வெள்ளி, 3 மார்ச், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கன்னி !


 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

கன்னி :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஆறாம் ராசியான கன்னி ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், கன்னி லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், மானுடம் பயன்பெற வாழ்க்கையில் பல தியாகங்களையும், தன்னுள் இருக்கும் இருக்கும் அணைத்து விஷயங்களையும் தனது குழந்தைக்கு தந்து அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தேடும் தாயின் குணத்தை பெற்ற கன்னி இலக்கின அன்பர்களுக்கு, இதுவரை வீர்ய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து வெற்றிகளை வாரி வழங்கிய சனி பகவான், தற்பொழுது சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது  மாத்ரு ஸ்தான வழியில் இருந்து சில இன்னல்களை தரக்கூடும், இருப்பினும் சுக போக வாழ்க்கைக்கு குறைவு இருக்காது.

4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு, வண்டி வாகனம், வீடு நிலம் சார்ந்த சிறு மாற்றங்களை தரக்கூடும், பழைய வீடு, வண்டி வாகனம்  போன்றவற்றை மாற்றிக்கொள்ள இது சிறந்த கால நேரமாக கருதலாம், மேலும் உயர்கல்வி சார்ந்த முயற்சிகளை மேற்கொள்வதற்கும் சரியான நேரம் இதுவே, புதியதாக வண்டி வாகனம் வீடு நிலம் வாங்க விரும்புவார்கள், அதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது உடனடியாக நல்ல பலன் தரும், இருப்பினும் தங்களது உடமைகளை, சொத்துக்களை மற்றவர்களை நம்பி கொடுக்கும் பொழுது சற்று கவனம் தேவை, நம்பிக்கைக்கு உகந்த நபர்களிடம் மட்டுமே தாங்கள் தங்களது உடமைகளையும் சொத்து, வண்டி வாகனத்தையும் தரலாம், இல்லை எனில் தவிர்த்து விடுவது தங்களுக்கு மிகுந்த நன்மைகளையும், திடீர் இழப்புகளையும் தவிர்க்க உதவும், அரசு துறைகளில் பணியாற்றும் அன்பர்களுக்கு நல்ல பதவி உயர்வு உண்டாகும், கல்வி மற்றும் கலைத்துறையில் உள்ள நபர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், யோக வாழ்க்கையும் கிடைக்க பெறுவார்கள், தங்களது வாழ்க்கையில் கவுரவம் அந்தஸ்த்து போன்றவை வெகுவாக மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையும் யோக காலமாக அமையவிருக்கிறது என்பதால், சனியின் சுக ஸ்தான சஞ்சாரம் தங்களுக்கு நன்மையையே தரும்.

9ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கன்னி லக்கின அன்பர்களுக்கு, கல்வி கேள்விகளில் நல்ல அதிர்ஷ்டத்தையும், குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் நல்கும், வெகுநாள் லட்சியங்கள் தங்களுக்கு விரைவாக நிறைவேறும், தனபிராப்பர்த்தி சரளமாக வரும் வாய்ப்பு உண்டாகும், ஆன்மீகத்தில் வெற்றி, சிறந்த பேச்சு திறமை, சமூகத்தில் சிறந்த அந்தஸ்து ஆகியவை தங்களை தேடிவரும், ஆன்மீக அன்பர்களுக்கு சிறப்பு மிக்க யோகங்களை வாரி வழங்கும், தங்களின் தேடுதல்களுக்கு சரியான குரு அமைவார், சகல செல்வாக்கும் மக்களின் ஆதரவு மூலம் பெருகி வரும், தெய்வ அனுகிரகம் மூலம் தங்களின் வாழ்க்கையில் சுபயோகங்கள் பன்மடங்கு பெருகி வளரும், விவசாயம் செய்வோருக்கு திடீர் யோகம் உண்டாகும், விளைச்சல் அதிகரிக்கும், அரசு சார்ந்த  உதவிகள் தங்களை தேடிவரும் வாய்ப்பும் உண்டு, திருமண வாழ்க்கையில் பிரிந்து இருந்த தம்பதியர், ஓர் பெரிய மனிதரின் ஆசியினால் ஒன்று கூடும் வாய்ப்பு உண்டாகும், தங்களின் வேண்டுதல்கள் எதிர்பார்ப்புகள்  நிறைவேறும், குறிப்பாக பொருளாதார வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

 10ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கன்னி லக்கின அன்பர்களுக்கு, இதுவரை தொழில் ரீதியாக இருந்த இன்னல்களுக்கு நல்ல தீர்வுகளை வழங்குவார், அதன் அடிப்படையில் முடங்கி கிடந்த தொழில்கள் இனி வரும் காலங்களில் சிறப்பாக ஏற்றமிகு லாபத்துடன் நடைபெறும், சுய தொழில் செய்வோர்க்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும், தொழில் மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்து எடுக்கும் முயற்ச்சிகளில் நிச்சய வெற்றி கிட்டும், குறிப்பாக கமிஷன், தரகு, எஜென்ஜி தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு சரளமான பண வசதியும், செல்வாக்கும் அதிகரிக்கும், தங்கள் நினைக்கும் காரியங்கள் நல்ல வெற்றி வாய்ப்பினை நல்கும், தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகும், எதிர்ப்பவர்கள் அனைவரும் தங்களுக்கு பணிந்து போவார்கள், வியாபாரத்தில் வெற்றி, பன்முக  திறமை மூலம் வாழ்க்கையில் ஜீவன ரீதியான வெற்றிகளை பெறுவதற்கு நல்ல வாய்ப்புகள் தங்களை தேடி வரும், குறிப்பாக தங்களின் அறிவு திறன்  மிக சிறப்பாக செயல்படும், தொழில் முன்னேற்றம் என்பது இரண்டு மடங்கு பல்கி பெருகும்.

1ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கன்னி  லக்கின அன்பர்களுக்கு, வயிறு சார்ந்த இன்னல்களை சற்று அதிகமாக தரக்கூடும், இதனால் வரும் தொந்தரவுகள் தங்களுக்கு சற்று செலவினத்தை தரகூடும், இருப்பினும் உடல் ரீதியாக வரும் தொந்தரவுகளுக்கு நல்ல தீர்வும், சிறந்த மருத்துவமும் கிடைக்க பெறுவீர்கள், கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும், கடன் சார்ந்த இன்னல்கள் உடனடியாக முடிவுக்கு வரும், எதிர்ப்புகள் அனைத்தையும் சிறப்பாக எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெரும் நேரம் இது, தங்களின் செயல்பாடுகளில் சற்று வீரியம் அதிகரிக்க வேண்டிய நேரம் இது, அதிக விழிப்புணர்வுடன் ஒவ்வொரு காரியத்திலும் ஈட்டுபட்டு, நன்மைகளை மட்டும் தேர்வு செய்து முன்னேற்றங்களை தன்னிறைவாக பெரும் யோகம் உண்டாகும், தங்களின் உடல் நலனில் மட்டும் கொஞ்சம் அதிக அக்கறை கொள்ளுங்கள், இதனால் தங்களின் ஜீவன மேன்மை என்பது பலமடங்கு உயர அதிக வாய்ப்பு உள்ளது.

குறிப்பு :

கன்னி லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 4,9,10,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  4,9,10,1ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கன்னி லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக