திருமண பொருத்தம் காணும் பொழுது தற்போழுது திசாசந்திப்பு அல்லது ஏக திசை நடப்பு பார்த்து திருமணம் செய்வது மிக முக்கியம் என்ற கருத்து திருமண பொருத்தம் காண்பதில், தற்போழுது பிரபல்யம் பெற்று இருக்கின்றது, இதன் தாக்கம் என்பது ஜாதக பொருத்தம் காணவரும் வரன்,வதுவின் பெற்றோரின் கேள்விகளில் இருந்தே உணர முடிகிறது, பொதுவாக திசாசந்திப்பு அல்லது ஏக திசை நடப்பு சார்ந்து இவர்கள் முன் வைக்கும் கேள்விகள், வரன், வது இருவருக்கும் ஒரே நேரத்திலோ, சிலகால இடைவெளியிலோ திசாசந்திப்பு அல்லது ஏகதிசை நடப்பு ஆகிவற்றை சந்தித்தால், தம்பதியரின் வாழ்க்கையில் இன்னல்கள் வரும், இது பொருத்தம் அற்ற நிலை என்பதால் திருமணம் செய்வது உகந்தது அல்ல என்ற கருத்தை முன் வைக்கின்றனர், இதனால் இல்லற வாழ்க்கை பாதிக்கும் என்கின்றனர், இதைப்பற்றி இன்றைய பதிவில் ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !
அடிப்படையில் திசாசந்திப்பு அல்லது ஏகதிசை நடப்பு பொருத்தம் என்பது சுய ஜாதகத்தில் வரனுக்கும், வதுவுக்கும் நடைபெறும் ( ஒரே கிரகத்தின் திசை என்ற போதிலும் ) திசை சம்பந்தப்பட்ட இருவருக்கும், எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற உண்மை நிலை அறியாத போதே மேற்கண்ட திசாசந்திப்பு அல்லது ஏகதிசை நடப்பு பொருத்தம் என்ற குழப்பம் ஏற்படுவதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, வரனுக்கும் வதுவுக்கும் தற்போழுதும் , எதிர்காலத்திலும் நடைபெறும் திசாபுத்திகள் ( ஒரே திசையாக இருப்பினும் ) சுய ஜாதகத்தில் உள்ள வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்ற உண்மை நிலையை அறிந்து பொருத்தம் காண்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று கருதுகிறோம், கீழ்கண்ட தம்பதியரின் சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை,எதிர்வரும் திசைகள் தரும் பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
வரன் ஜாதகம் :
லக்கினம் : துலாம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : பூராடம்4ம் பாதம்
வது ஜாதகம் :
லக்கினம் : ரிஷபம்
ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : திருவோணம்2ம் பாதம்.
மேற்கண்ட தம்பதியர் இருவரது ஜாதகத்திலும், தற்போழுது மற்றும் எதிர்வரும் திசை தரும் பலன்கள் :
ஜாதகருக்கு தற்போழுது ராகு திசை ( 09/05/2007 முதல் 08/05/2025 வரை ) நடைமுறையில் உள்ளது, தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 7ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் யோக பலனை வழங்கி கொண்டு இருக்கின்றது, எனவே ஜாதகருக்கு நடைபெறும் ராகு திசை களத்திர ஸ்தான வழியில் இருந்தும், ஜீவன ஸ்தான வழியில் இருந்தும் வலிமை பெற்ற யோக பலன்களை தருவது சிறப்பான விஷயம்.
ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் ராகு தசை ( 18/05/2001 முதல் 18/05/2019 வரை ) தனது திசையில் 3,6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான அவயோக பலனை, பாதக ஸ்தான வழியில் இருந்து வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எனவே ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை அவயோக பலன்களை தருவது மிகுந்த இன்னல்களை வீர்யம்,சத்ரு மற்றும் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து தரும் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.
ராகு திசைக்கு அடுத்து வரும் குரு திசை தரும் பலன்கள் :
ஜாதகருக்கு ராகு திசைக்கு அடுத்து குரு தசை ( 08/05/2025 முதல் 08/05/2041 வரை ) நடைபெற இருக்கின்றது, நடைபெற இருக்கின்ற குரு திசை ஜாதகருக்கு 1,3,5,9ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தர இருக்கின்றது, மேலும் ஜாதகர் குரு திசை காலத்தில் 1,3,5,9ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை பெறுவது வரவேற்க தக்க அம்சமாகும்.
ஜாதகிக்கு ராகு திசைக்கு அடுத்து குரு தசை ( 18/05/2019 முதல் 18/05/2035 வரை ) நடைபெற இருக்கின்றது, நடைபெற இருக்கின்ற குரு திசை ஜாதகிக்கு 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தர இருக்கின்றது, மேலும் ஜாதகி 2,4,8,10ம் பாவக வழியில் இருந்து ஸ்திரமான யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை பெறுவது வரவேற்க தக்க அம்சமாகும்.
குரு திசைக்கு அடுத்து சனி தசை ( 08/05/2041 முதல் 08/05/2060 வரை ) நடைபெற இருக்கின்றது, நடைபெற இருக்கின்ற சனி திசை ஜாதகருக்கு 4ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, ஜாதகருக்கு அவயோக பலன்களை தர இருக்கின்றது, மேலும் ஜாதகர் சனி திசையில் சுக ஸ்தான வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், சுகபோக வாழ்க்கையில் இன்னல்களை அதிக அளவில் எதிர்கொள்வர் என்பது சனி திசையில் ஜாதகருக்கு இருக்கும் நெருக்கடி ஆகும்,
குரு திசைக்கு அடுத்து சனி தசை ( 18/05/2035 முதல் 18/05/2054 வரை ) நடைபெற இருக்கின்றது, நடைபெற இருக்கின்ற சனி திசை ஜாதகிக்கு 5,11ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் ஜாதகிக்கு மிகுந்த அவயோக பலன்களை தர இருக்கின்றது, மேலும் ஜாதகி சனி திசையில் பூர்வபுண்ணியம், லாபஸ்தானம் மற்றும் அயனசயன ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.
மேற்கண்ட தம்பதியர் இருவருக்கும் முறையே தொடர்ந்து நடைபெறும் ராகு,குரு,சனி திசை தரும் பலன்கள் என்ன என்பது தெளிவாக தெரிந்து விட்டது, இனி திசாசந்திப்பு மற்றும் ஏகதிசைநடப்பு சார்ந்த குழப்பம் தீர்ந்து ஓர் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
தம்பதியர் இருவருக்கும் நடைபெறும் திசை எதுவென்றாலும் சரி இருவருக்கும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும், அல்லது ஒருவருக்காவது வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்த வேண்டும், சில விட்டுக்கொடுத்து செல்லும் மனபக்குவத்தால் மணவாழ்க்கை சிறப்பிக்கும், இருவருக்கும் வலிமை அற்ற பாவக பலனையே, பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்தினால், திசாசந்திப்பு ஏகதிசை நடப்பு இல்லாத சூழ்நிலையிலும், திருமண வாழ்க்கை நீடிக்காது மணமுறிவுக்கு அழைத்து செல்லும் என்ற உண்மையை அனைவரும் உணர்வது அவசியமாகிறது.
திசை தரும் பலாபலன்கள் பற்றி ஓர் தெளிவு ஏற்பட்டு இருக்கும் என்று நம்புகிறோம், இனி மேற்கண்ட தம்பதியரின் ஜாதகத்தில் திருமண வாழ்க்கைக்கு உகந்த பாவக பொருத்தங்கள் உண்டா ? என்பதை சற்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்
திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய தம்பதியரின் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகங்கள் ( 2,5,7,8,12 )
ஆணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தை ( 7ம் வீடு ) தவிர மற்ற பாவகங்கள் (2,5,8,12 ம் வீடுகள் ) கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
பெண்ணின் ஜாதகத்தில் குடும்பம்,களத்திரம் மற்றும் ஆயுள் பாவகத்தை ( 2,7,8 ம் வீடுகள் ) தவிர மற்ற பாவகங்கள் ( 5,12ம் வீடுகள் ) கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
எனவே அடிப்படையிலேயே பாவக பொருத்தம் இல்லை என்பதுடன், ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது இல்லற வாழ்க்கையில் பிரிவை நோக்கி அழைத்து சென்றுள்ளது, இதற்க்கு துல்லியமற்ற ஜாதக ஆலோசனை காரணமாக அமைந்துவிட்டது ( நட்ச்சத்திர பொருத்தம் 10க்கு ஒன்பது உண்டு என்று நிர்ணயம் செய்ததே தம்பதியரின் திருமணம் வாழ்க்கை தடுமாற காரணமாக அமைந்துவிட்டது.
குறிப்பு :
சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையும், நடைபெறும் எதிர்வரும் திசைபுத்தி தரும் பலாபலன்களை கருத்தில் கொள்ளமல் திருமண பொருத்தம் நிர்ணயம் செய்வது தம்பதியரின் இல்லற வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்பதால், சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு திருமண பொருத்தம் காண்பது இனிமையான இல்லற வாழ்க்கையை வழிவகுக்கும், தாம்பத்திய வாழ்க்கையும் பரிபூர்ண நிலைய அடையும்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
வது ஜாதகத்தில் ,நட்சத்திரம் திருவோணம் ராசி மிதுனம் என்று சொல்லி உள்ளீர்களே சர்பார்க்கவும்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : திருவோணம்2ம் பாதம்.
திருவோணம் நட்சத்திரம் மகரம் ராசி தான் வரவேண்டும்