மேற்கண்ட இரண்டு ஜாதக அமைப்பிற்கும் பிறப்பு நேரம் வெறும் 90 வினாடிகள் மட்டுமே , இருவருக்கும் ஒரே லக்கினம் , ஒரே ராசி , ஒரே நட்சத்திரம் இருப்பினும் ஜாதக பலன்களில் நிறைய வேறுபாடுகள் , இதற்க்கு காரணம் என்னவென்பதை இனி பார்ப்போம் .
இவரது ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :
1 ,5 ,7 ம் பாவகங்கள் களத்திர ஸ்தானம் எனும் 7 ம் வீட்டுடன் தொடர்பு,
2 ,4 ம் பாவகங்கள் சுக ஸ்தானம் எனும் 4 ம் வீட்டுடன் தொடர்பு,
3 ம் பாவகம் சகோதர ஸ்தானம் எனும் 3 ம் வீட்டுடன் தொடர்பு,
10 ம் பாவகங்கள் ஜீவன ஸ்தானம் எனும் 10 ம் வீட்டுடன் தொடர்பு,
11ம் பாவகம் லாப ஸ்தானம் எனும் 11 ம் வீட்டுடன் தொடர்பு,
இவரது ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட நிலையில் இருக்கும் பாவகங்கள் :
6 ,9 ம் பாவகங்கள் பாதக ஸ்தானம் எனும் 9 ம் வீட்டுடன் தொடர்பு,
8 ம் பாவகம் ஆயுள் ஸ்தானம் எனும் 8 ம் வீட்டுடன் தொடர்பு,
12 ம் பாவகம் விரைய ஸ்தானம் எனும் 12 ம் வீட்டுடன் தொடர்பு,
மேற்கண்ட அமைப்பில் இருக்கும் ஜாதகருக்கு நடக்கும் சனி திசை 11ம் பாவகம் லாப ஸ்தானம் எனும் 11 ம் வீட்டுடன் தொடர்பு பெற்றும் , தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் ராகு புத்தி 1 ,5 ,7 ம் பாவகங்கள் களத்திர ஸ்தானம் எனும் 7 ம் வீட்டுடன் தொடர்பு பெற்றும் மிகுந்த யோக பலனை தருவதால் , ஜாதகருக்கு அரசு துறையில் நல்ல வேலையும் , அருமையான வாழ்க்கை துணையும் , கை நிறைய வருமானமும் நினைத்ததை சாதிக்கும் ஆற்றலும் தந்துகொண்டு இருக்கிறது , மேலும் இவாது ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகங்கள் ஜாதகருக்கு நடை பெரும் அனைத்து தசா புத்திகளுடன் சம்பந்தம் பெறாத காரணத்தால் , பாதிப்படைந்த வீடுகளின் பலன்கள் நடை முறைக்கு வர வாய்ப்பில்லை என்பது ஒரு வர பிரசாதமே !
இதே லக்கினம் , இதே ராசி , இதே நட்சத்திரம் பெற்ற இவரது சகோதரரின் ஜாதக பலனை இனி பார்ப்போம்
இவரது ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :
1 ,3 ,7 ம் பாவகங்கள் களத்திர ஸ்தானம் எனும் 7 ம் வீட்டுடன் தொடர்பு,
2 ம் பாவகம் குடும்ப ஸ்தானம் எனும் 2 ம் வீட்டுடன் தொடர்பு,
5 ,11 ம் பாவகங்கள் லாப ஸ்தானம் எனும் 11 ம் வீட்டுடன் தொடர்பு,
10 ம் பாவகம் ஜீவன ஸ்தானம் எனும் 10 ம் வீட்டுடன் தொடர்பு,
இவரது ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட நிலையில் இருக்கும் பாவகங்கள் :
4 ,8 ம் பாவகங்கள் ஆயுள் ஸ்தானம் எனும் 8 ம் வீட்டுடன் தொடர்பு,
6 ,9 ,12 ம் பாவகங்கள் விரைய ஸ்தானம் எனும் 12 ம் வீட்டுடன் தொடர்பு,
மேற்கண்ட அமைப்பில் இருக்கும் ஜாதகருக்கு நடக்கும் சனி திசை 5 ,11 ம் பாவகங்கள் லாப ஸ்தானம் எனும் 11 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று நன்மையை செய்தாலும் , தற்பொழுது நடக்கும் சனி திசை ராகு புத்தி 6 ,9 ,12 ம் பாவகங்கள் களத்திர ஸ்தானம் எனும் 12 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று கெடுதலான பலனை தருவது துரதிர்ஷ்டமே, இதனால் ஜாதகர் தனது கல்விக்கு தொழில் புரிவதில் சிக்கல்கள் , சம்பந்தம் இல்லாத தொழிலை எடுத்து செய்வதால் அதிக துன்பம் , மன உளைச்சல் , இதன் காரணமாக போதை பழக்கத்திற்கு அடிமை ஆகி தனது உடல் நிலையை தானே கெடுத்து கொள்கிறார்.
இதற்க்கு காரணம் 6 ,9 ,12 ம் பாவகங்கள் விரைய ஸ்தானம் எனும் 12 ம் வீட்டுடன் தொடர்பு பெறுவதே 6 ம் பாவகம் கடன் , உடல் நிலை , எதிரி தொந்தரவு , 9 ம் பாவகம் சமுதாயத்தில் நல்ல பெயர் , நல்ல குணம் , 12 வருமானத்தை தேவையில்லாமல் வீண் செலவு செய்து இழப்பது போன்ற பலன்களை ஜாதகருக்கு தற்பொழுது தந்து கொண்டு இருக்கிறது , மேலும் ஜாதகருக்கு இன்னும் திருமணமும் ஆகவில்லை , தவறான தொடர்புகளால் தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொண்டுள்ளார்.
மேற்கண்ட இரண்டு ஜாதக அமைப்பிலும் லக்கினத்தை அடிப்படையாக வைத்து பார்க்கும் பொழுது நவகிரகங்கள் அண்ணனுக்கு யோக பலன்களையும் , 90 வினாடிகள் இடைவெளியில் பிறந்த தம்பிக்கு அவ யோக பலன்களையும் தரும் பொழுது , தொலைகாட்சி நிகழ்சிகளில் சொல்லும் ராசிபலன்கள் அனைவருக்கும் எப்படி சரியாக பொருந்தும் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

DOB : 26.10.1990. Time: 7.05 am. Place : Chennai.
பதிலளிநீக்குஇந்த ஜாதகிக்கு புனர்பூ தோஷம் (சனி சந்திரன் சேர்க்கை) இருக்கிறது என்றும் திருமணம் காலதாமதமாகும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்காது என்றும் சில ஜோதிடர்கள் சொன்னார்கள். பணம் செலவழித்து பரிகார பூஜையும் செய்ய சொன்னார்கள்.
இது உண்மையா ஐயா. ஜாதகியின் பெற்றோர் மிகவும் கவலையில் உள்ளனர். உங்கள் வார்த்தையை நான் அவர்களிடம் சொல்லி ஆறுதல் சொல்ல வேண்டும்.
மேற்கண்ட பெண்ணின் , உண்மை ஜாதக நகலை பிரதி எடுத்து எங்களது மின் அஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் , மேலும் நேரில் ஜோதிட ஆலோசனை பெறுவது நன்மை தரும் .
பதிலளிநீக்கு