சனி, 1 செப்டம்பர், 2012

அஷ்டவர்க்க பரல்களும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் லக்கினமும் !





மேற்கண்ட ஜாதகருக்கு மகர லக்கினம் , லக்கினம் மற்றும் லாப ஸ்தானங்கள் முறையே பாதக ஸ்தானம் எனும் 11 ம்  பாவகத்துடன் சம்பந்தம் , மேலும் தற்பொழுது நடக்கும் சந்திரன் திசை ஜாதகருக்கு லக்கினம் மற்றும் லாப ஸ்தானங்கள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று பாதக ஸ்தான பலனையே தருகிறது , இதற்க்கு முன் நடந்த சூரியன் திசையும்  லக்கினம் மற்றும் லாப ஸ்தானங்கள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று பாதக ஸ்தான பலனையே நடத்தி இருக்கிறது , இந்த காலகட்டங்களில் ஜாதகர் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்தித்து , குடும்பத்துடன் வாழ முடியாமல் , ஊரைவிட்டே வெகு தொலைவுக்கு சென்றுவிட்டார் , மேலும் விரக்தியான மன நிலையுடன் வாழ்க்கையில் எதிர்த்து போராட முடியாமல் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று இருக்கிறார் , 

பொதுவாக இவரது ஜாதக அமைப்பை பார்த்த ஜோதிடர்கள்  அனைவரும் , தங்களது ஜாதக படி லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் வீட்டில் சந்திரன் அமர்ந்து இருக்கிறார் , மேலும் பதினொன்றாம் வீட்டில் 43 பரல்கள் பெற்று இருக்கிறது எனவே தற்பொழுது நடக்கும் சந்திர திசையில் மிகப்பெரிய யோகத்தை நீங்கள் பெறுவீர்கள் சுய தொழில் மூலம் அபரிவிதமான யோகம் உண்டாகும் என்று சொன்னதை வைத்து, சந்திர திசை ஆரம்பத்தில் தன்னிடம் இருந்த சொத்து , தான் சுயமாக சம்பத்தித்த பணம் , உறவினரிடம் கடனாக வாங்கிய பணம் , ஆகியவற்றை முதலீடு செய்து ஒரு தொழில் துவங்கி இருக்கிறார்  , தொழில் துவங்கிய சில காலங்களிலேயே ஜாதகர் தேவையில்லாமல் அனாவசியமாக செலவு செய்ததில் , தொழில் முடக்கம் ஆனது , அவரது தொழில் கூடத்தில் பணியாற்றிய காசாளர் அதிக  பணத்துடன் எங்கேயோ ஓட்டிவிட்டார் , சில நபர்களின் தவறான ஆலோசனையினால் குடி பழக்கத்திற்கு ஆளாகி மீள கடனாளியாக மாறி , கடன் தொந்தரவு தாங்காமல் ஊரை விட்டே வெகு தொலைவு செல்லவேண்டிய சூழ்நிலையை, தற்பொழுது நடந்துகொண்டு இருக்கும் சந்திரன் திசை ( பதினொன்றாம் வீட்டில் அமர்ந்த சந்திரன் )  பலனாக தந்து இருக்கிறது .

இந்த நிலைக்கு ஜாதகர் வர காரணம் என்ன என்பதை பற்றி இனி பார்ப்போம் , ஒரு ஜாதக அமைப்பில் நடக்கும் திசை எதுவென்றாலும் , பாதக ஸ்தானத்தின் பலனை நடத்தினால் , ஜாதகர் எவ்வித புது முயர்ச்சியும் செய்யாமல் , தன்னை விட வயதில் பெரியவர்களின் ஆலோசனை படி வாழ்க்கையை நடத்துவது , மிகுந்த நன்மையை தரும் , ஏனெனில் ஜாதகரின் புத்திசாலி தனம் இந்த காலகட்டங்களில் எடுபடாது , மேலும் ஜாதகரின் மனம் என்ன சொல்கிறதோ அதன் படி நடக்க ஆரம்பித்து விடுவார்  , அறிவு வேலை செய்து , இதனால் இழப்புகள் அதிகமாகும் , தீமை  என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் , அதிலேயே சென்று விழும் சூழ்நிலையை உருவாக்கும் , இதில் அதிக பரல்கள் ( லாப ஸ்தானம் 43 பரல்கள் ) வாங்கியுள்ள பாதக ஸ்தானம் ஜாதகரை நிச்சயம் காப்பாற்றாது, மிதமிஞ்சிய கெடுதலையே செய்யும் என்பதை அறியாமல் , சந்திரன் திசை நன்மை தரும் என்று சொன்ன அந்த ஜோதிடரை நினைத்து அழுவதா ? சிரிப்பதா? என்று தெரியவில்லை , இதில் ஜோதிடருக்கு எவ்வித துன்பமும் இல்லை , அவரின் தவறான  ஆலோசனையை கேட்ட நபரே ஊரைவிட்டு ஓடவேண்டி வந்தது .

எனவே எந்த ஒரு ஜாதகத்திலும் அஷ்டவர்க்க பரல்களை வைத்து சரியான பலனை சொல்வது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதைதான் , மேலும் இந்த ஜாதகருக்கு  விரைய ஸ்தானத்தில் 24 நான்கு பரல்கள் , லாப ஸ்தானத்தில் 43 பரல்கள்  நீங்கள் செய்யும் சுய தொழில் லாபம் கொழிக்கும் என்றுவேறு அந்த ஜோதிடர் சொல்லியிருக்கிறார் , இதை நம்பி ஜாதகர் தனக்கு பாதக ஸ்தானத்தின் பலன் நடப்பது தெரியாமல் தொழில் துவங்கி, அனைத்தையும் இழந்து இன்று நாடு தெருவுக்கு வந்துவிட்டார் என்பது சற்றே கவலை தரும் செய்தி .

மேலும் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றால் ஜாதகரே தனது வாழ்க்கையை கெடுத்து கொள்வார் , வேறு எவரும் தேவையில்லை , பதினொன்றாம் வீடு வேறு கால புருஷ தத்துவத்திற்கு திடீர் இழப்பை குறிக்கும் எட்டாம் வீடாக வந்தது ஜாதகரின் கெட்ட நேரத்தை கட்டியம் கூறுகிறது , மேலும் இது நீர் ராசியாக இருப்பதால் ஜாதகரின் மனம் ஒரு நிலையாக இருக்க வாய்ப்பே இல்லை , மேலும் பாதக ஸ்தானம் வேறு தனக்கு தானே பாதகத்தை தேடி கொண்டு மன நிம்மதியை இழக்கும் சூழ்நிலையும் , போதைக்கு அடிமை ஆகும் சூழ்நிலையையும்  தரும் , லக்கினம் நல்ல நிலையில் இல்லாதவர்கள் சுயமாக தொழில் செய்வது , கண்ணை கட்டிக்கொண்டு கிணற்றில் வீழ்வதற்கு சமம் , ஸ்திர அறிவு இல்லாத ஒருவர் நிச்சயம் சுயமாக தொழில் நிர்வாகம் செய்ய இயலாது என்பது கவனிக்க படவேண்டிய விஷயம் .

அன்பர்களே இனியாவது இதுமாதிரியான வாய் ஜாலத்தை நம்பி தங்களின் வாழ்க்கையை அடகு வைக்காதீர்கள் , மேலும் இதுபோன்ற தவறான ஆலோசனை பெறாமல் சிறந்த நல்ல ஜோதிட ஆலோசனை தங்களுக்கு கிடைக்க வேண்டுமெனில் , தங்களின் குல தெய்வம் எதுவோ ? அந்த தெய்வத்தை நன்றாக வழிபடுங்கள் , குல தெய்வத்தின் வழிகாட்டுதலில் தங்களுக்கு நிச்சயம் சிறந்த ஜோதிடர் கிடைப்பார் , அதன் மூலம் சரியான ஜோதிட ஆலோசனை கிடைக்கும் , தங்களின் வாழ்க்கையும் முன்னேற்ற பாதையை நோக்கி பயணிக்கும்  என்பது எமது ஜோதிட தீபத்தின் கருத்து .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com  

7 கருத்துகள்:

  1. lagginam matrum laba sthanangal eppadi badhaga stanathtudan sambantham enpathai thayavu seithu kooravum.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அன்பரே ! ஜோதிடத்தை அடிப்படையில் இருந்து தொடர்ந்து மூன்று வருடம் கற்றுக்கொண்டால் , நிச்சயம் தாங்களும் தெரிந்துகொள்ள முடியும் , வாழ்க வளமுடன்

      நீக்கு
  2. 1. தசையின் பலன் சொல்லும்பொழுது தசாநாதனின் சுயவர்க்க பரல்கள் வைத்தே சொல்ல வேண்டும். சர்வ அஷ்டவர்க்க பரல்கள் வைத்து அல்ல. தசாநாதன் சுயவர்க்கத்தில் 3க்கு குறைவான பரல்களுடன் இருந்தால் தசா காலம், நன்றாக இருக்காது.

    2. விருச்சிக ராசியில் சந்திரன் நீசம். நீசமான கிரகம் தனது தசா காலத்தில் நன்மையை தர இயலாது. மேலும் அது மனோகாரகன். ஆகையால், ஜாதகர் மனரீதியாக பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். மேலும், மாந்தியுடன் சேர்ந்து இருக்கிறார். மாந்தி நின்ற ராசியின் அதிபதி/மாந்தியுடன் சேர்ந்து இருக்கும் கிரகம் தனது தசாகாலத்தில் நன்மை செய்ய இயலாது.

    3. லாப ஸ்தானத்தில் 43 பரல்கள் இருந்தாலும், 2ம் வீட்டில் குறைந்தது 22 பரல்கள் வேண்டும். லாப ஸ்தானம் பணம் வரும் வழி, 2ம் வீடு பணம் நிற்கும் இடம். 2ம் வீட்டில் 19 பரல்கள் மட்டுமே உள்ளன, பணம் தங்குவது கஷ்டம்.

    4. லக்கினாதிபதியும், 8ம் அதிபதியும் பரிவர்த்தனை வேறு. சனி வீட்டில் சூரியன், சூரியன் வீட்டில் சனி. இருவரும் கடும் எதிரிகள்.

    அஷ்டகவர்க்கம் மூலம் பலன் சொல்வது நடக்கும், அதுபற்றி முழுமையாய் கற்றுணர்ந்து, பல ஜாதகங்களை ஆராய்ந்த பிறகு. மேலும், கோட்சாரம் பலன் சொல்வதற்கு அஷ்டகவர்க்கம் ஏற்றது.

    சர்வம் சிவார்ப்பணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீச்சம் பெற்ற சந்திரன் திசை நன்மை செய்யாது ? என்ன ஒரு கண்டு பிடிப்பு ? இதே லக்கினம் இதே ராசி 08 நிமிடங்களுக்கு முன் பிறந்த இதே அமைப்பில் ஜாதக அமைப்பை கொண்ட ஜாதகருக்கு சந்திரன் திசை 4 ம் பாவகம் 4 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று யோக பலன்களை தருகிறது இது எப்படி சாத்தியம் , மேலும் சந்திரன் திசை காலத்தில் ஜாதகர் மிகுந்த நன்மைகளை பெற்றுகொண்டு இருக்கிறார் ( திசா அதிபதி சுய வர்க்கத்தில் 3 பரல்கள் மட்டுமே பெற்று இருக்கிறார் ), நீச்சம் பெற்ற கிரகம் நன்மை செய்யாது என்பது குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதற்கு சமம் . மேலும் 2 ம் வீடு பாதிக்க பட்டதாகவே நாம் எடுத்துகொள்ள இயலாது , காரணம் சனி சிம்மத்தில் நின்று நேரெதிர் பார்வையாக இரண்டாம் வீட்டை காண்பது 100 சதவிகிதம் நன்மை செய்யும் ( கேந்திரதிபதி கேந்திர பலம் பெற்று தனது வீட்டை பார்வை செய்தால் அந்தபாவகம் 100 சதவிகிதம் நன்றாக இருக்கும் ) இதில் இருந்து 2 ம் வீடு மிகவும் சிறப்பாக இருப்பது உறுதியாகிறது .

      சூரியன் சனி எதிரி என்று நாமாகவே நினைத்து கொள்ள வேண்டியது தான் ( உண்மையில் பாவக அமைப்பில் சனி லக்கினத்திற்கு கேந்திர பலம் பெற்று மிகுந்த நன்மைகளை செய்து கொண்டு இருக்கிறார் ) சூரியனும் கோண பலம் பெற்று தனது வீட்டுக்கு நன்மையே செய்து கொண்டு இருக்கிறார் , மேலும் சந்திரன் திசை பாதக ஸ்தான பலனை செய்கிறது இதில் சூரியனுக்கும் சம்பந்தம் இல்லை , சனி பகவானுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை அவர்களை நாம் இதில் தொடர்பு படுத்த தேவையே இல்லை . நடக்கும் சந்திரன் திசை ஜாதகருக்கு லாப ஸ்தான வீட்டின் பலனை தருகிறது பதினென்றாம் வீட்டில் 43 பரல்கள் இருக்கின்றது அஷ்டவர்க்க கூற்றின் படி நன்மை செய்ய வேண்டிய சந்திரன் திசை தீமை செய்வதேன் , இதற்க்கு சரியான காரணம் சொல்லாமல் அவர் அங்கு இருக்கிறார் இவர் இங்கு இருக்கிறார் என்று கதையேதான் சொல்கிறார்கள் .

      பலன் கேட்டக வந்தவருக்கு கதையெல்லாம் தேவையில்லை, தீமையான பலன் நடக்க காரணம் என்ன ? இதற்க்கு தீர்வு என்ன ? அவ்வளவுதான் .
      முதலில் ஒரு ஜாதகத்தில் குறிப்பிட்ட தசை எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்றே தெரியவில்லை என்றால் , ஜோதிடம் கேட்க வந்தவருக்கு சரியான பலனை சொல்லுவது எப்படி ?
      மேலும் கோட்சார பலன் நிர்ணயம் செய்யும் பொழுது , தற்பொழுது நடக்கும் திசை எந்த பாவகத்தின் பலனை நடத்துகிறது , அந்த பாவகத்துடன் கோட்சார கிரகம் எவ்வித சம்பந்தம் பெறுகிறது என்று தெரிந்து பலன் சொல்வதே சரியானது .

      மேலும் இந்த அஷ்டவர்க்க பரல் கணிதம் , பாரம்பரிய ஜோதிடம் எல்லாம் நன்றாக கற்றுக்கொண்ட பிறகு , இவையெல்லாம் சரியான பலன் சொல்ல இயலாது என்று நடை முறையில் உணர்ந்து , ஆன்மீக ஜோதிட குழுமத்தின் மூலம் சரியான ஜோதிடத்தை கற்று , நாடி வருபவர்களுக்கு சரியான பலன் சொல்லி , நம்பி வருபவர்களுக்கு சரியான வழியை காட்டிக்கொண்டு இருக்கிறோம் , எனவே தாங்கள் சரியான ஜோதிட முறை கற்றுணர்ந்து தெளிவு பெறுங்கள் , எங்களுக்கு தேவையில்லை பால பாடம் .

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. ஐயா ,
    பாதக ஸ்தான அதிபதியும் லாக்கிணாதிபதியும்
    பரிவர்த்தனம் அடைந்தால் நன்மையா தீமையா!

    பதிலளிநீக்கு