பின்தொடர...

Thursday, January 5, 2017

சுய தொழில் செய்யலாமா? அல்லது வேலைக்கு செல்வது நல்லதா? நடைபெறும் புதன் திசை தரும் பலன்கள் என்ன ?


கேள்வி :

2005 முதல் 2015 ம் வருடம் வரை வெளிநாட்டில் பணியாற்றினேன், தற்போழுது சொந்த ஊரில் சுய தொழில் செய்யலாம் என்று இருக்கின்றேன்? எனது ஜாதகப்படி சுய தொழில் செய்தால் முன்னேற்றம் உண்டா? அல்லது வேலைக்கு செல்வதே நன்மையை தருமா? தற்போழுது நடைபெறும் புதன் திசை எனக்கு நன்மைகளை வழங்குமா? எதிர்காலம் எப்படி இருக்கும்.


லக்கினம் : மிதுனம்
 ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : திருவாதிரை 3ம் பாதம்

எனது ஜாதகப்படி சுய தொழில் செய்தால் முன்னேற்றம் உண்டா? அல்லது வேலைக்கு செல்வதே நன்மையை தருமா?

பதில் :

தங்களது சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று இருப்பது வரவேற்க தக்க விஷயமாகும்,  ஏனெனில் சுய ஜாதகத்தில் மேற்கண்ட வீடுகள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுயமாக ஜீவன வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உதவும், மேலும் தங்களது ஜாதகத்தில் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவதும் ஜீவன ஸ்தானம் உபய ராசியில் அமைவதும் சிறப்பான விஷயம், 11ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது செய்யும் தொழில் வழியில் தனது அறிவு திறனை பயன்படுத்தி சிறப்பான முன்னேற்றங்களை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும், ஜீவன ஸ்தானம் தொடர்பு உபய ராசியுடனும், லாப ஸ்தான தொடர்பு சர ராசியுடன் சம்பந்தம் பெறுவது  தங்களுக்கு சுய தொழில் விருத்தியினை பன்மடங்கு வாரி வழங்கும்.

மேலும் 2,4,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களது ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற அமைப்பாகும், 2ம் பாவக வழியில் இருந்து பன்மடங்கு லாபத்தையும், கைநிறைவான வருமான வாய்ப்புகளையும் வாரி வழங்கும், இனிமையான குடும்ப வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இல்லற வாழ்க்கையை வழங்கும், 4ம் பாவக வழியில் இருந்து வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, சுகபோகங்கள், இடம் நிலம், வீடு  மற்றும் நிறுவனம் ஆகியவற்றில் முதலீடு மற்றும் அதன்வழியில் ஆதாயம் மற்றும் லாபம் பெரும் யோகத்தை தரும், 7ம் பாவக வழியில் இருந்து கூட்டு முயற்சியில் வெற்றி, கூட்டு தொழிலில் அபரிவிதமான லாபம், வியாபாரம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் அபரிவிதமான லாபம், வெளிநாடுகளில் இருந்து வரும் தொழில் வாய்ப்புகள் என தன்னிறைவான தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்கும் அமைப்பாகும், எனவே தங்களது சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது, சுய தொழில் செய்வதே சாலச்சிறந்த யோக வாழ்க்கையை நல்கும், மேலும் தாங்கள் செய்யும் தொழில் தனிப்பட்ட முறையிலும் அமையலாம் அல்லது கூட்டு தொழில் முறையிலும் அமையலாம், இதில் எந்த பிரச்சனையும் இல்லை, தங்களின் முடிவே இறுதியானது, தனித்து செயல்பட்டாலும், கூட்டு தொழில் செய்தாலும் தங்களுக்கு 100% விகித வெற்றியே உண்டாகும், வேலைக்கு செல்வது தங்களின் வாழ்க்கையில் மிக பெரிய அளவிலான முன்னேற்றங்களை வழங்க வாய்ப்பு இல்லை, சுய தொழில் செய்வதே தங்களின் முன்னேற்றத்திற்கும், எதிர்கால யோக வாழ்க்கைக்கும் உகந்ததாக அமையும்.

தற்போழுது நடைபெறும் புதன் திசை எனக்கு நன்மைகளை வழங்குமா? எதிர்காலம் எப்படி இருக்கும்.

தற்போழுது நடைபெறும் புதன் திசை தங்களுக்கு 2,4,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 11ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 5,11ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, எனவே புதன் திசை முழுவதும் தாங்கள் 2,4,5,7,11ம் பாவக வழியில் இருந்து சிறப்பான யோங்களையே பெறுவீர்கள் என்பதனால், புதன் திசை தங்களுக்கு 100% விகித யோகங்களை தனக்கு தடையின்றி வாரி வழங்கும் என்பதனால் புதன் திசை தரும் யோக பலன்களை தாங்கள் ஏற்றுக்கொள்ளும் வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள், எதிர்கால வாழ்க்கை தங்களுக்கு மிகவும் பிரகாசமாக உள்ளது என்பதே தங்களின் ஜாதக நிலை, ஒருவரது சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெற்றும், லாப ஸ்தானமான 11ம் வீடும் வலிமை பெற்று இருப்பின், ஜாதகர் சுய தொழில் செய்து வெற்றி காணலாம், மேலும் நடைமுறையில் உள்ள திசையும் வலிமை பெற்ற பாவாக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் ஜீவன வாழ்க்கையில் தோல்வி என்பதே இல்லை என்பதனால், தாங்கள் சுய தொழில் செய்வதற்கு உண்டான ஆயத்த பணிகளை இனி மேற்கொள்ளலாம், இதுவே "ஜோதிடதீபம்" தங்களுக்கு வழங்கும் ஆலோசனை வாழ்த்துக்கள்.

குறிப்பு :

ஜீவன ஸ்தானம் தங்களுக்கு உபய ராசியிலும், லாப ஸ்தானம் சர ராசியிலும் அமைவது தொழில் அதிபர் எனும் அந்தஸ்த்தை விரைந்து வழங்கும் அமைப்பாகும் என்பதை கவனத்தில் கொள்க, மேலும் ஜீவன ஸ்தான, லாப ஸ்தான அதிபதியாக வரும் கிரகத்தை கருத்தில் கொண்டு சரியான தொழிலை தேர்வு செய்து நலம் பெறுக.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment