புதன், 25 ஜனவரி, 2017

திருமணபொருத்தம் : சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையில் திருமண பொருத்தம் காணும் முறை !


திருமண பொருத்தம் காண்பதில் சுய  ஜாதகத்தில் பாவக வலிமையின் அடிப்படையில் காண்பது, தாம்பத்திய வாழ்க்கையில் சகல நலன்களையும் தரும், குறிப்பாக தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும், 2ம் பாவகம் வலிமை பெறுவது இனிமையான குடும்ப வாழ்க்கை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தையும், 5ம் பாவகம் வலிமை பெறுவது சிறந்த புத்திகூர்மை மற்றும் நல்ல புத்திர பாக்கியத்தையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியர் இருவருக்கும் நல்ல தாம்பத்தியம் மற்றும் சமூக அந்தஸ்த்தையும், 8ம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியருக்கு நீண்ட ஆயுள் மற்றும் ஒருவர் வழியில் ஒருவர் பெரும் பொருளாதார முன்னேற்றத்தையும், 12ம் பாவகம் வலிமை பெறுவது இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் திருப்திகரமான தாம்பத்திய வாழ்க்கையையும் தரும், எனவே தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் மேற்கண்ட 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது, வெற்றிகரமான இல்லற வாழ்க்கையை நல்கும்.

கீழ்கண்ட வரனுக்கும், வதுவுக்கும் சுய ஜாதக ரீதியாக பாவக வழியிலான பொருத்தம் எத்தனை சதவிகிதம் உள்ளது என்பதனை, இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

வரன் ஜாதகம் 


லக்கினம் : துலாம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம்

பாவக தொடர்புகள் :

 2,5ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் உள்ளது.
7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தரும் அமைப்பில் உள்ளது.
8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது.

மேலும் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, ராகு திசையில் எதிர்வரும் சுக்கிரன் புத்தி ( 21/02/2017 முதல் 21/02/2020 வரை ) 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது சிறப்பான அம்சமாகும். எனவே ஜாதகர் சுக்கிரன் புத்தியில் திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை எடுப்பது சால சிறந்தது, விரைவாக இல்லற வாழ்க்கையை அமைத்து தரும்.

வது ஜாதகம் 


லக்கினம் : சிம்மம் 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : பூரம் 2ம் பாதம் 

2,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது.
5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது சிறப்பான யோகங்களை தரும்.
7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்பை தரும்.

மேலும் தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி  ஜாதகிக்கு 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை வழங்கி கொண்டு இருக்கின்றது, அடுத்து வரும் ராகு புத்தி ( 28/05/2017 முதல் 16/06/2018 வரை ) ஜாதகிக்கு வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாகும்.

வரனின் ஜாதகத்தில் 6,7,8,12ம் வீடுகள் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது, வதுவின் ஜாதகத்தில் 2,4,6,8,10,12ம் வீடுகள் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒருவர் ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவகம்  மற்றோருவர் ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்று இருப்பது பரஸ்பர தாம்பத்திய வாழ்க்கையில் நன்மைதரும் அமைப்பாகும், மேலும் வரனுக்கு எதிர்வரும் சுக்கிரன் புத்தியும், வதுவுக்கு எதிர்வரும் ராகு புத்தியும் சிறப்பான நன்மைகளையே வழங்குவது, மிகுந்த யோகத்தை தாம்பத்திய வாழ்க்கையில் வாரி வழங்கும்.

தற்போழுது வரனுக்கு நடைபெறும் ராகு திசை வலிமையற்ற 12ம் பாவக பலனையும், எதிர்வரும் ராகு திசை வதுவுக்கு வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், ஏக நேரத்தில் இருவருக்கும் நடைபெறும் திசை அவயோக பலனை வழங்கினால் மட்டுமே, தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்களை தரும்.

வரனுக்கும், வதுவுக்கும் எதிர்வரும் திசைகளான குரு மற்றும் ராகு திசைகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது, சிறப்பான தாம்பத்திய வாழ்க்கையை நல்கும் என்பதினால், அவர்களின் விருப்பப்படி திருமணம் நடத்தி வைக்கலாம், பொருத்தமான ஜாதக அமைப்பே " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக