வியாழன், 2 ஜூலை, 2015

ராகு பகவான் தரும் யோகமும், சுய ஜாதகத்தில் பலன் தரும் காலநேரமும் !




ராகு பகவான், ஒருவரது சுய ஜாதகத்தில் தனது திசையில் சிறப்பான பலன்களை தர ஆரம்பித்துவிட்டால், குறிப்பிட்ட ஜாதகரின் வாழ்க்கை தரம் எதிபாராத பல சுபமான திருப்பங்களுடன், அபரிவிதமான வெற்றி வாய்ப்புகளை பெரும் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மிகவும் பிரகாசமாக தெரியும், ஜாதகருக்கு ராகு பகவான் தான் தொடர்பு படுத்தும் பாவக வழியில் இருந்து தங்குதடையின்றி யோக பலன்களை வாரி வழங்க ஆரம்பித்துவிடுவார். மேலும் சுய ஜாதகத்தில் ராகு பகவான் எங்கு அமர்ந்தாலும், எப்படி பட்ட யோக அவயோகத்தை தான் அமர்ந்த பாவகத்திற்கு தந்தாலும் சரி, தனது திசையில் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் போதும் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளே நடைபெறும், இதை ஓர்  உதாரண ஜாதகம் கொண்டு காண்போம் அன்பர்களே !


லக்கினம் : துலாம் 
ராசி : தனுசு 
நட்சத்திரம் : பூராடம் 3ம் பாதம் 

ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை, லக்கினத்திற்கு 8ல் அமர்ந்து, 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்க தக்கது, ஏனெனில் ஜாதகருக்கு ராகு பகவான் தொடர்பு படுத்துவது 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் எனவே ஜாதகர் குடும்ப ஸ்தானமான 2ம்  வீடு அமைப்பில் இருந்து நல்ல குடும்ப வாழ்க்கையையும், தன்னிறைவான பொருளாதார வரவையும் பெறுவார், இனிமையான பேச்சு திறன், வாக்கின் வழியில் இருந்து வரும் வருமானம், குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வ செழிப்பு, சந்தோசம் என்ற வகையில் யோகத்தை அனுபவிக்கும் தன்மையை தரும்.

4ம் பாவக வழியில் நல்ல சுகபோகமான யோக வாழ்க்கை, வண்டி வாகன வசதிகள், புதிய வீடு மற்றும் பொருட்கள் வாங்கும் யோகம், வியாபர விருத்தி, நல்ல மன நிலை, சிறப்பான சிந்தனை ஆற்றால், மனதில் நினைக்கும் காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் தன்மை என மிகுந்த யோக பலனை தரும், ஜாதகர் வாழ்க்கையில் நினைத்து பார்த்திராத வசதி வாய்ப்புகளை வாரி வழங்கும், 4ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாக வருவது ஜாதகர் தான் செய்யும் தொழில் அமைப்பில் இருந்து மேற்கண்ட யோக பலன்களை நிறைவாக பெறுவார் என்பது மறுக்க இயலாத உண்மை, ஜாதகரின் தொழில் அமைப்பும் சர மண் தத்துவ ராசியான மகரம் சார்ந்ததாக அமையும் பொழுது வெற்றியின் சதவிகிதம் 100% ஆக இருக்கும் என்பது மறுக்க இயலாத உண்மை.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தனது வாழ்க்கை துணை மூலம் சகல யோகங்களையும் பரிபூரணமாக அனுபவிக்கும் யோகத்தை தரும், மேலும் 8ம் பாவகம் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை திடீரென வாரி வழங்கும் என்பதால், ஜாதகரின் வருமான வாய்ப்புகள் மிகவும் அபரிவிதமானதாக அமையும் என்பது குறிப்பிட தக்கது, ஜாதகர் செய்யும் தொழில் முதலீடுகள் பன்மடங்கு வாருமானத்தை வாரி வழங்கும், மேலும் வாழ்க்கை துணை வழியில் இருந்தும் வாருமன வாய்ப்புகளும் யோக வாழ்க்கையும் உண்டாகும் என்பது கவனிக்க தக்கது.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு, அபரிவிதமான தொழில் வாய்புகள் குறுகிய கால வெற்றிகளை வாரி வழங்கும், வண்டி வாகனம், சொத்து சுகம், மண் மனை யோகம் தங்கு தடையின்றி கிடைக்க பெறுவார், அதிர்ஷ்டத்தின் முழு சக்தியும் ஜாதகர் செய்யும் தொழில் அமைப்பில் இருந்து கிடைக்கும், இதன் மூலம் தன்னிறைவான பொருளாதார வசதிகளை ஜாதகர் பெறுவது என்பது உறுதியான நிலைபாடாக கருதலாம், மேலும் பண்ணை தொழில் , கால்நடைகள் மூலம் நல்ல முன்னேற்றம் உண்டாகும், மனதில் நினைத்த காரியங்கள் யாவும் நல்ல முறையில் நடைபெறும், ஆசைகள் யாவும் நினைத்தபடி பூர்த்தியாகும், 

மேற்கண்ட யோக பலன்கள் யாவும் நடைமுறைக்கு கொண்டு வருவது தற்பொழுது  நடைமுறையில் உள்ள ராகு பகவானின் திசையே ( 07/12/2012 முதல் 07/12/2030 வரை ) என்றால் அது  மிகையில்லை, மேலும் தொடர்பு படுத்தும் ஜீவன ஸ்தானம் சர நீர் ராசியான கடகத்தில் அமைவது ஜாதகருக்கு வர இருக்கும் யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது, மேலும் தான் தர வேண்டிய யோக பலன்களை 100% விகிதம் எவ்வித தடையும் இல்லாமல் வாரி வழங்கும் என்பது இவரது சுய ஜாதக ரீதியாக கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

இந்த ஜாதகத்தில் ராகு பகவான் தான் அமர்ந்த இடத்திற்கு நல்ல நிலையில் இல்லாத போதும், தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதால் ஜாதகரின் வாழ்க்கை ராகு திசையில் பன்மடங்கு முன்னேற்றம் பெற்று கொண்டு இருக்கிறது என்பது வரவேற்க்கதக்கது, வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


17 கருத்துகள்:

  1. உதாரண ஜாதகத்தில் ராகு லக்கினத்திற்கு ஒன்பதாம் இடத்திலல்லவா இருக்கிறார்?

    2,4,8,10 ம் பாவத்திற்கும் ராகு பகவானுக்கும் என்ன சம்பந்தம்?

    எதையோ சொல்லவந்து என்னத்தையோ சொல்கிறீர்களே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக ராசி கட்டத்தை அடிப்படையாக கொண்டு பார்க்கும் பொழுது ராகு பகவான் 9ம் ராசியில் உள்ளதை போல் காட்சி தரும், சுய ஜாதக கணிதம் மூலம் கணிதம் செய்யும் பொழுதே ராகு பகவான் அமர்ந்திருக்கும் உண்மை நிலை புரியும், ஜாதகருக்கு 9ம் பாவகம் ஆரம்பிப்பது மிதுனத்தில் 85:36 பாகையில், ராகு அமர்ந்திருப்பது மிதுனத்தில் 60:53 பாகையில் எனவே ராகு பகவான் மிதுனத்தில் உள்ள 8ம் பாவகத்தில் அமர்ந்திருப்பது துல்லியமாக தெரிய வரும், மேலும் ராகு பகவானின் திசை தொடர்பு படுத்தும் பாவகங்களின் கணித நிலை தெரிந்து கொள்ள நிச்சயம் ஜோதிட கணிதம் தெரிந்துகொள்வது உதவிகரமாக இருக்கும்.

      எனவே கட்டத்தை வைத்து பலன் காணுவதை தவிர்த்து, ஜாதக கணிதம் கொண்டு பார்க்கும் பொழுது பதிவில் குறிப்பிட்ட விஷயங்கள் புலனாகும்.

      நீக்கு
    2. நவகிரகங்கள் சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் உள்ளது என்ற அடிப்படை விஷயமே தெரியாத பொழுது, ஜாதக பலன் காண்பது எப்படி ???

      நீக்கு
  2. பாகைகளை கணக்கில் எடுத்துக் கொண்டுதானே சுய ஜாதகத்தை கணிக்கிறது கம்ப்யூட்டர்? கம்ப்யூட்டர் கணித ஜாதகத்திலும் பாகை வித்தியாசம் வருமா?

    நவாம்சம் என்று சொன்னாலும் ஒகே.. இதெப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினி கணிதம் செய்வது என்பது, மனிதர்களாகிய நாம் செய்த உள்ளீடு மென்பொருள் தானே, மேலும் கணினி கணிதம் செய்வது நமது நேரத்தை மிச்சபடுத்தவே, கணினி சொல்வதெல்லாம் பலனாக எடுத்துகொள்ள இயலாது ஏனெனில் அது ஏற்கனவே உள்ளீடு செய்யபட்ட பதிவாகவே இருக்கும், முதலில் லக்கினம் என்றால் என்ன ? லக்கினம் ஆரம்பிக்கும் பாகை கணிதம் என்றால் என்ன ? பாவகங்களின் ஆரம்பம் மற்றும் முடிவுறும் பாகை நிலை பற்றிய கணிதம் தெரிந்தால் இந்த குழப்பம் வாராது, இதன் அடிப்படையில் ஜாதக பலன் சொல்லும்பொழுது சற்றும் சந்தேகம் வாராது.

      நீக்கு
    2. கணினி பலன்களைச் சொல்லுவதில்லை என்பது உண்மைதான். நான் அதைக் குறித்துச் சொல்லவில்லை. லக்கினம், அது ஆரம்பிக்கும் பாகை இவைகளை சரியாக கணிக்கவே நாம் கணினிகளை நாடுகிறோம். பாவகங்களின் ஆரம்பம் எல்லவற்றையும் சரியாக கணினி கணித்துக் கொடுக்கிறது. இதில் நாம் மனிதத் தவறுகளை தவிர்த்து விடுவதால் கணினியின் கணிதத்தை நம்பலாம்.

      நீங்கள் கிரகங்களின் சரியான பொசிசனை கவனிக்க நவம்சத்தையும் எடுத்துக் கொள்ளவில்லை.

      மேலும் ராகு 60 டிகிரியில், செவ்வாய் 64, மற்றும் சூரியன் 70 டிகிரியில் இருக்கும்போது ராகுவை மட்டும் எட்டம் இடத்திற்கு தள்ளுவதேன்?

      நீக்கு
    3. முதலில் மேற்கண்ட ஜாதகருக்கு 9ம் பாவகம் மிதுனத்தில் 85:36 பாகையில் ஆரம்பித்து கடகத்தில் 116:22 பாகையில் முடிவடைகிறது, இதற்க்கு உற்பட்ட பாகைகளில் சுக்கிரன் மட்டுமே உள்ளார் ( 115:35 ) எனவே ஜாதகருக்கு 9ம் பாவகத்தில் உள்ள ஒரே கிரகம் சுக்கிரன் மட்டுமே.

      ஜாதகருக்கு 8ம் பாவகம் ரிஷபத்தில் 56:19 பாகையில் ஆரம்பித்து மிதுனத்தில் 85:36 பாகையில் முடிவடைகிறது இதற்க்கு உற்பட்ட பாகைக்குள் ராகு 60:53 பாகையிலும், செவ்வாய் 64:26 பகையிலும், சூரியன் 70:30 பாகையிலும் உள்ளார், எனவே 8ம் பாவகத்தில் முறையே ராகு,செவ்வாய்,சூரியன் அமர்ந்திருப்பது தெளிவாகிறது, இதில் ராகுவை மட்டும் 8ல் அமர்ந்ததாக குறிப்பிடவில்லையே, மேலும் ராகு தான் அமர்ந்த வீட்டின் பலனை தானே ஏற்று நடத்துவார், தன்னுடன் சேர்ந்த கிரகத்தின் தன்மையையும் தானே ஏற்று நடத்துவர் என்பதை அடிப்படையாக கொண்டே பலன் கூறபட்டு இருக்கும், மேலும் செவ்வாய் சூரியன் வேறு பாவகத்தில் இருப்பதாக எங்கும் குறிப்பிடவில்லையே?

      அடிப்படை கேள்வி என்னவென்றால் ராகு இந்த துலாம் இலக்கின ஜாதகருக்கு எந்த பாவகத்தில் உள்ளார் என்பதே? தாங்கள் கூறுவது 9ல், ஜோதிடதீபம் கணிதம் செய்தது மிதுனத்தில் உள்ள 8ம் பாவகத்தில், தங்களின் கருத்தையும் ராகு அமர்ந்த இடத்தையும் ( ராகு 9ல் ) தெளிவுபடுத்துங்கள்.

      நீக்கு
    4. உங்களுடைய மென் பொருளில் குறிப்பிட்டிருப்பது பாவத்தின் ஆரம்பமல்ல. பாவத்தின் முடிவு. 1ம் பாவம் 179 டிகிரியில் தொடங்கி 207ல் முடிவடைகிறது.

      இதைப்போலவே 9ம் பாவம் 56ல் தொடங்கி 85ல் முடிவடைகிறது.

      இப்போது கட்டத்தில் இருக்கும் கிரகங்களின் நிலையும் சரியாக இருக்கும்.

      மென் பொருட்களின் வேலையே நமது கணிக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதுதானே ஒழிய நேரத்தை வீணாக்க அல்ல.

      இப்போது இன்னொரு கேள்வி. ராகுவை எப்படி 2,4,8, மற்றும் 10ம் பாவத்துடன் சம்பத்தப் படுத்தியிருக்கிறீர்கள்?

      நீங்கள் சொல்லியிருக்கும் பலன்கள் 2,4,8, மற்றும் 10 வீடுகள் நல்ல வலுப்பெற்றிருக்கும் போது நடப்பவைகள் மட்டுமே அல்லவா?

      நீக்கு
    5. ஒரு கிரகத்தின் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ( ராகு திசை 2,4,8,10 வீடுகள் 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ) தெரிந்து கொள்ள முறையாக சார ஜோதிடம் கற்றுகொண்டால், தெரிய வரும், மேலும் 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது எப்படி என்பதும் புரிய வரும், ஆக முதலில் ஜோதிடத்தை தெளிவுற கற்றுகொள்ளுங்கள் அன்பரே !

      நீக்கு
    6. இது ஏதோ புது ஜொதிடமாக இருக்கிறது.

      ஒன்பதாமிட ராகு ஒன்பதாமிடத்திற்குரிய பலன்களைத்தான் நடத்தும்.
      ஒன்பதாமிடம் பாக்கியஸ்தானமாதலால் அதற்குரிய பலன்களைக் கொடுக்கும்.

      நீக்கு
    7. ராகு இருப்பது மிதுனத்தில் உள்ள 8ம் பாவகத்தில் என்கிறோம், இந்த விஷயம் தங்களுக்கு புலப்படவில்லை எனில் ? தங்களுக்கு பாவகங்களின் தன்மையும், கிரகங்கள் அமர்ந்திருக்கும் இடத்தின் நிலையும் தெரியவில்லை என்பதே உண்மை, ஆக அடிப்படை ஜோதிட கணிதத்தை தெளிவுற கற்றுகொள்ளுங்கள், ராசி கட்டங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு பலன் காணும் பொழுது இந்த நிலைதான் ஏற்ப்படும் அன்பரே ! பாவக கணிதம் என்ற விஷயத்தில் சற்று கவனம் செலுத்துங்கள், இது ஒன்றும் புது கணிதம் கிடையாது அடிப்படை விஷயமே அனைவரும் அறிந்ததே, நன்கு அறிந்த ஜோதிடரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள்.

      நீக்கு
    8. மறுபடி குழப்பிக் கொள்கிறீர்கள்.
      "உங்களுடைய மென் பொருளில் குறிப்பிட்டிருப்பது பாவத்தின் ஆரம்பமல்ல. பாவத்தின் முடிவு. 1ம் பாவம் 179 டிகிரியில் தொடங்கி 207ல் முடிவடைகிறது.

      இதைப்போலவே 9ம் பாவம் 56ல் தொடங்கி 85ல் முடிவடைகிறது.

      இப்போது கட்டத்தில் இருக்கும் கிரகங்களின் நிலையும் சரியாக இருக்கும்.

      நீக்கு
    9. நன்றாக உற்று பார்க்கவும் ரிஷப ராசியில் 8ம் பாவம் 56ல் தொடங்கி மிதுன ராசியில் 85ல் முடிவடைகிறது. 9ம் பாவம் மிதுன ராசியில் 85ல் தொடங்கி கடகத்தில் 116 பாகையில் முடிவடைகிறது. தாங்கள் தான் அதிகமாக குழம்பியுள்ளீர்கள் அன்பரே !

      துலாம் லக்கினத்திற்கு 9ம் பாவகம் மிதுனத்தில் தான் ஆரம்பிக்கும், தாங்கள் 9ம் பாவகம் ஆரம்பிப்பதாக குறிப்பிடும் 56 பாகை ரிஷப ராசியில் அல்லவே வரும். ரிஷப ராசியில் எப்படி 9ம் பாவகம் ஆரம்பிக்கும் அன்பரே?

      நீக்கு
    10. அய்யா!, உங்களை மடக்குவதற்காக இதை எழுதவில்லை. சிறு பிழையும் அவநம்பிக்கைக்கு வித்தாகும் என்பதால் இதை எழுதுகிறேன்.

      12 ராசிகள். ஒவ்வொரு ராசிக்கும் 30 பாகைகள். முதல் ராசி மேஷம். கடைசி ராசி மிதுனம்.

      மென் பொருள் காட்டுவதைப் பாரும். cusp 7 ல் 27.23 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்த ஜாதகத்தில் 7ம் வீடான மேஷ ராசி 27 பாகைகளில் முடிகிறது என்று அர்த்தம்.

      அதாவது mundane astrology படி முதல் வீடான மேஷ ராசி 27.23 ல் முடிகிறது என்று அர்த்தம். அதாவது மேஷ ராசி 1 ம் பாகையில் தொடங்கி 27.23 பாகையில் முடிகிறது என்று அர்த்தம். இப்போது பாருங்கள் சரியாக வரும்.

      நீக்கு
    11. பாவக கணக்கீடுகள் பற்றிய கணித விஷயங்களை சற்று ஆய்வு செய்யுங்கள் அன்பரே ! தங்களின் கேள்விக்கு விடை கிடைக்கும், மேலும் ஜாதக கணிதம் பற்றிய துல்லியமான கணித விஷயங்களையும் ஆய்வு செய்யுங்கள் தங்களுக்கு தெளிவு கிடைக்கும், மாறாக 12 ராசிகளை மட்டும் அடிப்படையாக கொண்டு கேள்வி கேட்பதை விடுங்கள், ஜோதிட கணிதம் பற்றி தெரியாதவர்கள் கேட்க்கும் கேள்விகளை போல் உள்ளது தங்களின் கேள்விகள், முதலில் ராகு 9ல் இருக்கின்றாரா ? 8ல் இருக்கின்றாரா ? என்ற கேள்விக்கு ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்களா ?

      நீக்கு
  3. ராகுவைப் பற்றித்தான் இத்தனை நேரம்பேசினேன். புரியவில்லையா?
    உங்களுடைய மென் பொருளில் குறிப்பிட்டிருப்பது கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் பாவத்தின் ஆரம்பமல்ல. பாவத்தின் முடிவு. 1ம் பாவம் (கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் துலாம் )179 டிகிரியில் தொடங்கி 207ல் முடிவடைகிறது.

    இதைப்போலவே 9ம் பாவம் (கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் மிதுனம் ) 56ல் தொடங்கி 85ல் முடிவடைகிறது. இப்போது ராகு எங்கிருக்கிறார் எனப்பாருங்கள்.(60.53 பாகை)

    இப்போது கட்டத்தில் இருக்கும் கிரகங்களின் நிலையும் சரியாக இருக்கும்.

    மென் பொருட்களின் வேலையே நமது கணிக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதுதானே ஒழிய நேரத்தை வீணாக்க அல்ல.

    ராகு 9ல் இருக்கிறார் நீங்கள் நினைப்பதைப்போல 10 இல்லை என்பதைத்தான் இத்தனை நேரம் விளக்கினேன். ஆரம்பப் பாடம்படிக்கவேண்டியது நீங்கள்தான் போலிருக்கிறது.

    இதை இத்துடன் விடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1 ம் பாவகம் துலாம் ராசியில் உள்ள 207:23 பாகையில் துவங்கி விருச்சிக ராசியில் உள்ள 236:19 பாகையில் முடிவடைகிறது.
      2 ம் பாவகம் விருச்சிக ராசியில் உள்ள 236:19 பாகையில் துவங்கி தனுசு ராசியில் உள்ள 265:36 பாகையில் முடிவடைகிறது.
      3 ம் பாவகம் தனுசு ராசியில் உள்ள 265:36 பாகையில் துவங்கி மகர ராசியில் உள்ள 296:22 பாகையில் முடிவடைகிறது.
      4 ம் பாவகம் மகர ராசியில் உள்ள 296:22 பாகையில் துவங்கி கும்ப ராசியில் உள்ள 328:20 பாகையில் முடிவடைகிறது.
      5 ம் பாவகம் கும்ப ராசியில் உள்ள 328:20 பாகையில் துவங்கி மீன ராசியில் உள்ள 359:15 பாகையில் முடிவடைகிறது.
      6 ம் பாவகம் மீன ராசியில் உள்ள 359:15 பாகையில் துவங்கி மேஷ ராசியில் உள்ள 27:23 பாகையில் முடிவடைகிறது.
      7 ம் பாவகம் மேஷ ராசியில் உள்ள 27:23 பாகையில் துவங்கி ரிஷப ராசியில் உள்ள 56:19 பாகையில் முடிவடைகிறது.

      8 ம் பாவகம் ரிஷப ராசியில் உள்ள 56:19 பாகையில் துவங்கி மிதுன ராசியில் உள்ள 85:36 பாகையில் முடிவடைகிறது. ( இந்த 8ம் பாவகத்தில்தான் ராகு பகவான் 60:53 பாகையில் அமர்ந்து இருக்கிறார் )

      9 ம் பாவகம் மிதுன ராசியில் உள்ள 85:36 பாகையில் துவங்கி கடக ராசியில் உள்ள 116:22 பாகையில் முடிவடைகிறது.
      10 ம் பாவகம் கடக ராசியில் உள்ள 116:22 பாகையில் துவங்கி சிம்ம ராசியில் உள்ள 148:20 பாகையில் முடிவடைகிறது.
      11 ம் பாவகம் சிம்ம ராசியில் உள்ள 148:20 பாகையில் துவங்கி கன்னி ராசியில் உள்ள 179:15 பாகையில் முடிவடைகிறது.
      12 ம் பாவகம் கன்னி ராசியில் உள்ள 179:15 பாகையில் துவங்கி துலாம் ராசியில் உள்ள 207:23 பாகையில் முடிவடைகிறது.

      179:15 பாகையில் லக்கினம் ஆரம்பித்தல் ஜாதகருக்கு கன்னி லக்கினம் என்றாகிவிடும் அன்பரே !

      மேலும் ராகு பகவானின் திசை 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனை ஏற்று நடத்துவதாக குறிப்பிட்டு இருக்கிறோமோ தவிர, ராகு 10ல் அமர்ந்து இருக்கிறார் என்று குறிப்பிடவில்லை, ராகு 10ம் பாவக பலனை ஏற்று நடத்துவது எப்படி என்பது உயர் கணித சார ஜோதிடம் கற்று உணர்ந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்,

      ஒரு கிரகம் தாம் அமர்ந்த இடத்தின் பலனைத்தான் தனது திசை நடத்தும் என்று பொதுவான கருத்து, சார ஜோதிடம் உணர்ந்தவர்களுக்கு ஒரு கிரகம் எங்கு அமர்ந்து இருந்தாலும் சரி, தனது திசையில் வேறு பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் வல்லமை உண்டு என்பது தெளிவாகும்.

      ஒரு விஷயத்தை விவாதிப்பதற்கு முன்பு குறிப்பிட்ட விஷயத்தில் தெளிவு பெற்ற பின் விவாதியுங்கள் , இதற்க்கு மேல் விளக்கம் தர என்னால் இயலாது அன்பரே, சற்று விஷயம் தெரிந்தவர்களுடன் கலந்து உரையாடுங்கள், இல்லையெனில் எனது அலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் 9443355696

      நீக்கு