புதன், 8 மார்ச், 2017

தொழில் வெற்றிகளை வழங்கும் ஜீவன ஸ்தான வலிமை - 1



சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில், தொழில் மற்றும் வேலை வாய்ப்பினை சிறப்பாக அமைத்து தரும், சுய ஜாதகத்தில் 10ம் வீடு பாதிப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவன ரீதியான சிரமங்களை தரக்கூடும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவதும் , சரியான இளம் வயதில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவதும், ஜாதகருக்கு ஜீவன ரீதியாக யாதொரு தடையும் இன்றி, அவருக்கு உகந்த தொழில் வாய்ப்பினை சுயமாகவோ, அடிமை தொழிலாகவோ இயற்கையாக அமைத்து தந்துவிடும், ஜாதகர் ஜீவன ரீதியாக யாதொரு இன்னல்களையும் சந்திக்கமால், தனது வாழ்க்கையில் வெற்றிநடை போட ஆரம்பித்து விடுவார், மேலும் ஜீவன முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு தன்னிரைவாகவும், பொருளாதார ரீதியான வசதி வாய்ப்புகளையும் வாரி வழங்கி விடும்.

மாறாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு வலிமை அற்று காணப்படுவது ( 6,8,12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது அல்லது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது ) ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவன ரீதியான கடுமையான போராட்டங்களை தந்து விடும், குறிப்பாக ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவிலான இன்னல்களை தந்துவிடும், அடிப்படையில் ஜாதகருக்கு சரியான வயதில் ஓர் வேலை அல்லது தொழில் அமைவது குதிரை கொம்பாக மாறிவிடும், தனக்கு ஏற்ற வேலை எது என்று உணர்ந்துகொள்ளவே ஜாதகருக்கு பல வருடங்கள் பிடிக்கும், தனக்கு உகந்த வேலையைதான் செய்து வருகிறோமா ? என்று அறியாமலே சூழ்நிலை கைதி போல் மற்றவருக்காக தனது உழைப்பை சிந்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், சுய கவுரவம் வெகுவாக பாதித்த போதிலும், ஜீவனத்தை கருத்தில் கொண்டு, அடிமை சேவகம் செய்யும் சூழ்நிலையை தரும், அடிப்படையிலேயே ஜாதகருக்கு பரதேஷ ஜீவனம் வாய்த்துவிடும், தனது குடும்பம், பெற்றோர், உடன் பிறப்பு, குழந்தைகள் மற்றும் உறவுகளை விட்டு  வேறு இடத்தில் சென்று ஜீவிக்கும் சூழ்நிலையை தரும்.

சுய ஜாதகத்தில் மற்ற பாவகங்கள் வலிமை பெற்று இருந்தாலும், அதன் வழியிலான பலாபலன்களை ஜாதகர் அனுபவிக்க இயலாது சூழ்நிலையை தரும், தனது தகுதிக்கு உகந்த வேலை இல்லை என்று தெரிந்தும் ஜாதகர்  அதில்  இருந்து வெளிவர ஜாதகரின் பொருளாதாரம் இடம் தாராது, ஜாதகர் செய்யும்  சுய முயற்சிகள் யாவும் கடும் தோல்வியை தரும், பொதுவாக ஜீவன ஸ்தான வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, சுய தொழில் செய்தாலோ, அல்லது அடிமை தொழில் செய்தாலும் குறுகிய காலத்தில் ( 3 வருடங்களில் இருந்து 5 வருடங்களுக்குள் ) தன்னிறைவான பொருள் வசதியையும், மிகப்பெரிய தொழில் முன்னேற்றங்களையும் வாரி வழங்கி விடும், ஜீவன ஸ்தான பாதிப்பு என்பது கிணற்றில் போட்ட கல் மாதிரி யாதொரு சிறு அசைவும் இன்றி துவங்கிய நிலையில் ஜாதகர் எப்படி இருந்தாரோ அதே நிலையில் வைத்திருக்கும், ஜீவன ரீதியான முன்னேற்றங்கள்  என்பது ஜாதகருக்கு சிறிதும் ஏற்படாது, இந்த சூழ்நிலையில் உள்ள அன்பர்கள் தனது சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவாக உணர்ந்து கொண்டு மாற்று வழிகளை நடைமுறைக்கு கொண்டுவந்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம், அதற்க்கு உறுதுணையாக அமைவது அவர்களது சுய ஜாதகத்தில்  உள்ள பாவக வலிமையே என்றால் அது மிகையில்லை.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை குன்றும் பொழுது ஜாதகர் பெரும் இன்னல்களை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : புனர்பூசம் 4ம் பாதம்

மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு திடீர் இழப்பை தர கூடிய  ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகரின் ஜீவன ரீதியான இன்னல்களை தரும், குறிப்பாக தொழில் அல்லது வேலை வழியிலான சங்கடங்கள், அதிக வேலை பளு, திருப்தி அற்ற வேலை, வேலை செய்யும் இடத்திலும், பொது வாழ்க்கையிலும் கடுமையான சிக்கல்கள், ஓர் ஸ்திரமான முடிவு எடுக்க இயலாமல் தடுமாறும் சூழ்நிலை, செய்யும் காரியங்கள் யாவிலும் ஏமாற்றம், அடிக்கடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு வேறு வேலையை தேடிக்கொண்டு இருப்பது, ஜீவன ரீதியான ஸ்திர தன்மை இல்லாமல் வீண் அலைச்சல் அலையும் தன்மை என்ற வகையில் கடுமையான இன்னல்களை தரும்.

மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் மட்டும் அல்ல கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன வீடான மகரம் தொடர்பு பெறுவது பாதக ஸ்தானத்துடன் என்பது மிகுந்த இன்னல்களை தொழில் மற்றும் ஜீவன ஸ்தான வழியில் இருந்து தரும், சுய ஜாதகத்திலும் ஜீவன ஸ்தானம் பாதிக்கப்பட்டு, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ராசியான மகரமும் பாதிக்கப்படுவது ஜாதகரின் அடிப்படை ஜீவனத்தை கேள்விக்குறியாக மாற்றும், ஜாதகருக்கு கிட்டத்தட்ட 27 வயது நெருங்கிவிட்டது இருப்பினும் நல்லதொரு சிறு வேலையும் இதுவரை  கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படுவது ஜாதகருக்கு எவ்வித பலன்களை தருகிறது என்பது  மேற்கண்ட ஜாதகமே ஓர் சரியான உதாரணம்.

சரி சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடும், கலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரமும் கடுமையாக பாத்திக்கப்பட்டு விட்டது, நடைபெறும் திசா புத்தியாவது ஜாதகருக்கு யோக பலன்களை தருகின்றதா? என்பதை கவனத்தில் கொண்டு ஆய்வு செய்யும் பொழுது, தற்போழுது  நடைபெரும் புதன் திசை ஜாதகருக்கு 4,6,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4,6,7ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தந்து கொண்டு இருக்கின்றது, புதன் திசையில் தற்போழுது நடைபெறும் சந்திரன் புத்தி ஜாதகருக்கு 12ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, அவமானம், உடல் நல பாதிப்பு, அனைத்திலும் நஷ்டம், அமைதி இல்லா மனம், தேவையற்ற சவகாசம் மற்றும் பூர்வீகத்தை விட்டு பரதேச ஜீவனத்தை தந்து கொண்டு இருக்கின்றது .

ஜாதகரின் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் மற்றவர்களை நம்பி முதலீடு செய்து தொழில் செய்ய விரும்பினால் திடீர் இழப்பு நிச்சயம் உண்டு, கூட்டு முயற்சி செய்து தொழில் செய்யலாம் என்றால் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது கூட்டாளிகள் வழியில்  கோவணம் வரை உருவிவிட்டு விடும், பொருட்களை வைத்து ( வீடு நிலம் வண்டி வாகனம், தொழில் உபகரணம் ) தொழில் செய்யலாம் என்றால் அடிப்படையே ஆட்டம் காணும், எனவே ஜாதகருக்கு உள்ள ஜீவன ரீதியான வாய்ப்புகளை ஆய்வு செய்வோம் (3,9) பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது சிறு வியாபாரம் செய்யலாம், அல்லது கல்வி நிறுவனத்தில் வேலை செய்யலாம், (11 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானம் ) லாப ஸ்தானம் வலிமை பெறுவதால் ஒருவேளை திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு தொழில் முயற்சிகளில் இறங்கலாம், இருப்பினும் திருமணம் நடைபெறவே மிகுந்த  கால  தாமதம் ஆக கூடும், ஆனால் குருட்டு அதிர்ஷ்டம் ஜாதகருக்கு உண்டு என்பதால் 11ம் பாவக வழியிலான ஜீவனத்தை ஆய்வு செய்து, 11ம் பாவக சம்பந்தம் பெற்ற தொழில்களை செய்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

ஜாதகருக்கு 3,9,11ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக 2,4,5,6,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், ஜாதகர் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை அற்ற ஜாதகர்கள் சுய தொழில் செய்ய சிறிதும் யோகம் அற்றவர்கள் என்பதை அவர்களது ஜீவன ஸ்தானம் வலிமையே நன்றாக உணர்த்துகிறது என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

அடுத்த பதிவில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற ஓர் ஜாதகத்தை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக