,4,7,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித இன்னல்களை தந்ததுடன் தனது கணவனுக்கு உயிர் ஆபத்தையும் விபத்துகள் மூலம் ஏற்படுத்தி மருத்துவ செலவினங்களை கடுமையாக வாரி வழங்கியது, மாங்கல்ய ஸ்தானம் என்பது ஜாதகிக்கு கால புருஷனுக்கு 6ம் ராசியான கன்னி என்பதால் கணவர் ஜாதகிக்கு ஜென்ம வைரியாக செயல்படுவது கவனிக்கத்தக்க விஷயம்.
மேலும் கணவன் மனைவி பிரச்சனை பிரிந்து சென்று இன்னலுறும் தன்மை, வீண் மனக்கசப்பு மன அழுத்தம் என்ற வாயில் அதீத இன்னல்களை வாரி வழங்கியது சந்திரன் மகா திசை மேலும் 5ம் பாவக வலிமை இருவருக்கும் நால்லதோர் ஆண் வாரிசை வழங்கி சிறப்பித்த போதிலும், கணவன் மனைவி உறவு சிறப்பிக்கவில்லை, தாம்பத்திய வாழ்க்கையை குறிக்கும் 12ம் பாவகம் கடுமையாக பாதிப்பது ஜாதகிக்கு அதீத மனஉளைச்சல்களை வாரி வழங்கியது, மனஅழுத்தம் மனப்போராட்டம், மனபயம் போன்றவற்றால் ஜாதகி இன்னலுற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதெற்கெல்லாம் காரணம் ஜாதகிக்கு 2,5 ம் பாவகங்கள் வலிமை பெற்ற போதிலும், 7,8,12ம் பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதே காரணம், மேலும் சந்திரன் சூரியன் மகா திசையில் வலிமை அற்ற 1,4,7,8ம் வீடுகள் மாங்கல்ய ஸ்தானமான 8ம் பாவக பலனை ஏற்று நடத்தியதும், மாங்கல்ய தோஷம் கடுமையாக பாதித்ததும் அடிப்படை காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.
பெண்ணின் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருப்பின், ஆணின் ஜாதகத்தில் மேற்கண்ட 5பாவகங்களும் வலிமையுடன் இருப்பதும், நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும், இல்லையெனில் இல்லற வாழ்க்கை என்பது கடுமையாக பாதிப்பதுடன் விவாகரத்து வரை செல்லும் என்பதை தவிர்க்க இயலாது கணவனுக்கு உயிர் ஆபத்தையும், விபத்துக்களையும் தரக்கூடும் என்பது திருமண பொருத்தத்தில் விழிப்புணர்வு பெற வேண்டிய அமைப்பாகும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
09443355696
#மாங்கல்யதோஷம் #ரஜ்ஜுபொருத்தம், #ஆயுள்ஸ்தானம் #திருமணத்தடை #தாமததிருமணம் #மறுமணம் #திருமணதோஷம் #விவாகரத்து #பொருத்தம் #நட்ச்சத்திர_பொருத்தம் #ஜாதகபொருத்தம்
தத்து பரிகாரம் செய்வது ஏன்? செய்வதால் பெற்றோர் மற்றும் குழந்தைக்கு யோக வாழ்க்கை கிட்டுமா?
குழந்தைகள் ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும் பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்து, நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட தகப்பன்தாய் ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே சம்பந்தப்பட்ட குழந்தையை தத்து பரிகாரம் செய்வது பெற்றோர் மற்றும் குழந்தைக்கு சுபயோகங்களை வாரி வழங்கும், குழந்தையின் ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கு பாவகங்கள் பாதிக்கப்படாத நிலையில் தத்து பரிகாரம் செய்து தருவது என்பது முற்றிலும் ஜோதிட சாஸ்திரத்திற்கு முரண்பட்ட செயலாகும், இதனால் சம்பத்தப்பட்ட குழந்தைக்கு பெற்றோர் ஸ்தான வழியில் இருந்து வரும் சுபயோகங்களும் "யோகபங்க" நிலையை பெற்று ஜாதகத்தில் உள்ள நன்மை மற்றும் யோக வாழ்க்கை தடைபட்டு போக வாய்ப்பு உள்ளது, முறையான ஜாதக ஆலோசனை அற்று செய்யும் காரியங்கள் யாவும் மிக பெரிய இன்னல்களையும் துன்பங்களையும் அதிகரிப்பதற்கே வாய்ப்பு உள்ளது என்பதை நாம் இந்த கட்டுரையில் அறிவுறுத்த விரும்புகிறோம்.
சுய ஜாதகத்தில் ஆண் குழந்தைகளுக்கு தாய் ஸ்தானமாக 4ம் பாவகமும், தகப்பன் ஸ்தானமாக 10ம் பாவகமும், பெண் குழந்தைகளுக்கு தாய் ஸ்தானமாக 10ம் பாவகமும், தகப்பன் ஸ்தானமாக 4ம் பாவகமும், பெற்றோர் ஸ்தானமாக அமையும், ஒரு குழந்தையின் ஜாதகத்தில் மேற்கண்ட 4,10ம் பாவகம் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது குழந்தையின் பெற்றோருக்கு கொடும் வைரியாக செயல்படும், பிறவியில் இருந்தே பெற்றோருக்கு பரம எதிரியாக செயல்படும் அல்லது பெற்றோர் அந்த குழந்தைக்கு ஜென்ம எதிரியாக செயல்படுவார்கள், உதாரணமாக குழந்தைகள் பெற்றோரை தாக்குவது உயிர் பயத்தை தருவது, பொருளாதார சிக்கல்களை உருவாக்குவது அல்லது பெற்றோர் அந்த குழந்தையை வஞ்சிப்பது சிசு கொலை செய்வது, கருவில் இருக்கும் பொழுதே கருச்சிதைவு செய்வது போன்ற நிகழ்வுகள் உண்டாகும், பெற்ற இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு இன்று தண்டனையை ஏற்று கொண்டு இருக்கும் பெண்மணியை தமிழகத்தில் உள்ள நம் அனைவருக்கும் நன்கு தெரியும்.
ஒரு குழந்தையின் ஜாதகத்தில் மேற்கண்ட 4,10ம் பாவகம் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது குழந்தையின் பெற்றோருக்கு ஆயுள் அமைப்பை பாதிப்பதுடன் திடீர் இழப்புகளையும் பொருளாதார சிக்கல்கல்களையும் கடுமையாக வாரி வழங்கும், விபத்து மறுத்த்துவ செலவினங்கள், பெற்றோர் பிரிவு வளரும் சூழ்நிலை பாதிக்கப்படும் தன்மை என மிகுந்த இன்னல்களை வாரி வழங்குவதுடன் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையிலான உறவு நிலையும் பாதிக்கப்படும் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பாசம் பற்று அற்று ஒரு நிலையிலா உறவு என்ற துர்பாக்கிய நிலையை தந்துவிடும், உதாரணமாக வெளிநாடுகளில் குழந்தைகள் இங்கே வயதான காலத்தில் மற்றவர்கள் உதவியை நாடி தவிக்கும் பெற்றோர், அல்லது முதியோர் இல்லத்தில் பெற்றோர் அவர்களது சொத்தை அனுபவிக்கும் பெற்றோர் என்ற நிலையில் தற்போழுது தமிழகம் நகர்ந்து கொண்டு இருக்கின்றது.
ஒரு குழந்தையின் ஜாதகத்தில் மேற்கண்ட 4,10ம் பாவகம் வீண் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது பெற்றோர் மற்றும் குழந்தை இரு அமைப்பினரும் அதீத மனஅழுத்தம், மனப்போராட்டம், வீண் விரைய செலவு, வீண் மருத்துவ செலவு, உதவி இன்றி தவிக்கும் சூழ்நிலை, எதிர்ப்புகள் வழியில் போராட்டம், அனைவராலும் தொல்லை துன்பம், எதிர்பாரா திடீர் இழப்பினால் அனைத்தையும் இழந்து இன்னலுறும் தன்மை, சட்ட சிக்கல் மூலம் தண்டனைக்கு ஆளும் தன்மை, தெளிவில்லாத சிந்தனை, குழம்பிய மனநிலை, நிலையற்ற தன்மையினால் வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை, பொதுவாழ்க்கையில் அவப்பெயர், எதிர்ப்புகளால் அனைத்தையும் இழந்து நிற்கும் சூழ்நிலை என கடுமையான இன்னல்களை தரும், உதாரணமாக சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் தனது அப்பா வெற்றியாளர் என்று நெகிழ்ந்த பெண் குழந்தை, மேற்சொன்ன நிலைகளுக்கு குழந்தைகளின் ஜாதகம் காரணம் அல்ல, குழந்தைகள் ஜாதகத்தின் மீது பழிபோட்டு கட்டுரையை எழுதவில்லை "ஜோதிடதீபம்" சம்பந்தப்பட்ட பெற்றோரின் சுய ஜாதகத்தில் குழந்தைகளை குறிக்கும் 5ம் பாவகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும், இந்த விஷயத்தை குழந்தைகளின் ஜாதகத்தில் பெற்றோரை குறிக்கும் 4,10ம் பாவகங்கள் தனது பாதிப்பின் நிலையில் இருந்து நமக்கு அறிவுறுத்தும்.
ஒரு குழந்தையின் ஜாதகத்தில் மேற்கண்ட 4,10ம் பாவகம் 200%விகித இன்னல்களை வழங்கும் பாதக ஸ்தானமான ( சார லக்கினம் 11ம் வீடு, ஸ்திர லக்கினம் 9ம் வீடு, உபய லக்கினம் 7ம் வீடு பாதக ஸ்தானமாக அமையும் ) 11,9,7 பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது பெற்றோர் மற்றும் குழந்தை இரு அமைப்பினரும் தாங்க இயலாத 200% விகித இன்னல்களை தரும் அமைப்பு இதுவே ஆகும், பெற்றோர் குழந்தை இருவரும் கடுமையாக பாதிக்கப்படும் துர்பாக்கிய நிலையை தரும், தனது கண்முன் பெற்றோர் இழப்பும், பெற்றோர் கண்முன் குழந்தை இழப்பும் ஏற்படும் துர்பாக்கிய நிலையை ஏற்படுத்தும் தன்மை பெற்றது, இந்த அமைப்பை பெற்ற குழந்தைகளை வெகு விரைவாக தத்து பரிகாரம் செய்துவிடுவதே சாலச்சிறந்தது, இது மேற்சொன்ன பாதிப்புகளில் இருந்து இறை அருள் இருவரையும் காத்து அருள் புரியும்.
இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !
லக்கினம் : கடகம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 1ம் பாதம்
மேற்கண்ட பெண் குழந்தையின் ஜாதகத்தில் தகப்பன் ஸ்தானமான 4ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று 200% சதவிகிதம் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், தாய் ஸ்தானமான 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை 100% சதவிகிதம் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் எதிர்வரும் சுக்கிர மகா திசை ( 02/10/2023 முதல் 02/10/2043 ) வரை வலிமை அற்ற கடுமையாக பாதிக்கப்பட்ட ( தகப்பன் ஸ்தானமான 4ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று 200% சதவிகிதம் பாதிக்கப்பட்டு உள்ளது ) தந்தையின் ஸ்தான பலனை பாதக வழியில் தர இருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது, இது தனது தந்தைக்கு சுக்கிரன் திசை ஆரம்பித்தவுடன் 200% சதவிகிதம் இன்னல்களை தரும், பாதக ஸ்தானம் கால புருஷனுக்கு 2ம் ராசியான ரிஷபமாக அமைவது குடும்பத்தை கடுமையாக பாதிப்பதுடன், பொருளாதார வீழ்ச்சியை கடுமையாக தரும், இது இந்த குழந்தையின் தகப்பன் ஜாதகத்திலும் வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும்.
நடைபெறும் கேது திசை வலிமை பெற்ற 5 மற்றும் 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது நன்மையை தந்த போதிலும் எதிர்வரும் சுக்கிரன் திசையே மிகுந்த இன்னல்களையும் தகப்பனுக்கு உயிர் ஆபத்தையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
எனவே சம்பந்த பட்ட பெற்றோர் தமது பெண் குழந்தையை முறையாக சதுர் வேதி சொல்லும் அறிவுரையை ஏற்று தானதர்மம் செய்து முறைப்படி மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை அன்று "தத்து பரிகாரம்" செய்யும் பொழுது மேற்கண்ட 200% விகித இன்னல்களில் இருந்து பெற்றோரும் குழந்தையும் கடவுள் அனுக்கிரகம் மூலம் முழுமையாக காப்பாற்ற படுவார்கள் என்பது ஜோதிட சாஸ்திரம் காட்டும் நல்வழியாகும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
09443355696
செவ்வாய், 20 செப்டம்பர், 2022
சனிமகா திசா மற்றும் புத்தி யாரை கடுமையாக பாதிக்கும் !
நவ கிரகங்களின் திசா புத்தி அந்த்ரம் மற்றும் சூட்ஷம காலங்கள் ஒரு ஜாதகருக்கு தனித்துவம் வாய்ந்த தன்மையில் நன்மை தீமைகளை வழங்கும் என்று கருதுவது சுய ஜாதக வலிமை அறியாமல் கூறப்படும் தவறான கருத்துக்கள், சுப கிரகங்களின் திசா புத்திகள், கேந்திர கோணங்களில் அமர்ந்த கிரகங்களின் திசா புத்திகள், சுப கிரக சேர்க்க பார்வை பெற்ற கிரகங்களின் திசா புத்திகள் ஒரு ஜாதகருக்கு நன்மைகளை வாரி வழங்கும் என்பது சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கனம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை உணராமல் கூறப்படும் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள், இதை போன்றே அசுப கிரகங்களின் திசா புத்திகள் ஒரு ஜாதகருக்கு இன்னல்களை மட்டுமே வழங்கும் என்பதும் சுய ஜாதக உண்மைக்கு புறம்பானது.
நவ கிரகங்களின் திசா புத்திகள் சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை தனது பலனாக ஏற்று நடத்துமோ அன்றி, தனிப்பட்ட முறையில் நன்மை தீமைகளை வழங்குவது என்பது ஜோதிட உண்மைக்கு புறம்பான கருத்து என்பது கவனிக்க தக்கது, எனவே ஒவ்வொரு ஜாதகருக்கு தனது ஜாதகத்தில்
1) ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் எவ்வித வலிமையுடன் உள்ளது வலிமை பெற்று இருக்கின்றதா? அல்லது வலிமை அற்று இருக்கின்றதா? என்பதை தெளிவாக அறிந்து கொள்வது ஜோதிட ரீதியான விழிப்புணர்வை தரும்
2) நடைபெறும் திசா புத்தி சுய ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது அது தரும் பலன் நன்மையா ? தீமையா ? என்பதில் தெளிவு பெறுவது நமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள வழி வகை செய்யும்.
3) நடைபெறும் திசா புத்திகள் கோட்சார ரீதியாக சுய ஜாதகத்தில் செல்லும் நட்ஷத்திரம் நமக்கு தரும் பலன் என்ன ?
இந்த மூன்று விஷயங்கள் தெளிவு பெறுவது நமது வாழ்க்கையை வெகு சிறப்பாக நாமே நிர்ணயம் செய்ய வழிவகை செய்யும்
உதாரணமாக :
லக்கினம் : துலாம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம்
மேற்கண்ட ஜாதகருக்கு அறிவுறுத்த பட்ட ஆலோசணை என்பது துலாம் லக்கினம் மகர ராசி யோகாதிபதி ராசியாதிபதி சனி திசை சுபயோகங்களை வாரி வழங்கும் என்ற ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது குத்துமதிப்பாக, இதை கருத்தில் கொண்ட ஜாதகர் குரு திசை வழங்கிய அனைத்து பொருளாதர விஷயங்களை, சொத்து போன்றவற்றை முதலீடு செய்து குறுகிய காலத்தில் அனைத்தையும் இழந்து தவிக்கும் சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கிறார் குரு மகாதிசை ( 05/07/1996 முதல் 05/07/2012 வரை ) சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 4,10ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக தொடர்பை பெற்று யோக வாழ்க்கையை நல்கி இருக்கின்றது.
யோகாதிபதி ராசியாதிபதி ஜாதகருக்கு பேரிழப்பை தந்தது ஏன் ? என்பதை ஆய்வு செய்யும் பொழுது ஜாதகருக்கு சனி திசை ( 05/07/2012 முதல் 06/07/2031 வரை ) தற்போழுது 1,3,5,7,11 ஆகிய வீடுகள் துலாம் லக்கினத்திற்கு பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தில் 200% விகிதம் இன்னல்களை வாரி வழங்கி உள்ளது, ஜென்ம லக்கின வழியில் உடல் நலம் மனநலம் பாதிப்பு , சூழ்நிலை எதிர்கொள்ள இயலாத தன்மை, சுய அறிவு சார்ந்த முடக்கம், சரியான திட்டமிடுதல்கள் இல்லாத தன்மை, தவறான முடிவுகளை மேற்கொள்ளுதல், மூன்றாம் பாவக வழியில் இருந்து சரியான விஷயங்களை கிரகிக்கும் வல்லமை அற்று போகுதல், முயற்சிகள் யாவும் கடுமையான இன்னல்களை வழங்குவது, போதிய திட்டமிடுதல்கள் இல்லாதது, வருங்காலத்தை யூகிக்க முடியாத தன்மை, பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து சமயோசித அறிவு திறன் செயல் இழப்பு, பூர்வீகத்தில் குடியிருப்பதால் அனைத்தையும் இழந்து தவிக்கும் சூழ்நிலை, ஆண் வாரிசு அற்ற நிலை, களத்திர ஸ்தான வழியில் இருந்து தனி திறன் இன்மை கூட்டு முயற்சி பாதிப்பு இல்லற வாழ்க்கை பாதிப்பு வீண் விரையம் மற்றவர்களை நம்பி ஏமாந்து போகுதல் என கடுமையான பாதிப்புகள், லாப ஸ்தான வழியில் இருந்து அதிர்ஷ்டம் இன்மை, பிற்போக்கு தனமான எண்ணங்கள், தோல்வி மனப்பான்மை, வீண் பயம், எதிர்மறை எண்ணங்களால் வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை என கடுமையான பாதிப்புகளை ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை சனி மகா திசை வழங்கி உள்ளது.
சனி பகவானும் கோட்சார ரீதியாக தற்போழுது சந்திரன் மற்றும் செவ்வாய் சாரத்தில் சென்று திடீர் இழப்பு மற்றும் பேரிழப்பை பொருளாதர ரீதியாக வழங்குவது ஜாதகருக்கு மிகுந்த நெருக்கடியை தரும் நிலையாகும்.
எனவே சுய ஜாதக வலிமை உணர்ந்து, திசை புத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டு, கோட்சார கிரகங்கள் செல்லும் சார பலன் தரும் நன்மை தீமையை உணர்ந்து சுய ஜாதக ஆலோசனை பெரும்பொழுது நமது வாழ்க்கையை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம் என்பதில் சந்தேகம் இல்லை வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
திங்கள், 19 செப்டம்பர், 2022
மனையடி சாஸ்த்திரம் - குடும்ப தலைவன் மற்றும் ஆண் வாரிசை பாதிக்கும் தென்மேற்கு !
சனி, 10 செப்டம்பர், 2022
களத்திரகாரகன் சுக்கிரதிசை திருமண தடையை தருவது ஏன் ?
வியாழன், 8 செப்டம்பர், 2022
திருமணத்தடை ஏன்? ராகு திசை தரும் பாதிப்பா?
ராகு திசை தரும் பலன் என்ன? திருமணம் தாமதம், தடை ஆக காரணம் என்ன?
லக்கினம் : கன்னி
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : உத்திரம் 4ம் பாதம்
பதில் :
திருமண வாழ்க்கை ஒருவருக்கு சிறப்பாக சரியான வயதில் அமைய சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்தில் இருந்து 2,7ம் வீடுகள் வலிமை இழக்க கூடாது, மேலும் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபம் மற்றும் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் எந்த விதத்திலும் பாதிக்க படமால் இருப்பதுடன் நடைமுறையில் உள்ள திசா புத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது சிறப்பான நற்பலன்களை வழங்கும், தங்களது ஜாதகத்தில் இந்த அமைப்பு எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்வோம்.
சகோதரிக்கு வணக்கம் தங்களது சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் வீடுகளான 2,5,7,8,12ம் வீடுகளில் 2ம் வீட் தனது சுய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமையுடனும், 5,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையுடனும் இருப்பது சிறப்பான அமைப்பாக கருத்தில் கொள்ளலாம், ஏனெனில் 2ம் பாவக வழியில் இருந்து நல்ல குடும்ப வாழ்க்க்கையும், 5ம் பாவக வழியில் இருந்து நல்ல புத்திர பாக்கியமும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கை துணையையும் சுவீகரிப்பதற்கான வாய்ப்பை நல்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் மாங்கல்ய ஸ்தானம் மற்றும் அயன சயன ஸ்தானமான 8,12ம் வீடுகள் தங்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது மிகுந்த மாங்கல்ய தோஷத்தை தரும் அமைப்பாகும், இது தங்களுக்கான திருமண தாமதம் மற்றும் தடைக்கு அடிப்படை காரணம் ஆகும், மேலும் தங்களுக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு திசை (08/09/2015 முதல் 08/09/2033 வரை) சுய ஜாதகத்தில் ஏற்று நடத்தும் பாவக தொடர்பு என்பது 4,6,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது மிகுந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், இதுவும் தங்களின் திருமண வாழ்க்கை தடை பெறுவதற்கு அடிப்படை காரணமாகும், மேலும் ராகு திசையில் தற்போழுது நடைமுறையில் உள்ள சனி புத்தியும் ( 14/10/2020 முதல் 21/08/2023 வரை) தங்களுக்கு 4,6,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது மேலும் இன்னல்களை தரும் அமைப்பாகும், இதுவே தங்களது திருமண தடை மற்றும் தாமதத்திற்கு அடிப்படை காரணம் என்பதை கருத்தில் கொள்ளவும், இதற்கான தீர்வை முறையாக ஆலோசணை பெற்று நலம் பெறுங்கள்.
குறிப்பு :
தங்களது சுய ஜாதகத்தில் திருமண தடையை தவிர்க்க திசா நாதன் ராகு புத்தி நாதன் சனி இருவரில் ஒருவர் ராகு அல்லது கேதுவின் நட்ஷத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் திருமண முயற்சிகளை மேற்கொள்ள நல்லதொரு இல்லற வாழ்க்கை அமையும், மணமகன் வரும் திசை? அவரது வீடு இருக்கும் திசை, தொலைவு ? ஆகிய விபரங்களை ஆலோசணையின்பொழுது தெளிவு படுத்துகிறோம் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
சனி, 3 செப்டம்பர், 2022
பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் சாயா கிரகமான ராகு பகவான் அமரும் பொழுது ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ?
கேள்வி :
பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் சாயா கிரகமான ராகு பகவான் அமரும் பொழுது ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ?
5ல் ராகு அல்லது கேது புத்திர தோஷம் உருவாகும் ராகு இருந்தால் புத்திரர் உண்டாக்குவதே இல்லை, அப்படி பிறந்தாலும் 10 அல்லது 15 வயதில் மரணத்தை தழுவி புத்திர சோகம் உண்டாகும் ஆனால் கேது இருந்தால் தாமதப்பட்டு குழந்தை உண்டாகும், ஆனால் திருமணம் ஆகி 10 அல்லது 15 ஆண்டுகள் தாமதப்பட்டு குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு, இது உண்மையா ?
பதில் :
ஜோதிடம் மற்றும் சுய ஜாதக வலிமை சார்ந்த எந்த ஒரு புரிதலும் இல்லாமல் கூறப்படும் முரண்பட்ட தவறான கருத்து இது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!
அதற்க்கு முன் அன்பர்களின் சுய ஜாதகத்தில் 5ல் ராகு அமர்ந்து, ஐந்தாம் இடம் தங்களது ஜாதகத்தில் மீனம் தனுசு, ரிஷபம் துலாம், மிதுனம் கன்னி (சூரியனுடன் 16 பாகைக்கு மேல் சேராத புதன் ) கடகம் (வளர் பிறை சந்திரன்) ஆகிய ராசிகளாக அமைந்து இருப்பின் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் யாவும் ஆண் குழந்தைகளாக அமையும், மேற்கண்ட 5ம் பாவகத்தில் அமரும் ராகு தனது முழு வலிமையையும் 5ம் பாவகத்தின் மீது செலுத்தி அந்த பாவகத்தை 100% விகிதம் வலிமை அடைய செய்வதால் 5ம் பாவகம் வலிமை பெற்று, புகழ் பெற்ற சுபயோகங்கள் நிறைந்த ஆண் வாரிசை தங்களுக்கு வாரி வழங்கும் எனபது நிதர்சனமான உண்மை, எனவே 5ல் ராகு அமரும் பொழுது புத்திர பாக்கியத்தை தடை செய்யும் என்பது கட்டுக்கதை, ஜோதிடம் சார்ந்த யாதொரு உண்மையும் இல்லை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
லக்கினம் : மிதுனம்
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : உத்திரம் 3ம் பாதம்
மேற்கண்ட ஜாதகருக்கு 5ல் ராகு அமர்ந்து இருப்பதால் புத்திர பாக்கியம் இல்லை, மேலும் 5ல் நின்ற ராகு திசை நடைமுறையில் உள்ளதால் புத்திர பாக்கியமே கிடையாது என்ற காரணத்தை முன்னிறுத்துகின்றனர், இது எந்த அளவிற்கு உண்மை என்பதை இந்த பதிவில் காண்போம், ஜாதகருக்கு ஜென்ம லக்கினம் மிதுன ராசியில் 83:11 பாகையில் ஆரம்பித்து கடக ராசியில் 109:21 பாகையில் நிறைவு பெறுகிறது அதாவது மிதுன ராசியில் 06:49 பாகையும், கடக ராசியில் 19:21 பாகையும் கொண்டது ஜாதகரின் ஜென்ம லக்கினம்.
இதை கருத்தில் கொண்டு ஜாதகரின் 5ம் பாவக நிலையை ஆய்வு செய்யும் பொழுது ஜாதகருக்கு 5ம் பாவகம் துலாம் ராசியில் 202:56 பாகையில் ஆரம்பித்து விருச்சிக ராசியில் 233:57 பாகையில் நிறைவு பெறுகிறது, அதாவது துலாம் ராசியில் 07:04 பாகையும் விருச்சிக ராசியில் 23:57 பாகையும் கொண்டது ஜாதகரின் 5ம் பாவகம், ஆனால் ராகு அமர்ந்து இருப்பது துலாம் ராசியில் 191:05 பாகையில், இது ஜாதகருக்கு துலாம் ராசியில் நான்காம் பாவகமாக அமைகிறது என்பதை கருத்தில் கொள்வது அவசியம், மேலும் இதுவே உண்மை நிலையும் கூட, எனவே ராகு பகவான் துலாம் ராசியில் உள்ள 4ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் என்பது உறுதி ஆகிறது, ஒருவேளை 5ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பின் பூர்வபுண்ணிய ஸ்தானம் 100% வலிமை பெற்று ஜாதகருக்கு ஆண் வாரிசாகவே பிறக்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு விஷயம்.
மேலும் ஜாதகருக்கு 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக வலிமையுடன் காணப்படுகிறது இது ஜாதகருக்கு நல்ல ஆண் வாரிசை நல்குவதுடன், ஜாதகரின் தன் துறை சார்ந்த நுண்ணறிவு திறனை சிறப்பாக வெளிப்படுத்தும், ஜாதகருக்கு 5ல் ராகு அமரவில்லை, துலாம் ராசியில் உள்ள நான்காம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் என்பதே உண்மை நிலை இதை அன்பர்கள் கருத்தில் கொண்டு சுய ஜாதக விழிப்புணர்வு பெறுங்கள்.
9443355696
திங்கள், 29 ஆகஸ்ட், 2022
சனி, 27 ஆகஸ்ட், 2022
செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022
திங்கள், 15 ஆகஸ்ட், 2022
வியாழன், 11 ஆகஸ்ட், 2022
வியாழன், 4 ஆகஸ்ட், 2022
புதன், 3 ஆகஸ்ட், 2022
புதன், 27 ஜூலை, 2022
ஞாயிறு, 19 ஜூன், 2022
திங்கள், 23 மே, 2022
செவ்வாய், 10 மே, 2022
சனி, 16 ஏப்ரல், 2022
துலாம் 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !
சாயா கிரகங்களான ராகுகேது பெயர்ச்சியின் மூலம் 100%சதவிகிதம் சுபயோக பலன்களை மட்டுமே சுவீகரிக்கும் லக்கினங்களில் ஒன்றான துலாம் ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் காலம் சுபயோக காலமே என்றால் அது மிகையில்லை, துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் 7ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்க்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு திருமண யோகம் வெகு சிறப்பாக அகைகூடி வரும், கூட்டு தொழில் வழியில் இருந்து அபரிவிதமான சுபயோகங்களும் லாபங்களும் வந்து சேரும், தனது தனி திறனை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் இனிவரும் காலங்களில் வெகு சிறப்பாக அமையும், ஜாதகரின் செயல்திறனும் சுறுசுறுப்பும் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், அரசியல் ராணுவம் காவல் பாதுகாப்பு தீயணைப்பு மருத்துவம் போன்ற துறைகளில் பணியாற்றி கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் அதீத வெற்றிவாய்ப்புகளுடன் கூடிய நன்மைகளையும் முன்னேற்றங்களையும் வாரி வழங்கும், தனது சுய சிந்தனை திறன் மேலோங்கும், மற்றவர்களை சார்ந்து வாழாமல் தனது சுய உழைப்பின் மூலம் வெற்றிக்கொடி நாட்டும் யோகம் உண்டாகும், புதிய வாய்ப்புகள், புதிய சிந்தனைகள் தங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை, எதிர்பாராத அதிர்ஷ்டம் தங்களின் வாழ்க்கையை பன்மடங்கு முன்னேற்றத்தை நோக்கி அழைத்து செல்லும், தன்னம்பிக்கை, மனோதைரியம், எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் தன்மை, சுய முன்னேற்றத்தில் அதிக ஆர்வம், தொழில் நுட்பம் சார்ந்த அறிவு விருத்தி பெரும் தன்மை என்ற வகையில் சகல சௌபாக்கியங்களையும் ராகுவின் களத்திர ஸ்தான சஞ்சாரம் வழங்கும்.
துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 7ம் பாவக வழியில் இருந்து தனது வாழ்க்கை துணை மூலம் மிக பெரிய நன்மைகள் நடைமுறைக்கு வரும், இல்லற வாழ்க்கையில் இன்னல்களை சந்தித்துக்கொண்டு இருந்த அன்பர்களுக்கு சிறப்பான இல்லற வாழ்க்கை அமையும், பிரிந்து இருந்த தம்பதியர் ஒன்று சேர்ந்து வாழ்க்கையை வெற்றிகொள்ளும் தருணம் இது புது வாழ்க்கை தங்களின் மகிழ்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக அமைவதுடன், எதிர்பாராத நன்மைகளையும் பெறுவீர்கள் குறிப்பாக நல்ல புத்திர பாக்கியம், புதிய சொத்துக்களை வாங்கும் யோகம், புதிய தொழில் அல்லது வேலைவாய்ப்பை பெரும் யோகம் உண்டாகும், நண்பர்கள் உதவி, தொழிலாளர்கள் ஒத்துழைப்பு, கூட்டாளிகள் ஆதரவு என சிறப்பான யோக வாழ்க்கையை பெறுவதுடன், தனது திட்டமிடுதல்களை வெகு சிறப்பாக நிறைவேற்றும் யோகம் உண்டாகும், சுய சிந்தனை வழியிலான நடவடிக்கைகள் வெகு அற்புதமான நன்மைகளை முழுமையாக வாரி வழங்கும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும், முயற்சிக்கான பலன்கள் முழுமையாக வந்து சேரும், பொதுமக்கள் ஆதரவு வழியிலான வெற்றிகள் தங்களின் சமூக அந்தஸ்த்தை அதிகரிப்பதுடன் உயர் பதவிகளையும் அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், தன்னிடம் உள்ள தொழில்நுட்ப அறிவு துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகளை வழங்குவதுடன், பொருளாதார முன்னேற்றத்தை வெகு சிறப்பாக வாரி வழங்கும் என்பதில் சந்தேகமில்லை, வெளிநாடு பயணங்கள் மூலம் மிக பெரிய அளவிலான நன்மைகளையும் திறமைக்கான அங்கீகாரமும் நிச்சயம் கிடைக்க பெறுவீர்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான நன்மைகள் என்பது வெகு அற்புதமாக அமைவதுடன், அதீத லாபமும் உண்டாகும், தொழில் வழியிலான நன்மைகள் பன்மடங்கு தங்களுக்கு முன்னேற்றத்தை வாரி வழங்கும், தனி திறமை கொண்டு இனிவரும் 18மாதமும் வெற்றிகளை சுவீகரிப்பீர்கள், ராகு பகவானின் களத்திர ஸ்தான சஞ்சாரம் தங்களுக்கு ராஜயோக பலன்களை தன்னிறைவாக வாரி வழங்கும்.
துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் :
துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான கேது பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்ப்பது வரவேற்கத்தக்கது, பொதுவாக ஜென்ம லக்கினத்தில் சாய கிரகமான ராகு மற்றும் கேது சஞ்சாரம் செய்தால் முழு அளவில் நன்மைகளை மட்டுமே வழங்கும், அது பிறப்பு ஜாதகம் என்றாலும் சரி, கோட்சார ரீதியாக என்றாலும் சரி, அந்த வகையில் ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு உடல் நலம் வெகு சிறப்பாக அமையும், மனவலிமை அதிகரிக்கும், சுய ஞானம் வெளிப்படும், அறிவு சார்ந்த முயற்சிகள் வெற்றியை வழங்கும், சமயோசித புத்திசாலித்தனம் வெகு அற்புதமாக வேலை செய்யும், இயற்கையாகவே சுய நலத்துடன் பொதுநலன் கலந்து சிந்திக்கும் துலாம் லக்கின அன்பர்களுக்கு கேதுவின் சஞ்சாரம் தானும் நலன் பெற்று தன்னை சார்ந்தவர்களும் நன்மை பெரும் அமைப்பிலான காரியங்களில் ஈடுபடுவார்கள், வியாபாரிகளுக்கு அற்புதமான ராஜயோக பலன்களை வழங்குவது கவனிக்கத்தக்கது, தொட்டது அனைத்தும் துலங்கும், வெற்றிபடிக்கட்டுகளில் வீறுநடையிட்டு செல்லும் யோகம் உண்டாகும், தன்னிறைவான வருமான வாய்ப்பை பெறுவதுடன், அனைவரையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் அற்புதமான வாய்ப்பை பெற்று மகிழ்வார்கள், இவர்களின் பேச்சுக்கு அனைவரும் செவி சாய்ப்பார்கள், மாற்று மதத்தினர் மூலம் மிகப்பெரிய அளவிலான ஜீவன முன்னேற்த்தை பெரும் யோகம் உண்டாகும், அயல்நாடுகளில் தொழில் ரீதியான நடவடிக்கைள் மூலம் புதிய தொழில் முதலீடு செய்யும் யோகம், நீண்ட கால லட்சியங்களை தன்னிறைவாக வெற்றிகொள்ளும் வாய்ப்பு, கடல் கடந்து ஜீவனம் செய்யும் வாய்ப்பு, திரைகடல் ஓடி திரவியம் தேடும் தன்மை என்றவகையில் அபரிவிதமான யோகங்களை கேது பகவான் தனது ஜென்ம லக்கின சஞ்சார நிலையில் இருந்து வாரி வழங்குவர் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜென்ம லக்கினத்தில் வலிமை பெற்று சஞ்சாரம் செய்யும் கேதுபகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு நினைத்த காரியங்களில் வெற்றியை தருவதுடன் ஆன்மீகத்தில் அபரிவிதமான நன்மைகளையும் வழங்குவார், பல புண்ணிய திருத்தலங்களுக்கு மிக எளிதாக சென்றுவரும் யோகம் உண்டாகும், மனமும் உடலும் தங்களுக்கான ஒத்துழைப்பை வெகு அற்புதமாக வாரி வழங்கும், எதிரிகள் தொந்தரவு அகன்று அவர்களின் ஆதரவும் தங்களுக்கு கிடைக்கும், நேற்றுவரை எதிரியாக இருந்தவர்கள் இன்று நண்பர்களாவர், உதவி செய்ய யாருமற்ற நிலை மாறி சகல நிலைகளில் இருந்தும் உதவிகள் தேடிவரும், உடலிலும் முகத்திலும் புத்துணர்ச்சி அதிகரிக்கும், வருமுன் யூகிக்கும் அறிவுத்திறன் அதிகரிக்கும், விழிப்புணர்வு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு மேலோங்கும், பல தொழில் செய்யும் யோகமும், தெய்வீக ஆற்றல் மூலம் சுபயோகங்களை சுவீகரிக்கும் சந்தர்ப்பமும் தேடி வரும், பொது வாழ்க்கையில் வெற்றி உண்டு பொதுமக்கள் ஆதரவும் உண்டு, சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும், நிலையான அதிகார பதவியும் இந்த நேரத்தி கிடைப்பதற்கான யோகம் உண்டு, எதிர்பாலின சேர்க்கை வழியில் பல முன்னேற்றங்களை தாங்கள் சுவீகரிக்க முடியும், குழந்தைகள் வழியில் இருந்தும், வாழ்க்கை துணை வழியில் இருந்தும் சுபயோகங்கள் நடைமுறைக்கும் வரும், இருப்பினும் தோல் மற்றும் ஒவ்வாமை போன்ற தொந்தரவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு, நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பதுடன், உடல் நலம் வெகு அற்புதமாக அமையும், இதுவரை இருந்துவந்த உடல் வருத்தங்கள் யாவும் நீங்கும் என்பது கவனிக்கத்தக்கது, கேதுவின் ஜென்ம லக்கின சஞ்சாரம் வியாபார விருத்தியை தருவதுடன், உடல் நலம் மனவலிமை மேம்பட செய்வார் இனிவரும் 18 மாதமும்.
குறிப்பு :
மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி களத்திர ஸ்தானம் மற்றும் ஜென்ம லக்கின பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி களத்திர ஸ்தானம் மற்றும் ஜென்ம லக்கின பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
0944335569