ஞாயிறு, 26 மார்ச், 2017

தொழில் நிர்ணயம் : வண்டி வாகன ( சரக்கு மற்றும் போக்குவரத்து ) தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது ஏன் ?



 தனக்கு உகந்த தொழிலை தேர்வு செய்வதில், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையிலும், மற்ற பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டது நிர்ணயம் செய்வது, சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், குறிப்பாக சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவகங்கள் வழியிலான தொழிலை ஜாதகர் தேர்வு செய்யாமல் இருப்பது ஜாதகருக்கு பெரும் நன்மைகளை வாரி வழங்கும், மேலும் தனது ஜாதக வலிமையின் அடிப்படையில் தான் சுய தொழில் செய்யலாமா ? அடிமை தொழில் செய்யலாமா? அல்லது கூட்டு தொழில் செய்வதால் முன்னேற்றம் உண்டாகுமா ? என்பதில் தெளிவு பெற்ற பிறகு, தற்போழுது நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து அதன் பிறகு, தொழில் வழியிலான முயற்சிகளை மேற்கொள்வது சகல நன்மைகளையும் தரும்.

தனக்கு உகந்த தொழிலை தேர்வு செய்வதில் ஓர் ஜாதகருக்கு குழப்பம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஜாதகரின் ஜீவன ரீதியான போராட்டங்கள் கடுமையானதாக அமையும், ஜீவன வழியிலான முன்னேற்றங்களை பெற இயலாமல் ஜாதகர் இன்னலுறும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், தொழில் ரீதியாக வரும் எதிர்ப்புகளும், முன்னேற்றம் இன்மையும் ஜாதகருக்கு வெகுவான பாதிப்புகளை வாரி வழங்கும், போராட்டம் ஒன்றே வாழ்க்கையாக மாறிவிட வாய்ப்பு அதிகம், தங்களின் சுய நம்பிக்கை மிதமிஞ்சிய அளவில் இருந்தாலும், செய்யும் தொழிலை சரியாக தேர்வு செய்யவில்லை எனில் " பாடும் பட்ட மாதிரி வீடும் கெட்ட மாதிரி " என்ற முதுமொழிக்கு உதாரணமான அமைந்துவிடும், தங்களின் கடின உழைப்பும், அறிவு திறனும் தங்களது வாழ்க்கையில் முன்னேற்றத்தை வழங்காமல், மற்றவர்களுக்கு பலன்தர ஆரம்பித்துவிடும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது, தொழில் முன்னேற்றம் என்பது ஆரம்பித்த 3முதல் 5வருடங்களில் தன்னிறைவான முன்னேற்றத்தையும், பொருளாதார வசதி வாய்ப்புகளையும் தங்களுக்கு தருகின்றது எனில் தாங்கள் தேர்வு செய்த தொழில் தங்களுக்கு உகந்தது என்பதனையும், ஆரம்பித்த 3முதல் 5வருடங்களில் யாதொரு முன்னேற்றம் இன்றி போராட்டத்தை சந்தித்து கொண்டு இருந்தால், ஜாதகர் தேர்வு செய்த தொழில் ஜாதகருக்கு உகந்தது அல்ல என்பதை உறுதியாக சொல்லிவிடலாம்.

சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்க்கு நான்காம் ராசியான கடகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு பத்தாம் ராசியான மகரமும் ஜாதகருக்கு முழு வலிமை பெற்றும், ஜாதகரின் லக்கினத்திற்க்கு சுக ஸ்தானமான நான்காம் பாவகம் மற்றும்  ஜீவன ஸ்தானமான பத்தாம் பாவகம் முழு வலிமை பெற்றும், நடைமுறையில் உள்ள திசாபுத்தியும், எதிர்வரும் திசா புத்தியும் ஜாதகருக்கு வலிமை பெற்ற மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு ( ட்ரான்ஸ்போர்ட் ) எனப்படும் வண்டி வாகன தொழில் மிக சிறப்பாக அமையும், ஜாதகர் ஒரு வண்டியில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் தொழில் அபிவிருத்தி பெற்று வண்டி வாகனங்கள் பெருகி தன்னிறைவான தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்கும், ஜாதகர் செய்யும் தொழிலில் நம்பகத்தன்மை உடையவராகவும், நிலைத்து நின்று தொழில் புரியும் வல்லமை மிக்கவராக திகழ்வார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

பொதுவாக சுய ஜாதகத்தில் எந்த லக்கினம் என்றாலும் மேஷம்,கடகம்,துலாம் மற்றும் மகர ராசிகள் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரை ஏதாவது ஒருவழியில் முன்னேற்றங்களை தந்து மிகப்பெரிய தொழில்களை திறம்பட நடத்தும் வலிமை மிக்கவராக செயல்பட வைக்கும் என்பதால், சுய ஜாதகத்தில்  மேற்கண்ட ராசிகள் பெரும் வலிமை நிலையை தெளிவாக உணர்வதும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை நிலையை தெளிவாக உணர்வதும் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவன ரீதியான ( தொழில் ) வெற்றிகளை பெறுவதற்க்கு அடிப்படையாக அமையும், வாழ்க்கையில் சிரமமில்லா தொழில் வெற்றிகளை வாரி குவிக்க நல்லதொரு வாய்ப்புகளையும், தொடர்புகளையும் ஜாதகருக்கு வாரி வழங்கும்.

குறிப்பாக மிதுனம்,கன்னி,தனுசு மற்றும் மீன லக்கின அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  ( முறையே மேஷம்,கடகம்,துலாம் மற்றும் மகரம் ) ஜாதகரின் வாழ்க்கையில் தொழில் ரீதியான வெற்றிகளை பன்மடங்கு வழங்கும், ஜாதகரின் வளர்ச்சி என்பது மற்றவர்களால் வியப்புக்கு உரிய வகையில் கவனிக்கப்படும், குறுகிய காலத்தில் பன்மடங்கு தொழில் வளர்ச்சியை பெற்று ஜாதகர் தன்னிறைவான ஜீவன முன்னேற்றத்தையும், பொருளாதார வசதி வாய்ப்புகளையும் பெறுவார், மேற்கண்ட அமைப்பு ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள திசை புத்தி மற்றும் எதிர்வரும் திசாபுத்தி ஏற்று நடத்துவது அவசியமாகிறது, மேற்கண்ட அமைப்பு ஜாதகத்தில் இருந்தாலும், நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசாபுத்தி வலிமை பெற்ற ஜீவனம் மற்றும் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில், ஜாதகத்தில் ஜீவன பாவகம் வலிமை பெற்று இருந்தாலும் அதனால் யாதொரு பயனும் இல்லை என்பதை கருத்தில் கொள்க.

குறிப்பு :

எது எப்படி இருப்பினும் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி தரும் பலாபலன்களை கருத்தில் கொண்டும் தமக்கு உகந்த தொழிலை தேர்வு செய்து, அதில் வெற்றி பெறுவதே ஜாதகருக்கு உகந்த நன்மைகளை தரும், சுய ஜாதக வலிமையை உணராமல் மற்றவர்கள் செய்கின்றனர் அதனால் நானும் செய்கிறேன் என்பது " எங்க வீட்டுகாரரும் கச்சேரிக்கு போகிறார் " என்ற கதைக்கு பொருத்தமானதாக மாறிவிடும் என்பதனை நினைவில் கொள்க.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக