செவ்வாய், 18 செப்டம்பர், 2012

ஜாதகத்தில் செவ்வாய் தோஷ நிர்ணயம்,செவ்வாய் பகவான் வழங்கும் நன்மை ! தீமை ? பகுதி 5





பொதுவாக சுய ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12  பாவகங்களில் செவ்வாய் இருப்பின், அது செவ்வாய் தோஷம் என்று நிர்ணயம் செய்து , குறிப்பிட்ட ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் இதே போன்றே செவ்வாய் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12  பாவகங்களில் இருக்கும் ஜாதகத்தை சார்ந்தவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றும் பல ஜோதிடர்கள் தீர்மானம் செய்கின்றனர் , இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் . மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் தரும் நன்மை தீமையை பற்றி விரிவாக 12 லக்கினத்தை அடிப்படையாக வைத்து  பார்ப்போம் . 


தனுசு லக்கினம் 


2 ம் பாவகம் மகரத்தில் உச்சம் பெற்று அமரும் செவ்வாய் ஜாதகருக்கு தொழில் வகையில் எடுக்கும் முயற்ச்சிகளில் வெற்றிகளும் , சகோதர வகையில் ஆதரவினையும் , உதவிகளையும் , தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுபட்டினையும் , பயணங்களில் லாபத்தினையும் , போட்டிகளில் வெற்றிகளையும் வாரி வழங்கிவிடும் , ஆனால் ஜாதகருக்கு புத்திர சந்தானம் தாமதமாகவே கிடைக்கும், முதலில் பெண் குழந்தையும் , சரியான குல தெய்வ வழிபாடு செய்வதால் ஆண் குழந்தையும் ஜாதகருக்கு கிடைக்கும் , தனது பூர்வீகத்தில் ஜாதகருக்கு பெரிய முன்னேற்றத்தை தருவதில்லை , எதிர்ப்புகளே அதிகமாக வரும் , பூர்விகத்தில் இருந்து வெளியே சென்று  ஜீவனம் செய்வது ஜாதகருக்கு பல வகையில் முன்னேற்றங்களையும் , அரசியல் பதவிகளையும் நிச்சயம் தரும் . மேலும் செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் , குடும்பம் எனும் இரண்டு பாவகங்களுக்கு அதிக  நன்மைகளையும் , பூர்வீக அமைப்பிற்கு கடுமையான பாதிப்பையும் வழங்கும் .


4 ம் பாவகம் மீனத்தில் அமரும் செவ்வாய் , ஜாதகரின் பூர்விக அமைப்பில் இருந்து மிகப்பெரிய நன்மைகளையும் , அளவில்லா குழந்தை செல்வத்தையும் , குழந்தைகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தையும், இறை நிலையின் பரிபூர்ண நல்லாசிகளையும் , குலதெய்வத்தின் கருணையால் வாழ்க்கையில் சகல செல்வாக்கினையும் பெரும் யோகம் உண்டாகும் , அதே சமயம் ஜாதகரின் மன நிம்மதி கெடும் அளவிற்கு சூழ்நிலைகள் உருவாகும் , குறிப்பாக வாழ்க்கை துணையின் வழியில் இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , இருப்பினும் ஜாதகருக்கு முதல் பாவகத்திர்க்கு நன்மையை செய்யும் செவ்வாய் பகவானால் ஜாதகர் எதையும் தங்கும் மன நிலையை தந்துவிடும் , உடல் நிலையும் சிறப்பாக அமைந்துவிடும் , எனவே  பனிரெண்டாம் பாவக அமைப்பில் இருந்து  ஜாதகர் அதிக  பாதிப்புகளை சந்திக்க வேண்டி வராது ,  மேலும் செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் ,  பூர்விகம்  எனும் இரண்டு பாவகங்களுக்கு அதிக  நன்மைகளையும் ,  பனிரெண்டாம் பாவக அமைப்பிற்கு சிறிய  பாதிப்பையும் வழங்கும் .


7 ம் பாவகம் மிதுனத்தில் அமரும் செவ்வாய், லக்கினத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்வார் , குறிப்பாக நீண்ட ஆயுள் , மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் மருத்துவர்கள் , உடல் பாதிப்புகளை விரைவில் நலம் பெற செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் எனவும் , சிறந்த நிர்வாக திறமையையும் , ஆட்சி பணிகளில் சிறப்பான எதிர்காலத்தையும் , சரியான நீதி சொல்லும் நீதிமானாகவும் , விளையாட்டு வீரர்களாகவும் இங்கு அமரும் செவ்வாய் ஜொலிக்க வைப்பார் , மேலும் ஜாதகரின் பூர்வீகம் வலிமை பெற்று பூர்வீக அமைப்பில் இருந்து மிகசிறப்பான யோக பலன்களை அனுபவிக்கும் யோகம் உண்டாகும் , ஆனால் விரைய ஸ்தான அமைப்பில் இருந்து ஜாதகர் சில சிரமங்களை அனுபவிக்க வேண்டி வரும் , மேலும் செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் ,  பூர்விகம்  எனும் இரண்டு பாவகங்களுக்கு அதிக  நன்மைகளையும் ,  பனிரெண்டாம் பாவக அமைப்பிற்கு சிறிய  பாதிப்பையும் வழங்கும் .


8 ம் பாவகம் கடகத்தில் அமரும் செவ்வாய் , ஜாதகருக்கு சகல வழிகளில் இருந்தும் அதிக தீமையான பலன்களையே வழங்குவார் , குறிப்பாக திருமணம் தாமதம் ஆகும் , நல்ல  நிலையான வருமானம் கிடைக்காது , அன்பான குடும்பம் அமையாது , வாழ்க்கை துணையின் வழியில் இருந்து அதிக இன்னல்களை  அனுபவிக்கும் சூழ்நிலை வரும் , தனது பூர்வீகத்தில் குடியிருப்பதால் ஜாதகருக்கு அதிக இழப்புகளை தரும் , மன நிம்மதி இழக்கும் படி சம்பவங்கள் ஜாதகருக்கு நடக்கும் என்பதால் , ஜாதகர் எந்த விஷயங்களையும் நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது நலம் தரும் , ஜாதகர் ஒரு சிறந்த ஆன்மீகவாதிகளிடம் ஆசியும் , தீட்சையும் பெறுவது அவசியம் , மேலும் செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் ,  பூர்விகம் மற்றும்  பனிரெண்டாம் பாவக அமைப்பிற்கு அதிக பாதிப்பையும் வழங்கும் .


12 ம் பாவகம் விருச்சகத்தில் அமரும் செவ்வாய், 8 ம் வீட்டில் அமரும் செவ்வாய்  போன்றே ஜாதகருக்கு சகல வழிகளில் இருந்தும் அதிக தீமையான பலன்களையே வழங்குவார் , குறிப்பாக திருமணம் தாமதம் ஆகும் , நல்ல  நிலையான வருமானம் கிடைக்காது , அன்பான குடும்பம் அமையாது , வாழ்க்கை துணையின் வழியில் இருந்து அதிக இன்னல்களை  அனுபவிக்கும் சூழ்நிலை வரும் , தனது பூர்வீகத்தில் குடியிருப்பதால் ஜாதகருக்கு அதிக இழப்புகளை தரும் , மன நிம்மதி இழக்கும் படி சம்பவங்கள் ஜாதகருக்கு நடக்கும் என்பதால் , ஜாதகர் எந்த விஷயங்களையும் நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது நலம் தரும் , ஜாதகர் ஒரு 
சிறந்த ஆன்மீகவாதிகளிடம் ஆசியும் , தீட்சையும் பெறுவது அவசியம் , மேலும் செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் ,  பூர்விகம் மற்றும்  பனிரெண்டாம் பாவக அமைப்பிற்கு அதிக பாதிப்பையும் வழங்கும் .



மகர லக்கினம் 


2 ம் பாவகம் கும்பத்தில் அமரும் செவ்வாய் ஜாதகருக்கு , நீண்ட ஆயுளையும் , வெளிநாடுகளில் இருந்து அதிக வருமானத்தையும், புதிய முயற்ச்சிகளையும் அதன் மூலம் ஜாதகர் பெரும் அதிக வருவாயினையும் , எதிர்பாராத செல்வ வளங்களையும் , முன்னேற்றத்தையும்  அபரிவிதமாக தரும் , மேலும் இன்சூரன்ஸ் தொழில் செய்வதால் குறிகிய காலத்தில் வெற்றி பெரும் யோகம் உண்டாகும் ,பொது மக்களை வாடிக்கையாளராக கொண்டு செய்யும் தொழில்களில் மிகப்பெரிய லாபமும் , முன்னேற்றமும் உண்டாகும் , மேலும் வண்டி வாகனம் , சொகுசு வீடு , சொத்து , நிலபுலன்கள் சேர்க்கை என்பது ஜாதகருக்கு விரைவானதாகவும் நிலையானதாகவும் நிச்சயம் கிடைக்க பெறுவார் , மேலும் செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் , நான்காம் பாவகம் மற்றும்  லாப ஸ்தானம் எனும் அனைத்து  பாவகங்களுக்கு அதிக  நன்மைகளையும் , முன்னேற்றத்தையும் வாரி வழங்கும் .


4 ம் பாவகம் மேஷத்தில் ஆட்சி பெற்று அமரும் செவ்வாய் லக்கினம் , நான்காம் பாவகம் மற்றும்  லாப ஸ்தானம் எனும் அனைத்து பாவகங்களில் இருந்து கடுமையான பதிப்பையே தருவார் , குறிப்பாக குடியிருக்க நல்ல வீடு அமையாது , நல்ல வண்டி வாகனம் அமையாது , திடீர் இழப்புகளை தரும் , உடல் நிலை  அமைப்பிற்கு ரத்த சம்பந்தபட்ட நோய்களை தர கூடும் , மேலும் செவ்வாய் இங்கு அமரும் பொழுது பெண்களுக்கு அதிக உடல் உபாதைகளை வாரி வழங்குகிறது , அடிக்கடி மருத்துவ மனைக்கு செல்லும் சூழ்நிலையை தரும் , குழந்தை பாக்கியம் சற்றே தாமதமாகவே கிடைக்க பெறுவார்கள் , நல்ல சுக போக வாழ்க்கையை அனுபவிக்க அதிக தடைகள் உண்டாகும் , குடும்ப வாழ்க்கையில் அதிக இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் , மேலும் அதிர்ஷ்டமில்லா வாழ்க்கையாக அமைந்து விட வாய்ப்பு அதிகம் , மேலும் செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் , நான்காம் பாவகம் மற்றும்  லாப ஸ்தானம் எனும் அனைத்து  பாவகங்களுக்கும் அதிக நன்மைகளை செய்வதில்லை .


7 ம் பாவகம் சிம்மத்தில் அமரும் செவ்வாய், ஜாதகருக்கு பனிரெண்டாம் பாவக அமைப்பிற்கு மட்டும் அதிக நன்மைகளை வாரி வழங்குவார் , திடீர் அதிர்ஷ்டம் மூலம் செல்வந்தன் ஆகும் யோகம் உண்டாகும் , நிறைய முதலீடு செய்வதால் அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும் , வெளிநாடுகளில் இருந்து அபரிவிதமான யோகம் உண்டாகும் , நிறைய வருமானம் ஜாதகருக்கு வெளிநாடுகளில் இருந்தும் , வெளிநாடுகளில் தயாரிக்கும் பொருட்கள் மூலமும் கிடைக்க பெறுவார் , அல்லது அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே நிறைய வருமான சம்பாதிக்கும் யோகத்தை தந்துவிடுவார் , சிறப்பான நிர்வாக திறமையால் பல தொழில்கள் செய்யும் யோகம் உண்டு , மேலும் இலக்கின அமைப்பிற்கும் , சொத்து , சுகம் , வண்டி வாகன யோகத்தில் ஜாதகருக்கு அதிக இன்னல்களை தரும் ,  மேலும் செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் மற்றும்  நான்காம் பாவகம்  எனும்  அமைப்பிற்கு அதிக நன்மைகளை செய்வதில்லை, ஆனால் 11 பாவகத்திர்க்கு அதிக நன்மைகளை செய்கிறார் .


8 ம் பாவகம் கன்னியில் அமரும் செவ்வாய் , ஜாதகருக்கு நீண்ட ஆயுளையும் , நல்ல உடல் ஆரோக்கியத்தையும் , பொருளாதார வாழ்க்கையில் தன்னிறைவையும் , பல வெளிநாடுகள் சென்றுவரும் யோகமும் உண்டாகும் , தனது வாழ்க்கையில் பல தலை முறைக்கு சொத்து சேர்த்துவைக்கும் தன்மை ஜாதகருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை ஜாதகர் சரியாக பயன்படுத்தி கொள்வது சால சிறந்தது , மேலும் லாட்டரி யோகம் , புதையல் மூலம் பெரும் செல்வம் சேரும் யோகம் உண்டு , இருப்பினும் ஜாதகருக்கு குடியிருக்க நல்ல வீடு அமைவதில்லை , தனது தாயாருக்கு செய்யும் பாவத்தால் ஜாதகர் அதிகம் பாதிக்க பட வேண்டி வரும் , எனவே செவ்வாய் இங்கு அமர்வது 11 ம் வீட்டிற்கு மட்டும் அதிக நன்மைகளை வாரி வழங்கும் , லக்கினம் மற்றும் சுக ஸ்தான அமைப்பிற்கு அதிக பாதிப்பை தரும் . 


12 ம் பாவகம் மகரத்தில்  அமரும் செவ்வாய் ஜாதகருக்கு லக்கினம் , சுக ஸ்தானம் , லாப ஸ்தானம் எனும் மூன்று வீடுகளுக்கும் மிகுந்த யோக பலன்களையே தருகிறார் , நீண்ட ஆயுள் , நிறைவான கல்வி , நிலையான சொத்து சுக சேர்க்கை , வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்ட வாழ்க்கை , எதிர்பாராத சொத்து சுக சேர்க்கை , தன்னம்பிக்கை , சுய கட்டுப்பாடு சுயமாக வாழ்க்கையில் முனேற்றம் பெரும் யோகம் , மற்றவர் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் பேராற்றல் , பூலோகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதி வாய்ப்புகளையும் வாரி வழங்குகிறார், எனவே செவ்வாய் இங்கு அமர்வது  லக்கினம் , நான்காம் பாவகம் மற்றும்  லாப ஸ்தானம் எனும் அனைத்து  பாவகங்களுக்கும் அதிக நன்மைகளை வாரி வழங்குகிறார் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

2 கருத்துகள்:

  1. செவ்வாய் தோஷ நிர்ணயம் கும்ப லக்னம் மீன லக்னத்தின் பலனை பல நாட்களாக எதிர்பார்க்கிறேன். பகுதி 6 இதுவரை வரவில்லை.

    பதிலளிநீக்கு