பின்தொடர...

Sunday, March 5, 2017

1 நிமிடத்தில் திருமணம் பொருத்தம் பார்க்கலாம் !


கேள்வி :

1 நிமிடத்தில் திருமணம் பொருத்தம் பார்க்கலாம், என்ற புத்தகத்தை பார்த்து  பத்துக்கு ஒன்பது  பொருத்தம் உண்டு என்பதை உறுதி செய்தபின் ( பெண் நட்சத்திரம் திருவோணம் 2ம் பாதம், எனது நட்சத்திரம் பூராடம் 4ம் பாதம் ) , கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு  பெரியோர் முடிவு செய்து திருமணம் செய்துகொண்டோம், கடந்த மாதம் விவாகரத்து நடந்துவிட்டது, திருமண வாழ்க்கை மணமுறிவுக்கு அழைத்து சென்றது ஏன் ? சுய ஜாதக விபரம் அனுப்பி உள்ளேன்... விளக்கம் தர வேண்டுகின்றேன்.

பதில் :

  காக்க பிரியாணி சாப்பிட்டா காக்க குரல் வரமா ?  " உன்னிகிருஷ்ணன் " குரலா வரும்? என்ற திரைப்பட நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது அன்பரே தங்களின் கேள்வியை படிக்கும் பொழுது,  திருமண வாழ்க்கையை தசவித பொருத்தம் எனும் நட்ச்சத்திர பொருத்தம் 10 பொருத்தங்கள் மட்டுமே நிர்ணயம் செய்கிறது என்ற தங்களின் அறியாமையை எண்ணி சற்று வருத்தமாக உள்ளது, தம்பதியரின் திருமண வாழ்க்கையை வெற்றியடைய சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை, நடைபெறும் திசை, எதிர்வரும் திசை ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மை, சம்பந்தப்பட்ட பாவகங்களுக்கு கோட்சர கிரகங்கள் தரும் தாக்கம் போன்றவை மிக முக்கியமானதா அமையும் என்பதை கருத்தில் கொள்ளாமல், நட்ச்சத்திர பொருத்தம் மட்டுமே இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் என்று கருதுவது முற்றிலும் ஜோதிட உண்மைக்கு புறம்பானதாகவே கருத வேண்டி உள்ளது, தங்களது இருவரின் சுய ஜாதக வலிமையை பற்றியும், தங்களது  திருமண வாழ்க்கை பிரிவை தந்தது ஏன்?  என்பது பற்றியும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு தெளிவு பெறுவோம் அன்பரே

ஜாதகர்லக்கினம் : துலாம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : பூராடம் 4ம் பாதம்


ஆண் ஜாதகத்தில், திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பாவகங்கள் ( 2,5,7,8,12 )

தங்களது ஜாதகத்தில் 2.8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

5ம் வீடு  சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று உடல்  ரீதியான இன்னல்களை தருகின்றது.

7ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெறுவது, தங்களுக்கு வரும் வாழ்க்கை துணை மிகவும் உயர்ந்த குணம் உடையவர், தங்களுக்கு நன்மைகளை தருபவர் என்பதை உறுதி செய்கிறது.

தங்களது ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் பாவகங்களான ( 2,5,7,8,12 ) வீடுகளில் 7ம் வீடு மட்டும் வலிமை பெற்று இருக்கின்றது, மற்ற பாவகங்கள்  மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அடிப்படையிலேயே தங்களது சுய ஜாதகம் பாதிக்கப்பட்டு உள்ளது சற்று கவலை தரும் விஷயமாகும், சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் எனும் 11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிக மோசமான விளைவுகளை தரும் அமைப்பாகும்.

தங்களுக்கு ஆறுதலான விஷயம் யாதெனில் தற்போழுது நடைபெறும் ராகு திசை வலிமை பெற்ற களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மட்டும் மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், களத்திர ஸ்தானம் வலிமை பெற்றது தங்களுக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து  தந்து இருக்கின்றது.

ஜாதகி


லக்கினம் : ரிஷபம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 2ம் பாதம்

பெண் ஜாதகத்தில், திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பாவகங்கள் ( 2,5,7,8,12 )

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, இது தங்களது வாழ்க்கை துணை வழியில் இருந்து இனிமையான பேச்சு, சிறப்பான குடும்ப வாழ்க்கை, நல்ல வருமானத்தை தரும், வாழ்க்கை துணையின் மூலம் நல்ல பொருளாதார உதவி, செல்வ செழிப்பை தரும்.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் வீடு திடீர் இழப்பை தரும்  ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது ( தங்களது ஜாதகத்திலும் புத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் புத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, இது தங்களுக்கு குழந்தை பாக்கியத்தில் மிகுந்த தடைகளை தரும். )

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, தங்களுக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் ஆதரவு, அன்பு மற்றும் அன்னியோனிய இல்லற வாழ்க்கையை வழங்கும்.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 12ம் வீடு  விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, தங்களது  ஜாதகத்திலும் 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, இது தங்களது அந்தரங்க வாழ்க்கையில்  மகிழ்ச்சி அற்ற தன்மையையும், திருப்தி இல்லாத இல்லற வாழ்க்கையையும் தரும்.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் ராகு திசை 3,6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை நடத்திக்கொண்டு இருப்பது தங்களது வாழ்க்கை  துணைக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை வாரி  வழங்கும்.

தங்களுக்கு நடைபெறும் ராகு திசை சிறப்பான நன்மைகளையும், தங்களது  வாழ்க்கை துணைக்கு நடைபெறும் ராகு திசை கடுமையான பாதிப்புகளையும் தருகின்றது என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், ( இதில் ஏக திசை பொருத்தம் என்பதை கருத்தில் கொள்ள கூடாது ) மேலும் தங்களுக்கு தற்போழுது நடைபெறும் புதன் புத்தி களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தி நன்மையை செய்த போதிலும், தங்களது வாழ்க்கை துணைக்கு நடைபெறும் சந்திரன் புத்தி விரைய ஸ்தான பலனையே ஏற்று நடத்துகிறது.

தங்களது சுய ஜாதகத்தில் 2,5,8,12ம் பாவகங்கள் வலிமை இல்லை, இருப்பினும் நடைபெறும் திசாபுத்தி நன்மையை தருகின்றது.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7,8ம் வீடுகள் வலிமை பெற்று இருக்கின்றது நடைபெறும் திசாபுத்தி கடுமையான இன்னல்களை தருகிறது.

தங்களின் திருமண வாழ்க்கை பிரிவுக்கு காரணமாக தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்தியே காரணமாக அமைந்தாலும், தங்களது நடவடிக்கைகளும், சுய ஜாதக வலிமை இன்மையும் அதற்க்கு  மூல காரணமாக அமைந்து விட்டது, தங்களது வாழ்க்கை துணைக்காக தங்கள் நிறைய விஷயங்களை விட்டுக்கொடுத்து சென்று இருக்க வேண்டும் என்பதே "ஜோதிடதீபத்தின்" கருத்து.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ( 2,5,7,8,12 ) பாவகங்கள் வலிமை குன்றி இருப்பின், தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் ( 2,5,7,8,12 ) பாவகங்கள் மிகவும் வலிமை பெற்று இருப்பதுடன், இருவருக்கும் நடைபெறும் திசை எதுவென்றாலும், வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் அமைப்பில் இருக்குமாறும் தேர்வு செய்வது, திருமண வாழ்க்கை வெற்றிகரமாக நடத்த வழிவகுக்கும், என்பதை கருத்தில் கொள்வது நல்லது, இதற்க்கு முரணாக வாழ்க்கை துணையை தேர்வு செய்தால் இல்லற வாழ்க்கை வெகு விரைவில் கசந்து இன்னல்களை அதிக அளவில் தந்து, திருமண வாழ்க்கையில் பிரிவை தந்துவிடும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment