செவ்வாய், 10 ஜனவரி, 2017

கேது திசை தரும் கெடுதல்களும், சுய ஜாதகத்தில் கேது பகவான் பெரும் வலிமையும் !


 சாயா கிரகங்களான ராகு கேது ஒருவரது சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமர்வது மிதமிஞ்சிய யோக பலன்களை வாரி வழங்கும், என்பதில் மாற்று கருத்து இல்லை, மேலும் தாம் அமரும் பாவகத்தை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வல்லமை சாயா கிரகங்களுக்கு உண்டு, கீழ்க்கண்ட ஜாதகருக்கு எதிர்வரும் கேது திசை தரும் பலன்கள் என்ன? கேது திசையில் ஜாதகர் அனுபவிக்கும் யோக அவயோகங்கள் பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 

பொதுவாக சுய ஜாதக வலிமை என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து தரும், சுய ஜாதகம் வலிமை அற்ற நிலையில் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை தரும், சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பானது அல்ல, ஏனெனில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், இதனை தவிர்க்கவும் இயலாது என்பது வருந்தத்தக்க விஷயமாகும், இதை கீழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : மகரம் 
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : உத்திரட்டாதி 3ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1ம் வீடு களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான யோக வாழ்க்கையை ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து நல்கும்.

2,6,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து நல்ல வருமானம், சிறந்த குடும்பம், வாக்கு வன்மை, பொருளாதர ரீதியான தன்னிறைவு என்ற வகையிலும், சத்ரு ஸ்தான வழியில் இருந்து பதவியில் வெற்றி, அதிகாரிகள் அன்பு, உத்தியோக ஆர்வம், சொந்த முயற்ச்சியில் முன்னேற்றம் ஜீவன ரீதியான முன்னேற்றங்கள் என்ற வகையிலும், களத்திர ஸ்தான வழியில் இருந்து தாமத திருமணம், நல்ல வாழ்க்கை துணை, அரசியல் வெற்றிகள், வியாபாரத்தில் வெற்றி, சமூக அந்தஸ்த்து என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

4,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு கடுமையான இன்னல்களையும், 4ம் பாவக வழியில் இருந்து சுக போகங்களில் தடைகளையும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகளையும், 10ம் பாவக வழியில் இருந்து நிலையான ஜீவனம் அற்ற தன்மையையும் வாரி வழங்கும்.

ஜாதகத்தில் கடுமையான பாதிப்பை தரும் பாவக தொடர்புகள் :

3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 3ம் பாவக வழியில் எடுக்கும் முயற்சிகளில் தோல்விகளையும், 5ம் பாவக வழியில் இருந்து பூர்வீக ஜீவனம் அற்ற நிலையையும், சமயோசித அறிவுத்திறன் அற்ற நிலையையும், 9ம் பாவக வழியில் இருந்து யாருடைய உதவியையும் பெற இயலாத நிலை, 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமற்ற தன்மையையும் தரும், ஜாதகத்திலே மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகங்கள் மேற்கண்ட 3,5,9,11 என்றால் அது மிகையில்லை, எனவே ஜாதகருக்கு 4 பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது, மேலும் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகரை வெகுவாக பாதிக்கும்.

தற்போழுது நடைபெறும் புதன் திசை ( 28/02/2000 முதல் 28/02/2017 வரை ) ஜாதகருக்கு 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான இன்னல்களை தந்துகொண்டு இருக்கின்றது, திடீர் இழப்புகள், மனஅழுத்தம், மன நிம்மதியின்மை, கடும் குழப்பம், மனப்போராட்டம் என புதன் திசை ஜாதகருக்கு யோகம் அற்ற நிலையினையே தருகின்றது.

எதிர் வரும் கேது திசை ( 28/02/2017 முதல் 28/02/2024 வரை ) தரும் பலன்களை ஜாதகர் எதிர்கொள்வதுதான், அவருக்கு இருக்கும் சவால், ஏனெனில் 3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை மட்டும் ஏற்று நடத்துகிறது, இதனால் ஜாதகர் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர்  எடுக்கும் முயற்சிகள் அனைத்த்தும் வெற்றியை தாராது, 5ம் பாவக வழியில் கற்ற கல்வியில் சுய அறிவு திறனும் பலன் தாராது, பூர்வீக ஜீவனம் அற்ற நிலையை தரும், 9ம் பாவக வழியில் இருந்து பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்காமல் துன்பப்படும் நிலையை தரும், 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பிற்போக்கு தனமான செயகைகளினால் தனது வாழ்விற்கு தானே துன்பத்தை தேடிக்கொள்வார், அதிர்ஷ்டம் ஜாதகருக்கு வெகு தொலைவிலேயே நின்றுகொள்ளும், கேது திசை முழுவதும் நடைபெறும் பாதக ஸ்தான பலனை ஜாதகர் எதிர்கொள்வது என்பது சற்று சிரமமான காரியமாகவே அமையும், மேலும் இந்த கேது திசை ஜாதகருக்கு இளமை  பருவத்தில் நடைபெற்று, பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும், ஆனால் சுய ஜாதகத்தில் கேது பகவான் 5ல் அமர்வதும் வலிமை பெற்று இருப்பதும் கவனிக்கத்தக்க அம்சமாகும்.

குறிப்பு :

ஜாதகரை முறையான ப்ரீதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெற முயற்சிக்கலாம், மேலும் 3,5,9,11ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை அனுபவித்து கழித்துக்கொள்வதே சாலச்சிறந்தது, சுக்கிர வழிபாடு செய்வது ஜாதகருக்கு மென்மையான யோக பலன்களை வாரி வழங்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக