கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவனம் மற்றும் லாப ஸ்தான அதிபதியான சனி, தனது திசையில் இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, சுய ஜாதகத்தில் நடைபெறும் சனி திசை தரும் பலன் ( சனி தனது திசையில் ஏற்று நடத்தும் பாவக தொடர்பு ) பற்றி ஓர் தெளிவில்லாமல் கூறப்படும் கருத்தாகவே இருக்கும், ஒருவருக்கு சனி திசை நடைபெறும் பொழுது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட ஜாதகர் ஏற்று நடத்தும் பாவக வழியிலான நன்மைகளையும், வலிமை அற்ற பாவாக பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட பாவக வழியிலான இன்னல்களையும், பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால், பாதக ஸ்தான வழியிலான கடுமையான நெருக்கடிகளையும் ஜாதகர் அனுபவிக்கும் நிலையை தரும், மேற்கண்டவற்றை கருத்தில் கொள்ளாமல் சனி திசை என்றாலே இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவது, சுய ஜாதக கணித உண்மைக்கு புறம்பானது என்பத உறுதியாக கூற இயலும், சனி திசை தரும் யோக அவயோகம் பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !
லக்கினம் : சிம்மம்
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : சதயம் 4ம் பாதம்
மேற்கண்ட ஜாதகம் உண்மையிலேயே வியப்புக்கு உரிய ஒன்றாகவே கருதலாம், ஏனெனில் சுய ஜாதகத்தில் லக்கினம் உற்பட ஒன்பது பாவகங்கள் பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக 2,4,8,10ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடனும், 1,5,7,9,11ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்று மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகி இருந்த போதிலும், கடந்த குரு திசை, தற்போழுது நடைபெறும் சனி திசை, எதிர்வரும் புதன் திசை, கேதுதிசை, சுக்கிரன் திசை வரை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை மட்டுமே ஏற்று நடத்துகிறது என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சுய ஜாதகத்தில் பெரும்பான்மையான பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும், சூரியன்,சந்திரன் மற்றும் ராகு திசாபுத்தியை தவிர மற்ற அனைத்து திசா புத்திகளும் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துகிறது என்பது அதிசயமான விஷயம் என்பது ஜோதிடம் உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் புரியும் என்பதுடன் வியப்பை தரக்கூடும்.
இன்றைய சிந்தனைக்கு வருவோம் தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை ஜாதகருக்கு வழங்கும் பலாபலன்கள் என்ன ? ஜாதகர் சிம்ம லக்கினம் சனி சத்ரு மற்றும் களத்திர ஸ்தான அதிபதி என்ற நிலையை பெற்ற போதிலும், தனது திசையில் வலிமை பெற்ற 3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக வாழ்க்கையை தந்துகொண்டு இருக்கின்றது, மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ 3ம் ராசியான மிதுனத்தில் ஆரம்பித்த போதிலும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானம் என்று அழைக்கப்படும் கடக ராசியில் முழுமையாக வியாபித்து, ஜாதகரின் அதிர்ஷ்ட வாழ்க்கையை பன்மடங்கு அதிகரித்து தருகின்றது, ஜாதகரின் லாப ஸ்தானம் பெரும்பான்மையான பாகைகள் ( 26 பாகைகள் ) கடக ராசியிலே வியாபித்து நிற்பது, ஜாதகருக்கு லாப ஸ்தான வழியிலான யோகங்களை முழு வீச்சில் செய்யும், அதுவும் தற்போழுது நடைபெறும் சனி திசை வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையில் மிக சிறப்பான நன்மைகளையும், யோகங்களையும் வாரி வழங்குவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.
பொதுவாக சிம்ம லக்கினத்திற்கு சனி திசை நடைபெற்றால், ஜாதகரின் நிலை மிகவும் மோசமாகும் என்று பொது கருத்தாக கூறுவது உண்டு, மேற்க்கண்ட ஜாதகருக்கு சனி திசையே வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது பொது பலன் காணும் அன்பர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தர கூடும், ஆகவே சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்தி எதுவென்றாலும் சரி சம்பந்தப்பட்ட திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டு பலாபலன்கள் காண்பதே துல்லியமான சுய ஜாதக பலாபலன்கள் காண உதவும்.
மேற்கண்ட ஜாதகருக்கு மேலும் சில சிறப்புகள் உண்டு அது சனி திசைக்கு அடுத்து வரும் புதன்,கேது ,சுக்கிரன் திசைகளும் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துகிறது என்பது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான யோக வாழ்க்கையை தரும், சுய ஜாதகத்தில் ஒன்பது பாவகங்கள் பாதிக்கப்பட்ட போதிலும், நடைபெறும் திசையும், எதிர்வரும் திசைகளும் ஜாதகருக்கு ஜாதகமாக இருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும்.
ஜாதகர் எந்த தொழிலை தேர்வு செய்வது என்ற கேள்வியை முன் வைக்கிறார், அவருக்கு " ஜோதிடதீபம் " வழங்கும் ஆலோசணையாவது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகம் குறிக்கும் தொழில்களை தேர்வு செய்து செய்யும் பொழுது ஜாதகரின் ஜீவன வாழ்க்கை மிகப்பெரிய முன்னேற்றங்களை சந்திக்கும், அதன் அடிப்படையில் ஜாதகர் அழிவை சந்திக்கும் நீர்த்துவ பொருட்களான பால்,காய்கறி, மளிகை, உணவு தொழில், தேநீர் நிலையம், பால் பொருட்கள் சார்ந்த தொழில்கள், விவசாய பொருட்கள், அரிசி வியாபாரம் போன்ற தொழில்களை, தனக்கு உகந்ததை தேர்வு செய்து சிறு வியாபாரமாக ஆரம்பித்து வாழ்க்கையில் வெற்றி காணலாம், மேலும் அதன் வழியிலான அதிர்ஷ்டங்களையும் ஜாதகர் தன்னிறைவாக பெறலாம் என்பதே " ஜோதிடதீபம் " ஜீவன ரீதியாக ஜாதகர் வெற்றி பெற வழங்கும் சிறப்பு ஆலோசனை.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக