புதன், 22 மார்ச், 2017

ராகுகேது புத்திர ஸ்தானமான 5ம் பாவகத்தில் அமர்வது, புத்திரபாக்கியத்தை வழங்காதா ?



சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம்  பாவகத்தில் சாயா கிரகமான, ராகு அல்லது கேது அமர்வது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, ஜாதகிக்கு புத்திர பாக்கிய தடைகளை தரும் என்பதும், புத்திர பாக்கியம் ( ஆண் வாரிசு ) இல்லாத நிலையை தரும் என்பதும், சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகுகேது தனது ஆளுமையின் மூலம் புத்திர பாவகத்திற்கு வழங்கும் வலிமை அல்லது வலிமை இன்மையை கருத்தில் கொள்ளாமல் கூறப்படும் பொது கருத்து என்பதை, ஓர் உதாரண ஜாதகம் கொண்டு "ஜோதிடதீபம் " தெளிவு படுத்த விரும்புகிறது, சுய ஜாதகத்தில் சாயா கிரகமான ராகு கேது புத்திர பாவகத்தில் அமர்ந்திருக்கும் பல ஜாதகங்களை புத்திர பாக்கியம் கிடையாது என்று திருமண பொருத்தத்தில் நிராகரிப்பதும், ஜோதிட உண்மைக்கு புறம்பானது.

 ஒருவருக்கு புத்திர ஸ்தானத்தில்தான் ராகுகேது அமர்ந்து இருக்கின்றதா? என்பதில் முதலில் தெளிவு பெறுவது அவசியம், அப்படி புத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகுகேது தான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்கின்றனரா? அல்லது வலிமை இழக்க செய்கின்றனரா ? என்பதில் தெளிவு பெறுவது மிக மிக முக்கியமான அம்சமாக கருதவேண்டியுள்ளது, ஏனெனில் சுய ஜாதகத்தில் புத்திர பாவகத்தில் அமர்ந்த ராகு அல்லது கேது சம்பந்தப்பட்ட பாவகத்திற்கு தரும் வலிமையை பற்றி யாதொரு தெளிவும் இன்றி, குத்துமதிப்பாக புத்திரபாவகத்தில் ராகுகேது அமர்வது புத்திரபாக்கியத்தை தாராது என்று முடிவு செய்வதே அன்றி உண்மை சிறிதும் இல்லை, மேலும் சுய ஜாதகத்தில் புத்திர பாவகத்தில் அமர்ந்த ராகுகேது சம்பந்தப்பட்ட பாவகத்தை வலிமை பெற செய்தால் ஜாதகருக்கு நிச்சயம் ஆண் வாரிசு உண்டு, ஒருவேளை புத்திர பாவகத்தில் அமர்ந்த ராகுகேது சம்பந்தப்பட்ட பாவகத்தை வலிமை இழக்க  செய்தால் ஆண் வாரிசு இல்லை என்று முடிவு செய்ய இயலாது, ஏனெனில் தனது  வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையையும் கருத்தில் கொள்ளவேண்டும், ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவிக்கிறாரா ? என்பதையும் கருத்தில் கொண்டு புத்திரபாக்கியம் மற்றும் ஆண் வாரிசு அமைப்பை நிர்ணயம் செய்வதே துல்லியமானதாக அமையும்.   



லக்கினம் : விருச்சிகம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

 ஜாதகருக்கு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் ( 5ம் பாவகத்திற்க்கு உற்பட்ட பாகைக்குள் ) ராகு பகவான் மிகவும் வலிமை பெற்று அமர்ந்து இருப்பது ஜாதகருக்கு அழகான, யோகம் நிறைந்த நல்ல ஆண் வாரிசை வழங்கி உள்ளது, மேலும் ஜாதகரின் முன்னேற்றம் என்பது தனது ஆண் வாரிசு மூலம் அபரிவிதமான யோக வாழ்க்கையை வாரி வழங்கியது, வழங்கி கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் ஆண் வாரிசு வளர வளர ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை தொடர்ந்து வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேற்கண்ட ஜாதகத்தில் ராகு 5ல் அமர்ந்து இருந்த போதிலும் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு ஆண் வாரிசை மட்டும் அல்ல சமயோசித புத்திசாலித்தனத்தையும் வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது, மேலும் ஜாதகரின் வாழ்க்கையில் வரும் இன்னல்களை ஆதவனை கண்ட பனிபோல் நீக்கும் அறிவு திறனையும், இறை அருளின் கருணையையும் வாரி வழங்கி இருக்கின்றது, தான் கற்ற கல்வியை ஜாதகர் தனது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பயன்படுத்தும் வல்லமையை பெற்று இருப்பது வியப்புக்கு உரியது, ஜாதகரின் தெளிவான சிந்தனை, அறிவில் விழிப்புணர்வு, விளைவறிந்து செயல்படும் தன்மை என 5ம் பாவக  வழியிலான சுப யோகங்களை ஜாதகர் தங்கு தடையின்றி பெறுவது வரவேற்கத்தக்க விஷயமாகும்.

சுய ஜாதகத்தில் ராகு 5ல் வலிமை பெற்று அமர்வது போல், கேதுவும் ஜாதகருக்கு 11ல் வலிமை பெற்று அமர்வது ஜாதகரின் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது, ஜாதகர் தனது லட்சியம் ஆசை என விருப்பம் கொள்ளும் அனைத்து விஷயங்களிலும் தன்னிறைவான யோகங்களை பெறுவதற்கு, சுய ஜாதகத்தில் வலிமை பெற்று 11ம் பாவகத்தில்  அமர்ந்து இருக்கும் கேது பகவானே முழுமுதற் காரணகர்த்தாவாக திகழ்கிறார், எனவே சுய ஜாதகத்தில் ராகு கேது அமரும் பாவகம் வலிமை பெற்று இருக்கின்றதா? வலிமை அற்று இருக்கின்றதா ? என்பதில் தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சாயா கிரகங்களால் ஏற்படும் யோகம் மற்றும்  அவயோகத்தை பற்றி மிக துல்லியமாக கூற வழிவகுக்கும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் 5ல் அமரும் ராகு அல்லது கேது சம்பந்தப்பட்ட பாவகத்தை வலிமை இழக்க செய்தால், மேற்கண்ட பலாபலன்களை எதிர்மறையான அவயோக பலாபலன்கள் ஜாதகருக்கு நடைமுறைக்கு வரும், என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

3 கருத்துகள்: