வெள்ளி, 29 ஜூன், 2012

குடி பழக்கத்தில் இருந்து விடுபட !?



கேள்வி :

அய்யா நான் கடந்த 9 வருடங்களாக போதை மற்றும் குடி பழக்கத்திற்கு ஆளாகி , என்னிடம் உள்ள அனைத்தையும் இழந்துவிட்டேன் , நான் எவ்வளவு முயற்ச்சி செய்தும் என்னால் இந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை , இந்த தீய பழக்கத்தின் காரணாமாக எனது மனைவி மற்றும் இரண்டு  குழந்தைகளும் என்னிடம் தற்பொழுது இல்லை ,மேலும் திருமண வாழ்க்கை விவாகரத்து வரை சென்று விட்டது , நிம்மதியான வாழ்க்கை இல்லை பணியாற்றும் இடத்திலும் முன்னேற்றம் இல்லை மேலும் அதிக கடன் சுமை வேறு, உறவினர்கள் நண்பர்களும் இப்பொழுது பகை , உடல் நிலையும் தற்பொழுது சரியில்லை நான் என்ன செய்வது என்றே தெரியவில்லை எனக்கு தயவு செய்து ஒரு நல்ல வழிகாட்டுங்கள் .

பதில் :

தங்களது  கேள்வியிலே பதில் இருக்கிறது அன்பரே ! இத்துனை துன்பத்திற்கும் இந்த குடி பழக்கமே காரணம் , இருப்பினும் தங்களது ஜாதக அமைப்பின் படி லக்கினம் மற்றும் களத்திரம் ஆகிய வீடுகள் பாதக ஸ்தானம் எனும் சர நீர் தத்துவ ராசியுடன் சம்பந்தம், மேலும் இந்த பாதக ஸ்தானம் தங்களது லக்கினத்துடன் தொடர்பு பெறுவதால் தங்களுக்கு நேரும் துன்பம் அனைத்திற்கும் தாங்களே காரணம் , மேலும் களத்திரம் மற்றும் நண்பர்களை குறிக்கும் 7 ம் பாவாகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் எனவே சொல்லவே தேவையில்லை, நடக்கும் சந்திர திசையும் இந்த வீடுகளின் பலனையே வாரி வழங்குகிறது கடந்த 8 வருடமாக .

தங்களது ஜாதக அமைப்பின் படி , லக்கினமும் 7 ம் பாவாகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது இதன் வழியில் இருந்து 200 சதவிகித தீமையான பலனையே தரும் என்பதில் ஆச்சரியம் இல்லை , ஒரு ஜாதகத்தில் லக்கினம் பாதக ஸ்தானத்தால் பாதிக்க பட்டால் ஜாதகர் செய்யும் அனைத்தும் தவறாகவே அமையும். எனவே தாங்கள் பெரியவர்களின் பேச்சை கேட்டு நல்ல ஒழுக்கமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்தால் மட்டுமே வாழ்க்கை நல்ல முன்னேற்றங்களை பெற முடியம் , மேலும் 7 ம் பாவாகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு நல்ல நண்பர்களை தந்திருக்க சிறிதும் வாய்ப்பில்லை , சிறந்த மனைவியை அமைந்திருக்கவும் வாய்ப்பில்லை ஆக தவறான ஆலோசனையின் பேரில் தாங்கள் குடிபழக்கத்திற்கு ஆளாகி இருப்பது தெரிய வருகிறது .

ஒருவரது ஜாதக அமைப்பில் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பாதிக்க படுமாயின் , ஜாதகர் எக்காரணத்தை கொண்டும் ஒரு விஷயத்தை பலமுறை ஆலோசனை செய்து செய்ய வேண்டும் அல்லது தனது குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் ஆலோசனை கேட்பது அவசியம்.  இல்லை எனில் அதிக பாதிப்புக்கு ஆளாக வேண்டி வரும் ,ஒருவரது ஜாதக அமைப்பில் களத்திர பாவகம் பாதிக்க படுமாயின் ஜாதக அமைப்பில் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது களத்திர பாவகம் நல்ல நிலையில் இருக்கும் பெண்ணாக தேர்ந்தெடுக்க வேண்டும் , அவசரகதியில் திருமணம் செய்துவிட்டு பிறகு வருந்துவதில் எவ்வித நன்மையையும் இல்லை மேலும் நண்பர்களின் சேர்க்கையை அறவே ஒதுக்குவது அல்லது ஒரு எல்லைகட்டி பழகுவது ஜாதகருக்கும் , ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் மிகுந்த நன்மை தரும் .

இந்த சந்திர திசை தங்களுக்கு அவ்வளவு நன்மையான பலனை தரவில்லை , இந்த பாதிப்புகள் இன்னும் இரண்டு வருடங்களுக்கு தொடரும் என்பது வேதனைக்குரிய விஷயம் , தங்களது ஜாதக அமைப்பில் நல்லவர் சேர்க்கை மற்றும் தொடர்பை  தரும் ராகு கேது இரண்டும் 100 சதவிகிதம் பாதிக்க பட்டது மிக பெரிய இழப்பே , ஆக தாங்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு ஒரு எல்லை இல்லாமல் போய் விட்டது . ஒரு மனிதனுக்கு வரும் கஷ்டங்களும் துன்பங்களுமே அவரை செம்மை படுத்தும் என்பதை இனியாவது உணருங்கள் , இந்த துன்பம் வர காரணம் எது என்று சற்றே சிந்தித்து பாருங்கள் தங்களுக்கு நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும் அல்ல தங்களை விட பெரியவர்கள் சொல்லும் அறிவுரை ஏற்று வாழ்க்கையை இன்றுமுதல் புதிதாக துவங்குங்கள் எதிர் வர இருக்கும் செவ்வாய் திசையும் ,ராகு திசையும் தங்களுக்கு நல்ல பலனை தர காத்திருக்கிறது .

பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் , நல்ல தொழில் முன்னேற்றம் ஏற்ப்படும் , குழந்தைகள் வழியில் நல்ல எதிகாலம் தங்களுக்கு உண்டு

இதையெல்லாம் அனுபவிக்க உடல் எனும், சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் இல்லை எனில் ஒன்றும் செய்ய இயலாது . தங்கள் இன்றே மது மறுவாழ்வு மையத்தையோ  அல்லது சிறந்த மன நல மருத்துவரையோ அணுகி ஆலோசனை பெறுவது தங்களின் வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றி அமைக்கும், அவர்களின் ஆலோசனை படி நடப்பது தங்களது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் நன்மையையும் வழங்கும் .

பரிகாரம் :

அகோர மூர்த்தி வழிபாடு  :

திருவெண்காடு ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது.

சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.
அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.

குடி பழக்கத்திற்கு அடிமையான ஒவ்வொருவரும் வளர் பிறை திங்கள் அன்று  இந்த திரு தளத்திற்கு சென்று முக்குள நீராடி அகோர மூர்த்தி சன்னதியில் 108 நெய் விளக்கேற்றி வழிபாடு செய்வோருக்கு நிச்சயம் நல்ல வழி கிடைக்கும், அன்றைய தினத்திலிருந்து ஜாதகருக்கு அறிவில் விழிப்புணர்வு ஏற்ப்பட்டு இந்த தீமையான பழக்கத்திலிருந்து விடுதலை நிச்சயம் கிடைக்கும் . இந்த வழிபாடு செய்வதற்கு தங்களுக்கு நிறைய தடைகள் ஏற்ப்படலாம் , கடுமையான முயற்ச்சி மேற்கொண்டு வழிபாடு செய்து தங்களின் வாழ்க்கையில் நலம் பெறுங்கள் . 


குடி பழக்கத்தில் இருந்து விடுபட மனோ ரீதியாக சில வழி முறைகள் :

1 )  தன் முனைப்பு சோதனை செய்து கொள்வது குடிபழக்கத்திற்கு அடிமை ஆனா ஒவ்வொருவருக்கும் அவசியம் .
2 ) இந்த தீய பழக்கத்தினால் தனக்கு ஏற்ப்பட்ட இழப்புகள் எவ்வளவு , ஏற்ப்பட போகும் இழப்புகள் எவ்வளவு என்று சற்றே ஒவ்வொரு நாளும் சிந்திப்பது விரைவில் நல்ல பலனை தரும் .
3 ) தனக்கு ஒரு குடும்பம் ஒன்று உண்டு , தன்னை நம்பி உள்ளவர்கள் நிறைய உண்டு என்பதை மனதில் நிறுத்துவது அவசியம், மேலும் தான் இல்லை என்றால் அவர்களின் நிலை , எதிர்காலம் பற்றி தினமும் சிந்திப்பது இந்த பழக்கத்தில் இருந்து விரைவில் மீட்டெடுக்கும் .
4 ) இந்த பழக்கங்களுக்கு அடிமையாக உள்ளவர்களை நண்பர்களாக ஏற்றுகொள்வதை முற்றிலும் தவிர்ப்பதே அனைவருக்கும் நல்லது மேலும் இவர்களால் எவ்வளவு நன்மைஎன்றாலும் அவற்றை ஒதுக்கி விடுவது சாலசிறந்தது .
5 ) அரசுக்கோ அல்லது மற்றவர்க்கோ உங்களின் மீது எந்தவித அக்கறையும் இல்லை என்பதை குடிபழக்கத்திற்கு அடிமை ஆனா ஒவ்வொருவரும் உணருதல் வேண்டும் . தங்களிடம் இருந்து என்ன வருவாய் கிடைக்கும் என்றுதான் பார்ப்பார்கள் .
6 ) மருத்துவர் ஆலோசனை மற்றும் மன நல ஆலோசனை தனக்கு அவசியம் என்பதை குடிபழக்கத்திற்கு அடிமை ஆனா ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டு அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் நடந்தால் நிச்சயம் குடி பழக்கத்தில் இருந்து விரைவில் விடுபட முடியும் .
7 ) எந்த ஒரு பிரச்சனைக்கும் குடிபழக்கம் நல்ல தீர்வை நிச்சயம் தராது என்று உணர்வது அவசியம் வாழ்வில் யாருக்குத்தான் பிரச்சனை இல்லை பிரச்சனை உள்ளவர்கள் எல்லாம் இந்த பழக்கத்திற்கு அடிமையானால் நாடு நிச்சயம் தாங்காது
8 ) வளரும் இளம் பருவத்தினர் மீது பெற்றோர்கள் கண்காணித்து , நல்ல ஒழுக்கத்தை பண்பாட்டினை  கற்று தர வேண்டும் , மேலும் சரியான ஆலோசனைகளை வழங்கவேண்டும், அவர்களுக்கு எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் மன நிலையுடன் இருக்கும் அளவிற்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் .
9 ) பத்திரிகை செய்தியின் படி 13 வயதில் இருந்தே குடி பழக்கத்திற்கு மாணவர்கள் பலர் அறிமுகமாகி விடுகின்றனர் என்று பயமுறுத்துகிறது , இதற்க்கெல்லாம் காரணம் குழந்தைகள் மேல்  பெற்றோருக்கு அக்கறை இன்மையையே காட்டுகிறது , இனியாவது இந்த பெற்றோர்கள் உணருவார்களா ?

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

1 கருத்து:

  1. நல்ல ஒரு பதிவு ... கெட்ட பழக்க வழக்கத்திற்கு காரணத்தை ஜோதிட ரீதியாக விளக்கி கூறியது அருமை. மேலும் சமுக அக்கறையுடன் நீங்கள் கொடுத்த வழிமுறைகள் அதைவிட அருமை

    பதிலளிநீக்கு