வியாழன், 5 ஜனவரி, 2017

எனது ஜாதகம் யோக ஜாதகமா? அவயோக ஜாதகமா? தெளிவுபடுத்துங்கள் !

 

சுய ஜாதக வலிமையை நிர்ணயம் செய்வதில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களுக்கும் உரிமை உள்ளது எனலாம், குறிப்பாக சுய ஜாதகத்தில் கோண வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின் அறிவு திறனையும், கேந்திர வீடுகள் வலிமை பெறுவது வசதி வாய்ப்பு மற்றும் பொருளாதார யோகங்களையும், சமவீடுகள் வலிமை பெறுவது செயலாற்றும் காரியங்களில் வெற்றிவாய்ப்பையும், புகழையும் வாரி வழங்கும், இதன் அடிப்படையில் சுய ஜாதகத்தில் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டு ஆய்வு செய்தால், ஒருவரது ஜாதகம் யோக ஜாதகமா? அவயோக ஜாதகமா? என்பதில் தெளிவு பெறலாம், மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகள் மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகரின் வாழ்க்கையில் அவயோகங்களை வாரி வழங்கும், குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ( சர லக்கினத்திற்கு 11ம் வீடு பாதக ஸ்தானம், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீடு பாதக ஸ்தானம், உபய லக்கினத்திற்கு 7ம் வீடு பாதக ஸ்தானம் ) கடுமையான அவயோகங்களை வாரி வழங்கும், ஜாதகரால் தவிர்க்க இயலாத இன்னல்களுக்கு ஆளாக்கும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : கன்னி 
ராசி : கும்பம் 
நட்ஷத்திரம் : அவிட்டம் 4ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகரின் கேள்வி எனது ஜாதகம் யோக ஜாதகமா? அவயோக ஜாதகமா? 

ஒருவரின் ஜாதகத்தில் யோக அவயோகங்களை நிர்ணயம் செய்வதில் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே அடிப்படையாக அமைகிறது, இவரது ஜாதகத்தில்  லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் தொடர்புகளை பற்றி ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

ஜாதகத்தில் வலிமையுள்ள பாவக தொடர்புகள் :

3,5,7ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 3,5,7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு யோக பலன்களை வழங்கும்.

11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு மீதம் மிஞ்சிய யோக பலன்களை 11ம் பாவக வழியில் இருந்து முழு வீச்சில் தரும்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2,4,6,10,12ம் பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களையும் ( பொருளாதாரம்) வாரி வழங்கும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 8ம் பாவக வழியில் இருந்து பூர்ண ஆயுளை தந்தபோதிலும், திடீர் இழப்புகளையும், மருத்துவ செலவுகளையும் வாரி வழங்கும்.

1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை எவ்வித தாட்சண்ணியம் இன்றி வாரி வழங்கும், மேலும் சுய ஜாதகத்திலே கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு இதுவே என்றால், அது மிகையல்ல.

எனவே மேற்கண்ட ஜாதகத்தில் 9,11ம் பாவாக வழியில் இருந்து ஜாதகருக்கு யோக  நிகழ்வுகள் நடைமுறைக்கு வந்த போதிலும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானம், ஆயுள் ஸ்தானம் மற்றும் விரைய ஸ்தான தொடர்புகள் பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், எனவே இவரது ஜாதகத்தில் பெரும்பாலான பாவக தொடர்புகள் பாதிக்கப்பட்டு இருப்பதால், சுய ஜாதகத்தில் யோகங்களை தரும் பாவக வழியிலான நன்மைகளையும் ஜாதகரால் பெற இயலாது என்பதே உண்மையான ஜாதக நிலை.

மேற்கண்ட ஜாதகத்தில் யோகங்களை தரும் பாவாக தொடர்பும் உண்டு, அவயோகங்களை தரும் பாவக தொடர்பு உண்டு என்பதால், மிதயோக ஜாதகம் என்று உறுதி செய்யலாம், மேலும் தற்போழுது நடைபெறும் குரு திசையும், எதிர்வரும் சனி திசையும் முறையே விரைய ஸ்தானம் மற்றும் பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்துவதால், ஜாதகருக்கு வெகுவான அவயோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும், நடைபெறும் குரு திசை தரும் இன்னல்களை விட, எதிர்வரும் சனி திசையே ஜாதகருக்கு மிதமிஞ்சிய அவயோக பலன்களை வாரி வழங்கும், ஏனெனில் எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்   பெற்று கடுமையான அவயோக பலன்களை பாதக ஸ்தான வழியில் இருந்து  நடத்த ஆரம்பிக்கும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

வாழ்க வளமுடன் 
 ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக