வெள்ளி, 29 ஜூன், 2012

விபத்து அல்லது திடீர் இழப்பை தவிர்க்க !


 


சுய ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு 8 ம் வீடு சர ராசியாக அமைந்து 8 ம் வீட்டுடன் தொடர்பு பெற்றாலும் , அல்லது 8 ம் வீடு 2 ,6 ,8 ,12 விட்டுடன் தொடர்பு பெற்று தொடர்பு பெரும் வீடுகள் சர ராசியாக அமைந்து நடக்கும் திசை ,புத்தி , அந்தரம் , சூட்சமம் ஆகியன இந்த வீடுகளின் பலனை நடத்தினால் ஜாதகருக்கு எதிர்பாராத இழப்புகள் நிச்சயம் ஏற்ப்படும் . மேலும் 8 ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நடக்கும் திசை ,புத்தி , அந்தரம் , சூட்சமம் ஆகியன பாதக ஸ்தான பலனை நடத்தினால் நிச்சயம் ஜாதகர் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க வேண்டி வரும்.

ஜாதகர் இந்த காலங்களில் வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிகவும் அதிக கவனமாக இருப்பது நல்லது , மேலும் வண்டி வாகனத்தை சுயமாக இயக்குவதை தவிர்க்கலாம் அல்லது நல்ல ஓட்டுனரை வைத்து கொள்வது சால சிறந்தது . மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் வாகனத்தில் செல்லும் முன் அருட்காப்பு சங்கல்பம் செய்து கொள்வது 100 சதவிகித நன்மையை நிச்சயம் தரும் , இந்த காலங்களில் ஜாதகர் ஆஞ்ச நேயர் வழிபாடு செய்வது எவ்வித இழப்புகளில் இருந்தும் ஜாதகரை 100 சதவிகதம் காப்பாற்றி , இழப்புகளில் இருந்து நிச்சயம் மீட்டெடுக்கும் . அல்லது அருகில் உள்ள காவல் தெய்வங்களை வழிபாடு செய்து நன்மை பெறலாம் .

ஒருவர்  விபத்து அல்லது திடீர் இழப்பை தவிர்க்க , ஜாதகர் தமது குலதெய்வத்தை முறையாக வழிபாடு செய்து வருவாரே ஆயின் நிச்சயம் இந்த பாதிப்புகளில் இருந்து நிச்சயம் காப்பாற்றும் அல்லது நமக்கு முன்னதாகவே உள்ளுணர்வு மூலம் உணர்த்தும் , இதன் காரணமாக நாம் நிச்சயம் விழிப்புணர்வுடன் இருந்து நன்மை பெற முடியும் , இதை மீறி  நமக்கு ஏதாவது விபத்து ஏற்ப்பட்டாலும் நம்மை காப்பாற்ற அல்லது உதவ உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வாய்ப்புகளை , நமது குல தெய்வத்தின் அருள் வழிவகை செய்து தரும் .

இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களுக்கு விபத்து மட்டும் அல்ல திடீர் என பொருள் இழப்பு , சொத்து சுகங்களில் இழப்பு போன்ற நிலைகளும் ஏற்ப்படாலாம் , அல்லது கணவன் மனைவி பிரிவு , தனது சொந்த பூர்வீகத்தை விட்டு  உறவுகளை விட்டு வெகு தொலைவுக்கு சென்று ஜீவனம் நடத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் , மேலும் நண்பர்களால் ஏமாற்ற படும் நிலை, தொழில் கூட்டாளிகாளால் ஏமாற்ற படும் நிலை, தான் நம்பியவர்களால் கைவிட படும் சொல்நிலை உருவாகும், எனவே ஜாதகர்கள் இந்த அமைப்பு இருப்பின் நிச்சயம் அதிக கவனத்துடன் வாழ்க்கை நடத்துவது அவசியம், இல்லை எனில் அதிக பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும் .

எனவே இந்த காலகட்டங்களில் அதிக பண முதலீடுகளை செய்வது தவிர்க்க வேண்டும் இல்லை எனில் அதன் வழி துன்பங்களை ஜாதகர் அனுபவிக்க வேண்டும் , மேலும் புதிய தொழில் முயற்ச்சிகளை தவிர்ப்பது ஜாதகருக்கும் அவரது சொத்து சுகம் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லையெனில் இவற்றை இழக்கும் சூழ்நிலையை ஜாதகரே உருவாக்கி கொள்வார் , இந்த காலங்களில் ஜாதகருக்கு புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் பழகுவது அவசியம், அவர் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் சரி அவரால் நமக்கு 100 சதவிகிதம் தீமையான பலன்களே நடைபெறும் இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது கசப்பான உண்மை . 

இந்த அமைப்பு ஒரு ஜாதகருக்கு இருப்பின் இந்த வீடுகளின் பலன்கள் திசை ,புத்தி , அந்தரம் , சூட்சமம் ஆகியவற்றில் நடைமுறைக்கு வந்தால் மட்டுமே ஜாதகர் கவலை படவேண்டும், இல்லை எனில் ஜாதகருக்கு எவ்வித பலனையும்  தர வாய்ப்பு சிறிதும் இல்லை எனவே பயம் இல்லாமல் அனைத்து செயல்களையும் மேற்கொள்ளலாம் , இதனால் ஜாதகர் மற்றும் ஜாதகரை சார்ந்தவருக்கும் எவ்வித பாதிப்பும் நிச்சயம் ஏற்ப்படாது .

பெருகிவரும் வாகன விபத்துகளில் இருந்து நாம்மை நாம் நிச்சயம் காப்பாற்றி கொள்ள சாலை விதிகளை மதிப்பதும் , பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது மட்டுமே நமது உயிருக்கு உத்தரவாதம் , நாம் எவ்வளவு வழிப்புணர்வுடன் இருந்தாலும் எதிரில் வரும் நபர் எப்படி இருக்கிறர் என்பதை நம்மால் கணிக்க முடியாது , ஆகவே தலை கவசம் அணியாமல்  இரு சக்கர வாகனத்தை இயக்குவது நமக்கு நிச்சயம் ஆபத்தை உருவாக்கும் , நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் பொழுது சாலை விதிகளை கடை பிடிப்பதையும் , இருக்கை கச்சையை அணிந்து பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்வது நமக்கும் மற்றவருக்கும் நன்மையை தரும், எந்த காரணத்தை கொண்டு நாம் சாலை விதிகளை கடைபிடிப்பதில் இருந்து  தவற கூடாது , இதை உணர்ந்தாலே விபத்துகள் அற்ற நல்ல பயணத்தை அனைவரும் மேற்கொள்ள முடியும் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

 

1 கருத்து:

  1. குலதெய்வ வழிபாட்டின் அவசியத்தை ஒவ்வரு பதிவில் கூறுவது குலதெய்வ வழிபாடு என்பது எவ்வளவு முக்கியம் என்பது விளங்குகிறது
    ஜோதிட ரீதியாக நேரம் சரி இல்லாதவர்கள் வண்டி வாகனங்களில் செல்ல நேர்ந்தால் என்ன விளைவுகள் ஏற்படும், அதை தவிர்க்க வேண்டிய வழிமுறை அருமை

    பதிலளிநீக்கு