சனி, 7 ஜனவரி, 2017

தொழில் நிர்ணயம் : சுய தொழில் செய்வதற்கு ( பால் பண்ணை ) ஏற்ற ஜாதகமா ?


கேள்வி :

புதியதாக சுய தொழில் துவங்கலாம் என்று இருக்கின்றேன், எனது ஜாதகம் சுய தொழில் செய்வதற்கு ஏற்றதா? குறிப்பாக பால் பண்ணை வைத்து வியாபரம் செய்யலாம் என்று இருக்கின்றேன், இந்த தொழில் எனக்கு லாபகரமாக அமையுமா? தொழில் முன்னேற்றம் எப்படி அமையும்? தொழில் துவங்க இது உகந்த நேரமா? சற்று விரிவான விளக்கம் தரவும்.


லக்கினம் : கன்னி 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : புனர்பூசம் 4ம் பாதம் 

பதில் :

" உத்தியோகம் புருஷ லட்சணம் " என்ற முதுமொழிக்கு ஏற்ப ஒருவர் செய்யும் தொழில், அவருக்கு சமூகத்திலும், உறவுகள் வழியிலும் மிகுந்த மதிப்பு மரியாதை மற்றும் கௌரவத்தை பெற்று தரும் என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, தாம் பெற்ற தொடர்புகளுக்கு ஏற்ற நன்மை தீமை பலன்களை பாரபட்சம் இன்றி வாரி வழங்கும், இதில் ஒருவரது ஜீவன ( சுய தொழில் ) வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் ஜாதகத்தில் கர்ம ஸ்தானம் எனும் 10ம் பாவக வலிமை மட்டும் அல்ல, மற்ற பாவகங்களின் வலிமையையும் கருத்தில் கொண்டு சரியான தொழிலை தேர்வு செய்வதே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு 100% விகித தொழில் வெற்றிகளை வாரி வழங்கும், மேற்கண்ட ஜாதகருக்கு பொருத்தமான வெற்றியை நல்கும் தொழில் எது? என்பதனையும், அவரது கேள்விகளுக்கு உண்டான பதில் என்ன? என்பதனையும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

சுய தொழில் மூலம் வெற்றிவாகை சூட சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் :

1) நான்கு கேந்திரங்களான ( 1,4,7,10 ம் ) பாவகங்கள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருப்பது தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்க அவசியமாகிறது, லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகரின் சுய உழைப்பு, தொழில் மீது ஜாதகர் காட்டும் ஆர்வம், தொழில் நுணுக்கம் ஆகியவற்றை ஜாதகர் கிரகித்துக்கொள்ளும் பேராற்றல் என ஜீவன ஸ்தான வெற்றியை நிர்ணயம் செய்ய லக்கினம் வலிமை பெறுவது மிக முக்கியமாகிறது, சுக ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தொழில் வழியில் பயன்படுத்திடும் உபகரணங்கள் சார்ந்த அறிவு, அதன் வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகள், தொழிலார்களிடம் காட்டும் இணக்கம் மற்றும் நல்ல குணம், வண்டி,வாகனம், இடம் மற்றும் தொழில் ஸ்தாபனம் மூலம் ஜாதகர் பெரும் யோகங்கள் பற்றி சுக ஸ்தானமே நிர்ணயம் செய்யும்.

 களத்திர ஸ்தானம் வலிமை ஜாதகர் செய்யும் தொழிலில் கூட்டு முயற்ச்சி, கூட்டாளிகள் மூலம் ஜாதகர் பெரும் யோகம், வியாபார விருத்தி, பொதுமக்களுடனான அறிமுகம், ஏற்றுமதி இறக்குமதி மூலம் ஜாதகர் பெரும் யோகம், பிரபல்ய யோகம் என ஜாதகர் செய்யும் தொழில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற களத்திர ஸ்தான வலிமை அவசியமாகிறது, ஜீவன ஸ்தான வலிமை ஜாதகர் தான் செய்யும் தொழில் மீதான ஈடுபாடு மற்றும் அக்கறையை காட்டும், மேலும் சுய தொழில் செய்வதற்கு ஏற்றவர்தானா? என்பதை நிர்ணயம் செய்வதே ஜீவன ஸ்தான வலிமைதான், மேலும் ஜாதகர் செய்யும் தொழில் வெற்றியினை 100% விகிதம் நிர்ணயம் செய்வது ஜீவன ஸ்தான வலிமையே என்றால் அது மிகையில்லை, தொழில் வழியில் ஜாதகர் எடுக்கும் முடிவுகள், சரியான தனக்கு உகந்த தொழில் தேர்வு, ஸ்திர தன்மையிலான விருத்தி, எந்த சூழ்நிலையிலும் தனது தொழிலை திறம்பட நடத்தும் நிர்வாக திறமை, தனது கட்டளைக்கு அனைவரையும் அடிபணிய செய்யும் வல்லமை, தனது செயல்கள் மூலம் சிறப்பாக தொழிலை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் யோகம், சரியான முடிவுகளை சரியான நேரத்தில் மேற்கொள்ளும் தனித்திறமை என, ஒருவரது ஜீவன வாழ்க்கையில் பெரும்பாலான திட்டமிடுதல்களை நடைமுறைக்கு கொண்டுவர சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமை அவசியமாகிறது.

2) கோண ஸ்தானங்களான ( 5,9 ம்  ) பாவகங்கள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு தொழில் ரீதியாக அறிவு பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்கும், சரியான தொழில் தேர்வை செய்வதற்கு அடிப்படையாக விளங்குவது  மேற்கண்ட பாவகங்களின் வலிமையே என்றால் அது மிகையில்லை, எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறான தொழிலை தேர்வு செய்து அதில் மிகுந்த நஷ்டத்தை அனுபவிக்கும் நிலையை தாராது, சரியான நபர்கள், சரியான தொழில் எது என்பதனை மிக துல்லியமாக ஜாதகருக்கு உள்ளுணர்வாக உணர்த்துவது மேற்கண்ட பாவகங்களின் வலிமையே, பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் அறிவு திறனையும் சமயோசித புத்திசாலித்தனத்தையும், காலநேரம் அறிந்து செயல்படும் நேர்த்தியான ( smart work ) வேலைபாட்டினை வாரி வழங்கும் வல்லமை கொண்டது, பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் ரீதியான அனுபவத்தையும், வருமுன் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்தும், தனது தொழில் வளர்ச்சிக்கான சரியான நபர்களை தன்னுடன் இணைத்து வைக்கும் வல்லமை பாக்கிய ஸ்தானத்திற்கு அதிகம் உண்டு, மேலும் தனது தொழில் ரீதியான நற்ப்பெயரை பொதுமக்கள் மனதில் வேரூன்ற செய்யும் வல்லமையும் இந்த பாக்கிய ஸ்தானத்திற்கு உண்டு, எனவே சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகங்கள் வலிமைபெறுவது சம்பந்தபட்ட ஜாதகரின் அறிவார்ந்த செயல்பாடுகளை மேன்மைப்படுத்தும்.

3) சுய ஜாதகத்தில் ( 2,6,8,12 ம் ) பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் வருமான வாய்ப்பு, பேச்சு திறன், வாக்கு வன்மையையும், 6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் குறுகிய கால லாபங்களை, சத்ரு வழியில் வரும் வெற்றிகளையும், 8ம் பாவக வழியில் இருந்து செய்தொழிலில் கிடைக்கும் புதையலுக்கு நிகரான வருமானத்தையும், 12ம் பாவக வழியில் செய்த முதலீடுகள் வழியில் இருந்து பெரும் மிதமிஞ்சிய லாபங்களை குறிக்கும், தானம் சார்ந்த முன்னேற்றம் மற்றும் பொருளாதார தன்னிறைவை மேற்கண்ட பாவக வலிமையே நிர்ணயம் செய்யும்.

4) சுய ஜாதகத்தில் ( 3,11 ம் ) பாவகங்கள்  வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு, 3ம் பாவக வலிமையே ஜாதகர் எடுக்கும் முயற்சிகளில் பெரும் வெற்றிகளையும், செல்வ செழிப்பையும் தரும், சுய தொழில் மூலம் வெற்றிவாகை சூட 3ம் பாவகம் மிக மிக வலிமையாக இருப்பது அவசியமாகிறது, 11ம் பாவக வலிமை செய்தொழில் ஜாதகர் பெரும் அதிர்ஷ்டம் மற்றும் தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை, புதிய முயற்சிகள் மூலம் லாபங்களை குவிக்கும் யோகம், நீடித்த அதிர்ஷ்டம், திட்டமிடுதல்கள் அனைத்தையும் நடைமுறைக்கு கொண்டுவரும் யோகம் என சகல யோகங்களையும் ஜாதகருக்கு ஜீவன ரீதியாக வாரி வழங்கும்.

5) மேற்கண்ட பாவக வலிமையுடன், தற்போழுது நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசைகளும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகர் வெற்றிகரமான தொழில் அதிபராக திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை, ஒருவேளை சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின், நடைபெறும் திசை மற்றும் எதிர்வரும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை மட்டும் ஏற்று நடத்தினால், சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதானால் யாதொரு இன்னல்களும் ஏற்படாது, நடைபெறும் திசை தரும் நன்மையான பலாபலன்களை ஜாதகர் ஜீவன ரீதியான வெற்றிகளை அனுபவிக்க செய்யும் என்பது கண்கூடான உண்மை.

ஜாதகரின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :

1) எனது ஜாதகம் சுய தொழில் செய்வதற்கு ஏற்றதா?

நிச்சயமாக ஏற்றது, ஏனெனில் சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் மிகவும் வலிமை பெற்று இருப்பதால் 100% விகித தொழில் வெற்றிகளை வாரி வழங்கும்.

2) பால் பண்ணை வைத்து வியாபரம் செய்யலாம் என்று இருக்கின்றேன், இந்த தொழில் எனக்கு லாபகரமாக அமையுமா?

சுய ஜாதகத்தில் சர நீர் தத்துவ ராசியான கடகம் 100% விகிதம் வலிமை பெற்று லாப ஸ்தானமாக அமைவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம்  ராசியாகவும் அமைவதால் பால் பண்ணை வியாபாரம் தங்களுக்கு மிக பொருத்தமான தொழிலாக அமையும், மேலும் ஸ்திர நீர் ராசியான விருச்சிகம் மற்றும்  உபய நீர் ராசியான மீனமும் வலிமை பெற்று இருப்பது தங்களை இந்த தொழிலில் கொடிகட்டி பறக்க வைக்கும், சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருப்பதால் தங்களுக்கு இந்த தொழில் மிக மிக லாபகரமாக அமையும்.

3) தொழில் முன்னேற்றம் எப்படி அமையும்? தொழில் துவங்க இது உகந்த நேரமா?

சுய ஜாதகத்தில் அனைத்து பாவகங்களும் நல்ல வலிமையுடன் இருப்பது தங்களுக்கு சிறப்பான தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்கும், அதில் சிறிதளவும் மாற்றம் இல்லை, மேலும் உதாரணம் சொல்ல வேண்டும் எனில் Amul நிறுவனம் பெற்ற வெற்றிக்கு ஒப்பான தொழில் முன்னேற்றத்தை தங்களுக்கு வாரி வழங்கும். தொழில் துவங்க இதுவே காலதாமதம் என்று சொல்லவே "ஜோதிடதீபம்" கடமைபட்டுள்ளது.

தற்போழுது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் புதன் திசை ( 09/12/2001 முதல் 09/12/2018 வரை ) 1,3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பெரிய அளவிலான வெற்றிகளை தரவில்லை என்ற போதிலும், எதிர்வரும் கேது திசை ( 09/12/2018 முதல் 09/12/2025 வரை ) தங்களுக்கு 2,6,10,12ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் யோக பலன்களை தருவதாலும், இதுவே தங்கள் சுய தொழில் துவங்க சரியான நேரம், மேலும் தற்போழுது நடைபெறும் புதன் திசை சனி புத்தியும்  2,6,10,12ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது சுய தொழில் துவங்குவதற்கு உண்டான நல்ல வாய்ப்பை வாரி வழங்கும், மேலும் கேது திசைக்கு பிறகு வரும் சுக்கிரன் திசை ( 09/12/2025 முதல் 09/12/2045 வரை )  4ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் 100% விகித யோக பலனையே தருவது தங்களுக்கு செய்யும் தொழில் வழியில் இருந்து ராஜயோக பலன்களையும், அபரிவிதமான தொழில் வளர்ச்சியையும் வாரி வழங்கும், எனவே காலதாமதம் இன்றி உடனடியாக சுய தொழில் செய்வதற்கு உண்டான ஆயத்த பணிகளை மேற்கொள்ளுங்கள், இறைஅருள் தங்களுக்கு துணை நிற்கும் "வாழ்த்துக்கள்"

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக