Wednesday, January 11, 2017

காதல் கைகூடுமா ? எனது காதலர் மூலம் நல்ல இல்லற வாழ்க்கை அமையுமா?கேள்வி :

 கடந்த ஒரு வருடமாக நான் ஒருவரை காதலித்துக்கொண்டு இருக்கின்றேன், அவரை திருமணம் செய்துகொள்ள இயலுமா? எனது  அவரை திருமணம் செய்துகொண்டால்  எனது எதிர்காலம் எப்படி இருக்கும்? தற்போழுது படித்துக்கொண்டு இருக்கின்றேன் நல்ல வேலை கிடைக்குமா?லக்கினம் : கன்னி 
ராசி : விருச்சிகம் 
நட்ஷத்திரம் : விசாகம் 4ம் பாதம் 

 கடந்த ஒரு வருடமாக நான் ஒருவரை காதலித்துக்கொண்டு இருக்கின்றேன், அவரை திருமணம் செய்துகொள்ள இயலுமா?

பதில் : 

சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களின் காதல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும், தாங்கள் விரும்பும் நபர் தங்களுக்கு மிகுந்த இன்னல்களையும் திடீர் இழப்புகளையும் ஏற்படுத்துவார், தாங்கள் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளால், பிராண ஆபத்துகள் கூட ஏற்படலாம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, தங்களது ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் வலிமை குன்றி காணப்படுகிறது என்பதால், சற்று எச்சரிக்கையுடன் இருப்பதே தங்களுக்கு நன்மையை தரும், இல்லை எனில் தற்போழுது கற்றுக்கொண்டு இருக்கும் கல்வியில் தடை ஏற்படும், சம்பந்தப்பட்ட நபரால், தாங்கள் பலவித துன்பத்திற்க்கு ஆளாவீர்கள் என்பது மட்டும் உண்மை, மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை இன்றி இருப்பதும் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், தங்களுக்கு பெருவாரியான இன்னல்களை தாங்களே தேடிக்கொள்ளும் சூழ்நிலையை தரும், தங்களின் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை பெரியோர்களின் அறிவுரைப்படியும், தாங்களே நன்கு ஆலோசித்து முடிவு செய்வது நலம் இல்லை எனில் தங்களின் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும்.

பெற்றோர் இதற்க்கு சம்மதம் தெரிவிப்பார்களா?

நிச்சயம் சம்மதிக்க வாய்ப்பில்லை, ஏனெனில் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தை விட, பெற்றோரை குறிக்கும் 4,10ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது, 4ம் பாவகம் தந்தை வழியிலும், 10ம் பாவகம் தாய் வழியிலும் தடைகளை ஏற்படுத்துவார்கள், தாங்களது ஜாதகத்திலும் லக்கினம் வலிமை இல்லை என்பதால் தாங்கள் துணிந்து ஓர் முடிவை எடுக்க இயலாது , களத்திர ஸ்தானமும் வலிமை இல்லை என்பதால் தங்களது காதலரும் விட்டால் போதும் என்று ஓடிவிடும் நிலையில் இருப்பார்.

அவரை திருமணம் செய்துகொண்டால்  எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?

தங்களது காதலரை திருமணம் செய்துகொள்ள தங்களுக்கு சிறிதும் வாய்ப்பு இல்லை, ஒரு வேலை வறட்டு பிடிவாதமாக திருமணம் செய்துகொண்டால், மண் குதிரையை நம்பி நடு ஆற்றில் இறங்கியதற்கு ஒப்பான பலன்களை தாங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும், மறுமணம் அல்லது பிராண ஆபத்து உண்டாகும்.

தற்போழுது படித்துக்கொண்டு இருக்கின்றேன் நல்ல வேலை கிடைக்குமா?

இது ஞாயமான கேள்வி தங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், ஒரு பட்டய படிப்பிற்கு பிறகு நல்ல வேலை அமையும், இதன் மூலம் தங்களது வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும், தற்போழுது உள்ள இனக்கவர்ச்சியை காதல் என்று நம்பி தங்களது வாழ்க்கையை தாங்களே கெடுத்துக்கொள்ள வேண்டாம், சுய ஜாதகத்தில் ஜீவனம் மற்றும் லாபஸ்தானங்கள் மிகவும் வலிமை பெற்று இருப்பதும், தற்போழுது நடைபெறும் புதன் திசை தங்களுக்கு 5,11ம் வீடுங்கள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்த பெற்று முழு வீச்சில் 100% விகித நன்மைகளை செய்வதால் அதற்குண்டான நன்மைகளை தேடி பெறுங்கள், நல்ல சிந்தனை தெளிவான அறிவாற்றல் தங்களின் வாழ்க்கைக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், மனம் சொன்னபடி நடப்பதை விட்டு விட்டு, அறிவு சொல்லும் நல்ல விஷயங்களை ஏற்று சகல அதிர்ஷ்டங்களையும் பெறுக  வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

2 comments:

 1. Dear Sir,

  My DOB : 09.01.1990, Time of Birth : 3:40 PM Place of Birth : Salem. I have been communicated that, before end of Guru dasa- Budhan Bhukti, I will be married. But so far nothing happened related to this. More over, Astrologer Communicated i will be married to known person & she might be from different caste. Is this is the right one ? I'm not able to take any decisions firmly. Y this so ? when i will be able to take decisions firmly in my marriage and when i will be married ?, How will be my marriage life ?

  Note: I was in crush earlier, but thier parents where not interested and even i'm fed up with the things and now i also not interested. But she stands saying only its myself.

  Her DOB :
  10.04.1992
  Time : 12:15 AM
  place: Vilupuram  If i need to contact separately and get it clarified. Please let me know the same.

  Hope you will answer my queries.

  Expecting you Reply. Please answer the same.  Regards,
  Sakthivel M

  ReplyDelete
 2. வணக்கம் அன்பரே, தாங்கள் எனது மின் அஞ்சலுக்கு தொடர்பு கொண்டு, முறையாக ஜாதக ஆலோசனை பெற்று கொள்ளவும், மின் அஞ்சல் முகவரி : jothidadeepam@gmail.com, cell : 9443355696

  ReplyDelete