திங்கள், 2 ஜனவரி, 2017

திருமணம் தாமதம் ஆக காரணம் சர்ப்பதோஷமா ? நல்ல கணவர் கிடைப்பாரா ?


கேள்வி :

 அய்யா எனக்கு தற்போழுது வயது 29 ஆகிறது, திருமணம் தாமதமாக சர்ப்ப தோஷம் என்பதை காரணமாக சொல்கின்றனர், எனது திருமணம் தாமதம் ஆக உண்மையான காரணம் என்ன? நல்ல அன்பான, பொருத்தமான கணவர் கிடைப்பாரா? திருமணம் எப்பொழுது நடைபெறும்? 



பதில் :

லக்கினம் : கும்பம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : விசாகம் 2ம் பாதம்.

தங்களது சுய ஜாதகத்தில் சாயாகிரகங்கள் எனும் ராகு கேது முறையே 2,8ம் பாவகங்களில் அமர்ந்து சம்பந்தப்பட்ட பாவகத்தை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றனர், மேலும் களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகமும் கடுமையான பாதிப்பை பெற்று உள்ளது தங்களது ஜாதகத்தில், களத்திர வாழ்க்கை மற்றும் குடும்பம் சார்ந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், இதனால் தங்களுக்கு திருமண தடைகளும், திருமணம் சார்ந்து எடுக்கும் முயற்சிகள் யாவும் படுதோல்வியையும் தருகின்றது, ஒருவரது சுய ஜாதகத்தில் குடும்பம் அல்லது களத்திர ஸ்தானம் இரண்டில் ஒன்று பாதிக்கப்படுமாயின் சிறிது காலதாமதத்திற்க்கு பிறகு இல்லற வாழ்க்கை அமையும், இருப்பினும் தாம்பத்திய வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்களை தரக்கூடும், குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் இரண்டும் பாதிக்கப்படுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு உக்காந்ததல்ல, ஏனெனில் திருமண வாழ்க்கை வெகு தாமதமாக, காலம் தாழ்ந்தே நடைபெறும், நடைபெற்றாலும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று சொல்வதற்கு இல்லை.

தங்களின் ஜாதகத்தில் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகுகேது, தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களும், களத்திர ஸ்தானம் வலிமை இன்மை, தடைபட்ட திருமண வாழ்க்கையும் தரும் என்பதே உண்மை, திருமணம் தாமதமாக உண்மையான காரணம் மேற்கண்ட ஜாதகத்தில் 2,7,8ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்படுவதும், சாயா கிரகங்களின் வலிமை இன்மையும் காரணமாக அமைகிறது, மேலும் சுய ஜாதகத்தில் கால புருஷ  தத்துவ அமைப்பிற்கு குடும்பம் மற்றும் களத்திர வீடு என்று அழைக்கப்படும், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகள் தங்களுக்கு முறையே சுக ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானமாக அமைந்து இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, இதனால் தங்களது சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு  2,7 ம் பாவகங்களும் பாதிக்கப்பட்டு, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்பம் மற்றும் களத்திரம் என்று அழைக்கப்படும் ரிஷபம் மற்றும் துலாம் ராசியும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால், தங்களுக்கு திருமணம் ஆக இவ்வளவு தடைகளும், தாமதங்களும் ஏற்படுகிறது.

தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் திசை ( 19/09/2015 முதல் 18/09/2032 வரை ) தங்களுக்கு 1,4,7,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களையும், 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளையும் தந்து கொண்டு இருப்பது தெளிவாகிறது, புதன் திசை வலிமை அற்ற 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது தங்களது திருமண வாழ்க்கையில் வரும் தடைகளுக்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது, சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கைக்கு உண்டான பாவகங்கள் வலிமை அற்று, நடைபெறும் திசையும் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதால், தங்களின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது, தற்போழுது நடைபெறும் புதன் திசை புதன்   புத்தியில் திருமண வாழ்க்கை அமைய சற்று வாய்ப்பு குறைவு, அடுத்து வரும் கேது புத்தியிலும் வாய்ப்பு குறைவு, அதற்க்கு அடுத்து வரும் சுக்கிரன் புத்தியில் 2ம் பாவாக பலன் நடைமுறைக்கு வருவதால், சுக்கிரன் புத்தியில் திருமணம் நடைபெற அதிக வாய்ப்பு உண்டு, தற்போழுது நடைபெறும் புதன் புத்தியில் சனியின் அந்தரத்தில் நடைபெறவும் சிறிது வாய்ப்பு உண்டு, எனவே காலம் அறிந்து செயல்படவும்.

குறிப்பு :

 தங்களது சுய ஜாதகத்தில் பெரும்பாலான  பாவகங்கள் கடுமையான பாதிப்பில் உள்ளதால், தங்களுக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள்  மிக மிக வலிமை உள்ளதாக தேர்வு செய்வது அவசியமாகிறது, சர்ப்ப கிரகங்களின் தாக்குதல்களில் இருந்து விடுபட, ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகில் உள்ள தங்கமேடு "தம்பிக்களை அய்யன்" கோவிலுக்கு சென்று சர்ப்ப சாந்தி பரிகாரம் மேற்கொண்டு நலம் பெறுக.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக