Tuesday, January 24, 2017

வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் சுபயோக வாழ்க்கை !


சுயஜாதக பொதுபலன்கள்

தனது குழந்தையின் எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுகோள் வைத்த தகப்பனாருக்கு, இறை அருள் கொடுத்த அதிர்ஷ்டமிகு வாரிசு என்று சொல்வதில் "ஜோதிடதீபம்" பெருமை கொள்கிறது, மேலும் குழந்தையின் ஜாதகத்தை பற்றியும், அதில் உள்ள சுபயோக பலன்கள் பற்றியும், இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! தோன்றின் புகழோடு தோன்றுக என்ற குறளுக்கு ஏற்ப யோக வாழ்க்கையை பெரும் சிறந்த ஜாதகம் என்பதை சொல்வதற்கு " ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

லக்கினம் : தனுசு
ராசி : மகரம்
நட்சத்திரம் : திருவோணம் 3ம் பாதம்ஜாதகத்தில் மிக மிக வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,5,6,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, இலக்கின பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிக லாபம், செல்வ செழிப்பு, பரஸ்பர உதவி, நோய்குணமடைதல், வருமுன் காப்பது, எண்ணம் ஈடேறுதல், திருமணத்தால் யோகம், நல்ல புத்திர பாக்கியம் என்ற வகையில் நன்மைகளை தரும், ஜாதகரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், நல்ல உடல் ஆரோக்கியம், சிறந்த மன நலம், தெளிவான புத்திகூர்மை, அனைத்தையும் முற்போக்கு சிந்தனையுடன் கையாளும் வல்லமை, எதிர்ப்புகளை சிறப்பாக கையாளும் வல்லமை, நல்ல வளரும் சூழ்நிலை, நல்லவர் சேர்க்கை மூலம் வாழ்க்கையில் சகல நலன்களையும் பெரும் யோகம், எந்த சூழ்நிலையிலும், தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை கைவிடாத மன நிலை என வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை தங்குதடையின்றி பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிர்ஷ்டத்தின் தாக்கத்தை பெரிய அளவில் உணரும் வாய்ப்பை தரும் குறிப்பாக குல தேவதையின் அருள் பரிபூர்ணமாக கிடைக்க பெறுவார், லாட்டரி, பங்கு சந்தையில் நல்ல லாபமும் திடீர் அதிர்ஷ்டமும் உண்டாகும், தனது புத்திசாலி தனத்தால் தனக்கு வரும் யோகங்களை தக்கவைத்துகொள்ளும் வலிமையை ஜாதகர் இயற்கையாகவே பெற்று இருப்பார், மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது, தனது குடும்பம் குழந்தைகள், வாழ்க்கை துணை என அனைவரிடத்திலும் அன்பு பாராட்டும் யோகம் உண்டாகும், இனிமையான வாழ்க்கைக்கு உண்டான அனைத்து திட்டமிடுதல்களும் ஜாதகரிடம் எப்பொழுதும் கைவசம் இருக்கும், மிதம் மிஞ்சிய அறிவு திறன் ஜாதகரின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் பெற்று தரும்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர், அனைத்திலும் சுலப வெற்றிகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும், லாட்டரி பங்கு சந்தையில் அடிகடி லாபம் பெரும் யோகத்தை நல்கும், நல்ல வேலையாட்கள் அமைவார்கள், உடல் நலனில் மிகுந்த அக்கறை எடுத்துகொள்வார்கள், குருகியகால வெற்றிகள் இவர்களுக்கு அதிக புத்துணர்ச்சியை வாரி வழங்கும், மற்றவர்கள் தோல்வியுறும் துறையில் இவர்களின் வெற்றி சிறப்பாக பேசப்படும், எதிர்கால வாழ்க்கைக்கு உண்டான சேமிப்புடன் மிக சிறப்பான யோக வாழ்க்கையை பெறுவார்கள்.

7ம் பாவக வழியில் இருந்து சிறப்பான நண்பர்கள் சேர்க்கை, வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை, பொதுமக்கள் ஆதரவு, வாழ்க்கை துணையின் உதவிகளை பரிபூர்ணமாக பெரும் யோகம், கூட்டு தொழில் வழியில் இருந்து வரும் நிறைவான லாபம், தனிப்பட்ட ஆசைகளை பரிபூர்ணமாக பெரும் யோகம், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினர் ஆதரவை பெறுதல், மக்கள் செல்வாக்கின் மூலம் அரசியல் பாதவிகளையும், கௌரவ பதவிகளையும் அலங்கரிக்கும் யோகம், தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம், வாழ்க்கை துணைக்கு நல்ல யோகம், என ஜாதகர் களத்திர ஸ்தான வழியில் இருந்து சகல யோகங்களையும் பெறுவார்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர், மனதில் நினைத்த எண்ணங்கள் யாவும் நிறைவேறும் வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பெரும் அதிர்ஷ்டத்தை குறிக்கும், தனது சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கைக்கு குறைவிருக்காது, மேலும் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை உண்டாகும், வழக்குகள் மூலம் சொத்து சேர்க்கை, எதிர்ப்பவர்கள் வழியில் இருந்து வரும் லாபம், தன்னிறைவான பொருளாதார வசதி, எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் சொத்து சேர்க்கை, பொதுமக்கள் ஆதரவு வழியில் இருந்து வரும் வருமானம், அரசியலில் புகழ், அந்தஸ்து மற்றும் பதவிகள் தேடி வருதல் என ஒரு முழுமையான யோக வாழ்க்கை உண்டாகும், ஜாதகருக்கு குறை ஒன்றும் இல்லை என்ற நிலையை தரும், முதலீடுகளில் அதிக லாபம் கிடைக்கும், நீண்ட ஆயுள் உண்டு நல்ல ஆரோக்கியம் உண்டு , மேலும் ஜாதகர் ஆயுள் பாவக வழியிலான அதிர்ஷ்டங்களை தங்கு தடையின்றி பெறுவார்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிறைவான அதிர்ஷ்டசாலியாக திகழ்வார், அனைத்திலும் லாபமும், நல்ல குணமும் ஜாதகருக்கு தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை வாரி வழங்கும், எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை குறையாத யோக வாழ்க்கையை தரும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையும், லட்சியங்களில் வெற்றியும் உண்டாகும், எதிர்ப்புகள் அனைத்தும் இவர்களுக்கு சாதகமாக மாறும், தனது சரியான திட்டமிடுதல்கள் மூலம் சகல நன்மைகளையும் தங்கு தடையின்றி பெறுவார்கள், எதிர்கால வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள், எந்த சூழ்நிலையிலும் வாக்கு தவறாத நேர்மையானவர்களாக திகழ்வார்கள்.

2,3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு  பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு கூட்டாளிகள் மூலம் அதிக லாபம், அதிர்ஷ்டம் உண்டாகும், கான்ராக்ட் தொழில் வழியில் அதிக லாபமும், ஏஜென்சி மூலம் கை நிறைவான வருமானமும் உண்டாகும், வழக்குகள் மூலம் பெரும் சொத்து சுகம் சேரும், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வருமான வாய்ப்புகளை தந்துகொண்டே இருக்கும், நிலையான தொழில் நல்ல வருமானம் ஆகியவை சிறப்பாக அமையும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், வாக்கு வன்மையும், இனிமையான பேச்சு திறனும் தங்களுக்கு சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் தரும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் ஆசைகள் மற்றும் லட்சியங்கள் நிறைவேறும், சிறந்த வியாபர ஆளுமையை தரும், நிறைவான வாகன வசதி, பண்ணை மற்றும் விவசாயத்தில் நல்ல லாபம் உண்டாகும், கை நிறைவான வருமானம் மூலம் அதிக சொத்து சுக சேர்க்கை உண்டாகும், உண்மை சத்தியத்தில் ஈடுபாடும், ஜோதிடத்தில் புலமையும், கலை துறையில் தேர்ச்சியும், கணிதத்தில் தனி திறமையும் உண்டாகும், ஜாதகருக்கு திருமணத்திற்கு பிறகு யோக வாழ்க்கை உண்டாகும், மதிப்புக்கு உரிய செயல்களால் உலக புகழ் பெரும் வாய்ப்பு ஏற்படும், விளையாட்டில் அதித ஆர்வம் உண்டாகும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சிறந்த அறிவாளி என்பதும், பயணங்களில் அதீத ஆர்வம் கொண்டவர் என்பதும் தெளிவாகிறது, இறை அருளின் கருணை ஜாதகர்  எங்கு சென்றாலும் காத்து நிற்கும், பல ஆன்மீக பெரியோர்களின் ஆசியும், பல திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகமும் ஜாதகருக்கு இயற்கையாகவே ஏற்படும், ஆராய்ச்சி மனப்பான்மையும், உயர் கல்வி, பட்டைய படிப்பில் சிறந்து விளங்கும் யோகத்தை தரும், புலனுக்கு அப்பாற்பட்ட அறிவு திறனும், மறைபொருள் உணரும் சக்தியும், ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்து இருக்கும்.

4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 4ம் பாவக வழியில் இருந்து நிறைவான சொத்து சுக சேர்க்கையும், அதிக அளவிலான வண்டி வாகன யோகமும் உண்டாகும், மேலும் தொழில் ரீதியான சிறப்பான முன்னேற்றம் உண்டாகும், தாய் வழியிலான ஆதரவு, பொருட் சேர்க்கை உண்டாகும், நற்பெயரும் புகழும் தேடிவரும், சகல நிலைகளிலும் ஆள் வசதி, மக்கள் ஆதரவு, பெரிய சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம், அரசு வழியிலான ஆதாயம் மட்டும் கவுரவம் உண்டாகும், அரசியலில் சிறப்பான வெற்றி, சமூக அந்தஸ்து ஜாதகரை தேடி வரும், பரிபூர்ண சுகபோக வாழ்க்கை ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் தரும்.

1௦ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நல்ல அந்தஸ்தை பரிபூர்ணமாக பெறுவார், நண்பர்கள் உதவி மூலம் தொழில் துறையில் வெற்றி, கூட்டு முயற்சி மூலம் அதிக லாபம், நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம், தன்னிறைவான பொருளாதர வசதி வாய்ப்புகள், அதிக அளவிலான சொத்து சுக சேர்க்கை, அனைத்து தரப்பினரிடமும் அன்பாக பழகும் வாய்ப்பு, எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி வாய்ப்பு, எதிர்ப்புகளை களைந்து வெற்றிநடை போடும் யோகம், சுய தொழில் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை பெறுவதற்கு உண்டான சந்தர்ப்பங்கள் ஜாதகரை தேடிவரும் யோகம் என்ற வகையில் ஜீவன ரீதியான நன்மைகளை வாரி வழங்கும்.

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், நிறைய செலவு, திடீர் இழப்பு, அனைவராலும் தொல்லை, தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்கள், நல்ல உறக்கம் இன்மை, அயன சயன சுகம் இன்மை, எதிர்பாராத விபத்து என கடுமையான இன்னல்களை தரும்.தற்பொழுது நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு 2,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது வரவேற்க தக்க அம்சமாகும், மேலும் அடுத்து வரும் செவ்வாய் திசையும் ஜாதகருக்கு 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவதும் யோக பலன்களையே தரும், மேலும் இந்த காலகட்டத்தில் ஜாதகர் பால்ய வயதில் இருப்பதால், சிறப்பாக வளரும் சூழ்நிலை, ஆன்மீகத்தில் ஈடுபாடு, கல்வியில் சிறந்த தேர்ச்சி, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, சிறந்த உடல் ஆரோக்கியம், பெற்றோர் உடன் ஜீவித்திற்கும் யோகம் என மிகுந்த நன்மைகளை தரும்.

செவ்வாய் திசைக்கு பிறகு வரும் ராகு திசைதான் ஜாதகருக்கு மிதமிஞ்சிய ராஜ யோக பலன்களை வாரி வழங்குகிறது, ஏனெனில் ராகு திசை ஜாதகருக்கு 1,5,6,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, எனவே ராகு திசை காலத்தில் ஜாதகர் 1,5,6,7,8,11ம் பாவக வழியில் இருந்து சகல யோகங்களையும் அனுபவிப்பர். ராகு திசையினை தொடர்ந்து குரு திசையும் ஜாதகருக்கு 1,5,6,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று லாப ஸ்தான பலனை தருவது தொடர் அதிர்ஷ்டங்களை ராகு மற்றும் குரு திசை காலங்களில் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

குறிப்பு :

குழந்தையின் ஜாதகத்தில் 12ம் பாவகத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே குழந்தைக்கும், குழந்தையின் பெற்றோருக்கும் மிக சிறப்பான நன்மைகளும் யோக பலன்களுமே நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது, இதுவே சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு துல்லியமாக காணும் ஜாதக பலாபலன்கள் . "வாழ்த்துக்கள்"

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment